Friday, July 10, 2009

வரலாற்றில் தொடர்ச்சியாக அமெரிக்கத் தலைவர்களால் ரஷ்யாவுக்கு வைக்கப்படும் செக் மேட்ஸ்


1991 ஆம் ஆண்டுகளின் முன்னதாக உலகம் இரண்டு வல்லாதிக்க சக்திகளுக்கு கீழ்ப்பட்டதாக இருந்துவந்தது. சோவியத் ஜூனியன் என்ற ஒரு பரந்த தேசம், பல வரலாற்று புரட்சிகளுக்கும், புதிய சிந்தனை வடிவங்களுக்கும், தாய் நிலமாக இருந்துவந்தது.
மறுபக்கம் முதலாளித்துவத்தால் உச்ச வழர்ச்சியை வேகமாகவும், தமது தந்திரங்களாலும், அடைந்துகொண்டிருந்த அமெரிக்கா. “இந்த இரண்டு வல்லரசு நாடுகளுக்கிடையில் ஏனைய நாடுகள்” என்றிருந்தது அன்றைய உலகம்.
ஆனால் அதன் பின்னர் சோவியத் ஜூனியன் என்ற தேசம் பல துண்டுகளாக உடைக்கப்பட்டது. உண்மையில் சொல்லப்போனால் அமெரிக்கா அப்போதுதான் உண்மையான சந்தோசத்தை அடைந்திருக்கும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை.


சோவியத் ஜூனியன் உடைவுக்கு அடிகோலிய ரஷ்ய ஏகாதிபத்திய பணக்காரர்களும், உயர் மத்தியதர வர்க்கமும், ரஷ்ய பொருளாதாரத்தை முதலலாளித்துவ பாதையில் கொண்டு செல்லும் போது, தாம் அமெரிக்க முன்மாதிரியை பின்பற்ற வேண்டும் என்று விரும்பினார்கள். இது உலகெங்கும் முதலாளித்துவத்தை ஆதரிப்பவர்களின் நிலைப்பாடு தான், அவர்களது இயற்கையான வர்க்க குணாம்சம். அதற்கு ரஷ்யர்களும் விதிவிலக்கல்ல.
ஆரம்பத்தில் புதிய சந்தைகளை தேடும் அமெரிக்க முதலீட்டாளர்களையும், அதிக செலவை வைக்கும் ஆலோசகர்களையும், ரஷ்யர்கள் இருகரம் நீட்டி வரவேற்றனர். மேலைத்தேய கல்வி, முகாமைத்துவம், வர்த்தக நடைமுறை போன்றவற்றை தாமும் பின்பற்ற விரும்பினர். தாம் முன்பு கம்யூனிச நாடாக இருந்த படியால் தான் மேற்குலகம் தம்மை எதிரியாக பார்த்ததாகவும், தற்போது தாமும் அவர்களின் முதலாளித்துவம், ஜனநாயகம் ஆகியவற்றை வரித்துக்கொண்ட, உற்ற நண்பர்களானதாகவும் கருதிக்கொண்டனர்.


ஆனால் இவர்கள் ஒன்றை மறந்துவிட்டனர் என்பது உண்மை. “இந்த 21 ஆம் நூற்றாண்டுப் பனிப்போர்" முதலாளித்துவம் வேண்டுமா? அல்லது கம்யூனிசம் வேண்டுமா? என்று ஏதோவொரு அரசியல் கொள்கை அடிப்படையில் வரவில்லை. தமது அரசியல்-பொருளாதார நலன்களை மிக அப்பட்டமாக காட்டிக்கொள்ளும் வல்லரசு போட்டி இது. இங்குதான் அமெரிக்கா தொடர்ந்தும் ரஷ்யாவை அமத்தி வைத்திருக்கும் தந்திரங்களை கையாளத்தொடங்கியது.
பழைய விடயங்கள் அனைவரும் அறிந்த விடங்களாகவே இருப்பதினால். அண்மைக்கால நிலவரங்களில் இருந்து நாம் பார்க்கலாம்.


ஜோர்ஜ் புஷ்ஸின் காலம்.

போலந்து, செக் குடியரசில் அமெரிக்கா நிறுவிய கண்டம்விட்டு கண்டம் பாயும் ஏவுகணை நிலையத்தை கண்காணிக்க ரஷ்ய பரிசோதகர்களை அனுமதிக்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கை அமெரிக்காவின் புஷ் நிர்வாகம் உடனடியாக மறுத்தது. (சோவியத் யூனியன் கலைக்கப்பட்ட போது, அங்கிருந்த ஏவுகணை நிலையங்களில் அமெரிக்க பரிசோதகர்கள் நிறுத்தப்பட்டனர்.) செக்-போலந்து ஏவுகணைகள் ஈரானை குறிபார்க்கின்றன என்றும், ரஷ்யா இதுகுறித்து கவலைப்பட தேவையில்லை என்றும் அமெரிக்கா அப்பொது கூறியது. செக் குடியரசில் மக்கள் ஆதரவுடன் இடதுசாரி கட்சிகள் நடத்திய அணுவாயுத எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களுக்கு ரஷ்யா நிதியுதவி வழங்குவதாகவும் அமெரிக்கா குற்றம் சாட்டியது.

