Sunday, May 29, 2011

மூன்றுவருட வலையுலகமும் சில மனந்திறப்புக்களும்...


சென்னையில் நான் இருந்த பெசன்ட் நகரை அண்டிய ஒரு கடற்கரை மைதானம், நண்பர்கள் பட்டாளம் நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமும் பெருகிவிட்டதனால், திடீர் என்று காற்பந்து விளையாடுவதாக உத்தேசிக்கப்படுகின்றது. உடனடியாக 'கப் கலக்ஸன்' போட்டு காற்பந்து ஒன்றும் வாங்கிவரப்படுகின்றது அந்த கடற்கரைக்கு..
இச்சம்பவம் நடக்கும்போதே பதிவராக இருந்த சமுத்திரன், பின்னர் என்போல பதிவர்களாகி தவறணைபோட்டு அனைவரையும் வெறியாடவைத்த டிலான், ஒன்று இரண்டு பதிவு எழுதினாலும், மிக மிக ஆழமாக எழுதியதுடன் சிறுகதைப்போட்டியிலும் வெற்றிபெற்ற சஜந்தன் ஆகியோரும் விளையாடுவதற்கு தயாராகவே இருந்தனர்.

மிக உச்சாகமாக விளையாட்டு தொடங்கியது, கிட்டத்தட்ட 18 பேர் ஒன்பது பேர் ஒரு அணிக்கு என பிரிந்து விளையாடுகின்றோம். எம் அணி இரண்டு கோல்கள் போட்டு முன் நிலையில் இருக்கு...திடீர் என மற்ற பக்கம் கோல் போஸ்ட்டுக்கு கிட்ட பந்து கொண்டு செல்லப்படுகின்றது.
வயது 31 ஆகிவிட்டாலும், மனசு 19 இல் நின்றபடியால், உற்சாகமிகுதியில் ஓடிச்சென்று கோல் போஸ்ரின் நேர் எதிர்ப்பக்கம் பந்தை ஓங்கி அடிக்கும் நோக்கில் முன்னேறி, ஓடுகின்றேன், அதேவேகம், அதே உதை ஆனால் தவறுதலாக பந்தின் உச்சிமேல் என்கால் ஊன்றப்படுகின்றது, ஓட்டவேகம் மறுபக்கம், கால் அப்படியே சரிகின்றது. ஓடியவேகத்திற்கும், பந்து காலை திருப்பிய திசைக்கும் இடையில் தடுமாறி விழுகின்றேன்.

வலி தாங்கமுடியாமல், காலை பார்க்கின்றேன். இடதுமுழங்காலுக்கு கீழே கால் திரும்பியிருந்தது. பின்னர் ஆஸ்பத்திரி, எஸ்ரேக்கள், கட்டுக்கள், என்று எழுந்து நடக்கமுடியாமல் இருந்தேன். இந்த நேரத்தில் நிகழ்த்தப்பட்டதுதான் என் வலையுலகப்பிரவேசம்.
சத்தியமாக ஒரு வலையினை எப்படி உருவாக்குவது என்பதுகூட தெரியாது.
ஏதோ கூகுல் தெய்வத்துக்கிட்ட கேட்டு கேட்டு ஒருமாதிரி, ஒப்பேத்தி 'என்னை நானே செதுக்கும் போது' என்று தலையங்கம்போட்டு செம்மஞ்சள் கலரிலை ஒரு எனக்கான புளக்கரை தொடங்கினேன்.
சோ... என் வலைப்பிரவேசம் ஒரு விபத்து அல்ல விபத்தினால் உருவானது.

அப்ப எப்படி டைப்பிங், ஆரம்பத்திலேயே உலக விடையங்கள், காத்திரமான விடையங்களை எழுதக்கூடியதாக இருந்தது என்று நண்பர்களுக்கு கேள்வி எழலாம். உண்மையில் என் இணையப்பிரவேசம், இணைய எழுத்து என்பன 2002ஆம் ஆண்டு ஆரம்பமாயிருந்தது.(எழுதுவது மட்டும்தான் அதை இணையேற்றுவது இன்னும் ஒரு நண்பன்) அந்த காலத்தில் இருந்து அனேகமாக அரசியல் கட்டுரைகள், ஆய்வுகள், முக்கிமான உலக அரசியல் அசைவுகள் என்பவற்றை எழுதிவந்தேன்.
(கல்கி, மேகநாதன், நல்லூரான் என்ற பெயர்களில்;) அந்த நேரம் மூன்று நண்பர்கள் சேர்ந்து அந்த இணையத்தை நடத்திவந்தோம், இளையதம்பி தயானந்தா அவர்கள், விமர்சகர் ராஜாஜி, தராக்கி, சிரேஸ்ர ஊடகவிலாளர் மரியதாஸ் மாஸ்டர், போன்றோர் எம் எழுத்துக்களுக்கு பசளையாக இருந்தனர். இதை இதை இப்படி இப்படித்தான் எழுதவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தனர்.
ஆனால் வலையுலகத்திற்கு நான் வந்ததும், என் எழுத்துப்பாணியை மிக இயல்பானதாக ஆக்க பெருமுயற்சி எடுத்து, இயல்பானதாக்கினேன். எனினும் சில நண்பர்கள் ஆரம்பத்தில் இதை பெரும் ஆச்சரியமாகவே பார்த்தனர். இருந்தாலும் சிறிது நாட்களிலேயே இயல்பான நடைக்கு என் எழுத்துக்களை கொண்டுவந்தேன்.

எத்தனை நாள் கனவு கண்டு கண்ணீரால், தியாகங்களால், இரத்தங்களால் கட்டப்பட்ட ஒரு சாம்ராஜ்யமே வீழ்ந்துபோன மனம் வெடிக்கும் வேதனைகள், அழுகைகள், இத்தனையும் மீறிய ஒரு இயலாமை, சுயவெறுப்பு என்பவற்றோடுதான் வலையில் விழுந்தேன். எழுதுவது எழுதுகின்றோம் எவனுக்காவது எப்போதாவது பிரயோசனையாக எழுதுவோம் என்ற குறிக்கோளுடன் எழுத்துக்கள் ஆரம்பமாகின.
பலர் பயப்படும் விடையங்களைக்கூட பயப்படாமல் எழுதினேன்.


சமுக இணைய தளங்களில் நான் பகிர்வதை என் நண்பர்கள் பார்த்து கருத்துரைப்பது, சென்னையில் நடைபெறும் இலக்கிய கூட்டங்களுக்கு செல்வதால் அறிமுகமான நண்பர்களுக்கு லிங்குகளை கொடுப்பது மட்டுமே அப்போது நடந்தது.

அதேநேரம் குறும்பட தயாரிப்பு பக்கம் மனம் திரும்பியது. அது சம்பந்தமான தேடல்களில் ஈடுபட்டு, அத்துறையில் ஈடுபட்டவர்களின் நட்புகள் கிடைத்தன. அதில் சில வலையுலக நண்பர்களின் அறிமுகம்.
முக்கியமாக கேபிள் சங்கர் அண்ணா, பட்டர்பிளை சூரியா அண்ணா அகியோரின் நட்பு கிடைத்தது. அவர்களின் வலைகளுக்கு செல்ல ஆரம்பித்து, அந்த நேரம் மரீனாவில் இடம்பெற்ற மழைநாள் பதிவர் சந்திப்பிலே பல இனிமையான நண்பர்களை சந்தித்தேன்.
பதிவுலகின் இன்னுமொரு போனஸ் அருமையான நட்பு என்பது அப்போது புரிந்தது, நிலாரசிகன், அடலேறு, எவனோ ஒருவன், மணிஜீ, ஊரோடி...இப்படி அந்த வட்டம் பெருக்கெடுத்தது.


இந்த நட்புகளால் பதிவுலகம், திரட்டி, மற்றய பதிவர்களுக்கு பின்னூட்டம், அப்படி என்று பல விடையங்கள் தெரியவந்தன. பதிவுலகம் மட்டுமின்றி இன்ப தும்பங்களில் பங்கெடுத்து, தேவையான நேரங்களில் உதவிகள் புரியும் உன்னதமான நட்புக்கள் கிடைத்தன.
அதேவேளையில்த்தான் பல்கலைக்கழக முடிவுகள் வெளியாகியிருந்தன, சிறப்பு என்ற அடைமொழியுடன் முடிவுகள் வெளியாகின. நான் அதைபோய் பார்ப்பதற்கு முன்னதாகவே எவனோ ஒருவன், அடலேறு போன்றவர்கள் முடிவுகளை ஏற்கனவே பார்த்துவிட்டு என்னை பாராட்டி அழைப்பெடுத்திருந்தனர்.
அந்த நேரம் எனக்கு ஒரு அழகான மகள் உதயமானபோதுகூட குடும்பத்தில் ஒருவர்களாக மருத்துவமனைவந்தே என்னை வாழ்த்தி அணைத்து நட்பில் திக்குமுக்காடச்செய்தனர்.

ஒரு கட்டத்தில் வயதான விதண்டாவாதம் செய்யும் பதிவர் ஒருவர், ஈழப்பிரச்சினை தொடர்பில் என்னுடன் வேண்டுமென்றே மல்லுக்கு நின்றார். நான் அவரை நேருக்கு நேர் நின்று காதுகூச பேசும் அளவுக்கு அவரது செயற்பாடுகள் இருந்தன.
அந்த வேளைகளில்க்கூட இலங்கை, தமிழ்நாடு என்று பிரித்து பாராமல் நியாயத்தின் வழி நின்று எனக்காக அவருடன் வாதிட்டவர்கள் அவர்கள்.
அப்படி இருந்தும்கூட சில நண்பர்கள் இலங்கை பதிவுலகம், பதிவர்கள் பற்றி மென்மையாக சில செயல்பாடுகளை சொன்னாலும் அவர்களிடத்தில்க்கூட நான் எப்போதும் இலங்கை பதிவர்களை விட்டுக்கொடுத்து பேசியது கிடையாது.

