Thursday, October 6, 2011

தமிழ் மணமும் இந்த வார நட்சத்திர அறிமுகமும்.


தமிழ் வலைப்பதிவர்களின் பதிவுகளுக்கு ஒரு நறுமண பூங்காவாக தமிழ் மணம் உள்ளது என்பது நான் கூறி தெரியவேண்டிய ஒரு விடயம் அல்ல.
எம் மனதுக்குள் கருக்கொள்ளும் விடையங்கள் எமக்குள்ளேயே கருக்கலைப்பு செய்துவிடாது, வலைகளில் பிரசவமாகி பலர் கண்களில் சிரிக்கவேண்டும் என்றதனாலேயே பதிவர்கள் ஆகிய நாங்கள் தொடர்ந்தும் எழுதிக்கொண்டிருக்கின்றோம்.
இந்த வகையில் பதிவர்களின் பதிவுகள் ஒவ்வொன்றையும் பல மட்டத்திற்கும் கொண்டுசெல்லும், உன்னதமான சேவைகளையே திரட்டிகள் என்ற வகையில் தமிழ் மணம் இந்த திரட்டிகளில் முன்னிலையில் நின்று செய்துகொண்டுள்ளது.

ஓவ்வொரு கட்டத்திலும் தமிழ் மணம் சமயோசிதமாக யோசித்து தமது ஒவ்வொரு தடங்களையும் இடுவதையும், தூரநோக்குடன் ஒவ்வொருபதிவரும் முன்னுக்கு வரவேண்டும் என்ற எண்ணத்துடன் சிலநடைமுறைகளை கொண்டுவருவதும் எனக்கு மிகவும் பிடித்த ஒரு விடயமே.

நன்றிகள்...
இந்தவாரம் தமிழ்மண நட்சத்திரமாக என்னை அறிமுகப்படுத்தியிருக்கும் தமிழ் மணத்திற்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன்.
அதேநேரம் புதிய இடுகைகள் பற்றிய தமிழ் மணத்தின் கொள்கைகள் முழுமையாக எனக்கு பிடித்துப்போயுள்ளது. அதேவேளை தமிழ் மணம் செய்யவேண்டும் என்ற அபிலாசைகள் சிலவும் என் மனதில் உள்ளன, அதை நான் இங்கே கூறத்தேவையில்லை. நான் நினைக்கும் தேவையான சில நடைமுறைகளையும் தமிழ் மணம் விரைவில் நிறைவேற்றும் என்ற முழுமையான நம்பிக்கை என்னிடம் உண்டு.

என்பதிவுகள் பற்றி.
என்னதான் திரட்டிகள் முன்னிடம் தந்தாலும் அந்த திரட்டிகள் என்னை கவனிக்க வைப்பவர்கள் என் வலையின் வாசகர்கள், மற்றும் பதிவர்கள் அல்லவா?
எனவே முக்கியமான நன்றிகளை அவர்களுக்கு தெரிவிக்கவேண்டிய தேவை எனக்கு உள்ளது.
ஆரம்பம் முதலே எழுதும் ஒவ்வொரு பதிவும், யாரோ ஒருவனுக்கு தேவையானதாக இருந்தாலே போதும் என்ற நோக்கத்துடனேயே தொடர்ந்தும் பதிவுகளை இட்டுவருகின்றேன். பயனுறப்பதிவெழுதல் என்ற வாக்கியத்தில் அசைக்கமுடியாத நம்பிக்கையுடன் அயராது எழுதவேண்டும் என்பதே என் அவா.. தொடர்ந்தும் அந்தப்பாதையிலேயே பயணிக்கவேண்டும் என்பதே இந்த பதிவுலக இலட்சியமாக உறுதியாக என்னுள்ளே உள்ளது.