தொடர்ந்தும் ஜோர்ஜ் புஷ்ஜினுடைய வெளிப்படையாக ரஷ்யாவுக்கு எதிரான வெளியுறவுக்கொள்கைகளால் மீண்டும் பனிப்போர் நிகழத்தொடங்கியது என்றே சொல்லலாம். இதன் விழைவுகளாக ரஷ்யாவும் தன்பாட்டுக்கு சும்மா இருக்காமல்,
அமெரிக்காவுக்கு ஆத்திரம் வரத்தக்க செயல்களை புரிந்தது,
ரஷ்யா, கியூபாவை அணுகி இராணுவ-பொருளாதார உறவுகளை பலப்படுத்துவது பற்றி கேட்ட போது, கியூபா தயங்கியது. தென் அமெரிக்காவில் வெனிசுவேலா மட்டுமே , ரஷ்யாவுடன் ஒருங்கிணைந்த இராணுவ மற்றும் கடற்படை ஒத்திகைகளை நடாத்தியிருந்தது.
அணுவாயுதம் பொருத்திய "மஹா பீட்டர்" யுத்த கப்பலும், அதனோடு இரண்டு விநியோக கப்பல்களும், வட ரஷ்ய துறைமுகமொன்றில் இருந்து வெனிசுவேலா நோக்கி செல்லும் வழியில், சிரியாவின் மத்தியதரைக்கடல் துறைமுகத்திற்கும் விஜயம் செய்தது. இதற்கிடையே சிரியாவுக்கு செய்மதி படங்களை கொடுப்பதாக, இஸ்ரேல் குற்றச்சாட்டு வேறு உள்ளது. ஜோர்ஜியாவுக்கு அமெரிக்கா யுத்தகப்பல்களை அனுப்பியதன் பதிலடியாகவே, ரஷ்யா-வெனிசுவேலா கடற்படை ஒத்திகை அமெரிக்காவின் மூக்கு நுனியின் கீழ் இடம்பெற்றது.

அந்த சூழ்நிலைகளில் வெனிசுவேலா அதிபர் சாவேஸ், மொஸ்கோ விஜயத்தின் போது போடப்பட்ட ஒப்பந்தப்படி, ரஷ்யா அணு உலை அமைக்கும் தொழில்நுட்பத்தை வெனிசுவேலாவிற்கும் விற்க உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது. ரஷ்யாவின் பெற்றோலிய ஏகபோக நிறுவனமான புயளிசழஅ, வெனிசுவேலாவின் தேசிய பெற்றோலிய நிறுவனமான Pனுஏளுயு ஆகியன பொது வேலைத்திட்டத்தின் கீழ் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திட்டுள்ளனர். அதேநேரம் வெனிசுவேலா ஆயுதங்கள் வாங்கவென ரஷ்யா பில்லியன் டாலர் கடனுதவி வழங்குகின்றது. இது மீண்டும் முன்புபோல ஆயுத உற்பத்திப்பெருக்கத்திற்கு வழிவகுத்தது. ரஷ்யா தனது பாதுகாப்பு செலவினத்தை 26 சத வீதமாக அதிகரித்தது.
அதனைத்தொடர்ந்து ஜோர்ஜிய பிரச்சினையின் போது, மேற்கத்திய ஊடகங்கள் "ரஷ்ய ஆக்கிரமிப்பு" என்று கூறி ரஷ்யாவை வில்லனாக சித்தரித்த விதம், ரஷ்ய ஆட்சியாளர்களை வெறுப்படைய வைத்தது. அந்த பிரச்சினையில் ஜோர்ஜியர்கள் மட்டுமே பாதிக்கப்பட்டதாக ஒரு பக்க சார்பான செய்தி வெளியிட்டதாகவும், இனிமேல் மேற்குலகம் "ஊடக சுதந்திரம்" பற்றி எமக்கு பாடம் சொல்லித்தர வேண்டாம், என்று ரஷ்ய ஊடகவியாலாளர்கள் வெளிப்படையாகவே கூறினர்.
மோத்தத்தில் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ் அனைத்து விடையங்களிலும் தமது வெளியுறவுக்கொள்கைளால் மூக்கை நுளைத்து சொதப்பியதுபோல ரஷ்ய விடயத்திலும் பல சொதப்பல்களை செய்துவிட்டே பதவியில் இருந்து ஓய்வு பெற்றுச்சென்றார்.

