Wednesday, January 2, 2013

அழக்கூடாதே என்பதற்காக சிரித்தவர்தானா லிங்கன்?ஆபிரகாம் லிங்கன் பற்றி உங்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கும். தோல்விகளின் குவியல்களில் இருந்து எழுந்துவந்து பெரு வெற்றி பெற்றவர், இன்றும் அமெரிக்க அதிபர்களின் மிகச்சிறந்தவர்கள் பற்றிய பட்டியலில் முன்னிற்பவர்,
'மக்களால் மக்களை ஆளும் ஆட்சியே மக்கள் ஆட்சி' என்று குடியாட்சிக்கு வியாக்கியானம் தந்தவர், உலகம் போற்றும் ஹெட்டிச்பேர்க் பேருரையை எழுச்சியோடு வழங்கியவர், அடிமை முறையை ஒழிக்க அயராது பாடுபட்டவர் என்று அடுக்கிக்கொண்டே போகலாம்.

ஆனால் லிங்கன் பற்றி இன்னும் வெளிச்சத்திற்கு வராத பிரம்மரகசியங்கள், அந்த வெள்ளைமாளிகையிலேயே புதைக்கப்பட்டிருப்பதாக இன்று பலர் கருத்துக்களை வெளியிட்டுக்கொண்டே வருகின்றார்கள்.
ஏன்...... எல்லாவற்றிற்கும்மேலாக லிங்கனின் ஆவி தற்போதும் வெள்ளைமாளிகையை சுற்றி வருவதாக பலமாக நம்பும் அமெரிக்கர்களும் இருக்கத்தான் செய்கின்றார்கள்.
பாரிய சோதனைகளையும், கஸ்டங்களையும் அவர் தன்னகத்தே கொண்டு, வேதனையுடனேயே நாட்களை நகர்த்தினார் என அவரது உறவினர்களே கருத்து வெளியிட்டும் உள்ளனர்.

ஓகஸ்ட் மாதம் 14 ஆம் நாள் 1865 அன்று தனது துணைவி சகிதம் 'அமெரிக்கன் ஹசின்'  என்ற நாடகம் பார்க்கச்சென்றிருந்தார் லிங்கன். அந்த நாடகத்தின் ஒரு பாத்திரத்தை ஏற்று நடித்துக்கொண்டிருந்;த ஜோன் வில்ஸ் பூத் என்பவன், மேடையில் இருந்தே முன்வரிசையில் அமர்ந்து நாடகத்தைப்பார்த்துக்கொண்டிருந்த லிங்கனை குறிவைத்து தனது கைத்துப்பாக்கியால் சுட்டான். குண்டு துளைத்து துடித்து விழுந்த லிங்கன் மறுநாள் இந்த உலகத்தை விட்டுப்பிரிந்திருந்தார்..

ஆபிரகாம் லிங்கனுடைய வலதுகரமாக திகழ்ந்த ஸ்ரான்டன், லிங்கனது இறுதிநிகழ்வு உரையில் 'அவர் அழக்கூடாதே என்பதற்காகவே தன்னை வருத்தி சிரித்துக்கொண்டிருந்தார்'; என கண்ணீர் மல்கத் தெரிவித்திருந்தார்.
உண்மையில் லிங்கனுக்கு என்ன பிரச்சினை???

ஆபிரகாம் லிங்கன் பலமுறை மன உபாதைகளின் தாக்குதல்களுக்கு உள்ளாகியிருக்கின்றார். சிறு வயது முதலே கடுமையான சோகத்துடனேயே அவர் காணப்பட்டிருகின்றார்.. விடலைப்பருவத்தில் பார்ப்பவர்களுக்கு பைத்தியக்காரன் போலவே அவர் தோற்றியிருக்;கின்றார்.
அவரது திருமணத்தில்க்கூட உறவினர்கள் நண்பர்கள் எல்லோரும் சேர்ச்சில் உரிய நேரத்தில் லிங்கனையே காணாமல் திகைத்துப்போய் எல்லா இடத்திலும்தேடி இறுதியாக அவரை அவரது அறைமுலையில் குறுகிய நிலையில் அவர் துயரத்துடன் நடுங்கிக்கொண்டிருந்த நிலையிலேயே அவரை மீட்டுள்ளனர்.