பதிவர்களுக்கு நட்பாக ஒரு வேண்டுகோள்...
உண்மையை சொல்லவேண்டும் என்றால், எனது இணைய மேச்சல்களில் பல தளங்களை எழுதும் புதியவர்களின் பல ஆச்சரியமான அபாராமான, பயனுள்ள, ஒரு அராய்வு போன்ற பதிவுகள் எல்லாம் திரட்டிகளில் இணைக்கப்பட்டிருந்தாலும் எவர் கண்களிலும் படாமல் இருப்பதை கண்டு ஆச்சரியம் மட்டுமல்ல வேதனையும் பட்டு, அவற்றை எனது சமுக இணைய தளங்களிலே இணைத்தவருகின்றேன்.
மறுபக்கத்தில் பலர் பதிவுகளில் அனைவரையும் தம் பக்கம் இழுக்கும் ரெக்னிக்களை கையாண்டு, தமது பதிவுகளை என்ன எழுதினாலும் திரட்டிகளில் முன்னுக்கு நிற்கும் வண்ணம் செய்துவருகின்றனர்.
இதை ஒரு பிழையாக நான் குற்றம் சுமத்தவில்லை இப்படியே தொடரும் என்றால் புதிதாக எழுததொடங்கும் பலர் தாம் கவனிக்கப்படாமல் பதிவுகளை எழுதுவதை நிறுத்தும் அபாயமும் உள்ளது.
உபயோமாக பலநாள் ஆராய்ந்து கஸ்டப்பட்டு நல்லபதிவு எழுதவேண்டும் என்று எண்ணும் புதியவர்களை கொஞ்சம் யோசித்துப்பார்க்கவும் வேண்டும் அல்லவா?
எனவே இனிவரும்காலங்களிலாவது புதியவர்களின்மேல் பல பதிவர்களின் கண்கள் பரவட்டும், அவர்கள் எங்கள் வலைப்பதிவுக்கு வருகின்றார்களா? எமக்கு ஓடடு போடுகின்றார்களா? பின்னூட்டம் போடுகின்றார்களா? என்ற சிந்தனைகளை கழைந்துவிட்டு, புதியவர்களை முழுமையாக ஏற்றுக்கொண்ட, ஏற்றிவிடும் ஏணிகளாக இப்போதைய பிரபல பதிவர்கள் முன்வரவேண்டும்.

ஒருவகையில் சொல்லப்போனால் இந்த பதிவை வடிக்கும் நான் உட்பட என்கால பதிவர்கள் பலர் புதியவர்களை ஊக்கிக்கும் பதிவர்களாகவும், அவர்களை பதிவுலகில் முன்கொண்டுவருபவர்களாகவுமே இருந்தோம். ஆனால் அதன் பின் வந்த சில பதிவர்கள் தமக்கு பின்னதாக பதிவுலகத்திற்கு வரும் பதிவர்கள் பற்றியும் சிந்திக்கவேண்டிய பெருந்தேவை உள்ளது.

ஹிட் என்னும் மாஜை!
பதிவுலகத்தில் இருக்கம் திரட்டிகளில் ஹிட் ஆவது என்னும் ஒரு மாஜை இன்று அனைத்து பதிவர்களிடமும் ஒரு வெறியாக உள்ளதை காணக்கூடியாதாக உள்ளது. இந்த ஹிட் மாஜைகள் நிற்சயம் சில வேறுகோணங்களுக்கு பதிவர்களை அவர்களுக்கு தெரியாமலேயே இழுத்துக்கொண்டு செல்கின்றது என்பதே என் எண்ணம்.
என்னைப்பொறுத்த வரையில் சத்தியமாக இந்த ஹிட் என்னும் நோக்கம் என்னிடம் சத்தியமாக இல்லை. (என் பதிவுகள் பிரயோசமானவை என்றால் அவை பலருக்கு சேரவேண்டும் என்பதற்காகவே திரட்டிகளில் இணைக்கின்றேன், எந்தவொரு காலகட்டத்திலும் எனக்கு ஓட்டுபோடுங்க என்று என் வலையில் எழுதவில்லை) நன்றாக ஆழமாக, பலவிடையங்களையும், சமுகத்திற்கு தேவையான விடையங்களையும் எழுத ஆசைகொண்டுள்ள ஒருவனைக்கூட இந்த ஹிட் மோகம் வெறு திசைகளுக்கு இழுத்து செல்கின்றது என்பதே இன்று பதிவுலகத்தில் கண்ட உண்மைகளாக உள்ளது, உதாரணமாக திசைமாறி இன்று சினிமாவும், மொக்கையும் எழுதிக்கொண்டிருக்கும் பதிவர்கள் அனேகர், அவர்களின் ஆரம்பகால பதிவுகளை எடுத்து பார்த்தால் அதிர்ந்துவிடுவீர்கள், ஏன் என்றால் அன்று அவர்கள் எழுதியவை அத்தனையும் தரமானதாக இருப்பதை காணலாம்.
எதோ கைவந்தபோக்கில் எழுதி ஹிட் ஆகும் பதிவு ஒன்றைவிட, கஸ்டப்பட்டு தேடி, அறிந்து எழுதும் பதிவு ஒன்றை முழுமையாக ஒரு நான்குபேர் வாசித்தாலே அது மெகா ஹிட் என்பதே என் அசைக்கமுடியாத உண்மை.
இராமசாமி அவர்களும், முனைவர் பாலகிருஸ்ணனும் அப்படித்தான் எழுதிக்கொண்டிருக்கின்றார்கள்.
இதை சொல்ல இவர் என்ன பெரிய ஆளா? எதையோ யாரையோ மனதில் வைத்துதான் இவர் இதை எழுதுகிறாரோ என்று எண்ணுவது உண்மையில் மடமையே. உண்மையில் என் அபிலாசையையும் பதிவர் என இல்லாமல் பதிவுலக வெறும் வாசகன் என்ற கோணத்தில் நின்று யோசித்ததாலேயே பதிவர்கள் அனைவரும் நண்பர்கள் என்ற உரிமையுடனேயே இதை சொன்னேன்,
தப்பாக இருந்தால் மன்னித்துவிடவும்.

