Friday, July 1, 2011

ஹொக்ரெயில் - 01.07.2011

டயானா இறக்காமல் இருந்திருந்தால்...

பிரித்தானிய இளவரசியாக இருந்த டயானா இறக்காமல் இன்று இருந்திருந்தால் இன்று தனது 50ஆவது பிறந்ததினத்தினை கொண்டாடியிருப்பார்.
ஆனால் விடயம் அதுவல்ல.
இளவரசி டயானா இறக்காமல் இருந்திருந்தால் என்னென்ன நிகழ்வுகள் அவர் வாழ்வில் நடந்திருக்கும், அவர் எப்படி செயற்பட்டிருப்பார் என்பதை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட நாவல்; பற்றியும், நியூஸ்வீக் பத்திரிகை இது தொடர்பாக வெளியிட்டுள்ள அட்டைப்படமும்தான் இப்போது பேச்சு.
பங்களாதேசத்தை பூர்வீகமாகக்கொண்ட பெண் எழுத்தாளரான மொனிக்கா அலி என்ற பெண்மணியே இந்த நாவலை எழுதியுள்ளார். ஏற்கனவே இவர் எழுதிய 'பிரிக் லேன்' என்ற நாவலுக்கு 2003 ஆம் ஆண்டு பிரிட்டனின் சிறந்த ஆங்கில நாவல்களுக்கான விருதினையும் இவர் பெற்றுக்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக இந்த நாவலில் 31ஆம் நாள் ஆகஸ்ட்மாதம் 1997ஆம் ஆண்டு, விபத்துக்குள்ளான அந்த கார் பயணத்தில் டயானா ஈடுபடாமல் இருந்திருந்தால்... என்ற கோணத்தில் கதை ஆரம்பிக்கின்றது.
அத்தோடு டயானாவின் செயற்பாடுகள் சில எவரும் நினைத்துப்பார்க்காத விதத்தில் அமைந்தும் உள்ளதை அவதானிக்கமுடிகின்றது.
இதேவேளை புதிதாக திருமணம் செய்திருக்கும் டயானாவின் மூத்த மருமகள் ஹேட் மீது டயானா சிறிது பொறாமை கொண்டவராக சித்தரிக்கப்பட்டிருக்கின்றார்,
அதேபோல் இந்த நாவலில் டயானா என்ற மக்கள் விம்பத்தை நொருக்கும்படி டயானாவின் சில நடவடிக்கைகளை நாவலாசிரியை எழுதியுள்ளமை பெரும் சர்;சைகளை உருவாக்கியும் உள்ளது என்பது கவனிக்கத்தக்கது.
அதேபோல பிரபலமான சமூக இணையதளங்களான பேஸ்புக், ருவிட்டர் என்பவற்றில் டயானவை பின்பற்றுவோர் 10 மில்லியனை தாண்டிருப்பதாகவும், சமுக இணையத்தளங்களில் டயானாவின் கருத்துக்கள் எப்படி எழுதப்பட்டிருக்கும் என்றும் இந்த நாவலில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எனினும் எடுத்தோம் கவிழ்த்தோம் என்ற ரீதியில் தான் இந்த நாவலை எழுதவில்லை எனவும், டயானா பற்றிய முழுவிபரங்களையும், அவர் பிறந்ததிலிருந்து இறக்கும்வரை அவரது குணாம்சங்களை ஆராய்ந்து, அவரது உளவியலை அறிந்தே இந்த நாவலை எழுதியுள்ளதாகவும் மொனிக்கா அலி தெரிவித்துள்ளார்.
எது எப்படியோ... இந்த நாவல் உலகில் உள்ள மற்ற பிரபலங்கள், தலைவர்கள் மரணிக்காமல் இருந்திருந்தால் எப்படி உலகம் இருந்திருக்கும் என்றகோணத்தில் பல நாவல்களை எழுத முன்னோடியாக உள்ளது என்பது மட்டும் உண்மை.
நான் கூட எப்போதும் 2ஆம் உலகப்போரில் ஹிட்லரின் கீழ் உலகம் சென்றிருந்தால், ஜெர்மன் வெற்றி பெற்றிருந்தால் இந்த உலகின்போக்கு எப்படி இருந்திருக்கும் என்று அடிக்கடி சிந்திப்பது உண்டு.