இந்த கட்டங்களில் இலங்கை பதிவர் என எனக்கு முதல் முதல் அறிமுகமானவர் தங்க முகுந்தன் அண்ணா. அவருடனும் வாதங்களில் தொடங்கியே இன்றுவரை இணைபிரியாத நட்பாக அது தொடர்கின்றது. தனது பதிவு ஒன்றிலே பதிவர் டிலான் சுட்டிக்காட்டியதுபோல நேர் எதிர் கருத்துக்களை உடைய அவரும் நானும் இன்றுவரை உற்ற நண்பர்களாக இருப்பது குறிப்பிடத்தக்க ஒன்றுதான்.

தங்கமுகுந்தன் அண்ணா மூலம் இலங்கை சம்பந்தமான திரட்டி ஒன்று எனக்கு அறிமுகமாகின்றது. இலங்கை பதிவர்கள் பக்கம் பார்க்கின்றேன். படிக்கின்றேன்.
உண்மையை சொல்லப்போனால், அந்த நேரத்தில் ரமணன், அசோக்பரன், லோஷன் ஆகியோரின் பதிவுகளை நான் அதிகம் படிப்பதுண்டு. முக்கிமாக அசோக்கின் எழுத்துக்கள்மேல் அப்படி ஒரு ஈர்ப்பு எனக்கு வந்தது. மூவருக்கும் சிறப்பான பதிவுகளுக்கு அடிக்கடி பின்னூட்டங்களை அவ்வப்போது இட்டுவந்தேன். ஆனால் ரமணனை தவிர நான் ஒரு இலங்கைப்பதிவாளன் என்பதை யாரும் அப்போது அறிந்திருக்க நிஜாயம் இல்லைத்தான்.

பின்னர் இலங்கையில் முதலாவது பதிவர் சந்திப்பு நடக்கின்றது என்ற அறிவிப்பை தொடர்ந்து பல பதிவர்களின் பெயர்கள் அறிமுகமானது. அவர்களின் பதிவுகளையும் படிக்க ஆரம்பித்தேன், அந்த தேடல்களின் மூலம் வந்தியத்தேவன், மருதமூரான் ஆகிய இருவரினதும் தளங்கள் நான் அடிக்கடி செல்லும் தளங்கள் ஆகின.
உண்மையை சொல்லவேண்டும் என்றால் நான் அவர்களின் பதிவுகளை அப்போது வாசித்தாலும்கூட சிலவற்றுக்கு பின்னூட்டம் இட்டால்க்கூட அவர்கள் நம்மை கவனிக்கவில்லையே என்ற ஈகோவில் நானும் பின்னூட்டம் இடுவதில்லை. (இப்ப அந்த ஈகோ இல்லை என்று இல்லை இப்பவும் இருக்கு)
ஆனால் சில ஆணித்தரமான பதிவுகள் அவர்களிடமிருந்து வரும்போது அந்த ஈகோ எல்லாம் சுக்குநூறாக உடைந்து மூந்திப்போய் பின்னூட்டம் இடுவதும் உண்டு.
ஆனால் அனைவருக்குமே ஒரு விடையம் தெரியும் பொறாமை என்பது என்னிடம் துளியளவும் இல்லை. எனது எழுததுக்கள் மீது எனக்கு அசைக்கமுடியாத கர்வம் இருக்கும்போது எப்படி மற்றவர்கள்மீது பொறாமை வருவது?

இந்த நிலையில் மீண்டும் தாயகம் வருகின்றேன். இங்குவந்து உடனடியாக பதிவுகளை ஆரம்பிக்கவில்லை. வேலைதேடும் படலத்தில் மும்மரமாக இருந்ததால், அதை விட்டுவிடுவோம் என்றே நினைத்திருந்தேன்.
தங்கமுகுந்தன் அண்ணா அழைப்பெடுக்கின்றார், என்னடாப்பா பதிவுகளை விட்டுவிட்டாயோ, அப்படி இப்படி கேட்கின்றார்.
எனக்கு இங்கை யாரையும் தெரியாதுண்ணை என்றேன்! டேய்.. மருதமூரான் யாழ்ப்பாணம் வந்திருக்கின்றான், நம்பர் அனுப்பிறன் கதை என்று ஒரு நம்பரை அனுப்புகின்றார். மருதமூரானுக்கு அழைப்பு எடுக்கின்றேன்.
ஹலோ... நான் ஜனா கதைக்கின்றேன், யாழ்ப்பாணத்தில் இருந்து
எந்த ஜனா?
ஸியேஸ் வித் ஜனா..
ஆ... எப்ப வந்தனீங்கள்? யாழ்ப்பாணம் எங்க? நல்லூரா? நான் பருத்தித்துறை ஐயா.. இன்டைக்கு வெளிக்கிடுறன் கோல் எடுத்தது சந்தோசம்.
என்கின்றார்.
இலங்கை பதிவர்களை இலங்கையில் முதல் அறிமுகம் அது?

எனக்கான நேர்முகத்தேர்வு ஒன்றுக்கு கொழும்பு சென்றபோது நேரடியாக மருதமூரானை சந்தித்து பேசுகின்றேன். பின்னர் யாழ்ப்பாணத்தில் யாழ்தேவி நடத்திய யாத்திரா ஏற்பாடுகளை மருதமூரான், சேரன், நான் சேர்ந்து செய்கின்றோம்.
யாத்திராவுக்கு முதல்நாள், யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் மண்டபம் ஒழுங்கு செய்து சோடினை வேலைகளில் ஈடுபட செல்வதன் முன்னர், ரியோவுக்கு போகின்றோம், அங்கே பாலவாசகன் என்ற மூன்றாவது பதிவர் (இப்போ தம்பி) அறிமுகம். பின்னர் மதியம் அங்கு வந்திருந்த கோபி, இலங்கன், பிரசாத், ஆகியோர் அறிமுகமாகின்றனர். மாலை நேரம் எனக்கு ஒரு அழைப்பு,
ஹலோ யாத்திராவா! நாங்களும் பதிவர்கள்தான், பதிவுகளை எழுதுகின்றோம் இந்த மாநாட்டிற்கு வரலாமோ? இப்ப எங்க மத்திய கல்லூரியில்த்தான் நிற்கின்றீர்களா? ஆ..இந்த இரண்டு நிமிசத்திலை வாறன் என்றது அந்தக் குரல்...
அதற்கு சொந்தக்காரர் பதிவர்களின் கலகல கூல்போய்.

ஆனால் இரண்டு மணித்தியாலம் கழித்து ஒரு ஆள் சிரித்துக்கொண்டு வந்து நின்றது. ஆ..ஊ.. என்று கதைகள் சொல்லி அனைவரையும் விழுந்து விழுந்து சிரிக்க வைத்தது.
மறுநாள்.. புல்லட் அறிமுகம், இப்படி என் பதிவுலக நட்பு நீண்டுகொண்டிருந்தது.
ஏற்கனவே எழுத்துக்களால் அறிமுகமான பலர் நேரடியாக அறிமுகமானது மனதுக்கு இனிமையாக இருந்தது.
இந்த மாநாட்டுடன் இலங்கைப்பதிவர்கள் பலபேரின் கணிசமான அறிமுகமும், நட்பும் கிடைத்தது. மீண்டும் தனியா இல்லை என்ற உணர்வுடன் பதிவுகளை எழுத தொடங்கினேன்.
இந்த வேளைகளில் தம்பி பாலவாசகனிடமிருந்து அழைப்பு அண்ணை உங்களுக்கு 5 மணிக்கு வேலை முடிந்துவிடும்தானே ஒரு 5.30 மணிபோல நல்லூர் கோவிலுக்கு வாறிங்களா சுபாங்கன் வந்திருக்கின்றார் சந்திக்கலாம் என்றார்.

சுரி..என்று விட்டுப்போனேன்... அங்கே சுபாங்கனும் பாலவாசகனும் நின்றார்கள். கூல்போயையும் கூப்பிட்டிரந்தார்கள் அனால் ஆள் இன்னும் வரலை.
ஒரு ஆள் கொஞ்சம் அவிச்ச வெள்ளையாக என்னைப்பார்த்து மௌனபுன்னகை பண்ணிச்சு. ஸியேஸ் என்று சொல்லிக்கொண்டதாக நினைவு.
முதல் சந்திப்பிலேயே சுபாங்கனிடமிருந்த வேகம், தேடல், இரசிப்பு, துடிப்பு அத்தனையும் என்னை கவர்ந்தது. பாலவாசகனுடன் சுபாங்கனுடனான என் பிடிப்பு இறுகியது. அதை நட்பு என்று சொல்லமுடியாது இந்த இருவரையும், டிலான், மற்றும் சஜந்தனையும் என் சகோதரர்களாகவே எப்போதும் நான் கருதுவது உண்டு.

மீண்டும் சுபாங்கனுக்கு என் அழைப்பு வித்தியாசமாக இருந்தது. குடைஸ்பீக் ரூ மிஸ்ரர் சட்டோ? என்று கேட்டேன். புயபுள்ளை ஆரம்ப இங்கிலீஸ் புத்தகத்தை மறக்காது என்ற நினைவுடன். ஆனால் பயபுள்ளை தடுமாறி, அப்படி யாரும் கிடையாது, சொரி ரோங் நம்பர் எண்டிச்சு! பின்னர் நான் ஜனா என்றேன்.
பின்னர் அடிக்கடி சந்திப்பு, சிந்திப்பு.... மற்றவர்களைவிட சுபாங்கனிடம் அதிக உரிமையை எடுத்துக்கொள்ளும் அளவுக்கு என் சொந்த தம்பிபோலவே பாராட்டியும், சில இடங்களில் அதட்டியும் வந்தேன். ஏன் பதிவுகளை சீரியஸான மற்றர்களில் இருந்து ஜனரஞ்சகத்தன்மைக்கு கொண்டுவந்ததில் சுபாங்கனின் பங்கே பிரதானமானது. நான் விபத்து ஒன்றில் சிக்கி ரென்ஸனாக நின்ற போதும் என்னை சுதாகரிக்க வைத்தது சாத்ஜாத் பிறதர்தான்.

