Saturday, October 8, 2011

பெண்களுக்கு ஏற்ற இடம்!பெண் எனப்படுபவள் பூவைப்போன்றவள், தேவை ஏற்படும்போது புயலாகவும் மாறக்கூடியவள், நாளைய சமுகத்தின் வளர்ச்சி அவள் கையிலேதான் உள்ளது, பெண்மைபோற்றும் உலகமே உன்னத உலகம் என்றெல்லாம் எழுதி பெண்களையே கடுப்பேற்ற நான் விரும்பவில்லை.

இருந்தாலும்கூட பெண்கள் பற்றி சில விடையங்களை பேசாமல் இருந்துவிடவும் முடியாது. சமூக அக்கறை கொண்ட சமுகத்தின்மேல் அதன் முன்னேற்றத்தின்மேல் அக்கறை கொண்ட ஒவ்வொருவரும் பெண்களின் முன்னேற்றம் வளர்ச்சி சுதந்திரம் பற்றி பேசாமல் இருக்கமுடியாது.
அதனால்த்தான் உண்மையான சுதந்திரம் பற்றி பேசிய மகாத்மா காந்தி நள்ளிரவில் ஆபரணங்களுடன் தனிமையாக ஒரு பெண் சுதந்திரமாக அச்சமின்றி செல்லும் நாளே உண்மையான சுதந்திரம் என்று கூறியிருக்கின்றார்.
இங்கே அவர் நள்ளிரவில் தனிமையில் செல்லும் பெண் ஒருத்தியை தனியே முன்னிறுத்தவில்லை இந்த ஒரு உதாரணத்திலே சமுகத்தில் ஏற்படவேண்டிய பல மாற்றங்களையும், பெண்ணிய சுதந்திரம் அபரிதமான வளர்ச்சியையும் குறிப்பிட்டுள்ளார் என்றே கூறலாம்.

ஒரு விடயத்தை உன்னிப்பாகவும், நேரடியாகவும் கவனித்தீர்களேயானால் பெண்ணை அடிமைப்படுத்த நினைப்பது எவ்வளவு பெரிய முட்டாள் தனமாக இருக்கும் என்பதையும், ஒரு பெண் அடிமைப்பட்டால் ஒரு நாட்டின் எதிர்காலமே அடிமைப்படப்போகின்றது என்பதும் வெளிப்படை உண்மை.
காரணம் ஒரு பெண்தான் நாளைய சமுதாயமான தன் குழந்தைகளை ஈன்று வளர்க்கின்றாள், அவளே அடிமைப்பட்டு, கல்வியறிவற்று திறனற்று இருந்தால் அவளின் குழந்தைகள் எப்படி அறிவாhர்ந்தவர்களாக மாறுவது?

இன்று வளர்ச்சி கண்ட அபிவிருத்தியை வெற்றிகொண்ட நாடுகளில் பெண்களுக்கு கொடுக்கப்படும் சுதந்திரம், சமத்துவம், அனைத்துமே அந்த நாடுகளை இந்த நிலைக்கு கொண்டுவந்தன என்பதிலும் எந்த உண்மையும் இல்லாமல் இல்லை.
இன்றைக்கு பதினான்கு ஆண்டுகள் கடந்தும் இந்தியாவில் ஒலித்துக்கொண்டிருக்கும் 33 வீத இட ஒதுக்கீடும், தொடர்ச்சியான கோரிக்கைகளும் எதைக்காடுகின்றது?
பெண் என்ற பார்வையினை இந்தியா போன்ற நாடுகள் இன்னும் களைந்துவிட்டு உலக சவால்களை வெற்றிகொள்ளும் பாதையில் பயனிக்க தயார் இல்லை என்பதையே. பெண்ணுக்கு உரிய இடத்தையோ உரிமைகளையோ இன்னும் வளங்காது இதுபோன்றே பயணிக்க எத்தனித்தால் 2020 இல் வல்லரசு என்ற கனவு பகல்கனவுதான்.

மூன்றாம் உலக நாடுகளில் பெண்கள் கல்விநிலையில் இன்று வியக்கத்தக்க முன்னேற்றங்களையும், சிறப்பு தேர்ச்சிகளையும் பெற்றுவருவது மனதிற்குள் ஒரு ஓரத்தில் ஒளியை பரவவிடுவதுபோன்ற உணர்வை தருகின்றது.
இருந்தபோதிலும் கிராமமட்டங்களில் பெண்களின் கல்வி நிலைகள் உயர் கல்விக்கு செல்லாது இருப்பது வேதனையானதே.
மற்றப்பக்கம் இன்று வெளியிடப்படும் சகல பரீட்சை பெறுபேறுகளிலும் பெண்கள் முன்னிலையில் நிற்பது ஆணாதிக்க வர்க்க சிந்தனைகளுக்கும், ஆதிக்கங்களுக்கும் கிடைக்கும் செருப்படி என்பது குறிப்பிடத்தக்கது.

சரி... இப்போது விடையத்திற்கு வருவோம் ஆம் இன்றைய உலகில் பெண்களுக்கு எற்ற இடம் என்று ஆய்வுகளில் முதல் இடத்தில் இருக்கும் இடம் அல்லது நாடு எது தெரிமா?
ஐஸ் லன்ட்.....

