Tuesday, July 21, 2009

யூதர்கள் - தமிழர்கள்!! (ஆய்வுத்தொடர் -01)


இன்றைய நிலையில் உலகத்தமிழர்கள் அன்றயை நாட்களில் தமக்கு என்று ஒரு நாடு இல்லாத நிலையில், உலகநாடுகள் எல்லாம் பரவியிருந்த யூதர்கள் எவ்வாறு தம் வழர்ச்சிகள், ஒன்றிய சிந்தனைகள் என்பவற்றின்மூலம் இஸ்ரேல் என்ற தேசத்தினை உருவாக்கினார்களோ அதேபோல இன்று செயற்படவேண்டும் என பல தரப்புகளிடம் இருந்து கருத்துக்களும் தற்போது வலுப்பெற்று வருவதை நீங்கள் வாசித்திருப்பீர்கள், கேள்விப்பட்டிருப்பீர்கள்.
இந்த நிலையில் நமக்கு யூதர்களின் போராட்ட வரலாறுகள், அவர்கள் அனுபவித்த வேதனைகள், அவர்களுக்கு நடந்த துரோகங்கள், அவர்கள் எழுச்சி பெற்ற ஒவ்வொரு கட்டத்திலும், அவர்களுக்கு கிடைத்த ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் உலகில் இடம்பெற்ற மாற்றங்களால் அவர்களின் எழுச்சிகள் அமர்ந்துபோன ஏமாற்ற வரலாறுகள் என்பனபற்றிய முழுமையான வரலாற்றினை நாம் தெரிந்துவைத்திருக்கவேண்டியது அவசியமாக இருக்கின்றது.இந்த நிலையில் இந்த தளத்தில் இஸ்ரேலின் முழுவரலாற்றினையும் எழுதுவதென்றால் அதற்கு பிறம்பாக ஒரு தளம் அமைக்கவேண்டும் என்பதால் அப்பப்போ எனது வலைப்பதிவுகளில் இஸ்ரேலின் உருவாக்கம் பற்றியும், யூதர்களின் பேளெருச்சி பற்றியும் பதிவுகளை மேற்கொண்டு நண்பர்களான உங்களுடன் பகிரலாம் என நினைத்துள்ளேன். ஏனென்றால் இஸ்ரேல் பற்றியோ, அல்லது யூதர்களின் வரலாற்றினையோ சரியாக தெரிந்துகொள்ளாதவர்கள்கூட தமிழர்கள் இன்று யூதர்கள்போல செயற்படவேண்டும், யூதர்கள் இஸ்ரேல் என்ற தேசத்தை எவ்வாறு அமைத்துக்கொண்டார்களோ அதேபோல தமிழர்களுக்கான ஒரு தேசத்தை நாம் அமைத்துக்கொள்ளவேண்டும் என்று கூறிவருகின்றனர்.
இந்த நிலையில் யூதர்களுடன் தமிழர்கள் ஒத்துப்போகும் சில இடங்கள், தமிழர்கள் யூதர்களாக மாறுவற்கு இன்னும் எடுக்கவேண்டிய விஸ்வரூபங்கள், மாற்றிக்கொள்ளவேண்டிய குண இயல்புகள், இன்னும் செய்யத்தயாராக வேண்டியுள்ள தியாகங்கள் என பலவற்றை சுட்டிக்காட்டவேண்டிய தேவை வந்துள்ளது. எனவே யூதர்கள் மற்றும் இஸ்ரேல், பற்றிய இந்த ஆய்வுத்தொடரினை நீண்டதாக அல்லாமல் மிகவும் சுருங்கியதாக ஆகக்கூடியது மூன்று தொடர்களில் முடிக்க முயற்சிக்கின்றேன்.


“இன்றைய உலகில் நோபல் பரிசுகள் பெற்றவர்கள், ஒஸ்கார் விருதுகள் பெற்றவர்கள், மிகப்பெரிய கலைஞர்கள், புகழ்பெற்ற விஞ்ஞானிகள், மருத்துவர்கள், பொறியல் வல்லுனர்கள், அரசியல் ஆய்வாளர்கள், என எந்தத்துறையை வேண்டுமானாலும், அதில் எத்தனை பேரை வேண்டுமானாலும் பட்டியலிட்டுப்பாருங்கள். அந்தப்பட்டியலில் எத்தனை யூதர்கள் உள்ளனர் என கணக்கிட்டுப்பாருங்கள், அதிர்ந்துபோவீர்கள்.
யூதர்களின் சரித்திரமே எத்தனைக்கெத்தனை அவர்கள் போராடினார்களோ, கஸ்டப்பட்டார்களோ அத்தனைக்கத்தனை சாதித்தும் காட்டியுள்ளனர்.”
சரி…நாம் இப்போ யூதர்களைப்பற்றிப்பார்ப்போம்….