லிங்கனுடைய சுயசரிதையை எழுதிய டேல்கார்னகி அவருடன் நன்றாக நெருங்கிப்பழகிய ஒருவர். அவர் லிங்கன் பற்றி தனது குறிப்பில்,
லிங்கன் உடல் மற்றும் மனோரீதயில் மிகவும் பாதிக்கப்பட்டிருந்தார். விசனம் தோய்ந்த முகத்துடன்தான் அவர்; எப்போதும் காட்சியிளிப்பார். கொஞ்சமும் சம்பந்தமில்லாத வசனங்களை தனக்குத்தானே அவர் பேசிக்கொண்டிருப்பார். தற்கொலை மனப்பாண்மை அவரிடம் இருந்தமை உண்மை, லிங்கனை தற்கொலை முயற்சிகளில் இருந்து பாதுகாப்பதற்கே நண்பர்கள் யாராவது அவர் கூடவே எப்போதும் இருந்ததாகவும், கத்தி துப்பாக்கி என்பவற்றை அவருக்குத்தெரியாமல் மறைத்;தே வைத்திருந்ததாகவும் அவர் லிங்கன் பற்றிய தனது நூலில் தெரிவித்துள்ளார்.
லிங்கன் இறந்ததன் பின்னர் அப்போது சிறுவனாக இருந்த அவரது மகன், என் தந்தை இப்போதாவது உறங்கட்டும் அவர் எப்போதும் நின்மதியாக உறங்கியதை நான் பார்த்ததில்லை' எனத்;தெரிவித்திருகின்றார்.

ஆனால் மறுபுறத்தே இத்தனை உள்ளக குறைகள் இருந்தும் லிங்கன், தீமைகளை கண்ட இடத்தில் எதிர்த்தவர், அதற்கு சிறந்த உதாரணமாக தென்அமெரிக்காவில் உள்ள நிற வெறியர்களுடன் அவர் நடத்திய போரைச்சொல்லலாம். ஆவர் ஒரு சட்டததரணி என்றபடியால் வழக்குக்கு வந்த பல பிரச்சினைகளை நீதிமன்றத்திற்கு வெளியிலேயே தீர்த்துவைத்திருந்தார். நாட்டின் ஜனாதிபதி என்ற முறையில் தன அதிகாரத்தைப் பயன்படுத்தி பல தூக்கு தண்டனைகளை இரத்து செய்து வைத்துள்ளார்.

தன்னுடைய சாதனைகள் பற்றி அவர் விளம்பரப்படுத்திக்கொள்வதில்லை. மாறாக
'முட்புதர்களை அகற்றி முட்கள் இருந்த இடங்களில் பூக்கள் மலரச்செய்தான் லிங்கன்' என்று வரலாறு என்னைக்குறிப்பிட்டாலே போதும் என்றவர் ஆபிரகாம் லிங்கன்.
ஆனால் அவரது கண்களில் இருககும் சோகத்தையும், ஏக்கத்துடனான பார்வையினையும் அவரது புகைப்படங்களிலேயே மிக இலகுவாக யாரும் கண்டுபிடித்துவிடமுடியும்.

லிங்கன் ஏன் இப்படி ஆனார் என்பதற்கு சில மனோவியல் நிபுணர்கள் தெரிவிக்கும் காரணங்கள்:
லிங்கன் சிறுவயதில் இருந்தே வறுமையின் கோரத்தில் சிக்கியமை.
வாழ்க்கையில் இந்த நிலையினை அவர் எல்லோரையும் விட மிகவும் உச்சமாக போராடியே பெறவேண்டி இருந்ததால்; அவர் அதில் சோர்வுற்றிருக்கலாம்.
ஏல்லாவற்றிற்கும்மேலாக அவருக்கு வாய்த்த இல்லறம் நல்லறமாக இல்லை. அவரை விஞ்சிய மனைவி என தொடர் சோகங்களையே அவர் பெற்றுக்கொண்டமையினை சுட்டிக்காட்டுகின்றனர்.

இப்போது இல்லினாய்ஸ் நகரில் லிங்கனின் பழைய வீட்டை லிங்கன் நினைவாலயமாக அமெரிக்க அரசு மாற்றியுள்ளது.
அந்தபகுதியால் தனது மகளை பாலர் பாடசாலைக்கு ஒரு பெண் வழமையாக அழைத்துச்சென்று வந்துகொண்டிருகின்றாள்.
ஓவ்வொருமுறை இநத நினைவாலயத்தை கடக்கும்போதும் அவள் தனது சின்னஞ்சிறு மகளுக்கு ஆபிரகாம் லிங்கனின் பெருமைகளை எடுத்துரைத்துக்கொண்டு செல்வது வழக்கம்.

ஒருநாள் இரவுநேரம் அந்தப்பெண் தனது மகளுடன் ந்த நினைவாலயத்தை கடக்கும்போது நிறைய மின் விளக்குகள் நினைவாலயத்தில் ஒளிர்வதைக்கண்டாள்.
'அம்மா பாருங்கள் லிங்கன் தாத்தா எல்லா மின் விளக்குகளையும் ஒளிரவிட்டிருக்கின்றார் என்றாள் மகள்' 

ஆமாம் மகளே லிங்கன் தான் மின்விளக்குகளை ஒளிரவிட்டிருகின்றார்......உலகத்தில் உள்ள எல்லோருக்காகவும் என உணர்ச்சிப்பெருக்கத்துடன் இதோ கூறிச்செல்கிறாள்.

2 comments:

Easy (EZ) Editorial Calendar said...

உங்கள் பகிர்வுக்கு மிக்க நன்றி......

நன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

WEWINSARAN said...

THANKS FOR UR PUBLISH. REALY FANTASTIC.

LinkWithin

Related Posts with Thumbnails