பெண்ணியம், சட்டபாதுகாப்பு, சுகாதாரம், உரிமைகள், பாதுகாப்பு, பெண் முன்னேற்றம், கல்வி என்பனவற்றை அடிப்படையாக வைத்து உலக நாடுகளில் மேற்கொண்ட ஆராட்சி முடிவுகளே இதை சொல்கின்றது.

இந்த வகையில் பெண்கள் வாழ்வதற்கு ஏற்ற நாடுகளாக முதல் ஐந்து இடத்தையும் பெற்றுள்ள நாடுகளாவன, ஐஸ்லன்ட். சுவீடன், கனடா, டென்மர்க் மற்றும் பின்லான்ட் ஆகியன.
இந்த வகையில் உலக வல்லரசு நாடான அமெரிக்கா 8 ஆம் இடத்திலும், இங்கிலாந்து 19 ஆவது இடத்தையும் பெற்றுள்ளன.

அதேவேளை பெண்கள் வாழ்வதற்கு மிகப்பெரும் அச்சுறுத்தல் உள்ள நாடுகளாக ஸாட், ஆப்கானிஸ்தான், ஏமன், கொங்கோ, மலீ, சொலமன் தீவுகள், நைகர், மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் பட்டியலிடப்படடுள்ளன.

அப்ப நம்ம நாடுகள் இதிலை எத்தனையாவது இடங்களை பிடித்துள்ளன என்று அறிய உங்களுக்கு மட்டுமில்லைங்க எனக்கும் ஆவலே. இந்த வகையில் ஸ்ரீ லங்கா பெண்களுக்கு வாழ்வதற்கு ஏதுவான நாடுகள் பட்டியலில் 74ஆவது இடத்தை பிடிச்சுருக்கு. பரவாயில்லையே என்றுதான் சொல்லத்தோன்றுகின்றது, இந்த முன்னிலைக்கு காரணம் கல்விவீதம் கூடியதாக இருப்பதே, சட்டபாதுகாப்பு, பாலியல் துஸ்பிரயோகங்கள் என்பதில் பின்னிலையிலேயே உள்ளது குறிப்பிடத்தக்கது. இருந்தபோதிலும் பெரும் யுத்தம் ஒன்றினால் சூழப்பட்டிருந்த ஒரு தேசம் என்ற வகையில் இந்த நிலை ஸ்ரீ லங்காவைப் பொறுத்தவரையில் போதுமானதே.

அடுத்து இந்தியா.... பெண்கள் நள்ளிரவு சுதந்திரமாக அபரணங்களுடன் செல்ல கனவு கண்ட தேசபிதாவின் நாடு இதில் இருப்பது 141ஆவது இடத்தில்.

வல்லரசுப்பார்வை ரொம்ப தெளிவா இருக்கு.....

9 comments:

Yoga.s.FR said...

வணக்கம்,ஜனா!இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது வட,கிழக்கில் "கிரீஸ்" பூதத்தின் அச்சுறுத்தலுக்கு முன்பா,பின்பா?

மருதமூரான். said...

:-)

விக்கியுலகம் said...

மாப்ள என்னத்த சொல்ல...!

K.s.s.Rajh said...

நல்லாச்சொல்லியிருக்கீங்க பாஸ்

Powder Star - Dr. ஐடியாமணி said...

ஆய்வு வியக்க வைக்குது!

Dr.எம்.கே.முருகானந்தன் said...

தேவையான ஆய்வு. பகிர்ந்து கொண்டது நல்லது.

நாடுகள் மட்டுமல்ல ஒவ்வொரு ஆணும் பெண்கள் மீதான தனது பார்வை எப்படி இருக்கிறது என்பதை மீள ஆய்வு செய்வது நல்லது.

நிரூபன் said...

நல்லதோர் அலசல் பாஸ்,

ஆனால் எம் நாட்டில் ஒரு காலத்தில் பெண்கள் வட கிழக்குப் பகுதியில் சுதந்திரமாக நடமாடக் கிடைத்த சந்தர்ப்பத்தினைப் பற்றியும் கொஞ்சம் சொல்லியிருக்கலாமே..

தர்ஷன் said...

இலங்கையின் நிலை வெறுமனே தெற்கு பகுதியில் இருந்து மாத்திரம் பெற்ற தரவுகளின் அடிப்படையில் மட்டுமே கணக்கிடப்பட்டிருக்கலாம்.
வடக்கில் போர்ச்சூழலில் அகப்பட்டவர்கள், மலையகப் பெண்கள், கிராமப்புற சிங்களப் பெண்கள், ஆடை தொழிற்சாலைகளில் கசக்கி பிழியப்படுபவர்கள், விற்பனை நிலையங்களில் பல்லை காட்ட நிர்ப்பந்திக்கப் பட்டவர்கள், வீட்டு வன்முறையால் பாதிக்கப் பட்டவர்கள் என்பவற்றைக் கருத்தில் கொண்டால் பெண் விடுதலையை பொறுத்த வ்ரை நாம் செல்ல வேண்டிய தூரம் அதிகம். இம்மாதிரி ஆய்வு முடிவுகள் எல்லாம் iceberg theory போலத்தான் மூன்றிலிரண்டு பங்கு கொடுமைகள் வெளியே வராமலே போகின்றன

அம்பாளடியாள் said...

என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்கள்
உறவுகளுக்கும் உரித்தாகட்டுக்கும் மிக்க நன்றி பகிர்வுக்கு ......

LinkWithin

Related Posts with Thumbnails