அடுத்தது மதிசுதா.. என் நினைவு சரியானது என்றால், மதிசுதாவை, நான், சுபாங்கன், கூல்போய் மூவரும் ஒன்றாகவே முதல் முதல் சந்தித்தோம்.
மதிசுதாவின் ஆற்றலை பல தடவைகள் கண்டு நான் பிரமித்ததுண்டு, அதேவேளை அதற்காகவே மதிசுதாவை கண்டித்ததும் உண்டு.

அடுத்த சந்திப்பு வரோ... யாழ்ப்பாணம் வந்து வரோ கோல் பண்ணியிருந்தார். சந்தித்தேன். முதலிலேயே ஒன்றை சொல்லியிருக்க வேண்டும் எனக்கு இலங்கையில் இருந்து முதல் முதல் பின்னூட்டம் போட்டது வரோதான்.
வரோ..சம்பந்தமான சர்ச்சைகள் முழுமையாக இல்லாதுவிடினும் பகுதியாக சிலர் என்னிடம் சொல்லியிருந்தனர்.
நல்லூரில் இருந்து பதிவுகள், தனது ஊடகவியல் என பலவற்றை என்னுடன் பகிர்ந்துகொண்டார். நான்தான் அவரை ஆசுவாசப்படுத்தி உங்களுக்கு என்ன பிரச்சினை என்று கேட்டேன். கண்கள் பனிக்க சில விடையங்களை கூறினார்.
பதிவு என்பது எங்களின் சகலதும் கிடையாது ஜஸ்ட் அது ஒரு டைம் பாஸிங்தான், நீங்கள் அதை பெரிய விடயமாக எடுப்பதுதான் பிரச்சினை என்று கொஞ்சம் ரிலாக்ஸாக கதைத்தேன். சில விடையங்களை அவரும் ஏற்றுக்கொண்டிருந்தார். உண்மையில் கூர்ந்து கவனித்தால் அதன் பிறகு அவரிலும், அவரது பதிவிலும் பாரிய மாற்றங்கள் இருந்தன.

அடுத்து ஒரு பிழையில் உண்டான அன்னியோன்னியம். எப்போதுமே என்னில் பிழை இருந்தால் அதை ஏற்கவேண்டும் என்பதே என் பழக்கம், அதற்கு அமைவாக அந்த பிழையை ஏற்றுக்கொண்டு அந்த சுட்டிக்காட்டிய நெஞ்சத்துடன் உண்டான சொந்தம் வலையுலகில் கொஞ்சம் வித்தியாசமானதுதான்.
அன்றிலிருந்து நெஞ்சங்கள் சிதறவில்லை ஒன்றல்வா ஆகியிருக்கு ரமேஸ்?

பின்னர் ஜீ... ஆரம்பத்தில் நான் கூட, ஜீயை இந்தியப்பதிவர் என்றே கணித்திருந்தேன். ஆனால் ஜீ..தான் யாழ்ப்பாணம் என்று பல இடங்களில் பிடிகொடுத்திருந்தார். அவரை தொடர்பு கொள்ள வழியின்றி இது பின்னூட்டம் இல்லை என்று சொல்லி தொடர்பை ஏற்படுத்தியிருந்தேன். ஜீ...எதையும் பொஸிட்டிவாக எடுத்துக்கொள்ளும் ஒருவர். போடா குரங்கு என்று பேசினாலும் விழுந்து விழுந்து சிரிக்கும் ஒருவர் (ஹி...ஹி..ஹி..)

அடுத்து பதிவர் சந்திப்பு, அதன் முன்னால் கிரிக்கட் என்று அடுக்கடுக்காக நான் ஆவலுடன் சந்தித்துக்கொண்ட நெஞ்சங்கள்.
முக்கியமாக லோஷன். இலங்கை பதிவர்களில் என் வயதை உடையவர், என்பதால் நான் அதிகம் நோக்கும் ஒருவர். நான் எப்போதுமே ஒரு பதிவரை அவரது தனிப்பட்ட தொழிலுடன் சேர்த்து பார்பது கிடையாது.
எனக்கு தனிப்பட்ட ரீதியில் லோஷன் தகுதியான அதேநேரம் சிறப்பானதொரு அறிவிப்பார்தான். ஆனால் பதிவுலகத்தில் லோஷன், வாமலோஷன் என்ற வலைப்பதிவை எழுதும் லோஷன்தான்.
நான் நினைக்கின்றேன் அவர் அறிவிப்பாளராக இருப்பது பதிவுலகத்தில் அவருக்கு நன்மைகளைவிட, சாபங்களைத்தான் அதிகம் கொடுத்திருக்கின்றது என்று.
நான் நடந்துமுடிந்த பதிவர் சந்திப்பிலே லோஷனின் பதிவை மேற்கோள்காட்டி பதிவுலகம் என்பது வேறு, உங்கள் தனிப்பட்ட விடையங்கள், உங்கள் உயர்வுகள், கல்வி, தொழில் என்பதுவே முக்கியம் என்று பேசியிருந்தேன்.
இப்போது எழுந்துள்ள தேவையற்ற சச்சரவுகளுக்கும் தீர்வாக லோஷன், ஜனா உட்பட அனைவரும் மீண்டும் படிக்கவேண்டிய பதிவாக அது இருக்கின்றது.

இந்த மூன்றுவருட பதிவுலக வாழ்க்கை பல நன்மைகளை தந்திருக்கின்றது. பலதரப்பட்டவர்களின் பாராட்டுக்களை, அனுமதிவாங்கிய மீள் பிரசுரங்களை, ஒலிவடிவங்களை அத்தோடு அனுமதியற்ற பிரசுரங்களை, நன்றி இணையம் என்ற ஒற்றை வரிகளை எல்லாம் வாங்கியிருக்கின்றது.
அதேவேளை பதிவுலகத்தில் தேவையற்ற சர்ச்சைகளும், குரோதங்களும் ஏற்பட்டிருப்பதும் மறைக்கமுடியாத உண்மைகளே. பதிலுக்கு பதில் பேசுவதும், நீ பெரிதா நான் பெரிதா என்று ஆளாளுக்கு குத்திக்காட்டும் இடுகைகளை போடுவதும் இவற்றிற்கு தீர்வாக ஒருபோதும் இருக்கமுடியாது.


நான் பெரியவன், நாங்கள் பெரியவர்கள், நாங்கள்தான் பதிவுலகமே என்ற எண்ணங்கள் களையப்படவேண்டும். உண்மையில் இங்கு யாரும் பெரியவர்களும் கிடையாது, சிறியவர்களும் கிடையாது.

பதிவுலகத்தில் யாரும் தனித்திருக்கமுடியாது. தானே எழுதி தானே வாசிக்கும் நிலைமையோ, அல்லது குறிப்பிட்ட தாங்களே எழுதி தங்களுக்குள்ளேயே வாசிக்கும் ஒரு நிலைமைகளே ஏற்படும்.
தமிழர்களுக்கு கிடைக்காத ஒன்று 'ஒற்றுமை' அதற்கு பதிவுலகம் என்ற விதிவிலக்கா என்று மற்றவர்கள் பரிகாசனை செய்யாமல் இருக்க பொறுப்பாளிகள் நாங்கள்தானே?

ஓவ்வொரு மனிதனும் சுதந்திரமானவன், என், அல்லது எங்களின் எண்ணப்படிதான் ஒவ்வொருவனும் இருக்கவேண்டும் என்றும், எனக்கு அல்லது எங்களுக்கு எதிரி அனைவருக்கும் எதிரியாகவே இருக்கவேண்டும் என எவரும் எதிர்பார்க்கமுடியாது. அப்படி எதிர்பார்ப்பது முட்டாள்த்தனமே ஆகும்.
எந்தவொரு பிரச்சினையும் தீர்க்கப்படக்கூடியதே ஆகும். அது அவரவர் புரிந்துணர்வுக்கு உட்பட்ட விடையமாகும்.
அதேவேளை பதிவுலகத்தில் கருத்து பகிர்வுகள் வரலாம் ஆனால் தனி மனிதன் ஒருவனை குறிவைத்து குவிக்கப்படும் கருத்துக்களுக்கு எப்போதும் நான் எதிரானவன்தான். இதில் நக்கல்களும் நையாண்டிகளும் அவரவர் தரங்களையே குறைக்கும்.

சில சச்சரவுகள் இடம்பெறுகின்றன என்பதை மணந்து தெரிந்துகொண்டே சில மூன்றாம் தரப்புக்கள் இவற்றுக்குள் தாங்களும் புகுந்துவிடலாம் என்று எண்ணுகின்றன அப்படியானவர்களுக்கு என் மின் அஞ்சல் தவறான முகவரிகளாகவே இருக்கும் என்பதை மீண்டும் அறிவித்துக்கொள்கின்றேன்.
இறுதியாகச்சொல்லிக்கொள்வது என்னவென்றால், நல்ல கருத்தை யார் சொன்னாலும் என்ன! உங்கள் ஒவ்வொருவரையும் நீங்களே சுயவிமர்சனம் செய்து உங்களை நீங்களே கேள்விகளை கேளுங்கள்!! என்று இன்று ஒருவர் சொல்லியிருக்கின்றார். கொஞ்சம் முயற்சி செய்துதான் பார்க்கலாமே (நானும் உட்பட)

***இன்றைய நாள் (29.05.2009) மாலை 5.00 மணிக்கு சென்னையில் என் வலைப்பிரவேசம் ***

92 comments:

Unknown said...