மன்னிப்பு
உண்மையில் கடுமையான நேரமின்மைக்கு மத்தியில் நட்சத்திரப்பதிவர் ஆக்கிவிட்டார்கள், ஒவ்வொரு நாளும் பதிவு போடவேண்டும் என்ற வெண்டுகோள் ஒன்றும் உள்ளதனாலேயே இந்தவாரம் கிடைக்கும் அரை மணி நேரத்தில் அவசரமாக ஓடிவந்து ஒரு பதிவினை போட்டுவிட்டு, மீண்டும் இரவு பகலாக வேலைகளில் மூழ்கிவிடுகின்றேன். இதனால் சக பதிவர்களின் தளங்களை இன்னும் ஒருவாரத்திற்கு வாசிக்கவோ கருத்து பகிரவோ முடியாதிருக்கும், இதற்காக பதிவுலக நண்பர்கள் அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக்ககொள்கின்றேன்.

மீண்டும் இந்த வார நட்சத்திரப்பதிவர் என்ற அந்தஸ்தை தந்த தமிழ் மணத்திற்கு எனது நன்றிகளை தெரிவிக்கும் அதே சமயம் மூன்றாண்டுகள் கடந்தும் எனது பதிவுகளுடன் பயணிக்கும் சக பதிவர்கள், நண்பர்கள், வாசகர்கள், திரட்டிகள், அனைவருக்கும் என் நன்றிகளை தெரிவித்து கொள்கின்றேன்.

24 comments:

sinmajan said...

வாழ்த்துக்கள் ஜனா அண்ணா.. கலக்குங்கள் :-)

கார்த்தி கேயனி said...

வாழ்த்துக்கள் நண்பரே ... கலங்குங்கா

நிரூபன் said...

இனிய இரவு வணக்கம் அண்ணாச்சி,

வலைப் பதிவர்கள், தமிழ்மணம், திரட்டிகள், ஓட்டுக்கள், ஹிட் பற்றிய தங்களின் இப் பதிவினைப் படித்தேன். என்னுள் இருக்கும் ஒரு சில ஐயங்களைக் களையலாம் எனும் நோக்கில் ஒரு சில வினாக்களை முன் வைக்கின்றேன்.

நிரூபன் said...

மறுபக்கத்தில் பலர் பதிவுகளில் அனைவரையும் தம் பக்கம் இழுக்கும் ரெக்னிக்களை கையாண்டு, தமது பதிவுகளை என்ன எழுதினாலும் திரட்டிகளில் முன்னுக்கு நிற்கும் வண்ணம் செய்துவருகின்றனர்.
இதை ஒரு பிழையாக நான் குற்றம் சுமத்தவில்லை இப்படியே தொடரும் என்றால் புதிதாக எழுததொடங்கும் பலர் தாம் கவனிக்கப்படாமல் பதிவுகளை எழுதுவதை நிறுத்தும் அபாயமும் உள்ளது.//

அண்ணாச்சி, என் பதிவில் நான் எழுதும் மொக்கைப் பதிவுகளும் திரட்டிகளில் வருகின்றனவே,
என் பதிவுகள் மட்டும் தான் திரட்டிகளில் தொடர்ந்தும் இடம் பிடிக்கின்றன என்று ஓர் அறிவிப்பினை விட்டு, என் பதிவுகளிற்கு இனிமேல் 18++ ஓட்டுக்களுக்கு மேல் யாரும் ஓட்டுப் போட வேண்டாம் என்று அறிவித்தல் விடுத்த பின்னரும் பலர் ஓட்டுப் போடுகின்றார்களே.