அது ஒரு வெள்ளிக்கிழமை, ஏப்ரல் மாதத்தில் முதற்கிழமையாக இருக்கலாம் என நம்பப்படும் நாள்.
“நஸரேத் நகரத்தைச்சேர்ந்த இவர், யூதர்களின் அரசன் என்று எழுதி ஒட்டப்பட்ட அந்த சிலுவையில் ஜேசு சிலுவையில் அறையப்பட்ட நாள். (Iesus Nazarenus Rex Inudaeorum –INRI) மூன்றாவது நாள் அவர் உயிர்த்து விண்ணுலகம் சென்றதாக கிறிஸ்தவர்களால் சொல்லப்படுகின்றது. இது கிறிஸ்தவர்களின் நம்பிக்கை.
மரணத்தின்பின்னர் தேவதூதன் உயிர்தெழவில்லை என்பதே யூதர்களின் நம்பிக்கை. ஜேசு மரணத்தின் பின்னர் உயிர்த்தெழவில்லை என்று நம்பியவர்கள் யூதர்களாகவே இருந்தனர்.
ஆனால் ஜேசு உயிர்த்தெழுந்தார் என்று நம்பிய யூதர்களின் ஒரு பகுதியினர் கிறிஸ்தவர்களாக மாறினார்கள். யூதர்களிடம் பிளவு ஏற்பட்டு, கிறிஸ்தவம் என்றொரு மதம் தோன்றியதன் அடிப்படையே இதுதான். அப்படி ஒரு பிளவு உருவாக காரணமாக இருந்தவன் யூதாஸ். ஜேசுவைக்காட்டிக்கொடுத்தவன், ஜேசுவை கொலை செய்தவன் எனக் கிறிஸ்தவர்களால் குற்றம் சாட்டப்பட்டவன்.
யூதாஸ் என்ற தனி மனிதன் ஒருவன் சரிவர யோசிக்காமல் அவசரப்பட்டு செய்த ஒரு காரியம், யூதர்கள் என்றாலே காட்டிக்கொடுப்பவர்கள் என்று காலம்காலமாக உலகம் மாறி மாறி யூதர்களை பழிவாங்கும் நிலைக்கு ஆக்கியது. இதில் முக்கிமான ஒரு விடயம் என்னவென்றால், ஜேசுவும் யூதனே என்ற வாதம் முன்வைக்கப்படுவதுதான்.
இதன்மூலம் யூதர்கள் அனுபவித்த வலிகள் வேதனைகள் எராளம். இரத்தத்தால் எழுதப்பட்ட வரலாறு என்றால் அது யூதர்களுடையதுதான்.

இந்த நாட்களில் இருந்து ஒரு யுகத்தொடர்ச்சியாக கால காலங்களிலும் யூதர்கள் அனுபவித்த கொடுமைகளும், வேதனைகளும் மிக அதிகம், அவர்களுக்கான ஒரு மேய்ப்பானுக்காக அவர்கள் தமக்குள்ளேயே அழுத காலங்கள் மிக நீண்டவை.
தோழ்கொடுக்க ஆள் இன்றி அவர்கள் ஒரு கையால் தமது நிர்வாணங்களை மறைத்துக்கொண்டே மறுகையால் ஆடைநெய்து அணிந்துகொண்டார்கள்.


யூதர்கள் ஆரம்ப நாட்களில் இருந்து மோஸஸ், ஜோசப், ஜோஸ_வா, சாமுவேல், தாவீது, சொலமன், ஜேசு, ரோமானிய மன்னர்கள், நபிகள் நாயகம், சலாவுதீன், கலிபாக்கள், சிலுவைப்போர், போன்ற மன்னர்களையும், சம்பவங்களையும் கடந்தே யூதர்களின் வரலாறு வருகின்றது. இவை முழுவதையும் பதிவிடுவது இயலாத காரியம் என்பதால் அங்கிருந்து ஒரே பாய்ச்சலாக 18ஆம் நூற்றாண்டுகளில் இருந்து ஆரம்பிக்கலாம் என நினைக்கின்றேன். எனினும் எதிர்வரும் காலங்களில் யூதர்களின் பண்டையகால வரலாறுகளை தொகுத்து சிறு சிறு பதிவுகளாக தருவது சிறப்பாக இருக்கும் எனவும் எண்ணுகின்றேன்.