ரஷ்யா தொடர்பாக ஒபாமாவின் காய் நகர்த்தல்.

ஆனால் தற்போது பதவி ஏற்றிருக்கும் அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமா, தனனை ஒரு மிதவாதியாக உலகத்திற்கு காட்டிக்கொள்வதைப்பொலவே ரஷ்யாவுடனும் நடந்துகொள்கின்றார். எனினும் ரஷ்யா தொடர்பாக அவர் மிக நதானமடனும், அதேநேரம் முன்னெச்சரிக்கையுடனுமே காய்களை நகர்த்தவதாக மேற்குலக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றார்கள்.
தான் ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் அமெரிக்காவை விரோதமாக கருதும் நாடுகளுடன் நல்லுறவை ஏற்படுத்திக் கொள்ளும் விதமாகவும், அந்நாடுகள் அமெரிக்கா குறித்து கொண்டிருக்கும் எதிர்மறை எண்ணங்களை களையும் நோக்குடனும் செயல்பட்டு வருகிறார் ஒபாமா! என்பது வெளிப்புறத்தோற்றமாக இருந்தாலும் கூட, ஜோர்ஜ் புஷ்ஸினதும் அமெரிக்கர்களுக்கே உரிய கர்வங்களுக்கும் அடிபணியாமல் ஒபாமா செயற்படுவதை அமெரிக்க எதிர் கட்சினரோ அல்லது சி.ஐ.ஏ யோ எச்சரிக்கை செய்யாது பார்த்துக்கொண்டிருப்பது ஒபாமா வேறுவிதமான திட்டங்களுடன் அமெரிக்காவின் கொள்கைகளில் இருந்து விலகாமல் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுலவதைப்போல் செயற்பட்டுவருவதாகவே எண்ணத்தோன்றுகின்றது.

உண்மையில் கறுப்பினத்தவராக இருக்கம் ஒபாமா, தன்மேல் நம்பிக்கை வைத்து அந்த நாட்டின் தலைவராக தம்மை ஆக்கிய பெரும்பான்மையான வெள்ளையர்களுக்கும், அமெரிக்காவின் கொள்கை வகுப்பாளர்களுக்கும் தமது விசுவாசத்தை காட்டவேண்டியவராகவும் காட்டுபவராகவுமே இருப்பார் என்பதில் சந்தேகத்திற்கு இடமில்லை.

இந்த நினையிலேயே இந்த வாரம் இரண்டுநாள் உத்தியோகப+ர்வ விஜயமாக அவர் மொஸ்கோ சென்று பலதரப்பட்ட பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருந்தார்.
ரஷ்யாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் மோசமாகியுள்ள உறவை சரி செய்து புதிய சகாப்தத்தை உருவாக்கும் நோக்கத்தோடு இருநாடுகளின் தலைவர்களும் புதிய உடன்பாடுகளை அறிவித்தனர்;.
ஆப்கானிஸ்தான் பிரச்சினை குறித்தும் தங்கள் அணு ஆயுத உற்பத்தியைக் குறைப்பது குறித்து ஒருமித்த கருத்துக்கு வந்திருப்பதாக ரஷ்ய அதிபர் டிமிட்ரி மெட்வேடெவ்வும் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவும் அறிவித்துள்ளனர்.
இவ்வாண்டு இறுதியில் காலாவதியாகும் அணு ஆயுத உற்பத்தி (1991 ஆம் ஆண்டு செய்யப்பட்டது) உடன்படிக்கையை புதுப்பித்துக் கொள்ள இருவரும் சம்மதம் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக அணு ஆயுத உற்பத்தியைப் பெரும் அளவில் குறைக்கவும் ரஷ்யாவின் வழியாக ஆப்கானிஸ்தானுக்கு அமெரிக்க இராணுவ உதவி அளிக்கப்படுவதற்கும் இருவரும் ஒருமித்த கருத்துக்கு வந்துள்ளனர்.

