உலகை உலுக்கிய ஒரு பயங்கரமான பாரிய தாக்குதல் எத்தனை மனிதர்களின் வாழ்வுகளில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்திவிடுகின்றது. எத்தனை பேர்களின் உணர்வுகளை, அவர்களின் வாழ்க்கையினையே மாற்றி எண்ணங்களை சிதறடிக்கின்றது என்பதை ஒரு இளையோட்டமாக காட்டுகின்றது இந்த நியூயோர்க் இந்தித் திரைப்படம்.

ஜாஷ் ராஜ் பிலிம்ஸ், ஜாஷ் ஷோப்ராவின் தயாரிப்பில், ஹபீர்கானின் இயக்கத்தில் கடந்த ஜூலை 26ஆம் திகதி வெளிவந்துள்ளது இந்த “நியூயோர்க்” திரைப்படம்.
ஜோன் ஏப்ரஹாம், கத்ரீனா ஹைவ், நீல் நிதில் முகேஸ் மற்றும் இர்பான் ஹான் ஆகியோரின் நடிப்பில் வெளிவந்து பெருவெற்றியை பெற்றுள்ளது இந்த திரைப்படம்.
இத்திரைப்படத்தில் ஓமர் என்ற பாத்திரத்தில் நீல் நிதின் முகேசும், ஸ்ஷாமாக ஜோன் ஏபிரகாமும், மாயாவாக கத்ரீனா ஹைவ்வும் நடித்தார்கள் என்பதைவிட வாழ்ந்தார்கள் என்று கூறலாம்.

திரைப்படத்தின் ஆரம்பத்திலேயே நியூயோர்க் பொலிஸாரும், எவ்.பிஐயினரும் குறிப்பிட்ட ஒரு காரை மடக்கிப்பிடிக்கின்றனர். அந்தக்காரில் இருந்து ஏ.கே 47 துப்பாக்கியுடன் சில வெடிகுண்டுகளும் கண்டுபிடிக்கப்படுகின்றது. அதன் அடுத்தகட்டமாக தனது தங்குமிடத்தில் இருக்கும் ஓமர் (நீல் நிதில் முகேஸ்) சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு எவ்.பி.ஐ ஆல் விசாரிக்கப்படுவதாக துவக்கமே விறுவிறுப்பாக இந்தத் திரைப்படம் தொடங்குகின்றது.

ஓமரை விசாரணை செய்யும் எவ்.பி.ஐ. அதிகாரியாக இர்பான் ஹான் வருகின்றார்.
இவரது விசாரனைகளில் ஓமர் சொல்லும் தனது கதையாக அழகான நாட்களாகவும், கண்ணுக்கு இனிய காட்சியாகவும் அவர்களது கல்லூரி வாழ்க்கை திரையில் தெரிகின்றது.
முதன் முதலில் அமெரிக்கா வந்து நியூயோர்க்கில் தான் கற்கும் பல்கலைக்கழகத்தை சுற்றிப்பார்த்து வியக்கும் ஓமருக்கு முதலில் நண்பியாக மாஜா (கத்ரீனா ஹைவ்) அறிமுகமாகின்றார். இதனைத் தொடர்ந்து படு அமர்க்களமாக திரையில் ஸ்ஷாம் (ஜோன் ஏப்ரஹாம்) தோன்றுகின்றார். அதன் பின்னர் இவர்கள் மூவரும் நண்பர்கள் ஆகின்றனர். ஒருவர் மேல் ஒருவர் என மூவருமே அன்பு பாராட்டுகின்றனர்.

ஒரு கட்டத்தில் ஸ்ஷாமுக்கும், மாஜாவுக்கும் உள்ள காதலை ஓமர் அறிந்து கொள்கின்றான். அதே நேரம் தன் மனதிற்குள்ளும் மாஜா இருப்பதை நினைத்து விம்முகின்றான். அந்தச்சந்தர்ப்பத்திலேயே உலகையே உலுக்கிய செப்ரெம்பர் 11 தாக்குதல் நடப்பதை தொலைக்காட்சியில் உடனடியாக பார்த்து பல்கலைக்கழகமே கதறுகின்றது. அந்தே நேரம்கூட ஓமருக்கு அந்த தாக்குதலைவிட தனது காதல் தோல்வியே அதிகம் கவலையை தர அந்த இடத்தை விட்டு வெளியேறுகின்றான்.