இத்தகைய நிலையில் என் போன்றவர்கள் என்ன செய்வது?
ஓட்டுப் பட்டைகளைக் கழற்றி வைத்து விட்டா எழுதுவது?

http://www.thamilnattu.com/2011/09/blog-post_661.html


இந்த இணைப்பில் பகிரங்கமாகவே அதிகளவான ஓட்டுக்கள் போட வேண்டாம் என்று எழுதிய பின்னரும் ஓட்டுப் போடுகிறார்களே என்ன பண்ண?

அப்புறமா திரட்டிகளில் இடம் பிடிக்கும் பதிவர்கள் ஏனைய பதிவர்களுக்குச் சந்தர்ப்பம் கொடுப்பதில்லை எனும் கருத்தினை வன்மையாக கண்டிக்கிறேன்.

காரணம் என் பதிவில் என் வலைக்கு வரும் நான்கு பேராச்சும் புதிய பதிவர்களின் பதிவுகளையும் இனங்காண வேண்டும் எனும் நோக்கில் ஒவ்வோர் நாளும் ஒவ்வோர் பதிவரை அறிமுகஞ் செய்து வருகின்றேனேன்
அப்படீன்னா இதுவும் தவறா அண்ணாச்சி;_))))

நிரூபன் said...

மீண்டும் நட்சத்திர வார வாழ்த்துக்கள் அண்ணாச்சி!

நிரூபன் said...

ஒருவகையில் சொல்லப்போனால் இந்த பதிவை வடிக்கும் நான் உட்பட என்கால பதிவர்கள் பலர் புதியவர்களை ஊக்கிக்கும் பதிவர்களாகவும், அவர்களை பதிவுலகில் முன்கொண்டுவருபவர்களாகவுமே இருந்தோம். ஆனால் அதன் பின் வந்த சில பதிவர்கள் தமக்கு பின்னதாக பதிவுலகத்திற்கு வரும் பதிவர்கள் பற்றியும் சிந்திக்கவேண்டிய பெருந்தேவை உள்ளது.//

அண்ணே, இவ் இடத்தில் நீங்கள் உங்களை முன் நிறுத்துகின்றீர்கள். இப்போது உள்ள பதிவர்கள் இத்தகைய செயல்களைச் செய்யவில்லை என்று நீங்கள் பொதுப்படையாக கூற முடியாது. என் போன்ற பல பதிவர்கள் பல புதிய பதிவர்களை அறிமுகப்படுத்திக் கொண்டு தான் இருக்கின்றார்கள்.

றமேஸ்-Ramesh said...

தொடருங்கள். கலக்குங்கள். சிலவற்றை மறங்கள். பலவற்றை எழுதுங்கள்.

இராஜராஜேஸ்வரி said...

இந்தவாரம் தமிழ்மண நட்சத்திரமாக என்னை அறிமுகப்படுத்தியிருக்கும் தமிழ் மணத்திற்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன்./

வாழ்த்துக்கள்

தர்ஷன் said...

வாழ்த்துக்கள் ஜனா அண்ணா,

உங்கள் எழுத்துக்களோடும் நீங்கள் பதிவெழுதும் காலத்தோடும் ஒப்பிட்டால் இது சற்று தாமதாமான அங்கீகாரமோ எனத் தோன்றுகிறது.

தமிழ் உதயம் said...

வாழ்த்துக்கள் ஜனா

என்.கே.அஷோக்பரன் said...

நீங்கள் தமிழ்மணம் நட்சத்திரப் பதிவரானதில் மகிழ்ச்சி! வாழ்த்துக்கள்!!!

Prabu Krishna said...

நட்சத்திர பதிவர் ஆனதுக்கு வாழ்த்துகள். நானும் உங்கள் கட்சியே. நல்ல பதிவர்களுக்கே சியர்ஸ்

Mohamed Faaique said...