வாழ்த்துக்கள் பாஸ்!

வந்தியத்தேவன் said...

வாழ்த்துக்கள் நண்பா, பின்னூட்டம் இட்டாத்தால் பின்னூட்டம் இடுவேன் என நினைப்பது தப்பான விடயம். வலையுலகத்தில் நிலைத்து நிற்பதற்க்கு சகிப்புத் தன்மை மிகமிக அவசியம்.

நிரூபன் said...

வணக்கம் சகோ, பதிவினைப் படிப்பதற்கு முன்பதாக,
நீண்ட நெடிய பாதையினை எழுத்துலகில் கடந்து வந்திருக்கிறீர்கள்.
வாழ்த்துக்கள் சகா.

Unknown said...

அடப்பாவீங்களா!? இப்பதான் அதப் பாத்தேன்! ஏன் பாஸ்? ஏன்? ஏன் இந்தக் கொல வெறி? ஏதோ திட்டணும்னு தோணியிருக்கு...முடிச்சிடிங்க...இப்ப சந்தோஷமா?

ஷர்புதீன் said...

உங்களின் வலைபூ டெம்ப்ளட் அழகாக இருக்கிறது., 55/100 மதிப்பெண் ( நான் என்னுடைய டேம்ப்ளட்டுக்கு கொடுத்த அதே மதிப்பெண்)

தனிமரம் said...

வாழ்த்துக்கள் உங்களின் திறந்த மனப்பான்மையுடன் பல விசயங்களை பகிர்ந்துள்ளீர்கள். சிலவிடயங்களில் (கருத்துக்களில்)சமரசம் செய்தால் பதிவாளர்களுடன் நட்புடன் இருக்கலாம் என்பது என் கணிப்பு உங்களுடன் வந்தவர்கள் சிலர் இப்போது எழுதுவது குறைந்துவிட்டது என நினைக்கிறேன்!

maruthamooran said...

ஜனா….!

நல்ல நண்பர்- அதனையூம் தாண்டி உறவூ இருக்கிறது எமக்குள். கருத்து பகிர்தல்களின் போதும்இ ஒருவர் மீதான மற்றவரின் அக்கறையிலும் என்னை பல தடவைகளில் நெருக்கமாக உணர வைத்தவர். இந்தியாவிலிருந்து பதிவிடும் காலத்தில் அறிமுகமாகியவர். அதுவூம்இ அவரின் ஆக்கமொன்றினை இலங்கை பத்திரிகையில் வெளியிடுவது தொடர்பில் ஆரம்பித்த அறிமுகம் மிகவூம் நெருக்கமாகவே தொடர்கிறது.

சில நண்பர்களுடனேயே கருத்து பகிர்தல்கள் மாத்திரமின்றி கண்டிப்பையூம் காட்ட முடியூம். அவ்வாறு நான் கண்டிப்பு காட்டும் ஒருசிலரில் ஜனாவூம் ஒருவர். அவரும்இ நான் விடுகின்ற தவறுகளை தயக்கமின்றி உரிமையூடன் சுட்டிக்காட்டுவார். பலவற்றை திருத்தியிருக்கிறேன். நல்ல நட்புக்கும்இ அந்த நட்பினை ஏற்படுத்தி பதிவூலகத்துக்கும் நன்றி. வாழ்த்துக்கள் பொஸ்!!

கருத்து மோதல்களுக்கு நேரடியாக பதில்கொடுக்க முடியாமல் பஞ்சோந்தி தனம் புரியூம் பலர் பதிவூலகிலும் இருக்கிறார்கள். அதுதவிரவூம்இ குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க அலைபவர்களும் இருக்கிறார்கள். இவர்களை கருத்திலெடுத்துக்கொண்டு நேரத்தை வீணடிப்பதை தவிர்த்துவிடுவதே நல்லது. பதிவூலகத்தில் காணப்படும் சில முறையற்ற செய்கைகள் தொடர்பில் நான் நேற்று பேஸ்புக்கில் எழுதியது இதுதான்……!

வலை மற்றும் பேஸ்புக் பக்கங்களில் போட்டியும்- கருத்து மோதல்களும் வரவேற்கப்பட வேண்டியதுதான். ஆனால், இப்போதெல்லாம் பொறாமையும்- காழ்புணர்வின் உச்சமுமே அதிகம் அரங்கேறிக்கொண்டிருக்கிறது. சகித்துக்கொள்ள முடியவில்லை!!

Unknown said...

அம்மாடியோவ்...
என்ன ஒரு நெடிய கதை..
வாசிக்க இனிமையாக இருந்தது..
எந்த சந்தர்ப்பத்திலும் போர் அடிக்கவில்லை..அதற்க்கு காரணம் உங்கள் எழுத்து..
தொடர்ந்து உங்கள் பயணம் சிறப்பிக்க வாழ்த்துக்கள்!!

pichaikaaran said...

இனிமையான பகிர்வு

Mohamed Faaique said...

ஷப்பா,,,!!!! முடியல... நல்ல பதிவு சார்... காரியாலயதுல கள்ளத்தனமா வாசிச்சு முடிக்கும் போது போதும் போதும் எண்ராகிவிட்டது....

தொடந்து எழுத வாழ்த்துக்கள்

Mohamed Faaique said...

இலங்கை பதிவர்கள் மத்தியில் “புன்னகையே வாழ்க்கை”னு ஒரு ஒரு பிரபல பதிவர் இருக்காரே!!! தெரியாதா????

ஹி...ஹி... அது நாந்தானுங்கோ.....

shanmugavel said...

//எத்தனை நாள் கனவு கண்டு கண்ணீரால், தியாகங்களால், இரத்தங்களால் கட்டப்பட்ட ஒரு சாம்ராஜ்யமே வீழ்ந்துபோன மனம் வெடிக்கும் வேதனைகள், அழுகைகள், இத்தனையும் மீறிய ஒரு இயலாமை, சுயவெறுப்பு என்பவற்றோடுதான் வலையில் விழுந்தேன். எழுதுவது எழுதுகின்றோம் எவனுக்காவது எப்போதாவது பிரயோசனையாக எழுதுவோம் என்ற குறிக்கோளுடன் எழுத்துக்கள் ஆரம்பமாகின.
பலர் பயப்படும் விடையங்களைக்கூட பயப்படாமல் எழுதினேன்.//

இதுவே உங்கள் எழுத்தில் மனசை இழுக்கும் விஷயம்.நன்று ஜனா வாழ்த்துக்கள்.

Unknown said...

மாப்ள எவ்ளோ விஷயங்க சொல்லி இருக்கீங்க.......ரைட்டு நானும் முயற்சிக்கிறேன் நண்பா..........ஏன்னா நான் எப்படிப்பட்ட பதிவருன்னே தெரியாத பதிவர் ஹிஹி!

யோ வொய்ஸ் (யோகா) said...

congrats boss..

கார்த்தி said...

வாழ்த்துக்கள் ஜனா அண்ணா!! எவ்வளவு சாதனைகள் சோதனைகளை கடந்து வந்திருக்கின்றீர்கள்!!

/* ஓவ்வொரு மனிதனும் சுதந்திரமானவன், என், அல்லது எங்களின் எண்ணப்படிதான் ஒவ்வொருவனும் இருக்கவேண்டும் என்றும், எனக்கு அல்லது எங்களுக்கு எதிரி அனைவருக்கும் எதிரியாகவே இருக்கவேண்டும் என எவரும் எதிர்பார்க்கமுடியாது. அப்படி எதிர்பார்ப்பது முட்டாள்த்தனமே ஆகும் */

இது உண்மையில் ஒரு அவசியமான கருத்து இந்தக்காலத்தில்! ஏனினும் பல சச்சரவுகள்தான் நல்லதில் முடிந்திருக்கின்றன. அது போல் இப்போது இலங்கை பதிவுலகமும் கொஞ்சம் களை கட்டியிருக்கிறது. அனைவரும் அவரவர்கள் குறைகளை களைந்து ஒற்றுமையாக எழுந்து வருவோம். இங்கே அனைவரும் நண்பர்களே!!!

நீங்கள் இளையவர்களுக்கு ஒரு வழிகாட்டி. உங்கள் கருத்துக்கள் அனைவராலும் உள்வாங்கப்படும். நல்ல காலத்தில் நல்லதொரு பதிவு!!

sinmajan said...

வாழ்த்துக்கள் ஜனா அண்ணா..
உங்கள் காத்திரமான பதிவுகளின் தீவிர வாசகன் நான்.. தொடர்ந்து கலக்குங்கள்..

balavasakan said...

என்ன ஜனா அண்ணா சென்டி மென்ட பதிவா..?
now playing ...
இருப்போமா வெளிப்படையாய்
சிரிப்போமா மலர்க்குடையாய்..
அறைக்குள்ளே மழை வருமா..?
வெளியே வா குதூகலமா..!
இந்த பூமிபந்து எங்கள் கூடைப்பந்து
அந்த வானம் வந்து கூடை செயத்து இன்று
கறை இருக்கும் நிலவினை சலவை செய்
சிறை இருக்கும் மனங்களை பறவை செய்..
எந்த மலர்களும் கண்ணீர் சிந்தி கண்டதில்லை..!
...........
...
ஜூன் போனால் ஜூலைக்காற்றே..

ஆதிரை said...

வாழ்த்துக்கள் சகோதரா...

தொடர்ந்தும் காத்திரமான படைப்புக்களை தருவீர்கள் என்ற நம்பிக்கையுடன்

- ஆதிரை.

நிரூபன் said...