கி.பி. 1772 தொடக்கம் 1815 க்குள் போலந்து லித்துவேனியா போன்ற சில ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவின் ஜோர் என்ற மன்னர்களின் கட்டுப்பாட்டில் இருந்தன.
அன்றைய ரஷ்யாவின் இளவரசர் பொட்ரம்கின் யுதர்களுக்கு அதரவான ஒரு அறிக்கையினை வெளியிட்டார். “ஐரோப்பிய நாடுகளில் வாழமுடியாத யூதர்கள் ரஷ்யாவுககு வந்து ரஷ்யாவின் தென்பகுதிகளில் வாழலாம் என்பதே அந்த அறிவிப்பு. இது யூதர்களே சற்றும் எதிர்பாராத அறிவிப்பு. எனவே அவர்கள் கூட்டம் கூட்டமாக அங்க சென்று பெரும் குடியிருப்புக்களை உருவாக்கினார்கள். துருக்கி மீது பெடையெடுக்கும் நோக்கத்துடன் அதில் தந்திரமாக யூதர்களையும் இணைத்துக்கொண்டார். யூதர்கள் மயங்கும் வண்ணம் பல சலுகைகளையும் வழங்கினார். 1768 இல் ரஷ்யா துருக்கியை கைப்பற்ற போரினை மேற்கொண்டது. இதில் யூதர்களின் படையும் பங்கு கொண்டமையினால் பாலஸ்தீனிய அரேபியர்களுக்கு யூதர்களின்மேல் தோன்றியிருந்த வெறுப்பு இன்னும் அதிகரித்தது.


இந்த யுத்தங்களின் பின்னர் ரஷ்யாவில் இருந்து போலந்து பிரிந்துசென்றது. அந்தநேரத்தில் ரஷ்யா போலந்து எல்லைகள் சரியாக பிரிக்கப்படவில்லை. இந்த பிரிவினைச்சுழலில் தமக்கு கிடைத்த சந்தர்ப்பங்களை பயன்படுத்திய யூதர்கள் பல நிலங்களையும் வளைத்துப்போட்டார்கள். பல குடியிருப்புக்களை உருவாக்கி பெருமளவில் விவசாயத்திலும் ஈடுபட்டனர். நாளடைவில் யூதர்களின்மீது ரஷ்யாவுக்கு இருந்த காழ்ப்புணர்வு உயர்ந்து யூதர்களுக்கெதிரான கலவரங்கள் ஆரம்பித்தன.
ரஷ்யர்களை யூதர்கள் அடிமைப்படுத்த முயல்கின்றார்கள், அவர்களை மதமாற்ற முற்படுகின்றார்கள் என்று பொய்க்குற்றங்களை ரஷ்யர்கள், யூதர்கள் மீது சுமத்தி மேலும் 1802ஆம் ஆண்டு ரஷ்யாவின் மன்னராக இருந்த அலெக்ஸ்ஸாண்டர் 01 என்ற மன்னனால் யூதர்கள் அடித்து விரப்பட்டவேண்டியவர்கள் என்ற தொனிப்பொருளில் பல்வறு அழுத்தங்கள் யூதர்கள் மீது திணிக்கப்பட்டன.
இந்தவேளைகளில் ரஷ்யாவின் கெடுபிடிகள் காரணமாக ரஷ்யாவை விட்டு யூதர்கள் மெல்ல மெல்ல வெளியேறத்தொடங்கினர், அனால் காலங்கள் சென்றாலும் யூதர்களை அடிமைகளாக்க ரஷ்யா முயன்றுகொண்டே இருந்தது. இந்த நிலையில் 1881ஆம் அண்டு ரஷ்ய கிளர்ச்சியாளர்களே அலக்ஸாண்டர் 02 மன்னனை கொலை செய்ய அந்தப்பழியினை யூதர்கள்மீது சுமத்தி யூதர்கள் மீது பெரும் இனவெறியினை கட்டவிழத்து யூதர்களை கொன்று குவித்தனர் ரஷயர்கள். வகைதொகையின்றி யூதர்கள் கொலை செய்யப்பட்டனர். இது ரஷ்யாவில் மட்டும் இன்றி யூதர் ஒழிப்பு நடவடிக்கைகள் மெல்ல மெல்ல ஐரோப்பா முழுக்க பரவ தொடங்கியது.