இதோ இதுதான் அந்த ஜர்ஸகும்ப...(சரச கும்பம்)

இமாலையப்பகுதியல் நேபாள சரிவோரம் 4000 மீட்டர் உயரத்தில் ஒரு விதமான மூலிகைகள் தன் பாட்டுக்கு வளர்கின்றன. குறிப்பிட்ட ஒரு பருவகாலத்தில் அவை பெருகுவது அதிகமாக உள்ளது. இந்த நிலையில் அந்தப்பருவகாலத்தில் அந்த குறிப்பிட்ட மூலிகையினை உண்பதற்காக அந்த இடத்தில் நம்ம ஊர் மயிர்க்கொட்டிகளை போல ஒரு வகைப்பூச்சிகள் இந்த மூலிகைகளை உண்டு வருகின்றன. மஞ்சள் நிறமான இந்த பூச்சி இனங்கள் குளிர்காலத்தில் ஒரு தேக்கநிலையினை அடைகின்றன அந்தவேளையில் அனிச்சை செயலாக இந்த பூச்சியினங்கள்மேல், தாவர ஒட்டுண்ணியான காளான் வளரத்தொடங்குகின்றன. ஒரு கட்டத்தில் காளானின் அதிக ஆதிக்கத்தினால் பூச்சி காளானால் சுவீகரிக்கப்ட்டுவிடும்.
இதன் பின்னர் குறிப்பிட்ட சில நாட்களின் பின்னர் இந்த காளான்கள் பறிக்கப்படுகின்றன.
இவற்றில் இருந்து பெறப்படுவதே இந்த சரச கும்பம்.
மூலிகை, பூச்சி, காளான் என்பவற்றின் சக்திகள் இதில் அடங்கியுள்ளதால், இது பெரும் சக்தி வாய்ந்த வீரியமான மருந்தாக கூறப்படுகின்றது.
ஆண்மையை அதீதமாக பெருக்குவதாகவும், அதேபோல வாதம், இருதயநோய், உடல் நோக்களை இல்லாது செய்யும் சக்தி இந்த சரச கும்பத்திற்கு உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இமாலைய வயகரா அல்லது இயற்கை வயகரா என்று சொல்லப்படும் இது குறிப்பிட்ட ஒரு காலத்தில் பல இலட்சம் டொலர்களை வருமானமாக தருவதாக இந்த பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

இன்றைய காட்சி



ஷீ தமிழ் தொலைக்காட்சியில் நாகதேவதை

ஷீ தமிழ் தொலைக்காட்சியில் இரவு 9 மணியில் இருந்து 10 மணிவரை வார நாட்களில் நாகதேவதை என்ற தொடர் ஒளிபரப்பாகிவருகின்றது. இது தற்போது பெரும்பாலானவர்கள் பார்க்கும் ஒரு வித்தியாசமான தொடராக இருக்கின்றது.
(நான் உட்பட)
இச்சாதாரி பாம்பு, நாகமாணிக்கம், மாணிக்கத்தை வைத்து நகரும் கதை என்ற பழைய அரைத்தமாதான் என்றாலும் தொடர் சென்றுகொண்டிருக்கும் விறுவிறுப்பும் சுவாரகஸயமும் சிறப்பாகவே உள்ளது.
இச்சாதாரி பாம்பு, ஆண்பாம்பின் இறப்பு, பெண்பாம்பு பழிவாங்கத்துடிக்கும் தன்மை என்பனவற்றை பார்த்து ஆஹா... இதென்ன 'நீயா' புதுகோணத்தில் வருதுபோல என்று தோன்றினாலும் இப்போது பாம்புகளுக்குள்ளேயே பகைமைகள் இருப்பதும், பாம்புகள் மனிதருக்குள் வந்து மனிதராக வாழ்வதும் சுவாரஸ்யமாகவே உள்ளன.
அட.. நைட் டைம் வன் ஹவர்தானே.. எத்தனை காதிலை பூசுத்துற படங்களையே பார்த்திட்டம், பொழுதுபோக்கா இதை பார்த்தால் என்ன குறைந்தா போகப்போகின்றது?

மியூஸிக் கபே
தமது குடும்பத்தில் ஒரு புதிய உதயத்திற்காக காத்திருக்கும், மகிழ்ந்திருக்கும் இந்தக்குடும்பத்திற்கு வாழ்த்துக்கள்.ஹஜிராரே...ஹஜிராரே ஹஜிராரே தெரே ஹாரே ஹாரே நய்நா...