பதிவுலகில் நடை பயின்று கொண்டிருக்கும் எங்களைப் போன்ற புதியவர்களுக்கு
ஏணியாய் இருக்கும், உங்களின் வரலாற்றுப் பாதையினைப் பற்றிய அருமையான தொகுப்பினைத் தந்துள்ளீர்கள் சகோ.

உணவு உலகம் said...

வாழ்த்துக்கள் நண்பரே!. பதிவுலகின் நிதர்சனங்களை சொல்லியுள்ள விதம் அருமை!

உணவு உலகம் said...

தமிழ்மணம் ஏழாவது.

ARV Loshan said...

வாழ்த்துக்கள் ஜனா,..
வெளிப்படை, கொஞ்சம் வேதனை, நியாயமான ஆதங்கங்கள் தெரிகிறது பதிவில்.. :)

அனைவரும் தங்களைத் தாங்களே சுய பரிசோதனை செய்துகொள்ளும் நேரம் இது..
மனதைத் திறந்து வெளிப்படியாகப் பேசிக் கொண்டால் வேதனை எதுவும் இல்லை எங்கேயுமே..

சி.பி.செந்தில்குமார் said...

>>நான் பெரியவன், நாங்கள் பெரியவர்கள், நாங்கள்தான் பதிவுலகமே என்ற எண்ணங்கள் களையப்படவேண்டும். உண்மையில் இங்கு யாரும் பெரியவர்களும் கிடையாது, சிறியவர்களும் கிடையாது.

மறுக்க முடியாத உண்மை சார்..

சி.பி.செந்தில்குமார் said...

உங்கள் அனுபவம் எங்களுக்கு வழி காட்டட்டும் நன்றி

Anonymous said...

அந்த விபத்து உங்களை பதிவுலகுக்கு கொண்டு வந்ததில் இருந்து பல தடைகளை எல்லாம் தண்டி சென்று கொண்டுள்ளீர்கள். மூன்று வருடங்களை கடந்தும் சிறப்பாக தொடர்ந்து செல்ல வாழ்த்துக்கள் பாஸ்....

Anonymous said...

//அதேவேளை பதிவுலகத்தில் கருத்து பகிர்வுகள் வரலாம் ஆனால் தனி மனிதன் ஒருவனை குறிவைத்து குவிக்கப்படும் கருத்துக்களுக்கு எப்போதும் நான் எதிரானவன்தான். இதில் நக்கல்களும் நையாண்டிகளும் அவரவர் தரங்களையே குறைக்கும்./// இவை எல்லாம் தவிர்க்கப்பட்டு பதிவுலகு சென்றால் இன்னனும் ஆரோக்கியமாக இருக்கும்...

Ramesh said...

வாழ்த்துக்கள் அண்ணே....
ஒவ்வொரு நட்புக்களும் விளைந்த தன்மை அழகு. அத்தனையிலும் நானும் சிக்கியிருப்பது மகிழ்ச்சி.
பதிவுலகில் இது வெற்றி. அதைவிட உளமார்ந்த உறவு நமக்குள் இருப்பது இருவரையும் இதயம் இணைத்து வளர்க்கும் உறவு.
வாழ்த்துக்கள். இன்னுமின்னும் எழுதுங்கள். தொடருகிறோம். திறந்த இந்த பதிவு இன்னும் நிறையப்பதிவர்களை திறக்கட்டும். அன்பு என்பது வட்டத்துக்குள் இல்லை இது திறந்திருக்குது என நினைக்கிறேன் இங்கே..

MATHUKARAN said...

best wishes anna.......... congrates....

Bavan said...

வாழ்த்துக்கள் அண்ணா, தொடர்ந்து கலக்குங்கோ..:-))

KANA VARO said...

Best wishes Thala!
U.K vanthathukku naan idum muthal pinnooddam ithu thaan. thodarum enkal nadpu...

ம.தி.சுதா said...

pls wait anna... i came to night..

ஆதிரை said...

மீண்டுமொரு முறை வாழ்த்துக்கள் ஜனா அண்ணா,

வாழ்த்துக்களின் நடுவே - உங்கள் மீது நான் வைத்திருந்த அந்த 'உயர்ந்த' மதிப்பு கேள்விக்குள்ளான சந்தர்ப்பமொன்றை இவ்விடத்தில் சுட்டிக்காட்டலாம் என எண்ணுகின்றேன். விளக்கம் தருவீர்கள் என்ற நம்பிக்கையுடன்!!!

ஒவ்வொரு வாரமும் உங்கள் பதிவினூடாக ஒவ்வொரு பதிவர்களை அறிமுகப்படுத்திக் கொண்டிருந்தீர்கள்; எம்மில் பலரை வெளிச்சத்துக்கும் கொண்டுவந்தீர்கள். அந்த வகையில் வரோ அவர்களையும் அறிமுகம் செய்தீர்கள். அதில் எனக்கு எந்த ஆட்சேபனையோ - மனக் கஸ்டமோ இருந்ததில்லை; இருக்கப்போவதுமில்லை.

ஆனால், அந்நேரம் பதிவுலக சர்ச்சைகளில் வரோவும் சிக்கிக்கொண்டிருந்தார் என்பது தாங்கள் தெரியாததில்லை. அப்படி இருந்தும் இப்படி ஒரு கேள்வியை கேட்டுத் தொலைத்தீர்களே.

கேள்வி: இலங்கைப் பதிவர்களுக்கும் உங்களுக்கும் இடையிலான உறவு எப்படியிருக்கிறது?

ஜனா எதையோ சாதிப்பதற்காய் இப்படியான கேள்வியை - என்ன பதில் கிடைக்கும் என்று தெரிந்து கொண்டும் கேட்டிருக்கிறார் என ஒரு சில பதிவுலக நண்பர்களிடம் அலுத்துக் கொண்டேன். அப்போதும் உங்கள் மீதிருந்த அந்த உயர்ந்த மதிப்பு குறையவேயில்லை.

ஆனால், சில நாட்களின் பின்னர் நானறிந்த செய்திதான் என் மனதில் இருந்த ஜனா என்ற விம்பத்தை உடைத்தெறிந்தது.

அதாகப்பட்டது, நீங்கள் வரோவிடம் கேட்டதாக சொல்லப்பட்ட கேள்வி வரோ தானாகவே உருவாக்கி விடை எழுதித்தந்தாராம். வரோவின் கேள்வியயும் பதிலையும் உங்கள் தளத்தில் இட்டிருக்கின்றீர்களாம்? இது உண்மையா?

Subankan said...

Congrats Anne :-)

Subankan said...

Congrats Anne :-)

Vathees Varunan said...

:)

Vathees Varunan said...

:)

roshaniee said...

best of luck
superb......

Jana said...

@ ஜீ...
நன்றிகள் பாஸ்

Jana said...

@வந்தியத்தேவன்
நன்றிகள் நண்பா.. உண்மைதான் திருத்திக்கொள்கின்றேன்

Jana said...

@நிரூபன்
நன்றி நிரூ..தங்கள் பதிவுகளிலும் பல முக்கியமாக, மண்ணியம், சமுகம், அந்தநாள் நினைவுகள் என பல விடையங்கள் தரமாக உள்ளதை கவனித்துவருகின்றேன்.

Jana said...

@ ஜீ...
ஆஹா.. இல்லை ஜீ.. நீங்க ரொம்ப பொஸிட்டிவான ஆள் என்பதை உச்சமாக சொல்லியிருந்தேன். தவறுதலாக பட்டால் மன்னித்திடுங்க

Jana said...

@ஷர்புதீன்
நன்றி ஐயா.. அந்த பெருமைகள், பலாவாசகன் மற்றும் கிருத்திகன் ஆகியோரையே சாரும்

Jana said...

@Nesan
உண்மைதான் நேசன். சில இடங்களில் சமரசங்கள் பல விடையங்களை தீர்க்கக்கூடியதாக இருக்கும் ஆனால் அந்த சமரசங்கள் இதயபூர்வமாக இருந்தல்வேண்டும், வெறும் வார்த்தைகளாகவும், திரைமறைவு அரசியல்கள் பின்னாலும் இருக்காமல் இருந்தால் அனைவருக்கும் நன்மையாகவே இருக்கும்.

Jana said...

@மருதமூரான்.
நன்றி மருதமூரான்

Jana said...

@மைந்தன் சிவா
எந்திரன்.. திரைப்பட பாடல் வெளியீடு பார்த்திருப்பீர்களே மைந்தன் :)
அதிலே ஐஸ்வர்யா ராய்..அந்த திரைப்படத்தில் பங்கெடுத்த எல்லோரையும் பற்றி கூறிவிட்டு ரஜினி பற்றிக்கூறாமல், போக வெளிக்கிட்டுவிட்டு..
ரஜினி சேர்.... என்று செப்பிரைஸா பேசுவார்கள்..
அதுபோல எனக்கு பதிவுலகத்தில் கிடைத்த நல்ல நட்புக்களில் உங்கள் நட்பு சிறப்பான ஒன்று ஆனால் அவசரத்தில் எழுத மறந்துவிட்டேன்.
மன்னிக்கவும் மைந்தன் சேர்...

Jana said...

@Mohamed Faaique
முதல் வரவுக்கு நன்றிகள் சகோதரரே...
ஆஹா... அந்த பதவரை எனக்கு முதலே தெரியுமே :)

Jana said...

@ shanmugavel
நன்றி ஐயா.. முழுமனதுடன் பாராட்டும் நண்பர்களின் பாராட்டுக்கள்தான் ஒரு எழுத்தாளனின் மதிப்பு

Jana said...

@ விக்கி உலகம்
நன்றி பிரன்ட்...
நீங்க ஒரு ரசிக்கும் சீமான் ஐயா..

Jana said...

@யோ வொய்ஸ் (யோகா)
Thankx jo..

Jana said...

