பாலர் பருவங்களில் பலரின் இதயங்களில் மென்மையாக வருடிச்சென்று அந்தப்பருவகாலங்களின் கனவுகளிலும் தாக்கம் செலுத்துபவையே இந்தத்தேவதைக்கதைகள்.
தலைமுறைகள் பல தாண்டியும் இந்தக்கதைகளில் வரும்தேவதைகளுக்கும், இந்தக்கதைகளுக்கும் ஏனோ வயதாகிவிடவில்லை. இந்தக்கதைகளை புனையும்போது இந்தக்கதைகளை புனைந்தவர்களுக்கு தெரியுமோ தெரியாது இந்த தேவதைகள் சாகாவரம் பெற்றவை என்று.
தேவதைகளுக்கும் குழந்தைகளுக்கும் என்ன சம்பந்தம்? அந்தக் குழந்தைகளின் கற்பனைகளுடனான யதார்த்தப்பின்னல்களுடன் இந்த தேவதைகள் எப்படி இணைக்கப்பட்டார்கள்? குழந்தைகள், குழந்தைகளின் குழந்தைகள், அவர்களின் குழந்தைகள் என ஒவ்வொரு மருபுக்கும் இந்தத்தேவதைகளின் பாச்சல் எப்படி சாத்தியமானது என்பன போன்ற கேள்விகள் அதிசயிக்க வைக்கின்றன.
வெறுமனே ஐரோப்பிய காலாச்சாரமும், காலனித்துவமும், நாடுகாண்பயணங்களும் மட்டுமே இந்த தேவதைக்கதைகளை உலகமெங்கும் கொண்டு சென்றன என்று ஒற்றைவரியில் சொல்லி முற்றுப்புள்ளி வைத்துவிடமுடியாது.
மாறாக இந்தக்கதைகளில் வரும் தேவதைகளுக்கு ஐஸ்லாந்து என்றால் எக்ஸிமோக்களின் உடை உடுத்தவும், ஜப்பான் என்றால் ஹிமோனோவை போர்திக்கொள்ளவும், தென்ஆசியா என்றால் சேலை கட்டிக்கொள்ளவும் தெரிந்ததே அவை என்றும் அழியாத வரம பெற்று தலைமுறைகளுக்கு கடத்தப்படுவதற்கான காரணம் என்றுவேண்டுமானால் சொல்லிக்கொள்ளலாம்.
ஐரோப்பிய கதைகள் மட்டும் இல்லாமல் இந்தியாவிலிருந்து பஞ்சதந்திரகதைகள், தெனாலி ராமன் கதைகள், அராபியாவின் ஆயிரத்தோர் இரவுகதைகள், ஈசாப்கதைகள் என்று கதைகள் ஆயிரம் வந்தன. இருந்தாலும் ஐரோப்பிய தேவதைகளின் காஸ்லியோ இல்லை காலனித்துவம் செய்பவர்கள்மேல் உள்ள உயரிய எண்ணமோ இந்த தேவதைக்கதைகள் பாலர்வயதிலேயே அனைவர் மனதிலும் பசுமரத்தாணிபோல் நச் என்று இறங்கிவிட்டன மனதில்.
சரி..... அந்த தேவதைகளை ஒவ்வொருவராக நினைவு படுத்திக்கொண்டு அவர்களின் கதைகளின் கதைகளை பார்ப்போமா?
ஸின்ரெல்லா...
பிரஞ்சுதேசத்திற்கு முதற்சொந்தமான இந்ததேவதை 'த லிட்டில் கிளாஸ் சில்பர்' அலலது ஸின்ரெல்லா ஆகிய கதைகளின் நாயகி ஆவாள்.
அறிந்த மட்டில் 1634 ஆம் ஆண்டளவில் இந்தக்கதை வெளிவந்ததாக அறியமுடிகின்றது.
சார்லஸ் பெர்லட் அவர்கள் எழுதிய இந்தக்கதை உலகம் முழுவதும் பலதடவைகள் மீள் வெளியீடு செய்யப்பட்டு சில நாடுகளில் சிலசில மாற்றங்களுடன் இன்றும் சிறுவர்களின் மனதை தொடும் முதல் தேவதையாக உலவருகின்றாள் இந்த ஸின்ரெல்லா........
அடக்குமுறைக்கு உள்ளாகும் ஒருவள் திடீர் அதிஸ்டத்தினால் இளவரசி ஆவதுபோல உருவாக்கப்பட்டுள்ளதே இந்தக்கதை.
இருந்தபோதிலும் ஆரம்பத்தில் கிரேக்கத்தில் இதுபோன்ற சாயலினான கதை ஒன்று வழக்கத்தில் இருந்துவந்ததாகவும், அதேபோல எகிப்தில் முதலாம் நூற்றாண்டு காலத்தில் இருந்தே வழக்கில் இருந்த ஒரு கதைபோலவே இநத கதையின் கரு உள்ளதாகவும் சுட்டிக்;காட்டப்பட்டுள்ளது.
இது தவிர ஒவ்வொரு தேசப்பதிவுகளிலும் சிறு சிறு மாறுதல்கள், கதைச்சூழ்நிலை மாற்றங்கள் உள்ளன என்பதும் முக்கியமாக கவனிக்கவேண்டிய ஒன்றாகவே உள்ளது. இருந்தாலும் பிரித்தானிய காலனித்துவத்தில் இருந்த நாடுகளில் ஆங்கிலப்பதிப்பே வந்து சேர்ந்தமையினாலும் அதேவேளை அந்தக்கதையே தற்போதும் தொடர்வதனால் நாம் முக்கியமாக ஆங்கிலப்பதிப்பு தேவதைகளுடனேயே வலம்வரவேண்டி ஏற்பட்டுள்ளது.