ஆனால் அமெரிக்க அதிபர் என்னும் முறையில் முதல் முதலாக மாஸ்கோவிற்கு சென்றிருந்த ஒபாமா, கிழக்கு ஐரோப்பாவில் ஏவுகணை தற்காப்பு மையத்தை அமைக்கும் திட்டம் குறித்து இரு நாடுகளுக்கும் இடையில் கருத்து வேறுபாடுகள் இருப்பதோடு முன்னாள் சோவியத் நாடான ஜியார்ஜியாவிற்கு மேற்கத்திய நாடுகளின் ஆதரவு இருப்பது தொடர்பான மொஸ்கோவின் கொள்கை குறித்தும் வேறுபாடுகள் இருப்பதாகக் கூறியுள்ளார்.
கடந்த ஆண்டில் ஜோர்ஜியா மீது ரஷ்யா போர் நடத்தியதைத் தொடர்ந்து அமெரிக்காவிற்கும் ரஷ்யாவுக்கும் இடையில் உறவு சீர்குலைந்திருப்பதை இருவருமே ஒப்புக் கொண்டதாக செய்தியாளர் சந்திப்பின்போது ஒபாமா குறிப்பிட்டார்.
கிரேம்லினில் நடந்த கூட்டுச் செய்தியாளர் மாநாட்டில் ரஷ்ய அதிபர் மெட்வேடெவ்வும் உடன் இருந்தார். தொடர்ந்து ஒபாமா அங்கு பேசுகையில் அமெரிக்க - ரஷ்ய உறவுகளை மறுசீரமைப்பதில் தங்களுக்கிடையில் உடன்பாடு கண்டிருப்பதாகக் குறிப்பிட்டார்.

தாம் பதவியேற்ற 6 மாதங்களுக்குப் பிறகு இந்த உடன்பாடு தங்களுக்குள் ஏற்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார். 1991ஆம் ஆண்டில் அணு ஆயுத களைவு குறித்த உடன்படிக்கை ஒன்று ஏற்பட்டது.
அந்த உடன்படிக்கை இந்த ஆண்டு இறுதியுடன் காலாவதியாகிறது. அதனைப் புதுப்பிக்கும் வகையில் இரு அதிபர்களுக்கும் இடையே உடன்பாடு காணப்பட்டிருக்கிறது.
அதன் மூலம் கணிசமான அளவுக்கு இரு நாடுகளுமே அணு ஆயுத உற்பத்தியைக் குறைப்பது என முடிவு செய்துள்ளன. இந்த ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி பழைய உடன்படிக்கை காலாவதியாகிறது.
ஆனால் அதை புதுப்பிக்க இரு நாட்டுத் தலைவர்களும் உடன்பாடு கண்டிருந்தாலும் எப்போது புதிப்பது என்னும் தேதியை இதுவரை நிர்ணயிக்கவில்லை.

இதேவேளை மற்றும் ஒரு முக்கிய கட்டமாக ஒபாமாவின் இந்த பயணத்தையொட்டி அமெரிக்காவும் , ரஷ்யாவும் செய்து கொண்ட உடன்பாடு குறித்த அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
அதில் போரின்போது காணாமல் போன இரு நாட்டு வீரர்கள் மற்றும் கைதிகளின் நிலை குறித்து விசாரித்து அறிய, கடந்த 1992 ஆம் ஆண்டு இரு நாடுகளும் சேர்ந்து ஏற்படுத்திய ஆணையத்தை மீண்டும் புதுப்பிப்பது என்று ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.
இரண்டாம் உலகப் போர், கொரிய போர் , வியட்நாம் போர் மற்றும் ஆப்கானிஸ்தானில் ரஷ்யாவின் மறைமுக போர்களில் காணாமல் போன மற்றும் கைதிகளின் நிலையை அறிந்து கொள்ளும் நோக்கத்துடனேயே இந்த ஆணையம் செயல்படும் என்று வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆக ஆழமாகப்பார்த்தால் அமெரிக்காவிற்கு பல நன்மைகளை தரவல்ல சில பேச்சுக்களையும், ஒப்பந்தங்களையும் ரஷ்யாவுடன் செய்ய மெல்லமாக அதேவேளை மிகவும் புத்திசாலித்தனமாக ஒபமா முன்னிறுத்தி அதில் வெற்றி கண்டுள்ளார்.
இதேவேளை தமது ரஷ்ய வியத்தின் ஒரு கட்டமாக மொஸ்கோ இளம் பட்டதாரிகளை சந்தித்துப்பெசிய அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமா, வலுவான, அமைதியான, வளமான நாடாக ரஷ்யா விளங்குவதையே அமெரிக்கா விரும்புகிறது என்றும் கூறியிருக்கின்றார். இது சிந்திக்க வைக்கின்றது.

3 comments:

Jana said...

ரஷ்யாவின் பெற்றோலிய ஏகபோக நிறுவனமான Gasprom, வெனிசுவேலாவின் தேசிய பெற்றோலிய நிறுவனமான PDVSA ஆகியன பொது வேலைத்திட்டத்தின் கீழ் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திட்டுள்ளனர்.

Pradeep said...

மிக முக்கியமான தகவல்கள், பதிவுக்கு நன்றி நண்பரே..

தமிழ் ஸ்டுடியோ said...

ungal valaippo arumaiyaaga ulladhu. valthugal

LinkWithin

Related Posts with Thumbnails