@ கார்த்தி
நன்றி...கார்த்தி

//நீங்கள் இளையவர்களுக்கு ஒரு வழிகாட்டி. உங்கள் கருத்துக்கள் அனைவராலும் உள்வாங்கப்படும்.//


அப்படியா... ஒருபோதும் இளையவர்களுக்கு ஒருபோதும் தவறான வழிகாட்டுபவனாகவோ, அல்லது பிழையான முன்னுதாரணமாகவோ நான் இருக்கமாட்டேன். இது பலருக்கும் தெரியும்.
நன்றி

Jana said...

@sinmajan

நன்றி சின்மஜன்

Jana said...

@ Balavasakan
மிக மிக பொருத்தமான பாட்டு ஒன்றை போட்டு காட்டுறீங்களே வாசகன்

Jana said...

@ஆதிரை
நன்றி ஆதிரை..தொடர்ந்தும் அல்ல இனிமேல் அதிகமான அப்படியான பதிவுகளே வரும்.

Jana said...

@நிரூபன்
மீண்டும் நன்றிகள் நிரூ

Jana said...

@FOOD
நன்றிகள் நண்பரே..பதிவுலகத்தில் ஏதாவது விடையத்தில் உபயோகமான, பலருக்கு வழிப்பூட்டும் பதிவுகளை இடலாம் என்பதற்கு சான்றாக நிங்களும் உள்ளீர்கள். நன்றிகள்

Jana said...

@ LOSHAN
உண்மைதான் லோஷன் கண்டிப்பாக நேரடியாக பேசிக்கொள்ளதான் வேண்டும் எல்லோருடனும்..

Jana said...

@ சி.பி.செந்தில்குமார்
நன்றி ஐயா... நன்றி..
என்ன என் அனுபவங்கள் உங்களுக்கு வழிகாட்டியா? இது நக்கல்தானே??

Jana said...

@ கந்தசாமி.
நன்றிகள் மைடியர் கண்டோஸ்.. இனிவரும் நாட்களில் பதிவுலகம் கசப்புகள், சர்ச்சைகள் எல்லாம் விட்டு புதியபாதையில் பயனிக்கும் என்று நினைக்கின்றேன்

Jana said...

@ றமேஸ்-Ramesh
அன்பு என்பது வட்டத்துக்குள் இல்லை இது திறந்திருக்குது என நினைக்கிறேன் இங்கே.

முற்றுமுழுதான உண்மை.. ஒருவர் விடும் உண்மையான தவறுகளை இப்படித்தான் சுட்டிக்காட்டவேண்டும் என்பதற்கு தாங்கள் ஒரு உதாரணம், அதேபோல் பிழையை இருந்தால் ஏற்றுக்கொண்டு திருத்தி, மன்னிப்புக்கேட்கவேண்டும் என்பதுக்கு உங்களுக்கு நானும் ஒரு உதாரணம் (ஆங்..)

Jana said...

@ MATHUKARAN
Thanks brother :)

Jana said...

@Bavan

நன்றி பவன்..

Jana said...

@ KANA VARO
Thank you Varo.. Pathivukal> pathivulakthai oru pakkam vaithuvidu mukkiyamaaka Kalviyai nanraaka Kadrukollunkal.
Valamaana Kalvi nilaiye Ethirkaala Asthivaaram..
Thanx Varo..

Jana said...

@ ♔ம.தி.சுதா♔
Wecome Mathisutha

Jana said...

@ஆதிரை

மீண்டும் ஒருமுறை வந்திருக்கின்றீர்கள் ஆதிரை..முதல் முறை வராத கேள்வி தற்போது உங்களுக்கு எந்தவகையிலோ வந்திரப்பது சந்தோசம்.

அடுத்து என்னில் எவரும் உயர்ந்த மதிப்பு வைத்திருக்கவேண்டும் என்று நான் கருதுவது கிடையாது.
அப்படி உயர்ந்த மதிப்பு வைத்திருப்பவர்கள், என்னை முழுமையாக அறிந்தவர்கள் கண்டிப்பாக அந்த மதிப்பில் கேள்விக்குறியை சொருகி பார்க்கவும் மாட்டார்கள்.

அடுத்து பதிவர்கள் பலரை நான் வெளிச்சத்திற்கு கொண்டுவரவில்லை, அவர்களே பிரகாசிக்கும் நட்சத்திரங்கள்தானே:)

அடுத்து உங்கள் மனதில் ஜனா என்ற விம்பத்தை தூக்கி நிமித்துவதற்காக அல்ல, நீங்கள் கேட்டதற்காக சிலவற்றை சொல்லவேண்டி இருக்கின்றது...

நான் எப்போதும் சிலரைப்போல் நான் நல்லவன் என்றோ, அல்லது என்மேல் அடுக்கடுக்காக குற்றங்களை வைத்துக்கொண்டு மற்றவர்களை பழிக்கும் கேவலமான போக்கோ கொண்டிருந்தது கிடையாது.
என்னைப்பற்றி என் தளத்தில் என்ன கூறப்பட்டிருக்கின்றதோ அதுவே நான்.. அதில் நியாயமான கோபங்கள் வரவேண்டிய நேரத்தில் வரும் என்றும் போட்டிருக்கின்றேன் அல்லவா? அப்படியே வாழநினைப்பவன். என்ன எழுதுகின்றேனோ அதைப்போல செயலும் இருக்க நினைத்துக்கொள்பவன்.

சரி..மட்டருக்கு வருகின்றேன்.
அந்தகேள்வி...

அந்தக்கேள்வி வரோவிடம் மட்டும்தானா? கேட்கப்பட்டிருக்கின்றது என்பதை வடிவாக பாருங்கள்.
அதேபோல ஒரு கேள்வி வேறு யாரிடமும் கேட்கப்படவில்லையா?
அடுத்து நேரமின்மை காரணமாக மைந்தன் சிவா, ரமேஸ், மதிசுதா ஆகிய மூவருக்கு மட்டுமே அவர்களே கேள்விகளை தெரிவுசெய்யும் சலுகையினை வழங்கிருந்தேன்.
குற்றம் காண்பவர்கள் எண்ணுவதுபோல திட்டம்போட்டு எந்த கேள்வியையும் நான் தயார் செய்யவில்லை, ஒரு சிலர் தங்களைப்போல இதில் என்னையும் எண்ணிக்கொள்வார்கள்போல்.
அந்த கேள்விகள் அனைத்தும் மருதமூரானிடம் கேட்கப்பட்ட கேள்விகள். எந்தவித மாற்றங்களும் இல்லை.

என் பதிவுகளுக்கு நான்தானே சொந்தக்காரன், அப்படி இருக்க இப்படி ஒரு புதுக்தையினை சொன்ன அந்த அன்பு உள்ளம் எத்கயது என்று எண்ணுகின்றேன். ஒருவர் தளம் பற்றிய விடையம் அவருக்குத்தானே தெரியும், அதை மற்றவர் தெரியும் என்று வந்து சொண்டுரையும்போதே நீங்கள் அவதானமாக இருந்திருக்கவேண்டாமா! அப்படி சந்தேகம் என்றால் அவர் கதையினை நம்பிய நீங்கள் என்னிடம் கேட்டிருக்கலாமே?
அங்கே உங்களிடம் ஒருவர் சொன்னது உண்மையானால் இங்கு உங்கள் பற்றி எத்தனை எனக்கு சொல்லியிருப்பார் என்ற சிந்தனை ஏன் உங்களுக்கு வரவில்லை???

உண்மையில் அந்த - ந்தவாரப்பதிவர் என்ற தலையங்கத்தில் நான் போடுவது ஒவ்வொரு பதிவரையும் வெளிச்சத்திற்கு கொண்டுவருவதற்காக இல்லை, அவர்களை கௌரவப்படுத்துவதற்காகவே, அன்றைய மேற்குறிப்பிட்ட அவர்கள் பற்றிய அறிமுகத்திற்கு மட்டுமே என் எழுத்துக்கள் பொறுப்பு. பதில்கள் அவர்களைப்பொறுத்ததே.
அதில் அறிமுகமாகிய ஒவ்வொருபதிவர்களையும் கேட்டுப்பாருங்கள், அவர்கள் கேட்டுக்கொண்டிருந்தாலும், அவற்றில் நான் எதையும் நீக்குவதில்லை. நீக்கியிருக்கின்றேன், என்னைப்பற்றி அவர்களின் பாராட்டுக்களை மட்டுமே.

அதேபோல அவர்களை கௌரவப்படுத்தும் நான் அவர்கள் பற்றி பதிவு போடும்போது அவர்களின் வேண்டுகோள்களுக்கு இணங்க மொடரேஷன் செய்வது உண்டு, வரோவுக்கு முன்னதாகவே டிலானுடையதை மொடரேட் செய்திருக்கின்றேன், அவர்கள் கேட்டுக்கொண்டதற்காக
அதேபோல அசோக்பரனுடையதை அவரின் அனுமதியின்றியே பின்னர் மொடரேட் பண்ணினேன், காரணம் தேவையில்லாமல் ஒருவர் வந்து (இலங்கை சம்பந்தமானவர் அல்ல) அலட்ட வெளிக்கிட்டதே.

இவைகளே உண்மை. இதுவே யதார்தமும் கூட, அனால் தொடர்ந்தும் இதைவைத்துக்கொண்டே சிலர் என்னில் அரசியல் நடத்த முனைந்தால் அவற்றுக்கு செவிசாய்கும் எண்ணம் எனக்கு இல்லை.

இத்தனை குற்றம் காணும் சிலருக்கு ஒரு குறிப்பட்ட பதிவர் எழுதுவதையே நிறுத்தப்போகின்றேன் ஒருசிலரின் செயலால் என்றபோது, எப்போதும் ஆத்திரத்தில் மதியிழந்துவிடாத நான் அந்தநேரம் ஆத்தரப்பட்டு, அவர்கள் சந்தேகிக்கும் நபரின் தளத்திற்கே சென்று நேரடியாகவே பேசியிருந்தது மட்டும் கண்ணுக்கு தெரியாமல்போனது என்ன விந்தை.