வியாபாரம் என்பது பொருளின் தரத்தில் இல்லை. அதற்கு செய்யப் படும் விளம்பரத்திலேயே உள்ளது. அதுதான் இங்கும் நடக்கிறது... ஆனால் இந்த நிலமை ரொம்ப நாள் நிலைக்காது

Anonymous said...

முதலில் வாழ்த்துக்கள் அண்ணே....

அநேகமாக பதிவுலகுக்கு நான் வந்த பின் தவறவிடாமல் வாசிக்கும் வலைத்தளங்களில் இந்த வலைத்தளமும் ஒன்று..

தொடர்ந்து எழுதுங்கள்...

Anonymous said...

///உபயோமாக பலநாள் ஆராய்ந்து கஸ்டப்பட்டு நல்லபதிவு எழுதவேண்டும் என்று எண்ணும் புதியவர்களை கொஞ்சம் யோசித்துப்பார்க்கவும் வேண்டும் அல்லவா?
எனவே இனிவரும்காலங்களிலாவது புதியவர்களின்மேல் பல பதிவர்களின் கண்கள் பரவட்டும், அவர்கள் எங்கள் வலைப்பதிவுக்கு வருகின்றார்களா? எமக்கு ஓடடு போடுகின்றார்களா? பின்னூட்டம் போடுகின்றார்களா? என்ற சிந்தனைகளை கழைந்துவிட்டு, புதியவர்களை முழுமையாக ஏற்றுக்கொண்ட, ஏற்றிவிடும் ஏணிகளாக இப்போதைய பிரபல பதிவர்கள் முன்வரவேண்டும்./// உங்கள் கருத்துக்களை ஏற்றுக்கொள்கிறேன்.. சிலர் புதிய பதிவர்களை தேடி அறிமுகப்படுத்தும் முயற்சியிலும் ஈடுபடுகிறார்கள்.. அதே போல எல்லோரும் அந்த மனப்பான்மையில் இருக்க வேண்டும்..

Powder Star - Dr. ஐடியாமணி said...

தமிழ்மணத்தின் நட்சத்திரமாக தெரிவிசெய்யப்பட்டிருக்கும் அண்ணருக்கு வாழ்த்துக்கள்!

பதிவுலகம் + பதிவர்கள் பற்றி நீங்கள் சொல்லியிருப்பவை மிகவும் கவனிப்புக்குரியவை!

ம்..... நானும் சிந்தித்துப் பார்க்கிறேன் அண்ணா!

KANA VARO said...

அண்ணே நீங்க எங்கையோ போட்டீங்க

T.T.Mayuran said...

வாழ்த்துக்கள் நண்பரே!!!

கே.கே.லோகநாதன் [B.Com] said...

வாழ்த்துக்கள்..

தமிழ்வாசி - Prakash said...

நட்ச்சத்திரதுக்கு வாழ்த்துக்கள்

விக்கியுலகம் said...

பகிர்வுக்கு நன்றி மாப்ளே...வாழ்த்துக்கள்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

நட்சத்திர வாழ்த்துக்கள் நண்பரே...!

நிரூபன் said...

மீண்டும் வணக்கம் அண்ணாச்சி,
என் புரிதலில் தவறு என்பதால் முதலில் என்னை மன்னிக்கவும், ஓட்டுக்களுக்காகவும், ஹிட்ஸ்களுக்காகவும் அலையும் பதிவர்கள் பற்றித் தாங்கள் எழுதிய கண்டனத்தினைத் தவறாகப் புரிந்து என் கருத்துக்களை இங்கே வைத்திருந்தேன். தயவு செய்து என்னை மன்னிக்கவும்.

கவியாழி கண்ணதாசன் said...

வணக்கம் நட்பே.நான் தொடர்ந்து பதிவெழுதி வருகிறேன்.தற்போது தமிழ்மணத்தில் ஏழாவது இடத்தில் உள்ளேன் நான் இதுவரை சினிமாவோ அல்லது கடிஜோக் போன்றவற்றையோ எழுதியதில்லை கவிதை,பழமொழி போன்றே எழுதி வருகிறேன் பெரும்பாலும் ஹிட் கொடுத்து விடுவேன் என்னைபோலவே அருணா செல்வமே போன்றோரும் அப்படியே தொடர்ந்து எழுதி வருகிறோம் நிச்சயம் மொக்கை மட்டுமே எழுதாமல் தமிழ் மணத்தில் வலம் வரலாம் என்பது எனது கருத்து

LinkWithin

Related Posts with Thumbnails