Thursday, January 3, 2013

டாக்டரின் டாக்குமென்றி......டாக்டர் பதிவர் பாலவாசகன் மலைசூழ் குளிர்மை குழுவிருக்கும் இடத்தில், ரொம்ப "வோர்மாக" தனது வைத்தியக் கடமையினை செய்துவருகின்றார்.
இப்போது பதிவுகளை தற்காலிகமாக நிறுத்தி வைத்திருக்கும் பாலவாசகனின் பார்வை புகைப்படக்கலையின் பக்கம் திரும்பிள்ளது என்பதை பலர் அறிந்திருப்பீர்கள்.
குருநாதர் இல்லாபோது குயில்ப்பாட்டைப்போல புகைப்படக்கலையிலும் புகைப்பட நுட்பங்களை தனது பிளிக்கர் எக்கவுண்ட்மூலம் பல பிரமுகர்களிடம் இருந்தும், இணையத்தேடல்களில் இருந்தும் கற்று தனது அதிநுட்ப நிக்கோன் புகைப்படக்கருவிகளால் பல பேசாத காட்சிகளை பேசவைத்துக்கொண்டிருக்கின்றார்.

டாக்டர், இந்த புகைப்பட ஆசை உங்களுக்கு எப்போது வந்தது என்று நான் ஒரு சமயம் கேட்டபோது, தான் சின்னவயதாக இருக்கும்போது தனது மாமனாரின் பொழுதுபோக்காக இருந்த சீனரிகள் உள்ள கிரீட்டிங் கார்ட்ஸ் சேர்க்கைக்களை தாம் ஆவலோடு பார்த்துவந்ததாகவும், அந்த காட்சட்டைப்பருவங்களில் மேற்படி கார்ட்களில் இருக்கும் சீனரிகளை இரசித்து மெய்மறந்த நாட்களில் இருந்தே தாம் புகைப்படத்துறைமேல் பேரார்வத்தை கொள்ள ஆரம்பித்ததாக தெரிவித்திருந்தார்.

பாலவாசகனுடன் நெருங்கி பழகிய பதிவர்களான மருதமூரான், சுபாங்கன், மற்றும் நான் அவரின் புகைப்பட நுணுக்கங்கள் பற்றியும் அவரது பேரார்வம் பற்றியும் ஆரம்பத்திலேயே அறிந்திருந்தோம்.
ஒரு மருத்துவ மாணவனாக இருந்த காலங்களில் பதிவெழுதி வந்த பாலவாசகன், தான் முழுவைத்தியரானதும் தனது முதல் மாத ஊதியத்தில் ஆசையாக வாங்கிக்கொண்டது என்ன தெரியுமா?
ஒரு டி எஸ் எல் ஆர் கமரா!

அதன் பின்னர் பிளிக்கரில் டாக்டரின் புகைப்பட டாக்குமென்றிகள் வெளிவர தொடங்கின. மிக நுணுக்கமான புகைப்படங்கள் பலரை வாவ்............ என பல தடவை சொல்ல வைத்தன.
தனது விடுமுறை ஒன்றில் யாழ் வந்த டாக்டர் என்னை சந்தித்தபோது சில பறவைகளையும் இயற்கை காட்சிகளையும் குறிவைத்து ஒரு விடுமுறைநாளில், புகைப்படம் எடுப்பதற்கான பயணம் ஒன்றை மேற்கொணடோம், யாழ் கடநீரேரிப்பகுதிகள், தீவகம் என்பன எமது இலக்காக இருந்தன.

அப்போதுதான் ஒரு பறவையினை புகைப்படக்கருவிக்குள் சிக்கவைக்க பல நிமிடங்கள் காத்திருப்பும், அதற்கான ரைமிங்கும், புகைப்பட கருவியை அவர் இயக்கும் லாவகத்தையும் கண்டு அதிசயித்தேன்.
ஒரு ஆன்ஸெல் அடெம்ஸையும், ரொபேட் ஹபாவையும் கண்முன் பார்பதுபோன்ற ஒரு பிரமை என்னுள்ளே.......
சிறந்தவற்றை, வளரத்துடிப்பவாகளை பாராட்டியே தீரவேண்டும் என்பதற்காகவே இந்தப்பதிவு.........
இதோ டாக்டரின் கமராவில் அன்று சிக்கியவைகள் சில........   


என்ன பிடிச்சிருக்கா.........
மேலதிக படங்களை பார்க்க


1 comment:

மருதமூரான். said...

டாக்குத்தரின் இயற்கைகள் மீதான காதலைக் கண்டு நான் ஏற்கனவே பிரமித்து நிற்கிறேன். அதோடு கமராக் கண்களோடு அலைய ஆரம்பித்த சின்ன காலத்துக்குள்ளேயே அந்த பார்வை குறிப்பிட்டளவு கிடைத்திருப்பதையும் எண்ணி வியக்கிறேன்.

கமராவுக்கு ட்ரைபோர்டை வாங்கி இன்னும் நல்ல படங்கள் எடுத்து- எங்களிடம் கருத்து கேட்க வேண்டும். அதற்கு ஏதாவது குற்றங்கள் பிடித்து உங்களுக்கு கிறுக்குப் பிடிக்கச் செய்து, இன்னும் நேர்த்தியாக எடுக்கப் பண்ண வேண்டும் என்கிற ஆவல் இருக்கிறது.

கருத்துக்களை நீங்கள் எப்போதும் கேட்கலாம். என்னுடைய அலைபேசி உங்களுக்காக எந்நேரமும் பிரச்சினையின்றி இருக்கிறது:P

வாழ்த்துகள் டாக்குத்தர் பாலசூரியன் வாசகன். மற்றும் ஜனா..!!

LinkWithin

Related Posts with Thumbnails