ஆங்கிலேயர்கள் பொதுவாக அற்புமான முடிவுகளையும், சிறுவர்களுக்கு மகிழ்வூட்டும் முடிவுகளையுமே விரும்புவதனால் ஆங்கிலப்பதிப்புகளின் தேவதைக்கதைகளின் முடிவுகள் மிகவும் கழிப்பூட்டுபவையாக உள்ளன.
அதேவேளை சில நாட்டுப்பதிவுகளில் பல சோகமுடிவுகளும் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.
தாயை இழந்து தந்தையின் அரவணைப்பில் வாழ்கின்றாள் ஸின்ரெல்லா. ஆனால் அவளது விதி, அவளின் தந்தை அவளைவிட வயதான இரண்டு பெண்குழந்தைகளை உடைய ஒரு விதவையை மறுமணம்புரிகின்றார்.
அதன் பின்னர் மாற்றாந்தாயாலும், சகோதரிகளாலும் ஸின்ரெல்லா கொடுமைப்படுத்தப்படுகின்றாள்.
ஒரு அடிமைப்பெண்ணாக அவர்களுக்கும், அவர்களின் வீட்டிற்கும் சேவகம் செய்துவருகின்றாள். அந்தநேரம் அரண்மனையில் ஒரு விடே நிகழ்வுக்கு அனைவரும் மன்னரால் அழைக்கப்பட்டு சென்றுகொண்டிருகின்றனர்.
இவள் மட்டும் அடுக்களையில் முழு வேலைகளையும் செய்துவிட்டு அயர்ந்து தூங்குகின்றாள். திடீர் என்று அவள்முன் ஒரு தேவதை தோன்றி, அவளை பேரழகியாக்கி, பூசணியை தேராகவும், எலிகளை குதிரையாகவும் ஆக்கி, அந்த விழாவுக்கு அரண்மனைக்கு போ என அனுப்பி வைக்கின்றது.
ஆனால் போகுமுன் அவளுக்கு ஒன்றை நினைவூட்டுகின்றது,
அது என்னவென்றால் இன்று நள்ளிரவு தாண்டினால், அவளது தோற்றம், மற்றும் தேர், குதிரைகள் அனைத்தும் சுய உருவத்திற்கு வந்துவிடும் அதன் முன்னர் நீ வீடு திரும்பிவிடவேண்டும் என்பதே அது.
பேரழகியாக அரண்மனை வரும் அவளை இளவரசன் கண்டு காதல் வயப்படுகின்றான், அவளுடன் நடனம் புரிகின்றான், மெல்ல மெல்ல நேரம் நள்;ளிரவை தொட்டு அலாரம் அடிக்கும் தருணம் தேவதை சொன்னது நினைவுவர, ஸின்ரெல்லா தனது இருபபிடததை நோக்கி ஓடுகின்றாள், அவள் ஓடும்போது அவளது பாதணி ஒன்று கழன்றுவிழுகின்றது........
அவளை திடீர் என பிரிந்த இளவரசன் காதல் உணர்வு பீரிட, அவளது பாதணியை எடுத்து அவனது மந்திரியின் சொற்படி அந்தப்பாதணிகளை நகரில் உள்ள அனைத்து இளம் பெண்களையும் அணியும் படியும் பாதணி யாருக்கு பொருந்துகின்றதோ அவளே என் தேவதை என்று ஆணை இடுகின்றனர்.
பாதணியுடன் வீடு வீடாக வரும் சேவகர்கள், ஸின்ரெல்லாவின் வீட்டை அடைகின்றனர், அடுக்களையில் அடைந்து கிடக்கும்; ஸின்ரெல்லாவையும் அவளது வீட்டார்களின் பல்வேறு மறுப்புக்கு பின்னரும் அந்த பாதணியை அணிய வைக்கின்றனர். அந்த நேரம் அதே தேவதை தோன்றி அவளை முன்னர்போல அழகி ஆக்கியது. அதன்பின்னர் அவள் அந்த நாட்டின் இளவரசியாக முடிசூட்டப்பட்டாள் என அந்தக்கதை முடிகின்றது.
இது நாம் சிறுவயதில் படித்து இப்போ நமது சிறுவர்களுக்கும் சொல்லிக்கொடுக்கும் ஒரு தேவதைக்கதைதானே?
அடுத்த தேவதை யார்? அடுத்த பதிவில் சந்திக்கின்றேன்.
4 comments:
தேவதைகளின் கதை என்ற தலைப்பை பார்த்த போது ஜனாவின் வாழ்கையில் வந்து போன அல்லத வந்து சேர்நத தேவதையின் கதையாக இருக்குமோ என்று யோசித்தேன்.. பாவி சின்ரெல்லா கதை சொல்லி கிலி ஆக்கிட்டீங்களே பொஸ்..
@Ramanan
அது ஒன்னுமில்லை ரமணன் இப்போது நம்ம மகள் இந்த தேவதைகளுடன்தான் தனது ராக்காலத்தை கழிக்கின்றாள் அதனால் வந்தை ஐடியாதான் இது....
ரொம்ப நல்லா இருக்கு....உங்கள் பகிர்வுக்கு மிக்க நன்றி.....
நன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)
திடீர் என்று அவள்முன் ஒரு தேவதை தோன்றி, அவளை பேரழகியாக்கி, பூசணியை தேராகவும், எலிகளை குதிரையாகவும் ஆக்கி, அந்த விழாவுக்கு அரண்மனைக்கு போ என அனுப்பி வைக்கின்றது.
அருமையான தேவதைக் கதைப்பகிர்வுகள்
இளமைப்பருவத்தை வதைக்காமல் ...
பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..
Post a Comment