எனினும் மறுநாள் அவனைச்சந்திக்கும் மாஜா, ஸ்ஷாமுக்கும் தனக்கும் இடையிலான காதலை அவனிடம் விபரிக்கும்போது ஒரு பக்கம் சோகத்தையும், மறுபக்கம் தனது இரு நண்பர்களும் காதலர்கள் என்ற சந்தோசத்தையும் ஓமர் (நீல் நிதில் முகேஸ்) காட்டும் முகபாவம் அடித்து சபாஸ் எனச்சொல்ல வைக்கின்றது.
இவ்வாறு பல்கலைக்கழக வாழ்வை சொல்லிவந்த ஓமர் பின்னர், முக்கியமாக அந்த தாக்குதலின் பின்னர் அவர்கள் மூவரும் என்ன ஆனார்கள், அவர்களுக்குள் ஏற்பட்ட மாற்றங்கள் என்ன? யார் எப்படி பயங்கரவாதத்திற்கு துணைபோகினர் அல்லது பயங்கரவாதிகள் ஆக்கப்பட்டனர் என்பதில் கதை திரும்புகின்றது.

இதில் எவ்.பி.ஐ. அதிகாரியாக வரும் இர்பான் ஹான், கதையோட்டத்தை தொய்வடையச்செய்யாமல் இருக்க தனது நகைச்சுவை கலந்த அனால் சீரியஸான நடிப்பால் கதையினை கொண்டு செல்கின்றார்.
முஸ்லிம்கள் என்றாலே பயங்கரவாதிகள் தான் என்ற எண்ண ஓட்டம், மாற்றப்படவேண்டும் என்தை கவனத்தில் எடுக்கவைக்கின்றது.
முக்கியமாக திரைப்படத்தின் பின்னணி இசையினை குறிப்பிடவேண்டும், திரைக்கதையின் ஓட்டத்திற்கு ஈடு கொடுக்கும்படியாக திரைப்படத்துடன் ஒன்றிய பின்னணி இசை திரைப்படத்திற்கு வலுச்சேர்க்கின்றது. இத்திரைப்படத்தின் இசையமைப்பாளர் பிரித்தமின் இசை கச்சிதமாகவே உள்ளது.

திரைப்படத்தின் இறுதியில் தனது தாய் தந்தையரான ஸ்ஷாம், மாஜா ஆகியோர் எவ்.பி.ஐ மற்றும் பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டபின்னர், ஓமரின் அரவணைப்பில் இருக்கும் குழந்தை, அங்குவரும் எவ்.பி.ஐ அதிகாரியான இர்பான் ஹானை தனது நண்பனாக தன்னுடன் உணவருந்த வருமாறு அழைப்பது நெஞ்சத்தை சுறுக்கென்று குத்துகின்றது.
மொத்தத்தில் தற்போது வெளிவரும் அனேகமான இந்தி திரைப்படங்களில் இருந்து விலகி ஒரு வித்தியாசமான திரைக்கதை அமைப்புடன் வெளிவந்துள்ளது “நியூயோர்க்” திரைப்படம். படம் முடிந்து வெளியில் வரும்போது மனம் லேசாகக்கனப்பதும் உண்மையே.
6 comments:
நல்ல விமர்சனம். Savoy Theater ல் விளப்பரப் பலகையைக் கண்டபோதும் மனத்தில் ஒட்டவில்லை. உங்கள் விமர்சனம் பாரக்கத் தூண்டுகிறது.
சிறந்த விமர்சனம் படம் பார்த்தேன். ஆனால் இந்தி திரைக்கதை போகும்போது ஆங்கில உப தலைப்புக்கள் இடப்பாடாமை பெரிய குறை. கதைநகர்வுகளை விளங்கமுடியவில்லை.
திரைப்படத்தின் ஆங்காங்கேயும், திரைப்படத்தின் இறுதியிலும், அமெரிக்காவை குத்திக்காட்டும் வண்ணம் சில காட்சிகள் இருக்கின்றன. அமெரிக்காவை குத்திக்காட்ட இந்தியர்களுக்கு என்ன அருகதை இருக்கின்றது என சிந்திக்கத்தோன்றியது.
Good Article. Yes this is one of nice film.
பகிர்விற்கு நன்றி..
Hi
உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.
உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.
நட்புடன்
செய்திவளையம் குழுவிநர்
Post a Comment