எல்லோரையும்போல தான் எல்லோரும் இருப்பார்கள் என்று நினைக்கமுடியாது. ஒவ்வொருவருடனும் பேசுவதுக்கு ஒவ்வொரு முறை இருக்கின்றது அல்லவா?

இருப்பினும் தங்கள் கேள்விக்கு நன்றிகள் தம்பி..

Jana said...

@Subankan
Thank you Brother :-}

Jana said...

@ வதீஸ்-Vathees
:))

Jana said...

@roshaniee
Thank you

ஆதிரை said...

நீண்ட விளக்கத்திற்கு நன்றி :-)

//என் பதிவுகளுக்கு நான்தானே சொந்தக்காரன், அப்படி இருக்க இப்படி ஒரு புதுக்தையினை சொன்ன அந்த அன்பு உள்ளம் எத்கயது என்று எண்ணுகின்றேன். ஒருவர் தளம் பற்றிய விடையம் அவருக்குத்தானே தெரியும், அதை மற்றவர் தெரியும் என்று வந்து சொண்டுரையும்போதே நீங்கள் அவதானமாக இருந்திருக்கவேண்டாமா! அப்படி சந்தேகம் என்றால் அவர் கதையினை நம்பிய நீங்கள் என்னிடம் கேட்டிருக்கலாமே?//

நேரடியாக உங்களிடம்தான் கேட்டிருக்கின்றேன். ஆனால், கொஞ்சக் காலம் தாழ்த்தி..!

மீண்டும் நன்றி.

ம.தி.சுதா said...

அண்ணா தங்களது மூன்றாண்டு நிறைவுக்கு என் உளம் கனிந்த வாழ்த்துக்கள்...

ம.தி.சுதா said...

ஃஃஃஃஃஅதேவேளை அதற்காகவே மதிசுதாவை கண்டித்ததும் உண்டு.ஃஃஃஃ

என்னை புடம் போட்ட தருணங்களில் அதுவும் ஒன்றண்ணா எந் நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய் நன்றி கொன்ற மகட்கு...

ம.தி.சுதா said...

எல்லோரும் எம் மனதில் உள்ளதை கொட்டுகிறோம் அது நல்லதே அனால் எமக்குப் பிறகும் இலங்கையில் பதிவர் உருவாக வேண்டும் அவர்களை உலகம் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று எத்தனை பேர் நினைக்கிறோம்... கடந்த ஒரு மாதத்திற்குள்ளாக எத்தனை கரும்புள்ளிகளை நாமே விதைத்தோம்... இவையெல்லாம் பாதினியம் என்பதை என்றொ ஒரு நாள் எல்லோரும் உணர்வோம்...

Jana said...

@ஆதிரை
நன்றிகள் ஆதிரை..

Jana said...

@ ♔ம.தி.சுதா♔
வாழ்த்துக்களுக்கு நன்றிகள் மதிசுதா

Jana said...

@ ♔ம.தி.சுதா♔

"எந் நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய் நன்றி கொன்ற மகட்கு."

என்ன மதிசுதா பெரிய வார்த்தைகள் எல்லாம் போட்டிருக்கின்றீர்கள்...
அதெல்லாம் அந்தக்காலப்பழமொழி...

Jana said...

@ ♔ம.தி.சுதா♔
உண்மைதான் சுதா... வாயினால் பேசுவது அடுத்த கணமே ஒலி வெளியில் கலந்துபோகின்றது. அனால் எழுத்துக்கள், படிக்க படிக்க மேலும் மேலும் கோபங்களையும், ஆத்திரங்களையும் ஏற்படுத்திவிடக்கூடியவை. உண்மையில் சென்ஸிட்டிவான விடையங்களை கடிதங்களில் எழுதக்கூடாது என்று பல அனுபவசாலிகள் சொல்லியிருக்கின்றார்கள்.

ARV Loshan said...

ஜனா..

//எனக்கு தனிப்பட்ட ரீதியில் லோஷன் தகுதியான அதேநேரம் சிறப்பானதொரு அறிவிப்பார்தான். ஆனால் பதிவுலகத்தில் லோஷன், வாமலோஷன் என்ற வலைப்பதிவை எழுதும் லோஷன்தான்.
நான் நினைக்கின்றேன் அவர் அறிவிப்பாளராக இருப்பது பதிவுலகத்தில் அவருக்கு நன்மைகளைவிட, சாபங்களைத்தான் அதிகம் கொடுத்திருக்கின்றது என்று.//



மனதில் பட்டதை நேரடியாக சொல்பவன் நான்.. நீங்கள் எழுதிய என்னைப் பற்றிய/எம்மைப் பற்றிய குறித்த வாசகங்கள் மனதில் உண்மையாக எழுந்தவை என நம்புகிறேன்.
ஆனாலும்.. உங்கள் பதிவின் பின்னூட்டமாக இல்லாமல், சில விஷயங்களை எனது அடுத்த இடுகையில் கேட்கலாம் என்று இருக்கிறேன்..

மனதைத் திறந்து வைத்தால் வேறு பிரச்சினைகள் எழாது என்ற எனது அசையாத நம்பிக்கையால்..

//

இப்போது எழுந்துள்ள தேவையற்ற சச்சரவுகளுக்கும் தீர்வாக லோஷன், ஜனா உட்பட அனைவரும் மீண்டும் படிக்கவேண்டிய பதிவாக அது இருக்கின்றது.//

இந்த சர்ச்சையில் என் பெயரும் ஏன் வந்தது என்று நான் எண்ணிய போது வந்த கேள்வியால் எழுத வேண்டும் என்று எண்ணியது.. உங்கள் பதிவில் மேலுள்ள வாசகங்களால் கட்டாயம் எழுதவேண்டும் என்று எண்ணியிருப்பது.

Jana said...

@LOSHAN

கண்டிப்பாக லோஷன்.. திறந்தமனதுடன் பேசிக்கொள்வதுதான் அனைவருக்குமே நல்லது.

அந்த வாசகங்கள் உண்மையானவைதான், அவை உண்மையானவை என்று நீங்கள் நம்பத்தேவை இருக்காது.

மனதைத் திறந்து வைத்தால் வேறு பிரச்சினைகள் எழாது ...
விளக்கினை எரிய வைத்தால்த்தான் இருள் விலகும்.

நன்றி லோஷன்

Anonymous said...

hO கலக்கல் பொறுமையாக ரசித்து படிக்கிறேன்..நன்றி நண்பரே

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

வணக்கம் அண்ணே!

இவ்வளவு நாளும் தெரியாத்தனமா உங்கள ஜனா ஜனா என்று மொட்டையா கூப்பிட்டிட்டன்! இப்பதான் நீங்கள் என்னைவிட வயசு கூடினவர் என்று தெரியுது! அதால இனி ஜனா அண்ணே எண்டுதான் கூப்பிடுவேன்!

உங்களுக்கு இனிய வாழ்த்துக்கள் அண்ணே! மூன்று வருஷத்தை கடந்தமைக்கு!

இந்தச் சந்தர்ப்பத்தில் இந்தவாரப் பதிவரில் என்னையும் அறிமுகம் செய்தமையை நன்றியுடன் நினைத்துப் பார்க்கிறேன்!

மற்றது - போனமாதம் முழுக்க எங்கட வலைப்பதிவுகளில ஒரே அடிதடிதானே!

இப்ப அஞ்சாறு நாளா எல்லாத்தையும் விட்டுட்டு, நாங்களாச்சு, நமிதா ஆச்சு என்று இருக்கிறம்!

ஆனா அவையள் விடுறமாதிரி தெரியேல! இண்டைக்கும் முதலாம் திகதி ஒருத்தர் கடிச்சு வச்சிருக்கிறார்!

ஏற்கனவே அவையளுக்கு மட்டும்தான் கடிக்கத்தெரியுமோ, எங்களுக்கு தெரியாதோ எண்டு காட்டத்தான், திருப்பி அடிச்சனாங்கள்!

இப்ப நாங்கள் சீஸ் ஃபயரில இருக்கிறம்! ஆனா அவையள் தொடர்ந்தும், ஆத்திரமூட்டும் தாக்குதல்கள செய்து வருகினம்!

தொடர்ந்தும் தாக்கினா, நாங்கள் செக்கண்ட் ரவுண்ட ஆரம்பிச்சு ஒரு கிழமைக்கு ஓட்டுவம் எண்டத அவையளுக்கு சொல்லுங்கோ!

நீங்கள் தானே நோர்வே மாதிரி மத்தியஸ்தம் வகிக்கிறீங்கள்! ஹி ஹி ஹி ஹி!

நான் இப்ப ஆமிப்பெட்டையளுக்கு சைட் அடிச்சுக்கொண்டு கிளு கிளுப்பா இருக்கிறன்! சும்மா மூட்டை குழப்ப வேண்டாம் எண்டு சொல்லுங்கோ!

நெடுக உள்குத்து போட்டுக்கொண்டு இருக்கேலாது.......!!!! ஹி ஹி ஹி !

Admin said...

வாழ்த்துக்கள் அண்ணா!

ஈயடித்துக்கிடக்கும் எனது வலைப்பூவிற்கு இடைக்கிடையாவது வந்து செல்வது நீங்கள்தான்..

மீண்டும் நன்றிகளும் வாழ்த்துக்களும்... மகிழ்ந்திருப்போம்

வடலியூரான் said...

பதிவை அன்றே வாசித்திருந்தும், இன்று தான் பின்னூட்டமிட நேரம் வாய்த்தது.
மூன்று வருடங்களை கடந்தும் சிறப்பாக தொடர்ந்து செல்ல வாழ்த்துக்கள்

//சோ... என் வலைப்பிரவேசம் ஒரு விபத்து அல்ல விபத்தினால் உருவானது.