இந்தவார வாசிப்பு..ரஷ்ய சிறுகதைகள்

எப்போதுமே வேற்றுமொழிக்கதைகள்மேல் எனக்கு அப்படியொரு அலாதியான ஈடுபாடு உண்டு. அந்த வகையில் கடந்தவாரம் என் கைகளில் கிடைத்த புத்தகம் பாவை பப்ளிகேசன் வெளியீடான பசுமைக்குமாரின் மொழிபெயர்ப்பில் வந்த தேர்ந்தெடுத்த சில ரஷ்ய சிறுகதைகள் கொண்ட தொகுப்பு புத்தகமான ரஷ்ய சிறுகதைகள்.
இரண்டு குளிர்காலங்களும் மூன்று கோடைக்காலங்களும், வியத்தகு சம்பவம், இலட்சிய மனைவி, தொலை உணர்வில் ஒரு பாடம், சோதனை மிகுந்த நேரம், மந்திரவயலின், அரங்கேற்றம், பிளையரி 'எஸ்', குப்பையில் கடந்த டயரி, ஓநாயும் பட்டினியும், ஒரு கணித மேதையின் விசத்திர உயில், மணல் நகரம், மகிழ்ச்சி தரும் விபத்து, ககாரின் கதைகள் போன்ற கதைகள் உள்ளன.
தேர்ந்தெடுக்கப்பட்ட சில ஆசிரியர்கள் எழுதிய ரஷ்ய சிறுகதைகளை மொழிபெயர்ப்பாளர் பசுமைக்குமார் இதில் தந்துள்ளமை சிறப்பு.
வௌ;வேறுபட்ட உணர்வுடைய, வௌ;வேறு பட்ட வர்க்க, இட, காலங்களைக்கொண்ட கதைகள் இவற்றில் கலந்து தரப்பட்டிருப்பது இதில் மற்றும் ஒரு சிறப்பாக உள்ளது.
பொதுவான ரஷ்யக்கதைகளின் முத்திரைகள் விழாத கதைகளாக இவை இருப்பது கொஞ்சம் ஏமாற்றமும்தான்.


ஜோக் பொக்ஸ்
இது நகைச்சுவை மட்டுமல்ல யதாதத்தமும் கூட..

9 comments:

தமிழ் உதயம் said...

முன்பு ரஷ்ய கதைகள் நிறைய வாசித்ததுண்டு. ரஷ்ய கதைகள் வாசிப்பதில் எனக்கும் அலாதி சந்தோஷம் உண்டு.

யோ வொய்ஸ் (யோகா) said...

:)

ம.தி.சுதா said...

இன்றும் அருமை...

maruthamooran said...

ஜனா......!

ரஸ்ய சிறுகதைத் தொகுப்பை கொழும்பு வரும் போது கொண்டு வரவும். இது கட்டளை. கட்டளை. கட்டளை!!!

Unknown said...

ரஷ்ய கதை தொகுப்பு நானும் படித்துள்ளேன். அருமையான கதைகள்.
டயானா பற்றி கற்பனை செய்ய அவசியமே இல்லை.எல்லா இளவரசிகளும் எப்படி இருக்கிறார்களோ அப்படியே இருந்திருக்கலாம். ஐ.நா.சபை உறுப்பினராக உலகமெங்கும் வலம் வந்துகொண்டுருப்பர்.தற்போது ஏஞ்சலின வை போல..

அம்பாளடியாள் said...

என் மனவலி தீர ஒரு மருந்து சொல்லுங்கள்.....

Riyas said...

வழமை போலவே எல்லா விடயங்களும் நல்லாயிருக்கு. டயானா விடயம், ரஷ்ய கவிதைகளும் என்னைக்கவர்ந்தவை

நிரூபன் said...

டயானா இறக்காமல் இருந்திருந்தால்...//

படிக்க வேண்டும் என்கின்ற ஆவலைத் தூண்டுகின்ற நாவலாக அமைந்திருக்கிறது. தேடிப் பிடித்துப் படிக்கிறேன்.

இதோ இதுதான் அந்த ஜர்ஸகும்ப...(சரச கும்பம்)//

புதிய தகவல் பாஸ்.


இன்றைய காட்சி//

சத்தமில்லாமல் மேட்டரை முடிக்கிறாங்களே...(((;

ஷீ தமிழ் தொலைக்காட்சியில் நாகதேவதை//

பார்த்திட்டாப் போச்சு பாஸ்,

மியூஸிக் கபே//

ஐஸ்வர்யாராஜ் இன் மாமனார், கணவன் நடித்துள்ள பாடலைப் பகிர்ந்திருக்கிறீங்க.
உங்களுடன் இணைந்து நானும் வாழ்த்துறேன்.

இந்தவார வாசிப்பு..ரஷ்ய சிறுகதைகள்//

வாசிக்க வேண்டும் பாஸ்,
இப்போது டைம் இல்லை.

ஜோக் பொக்ஸ்//

காணியை விற்கவா, காசை அனுப்புறியா((((;

ஏற்கனவே பார்த்து விட்டேன் மணியத்தாரின் நகைச்சுவையை,
ஆனாலும் உங்கள் பதிவில் மீண்டும் ஒரு தரம் பார்த்த திருப்தி.

இந்த வார ஹாக்டெயில் சூப்பர்.

balavasakan said...

அது சரி அந்த ச,ச கும்பத்தை கற்றி உங்களுக்கு எப்படி தெரியும் #டவுட்டு

LinkWithin

Related Posts with Thumbnails