ரசித்தேன்

Kiruthigan said...

வாழ்த்துக்கள் ஜனாண்ணா...!
//ஆ..இந்த இரண்டு நிமிசத்திலை வாறன் என்றது அந்தக் குரல்...
அதற்கு சொந்தக்காரர் பதிவர்களின் கலகல கூல்போய்.

ஆனால் இரண்டு மணித்தியாலம் கழித்து ஒரு ஆள் சிரித்துக்கொண்டு வந்து நின்றது. ஆ..ஊ.. என்று கதைகள் சொல்லி அனைவரையும் விழுந்து விழுந்து சிரிக்க வைத்தது...//
நன்றி புனைபெயரில் எழுதிக்கொண்டிருந்த என்னை சொந்தப்பெயரில் வெளிப்பட வைத்தவர் நீங்களே...!
கடந்து வந்த பாதைகளை திரும்பிப்பார்க்கும் போது முதலாவதாக நின்று கொண்டிருக்கும் தங்கள் எழுத்துகள் தொடர வாழ்த்துக்கள்...!

இராஜராஜேஸ்வரி said...

வாழ்த்துக்கள்.

sunramanan said...

வாழ்த்துக்கள் ஜனா.

எனது மனதில் இருந்த பதிவுலகம் பற்றிய பல கவலைகள் உங்கள் இந்த பதவின் ஊடாக தரிசிக்க கிடைத்தது.

ஆட்சிமாற்றத்தையே ஏற்படுத்தக் கூடியதான சமூக ஊடகங்களை நாங்கள் எவ்வாறான தேவைகளுக்கு பயன்படுத்தியிருக்கின்றோம் என்பதை சுயபரிசோதனை செய்வதற்கான காலம் தற்போது தோன்றியுள்ளது.

கூட்டம் சேர்ப்பதும் கும்மியடிப்பதுமாய் பதிவுலகம் மாறிப் போனது ஏன்?

ஆக்கபூர்வமானதும் காலத்தின் தேவை கருதியதுமான பதிவுகள் அதிகரிக்காமல் இட்டலியும் வடையும் சொல்லும் மாயக் கணிப்பீட்டு விம்பங்களுக்கு ஆசைப்பட்டு தனித்துவமான பதிவுப் பயணத்தை திசை திருப்பியவர்கள் யார்?

பதிவுகளுக்காய் அன்றி பதிவர்களுக்காய் பின்னூட்டியதும் வாக்குகள் போட்டதுமான மோடிவித்தைகள் அரங்கேற காரணம் என்ன?

கோஸ்டிகள் தோன்றி மாறி மாறி போட்டு தள்ளும் " தமிழனின் " கலாசாரம் பதிவுலகிற்குள் பரவியது ஏன்?

சுயவிலாசமிடப்பட்ட கடித உறையாய் ஒட்டைச் சட்டிக்குள் குதிரை ஓட்டியது போதும் என்று நினைக்கின்றேன்.

இந்த மாயவலையில் இருந்து வெளியேற நினைப்பவர்களுக்கும் ஆக்கபூர்வமான பாதையில் பதிவுலகை கொண்டு செல்ல நினைப்பவர்களுக்கும் உங்கள் பதிவும் அதற்கான பின்னூட்டங்களும் தெளிவான செய்தியை சொல்லியிருக்கின்றது.

பதிவுகளை வெறும் பகட்டிற்கும் பிரபலமடைவதற்கான மார்க்கமாகவும் பார்க்காத புதிய பூக்கள் இனியாவது மலரட்டும்.

Ramanan said...

வாழ்த்துக்கள் ஜனா.

எனது மனதில் இருந்த பதிவுலகம் பற்றிய பல கவலைகள் உங்கள் இந்த பதவின் ஊடாக தரிசிக்க கிடைத்தது.

ஆட்சிமாற்றத்தையே ஏற்படுத்தக் கூடியதான சமூக ஊடகங்களை நாங்கள் எவ்வாறான தேவைகளுக்கு பயன்படுத்தியிருக்கின்றோம் என்பதை சுயபரிசோதனை செய்வதற்கான காலம் தற்போது தோன்றியுள்ளது.

கூட்டம் சேர்ப்பதும் கும்மியடிப்பதுமாய் பதிவுலகம் மாறிப் போனது ஏன்?

ஆக்கபூர்வமானதும் காலத்தின் தேவை கருதியதுமான பதிவுகள் அதிகரிக்காமல் இட்டலியும் வடையும் சொல்லும் மாயக் கணிப்பீட்டு விம்பங்களுக்கு ஆசைப்பட்டு தனித்துவமான பதிவுப் பயணத்தை திசை திருப்பியவர்கள் யார்?

பதிவுகளுக்காய் அன்றி பதிவர்களுக்காய் பின்னூட்டியதும் வாக்குகள் போட்டதுமான மோடிவித்தைகள் அரங்கேற காரணம் என்ன?

கோஸ்டிகள் தோன்றி மாறி மாறி போட்டு தள்ளும் " தமிழனின் " கலாசாரம் பதிவுலகிற்குள் பரவியது ஏன்?

சுயவிலாசமிடப்பட்ட கடித உறையாய் ஒட்டைச் சட்டிக்குள் குதிரை ஓட்டியது போதும் என்று நினைக்கின்றேன்.

இந்த மாயவலையில் இருந்து வெளியேற நினைப்பவர்களுக்கும் ஆக்கபூர்வமான பாதையில் பதிவுலகை கொண்டு செல்ல நினைப்பவர்களுக்கும் உங்கள் பதிவும் அதற்கான பின்னூட்டங்களும் தெளிவான செய்தியை சொல்லியிருக்கின்றது.

பதிவுகளை வெறும் பகட்டிற்கும் பிரபலமடைவதற்கான மார்க்கமாகவும் பார்க்காத புதிய பூக்கள் இனியாவது மலரட்டும்.

June 3, 2011 11:58 PM

Jana said...

@ ஆர்.கே.சதீஷ்குமார்
தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள் நண்பரே..

Jana said...

@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி

அண்ணாவா... சரி பறவாய் இல்லை.
உங்களை அறிமுகப்படுத்தியது 'கண்ணாடிக்கு விளம்பரம்தேவையா என்ன'?
நோர்வேயா??? ஆளைவிடுங்கப்பா சாமி.....
நாங்க வேற்றுக்கிரகம் :))
தங்கள் வருகைக்கும் வாழ்துக்கும் நன்றி ஓ.வ.ஓ.அ.மா

Jana said...

@ கறுவல்
நன்றி நண்பரே.. இனிப்பான விடையங்கள் அங்கே அதிகமாக இருப்பதால்த்தான் ஈக்கள் வருகின்றதாக நினைக்கின்றேன். உங்கள் எழுத்துக்களை கவனித்து வருகின்றேன், பிரமாதமானவை அவை, அவையடக்காமகவேனும் அவற்றை குறைத்து சொல்லாதீர்கள்.
தொடர்ந்தும் வருவேன்...
ம்ம்ம்.. கண்டிப்பாக மகிழ்ச்சியாக இருப்போம்

Jana said...

@வடலியூரான்
நன்றி வடலியூரான்.
தங்கள் வருகை மிக்க மகிழ்ச்சியை தந்துள்ளது.
இரசனைக்கும், வாழ்த்துக்கும் நன்றிகள்

Jana said...

@ Cool Boy கிருத்திகன்.
நன்றி பதிவுலக கலைவாணன் கிருத்திகன் அவர்களே..
தங்கள் வாழ்த்துக்கு நன்றிகள்.

Jana said...

@இராஜராஜேஸ்வரி
வருகைக்கும் வாழ்த்துக்கும் என் நன்றிகள்.

Jana said...

@ Ramanan
நன்றி ரமணன்.
பல கருத்தியல்களிலும் நாம் ஒத்தவர்களாக இருக்கின்றோம் என்று நினைக்கின்றேன்.
எழுதும் பதிவு, பதிவுலக அபிலாசைகளாக இப்போ மேலோங்கி நிற்கும், ஓட்டு, வாக்கு, பின்னூட்டம், குழுக்கள், என்பவற்றைத்தாண்டி எழுதும் பதிவு ஒன்று எப்போதாவது ஒருவனின் தேடலுக்கு விடையாக கிடைத்தால், அதுவே அந்த பதிவின் பூரண வெற்றி என்றே இப்போதும் நான் கருதிவருகின்றேன்.

அதேவேளை தாங்கள் சொன்ன முக்கியமான விடயத்தை முழுமையாக நானும் கடைப்பிடிப்பதோடு அபிலாசையாகவும் கொண்டுள்ளேன், அதாவது பதிபவர் யார் என்பது முக்கியம் இல்லை, பதிவு எப்படி என்பதுதான் அது.

சில புதியவர்கள் தரமான பல விடையங்களை எழுத முனைகின்றார்கள், அவர்களுக்கு இவ்வாறான மாஜைகள் தடைக்கற்களாக இருந்து, அவர்கள் எழுதுவதையே நிறுத்தவைக்கும் அபாயங்கள்கூட இருக்கின்றன. இவற்றை அனைத்து பதிவர்களும் கருத்தில் எடுத்து, செயல்படவேண்டும் என்ற அபிலாசை எப்போதும் உண்டு.

அதற்கு முதலுதாரணமாக நாமே இருக்கக்கூடாது என்று தங்கள் பின்னூட்டம் என்னை யோசிக்கவைக்கின்றது, இந்த மூன்றுவருடத்தில் அப்படி இருந்திருக்கின்றேனோ என்று எனக்கு தெரியாது. இனிவரும் நாட்களில் கண்டிப்பாக இருப்பேன்.

தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி ரமணன்

LinkWithin

Related Posts with Thumbnails