ரஷ்யாவைத் தொடர்ந்து ஐரோப்பாவிலும் யூதர்கள் மீது கலவரங்கள் கட்டவிழ்த்துவிடப்பட்டபோது, அப்போதைய சக்கரவர்த்தியாக திகழ்ந்த நெப்போலியன் “பாலஸ்தீனத்தில் இருந்துவந்தவர்கள் யூதர்கள், இதன் அடிப்படையில் அவர்களுக்கு அவர்களது குடியேற்ற உரிமைகள் பாதுகாக்கப்படும், இருப்பு அங்கீகரிக்கப்படும்” என அறிவித்தார்.
ஒரு மாபெரும் சக்கரவர்த்தி பாலஸ்தீனம் யூதர்களின் நிலம் என அங்கீகரித்தமையினாலும், ஐரோப்பா முழுவதும் யூதர்களை அடித்து ஒதுக்கியபோதும் தமக்கு அதரவாக குரல் கொடுத்ததாலும், நெப்போலியனை உளமார வாழ்த்தினார்கள் யூதர்கள். கி.பி.1799 இல் நெப்போலியன் எகிப்தில் இருந்து சிரியா நோக்கி படையெடுத்திருந்தார். அவரது நோக்கமே அன்றைய பாலஸ்தீனத்தில் இருந்த ஏர்க் கோட்டையினை பிடிப்பதாகும். எனவே போகும்வழியல் பாலஸ்தீன ரமல்லா என்ற இடத்தில் தங்கியிருந்த நெப்போலியன், அங்கிருந்த யூதர்களைத்திரட்டி “நீதி கேட்கும் ஊர்லம்” என்ற பெயரில் ஊர்வலம் ஒன்றை நடத்தினார். இது அவரது இராஜதந்திரமே ஆகும்.
இநத்ப் போரில் அரேபியர்களை வெற்றி கொள்ள நீங்கள் உதவினால், ஜெருசலத்தினை அவர்களிடமிருந்து மீட்டெடுத்து உங்களுக்கே தருவேன் என யூதர்களிடம் ஊர்வலத்தில் தெரிவித்தார் நெபபோலியன்.
யூதர்கள் உடனடியாக நெப்போலியனின் படையுடன் இணைந்து செயற்பட்டார்கள். அனால் துருக்கிக்கு அப்போது பிரித்தானியாவின் உதவி இருந்தமையினால் நெப்போலியானால் வெற்றிகொள்ளமுடியவில்லை. நாளடைவில் பிற ஐரோப்பிய நாடுகளில் நடந்துகொண்டதுபோலவே யூதர்களை நெப்போலியனும் அடக்கி ஆழ தொடங்கினார்.


கொலை செய்யப்பட்டாலும் துரத்தியடிக்கப்பட்டாலும் அதே இடங்களில் மீண்டும் வந்து வாழ்வதற்கு யூதர்கள் தயங்கியதே கிடையாது. உலகமெல்லாம் பரவி தங்கள் வியாபாரங்களை வலைப்பின்னலாக பரவச் செய்தவர்கள் யூதர்களே. அதாவது Multi Level Marketing ஐ யூதர்கள் 17அம் நூற்றாண்டிலேயே ஆரம்பித்துவிட்டார்கள். வியாபாரத்தை விஸ்தரிக்க எந்தவிதமான குறுக்கு வழிகளில் நுளைய அவர்கள் அஞ்சியது கிடையாது. ஆனால் தமது வாடிக்கையாளர்களை அவர்கள் சிறிதளவும் ஏமாற்றவில்லை. எவ்வளவு தாம் முன்னேறினார்களோ அவ்வளவு தமது இனமும் முன்னேற வேண்டும் என்பதில் யூதர்கள் மிக உறுதியாக இருந்தார்கள். தம்மினத்தில் யாராவது ஒருவர் ஏதாவது ஒரு துறையில் சிறப்பானவராக இருந்தார் என்றால் அவர் அதேதுறையில் உச்சத்திற்கு செல்ல சகல உதவிகளையும் மற்ற யூதர்கள் வழங்கினர்.
1839 இல் ஈரானின் கிழக்கு பகுதியில் உள்ள மெஷாக் என்ற இடத்தில் இருந்த பழமையான யூத தேவாலயம் ஒன்று முஸ்லிம்களால் தீ வைததுக்கொழுத்தப்பட்டது. அங்கே பற்ற வைக்கப்பட்ட கலவரத்தீ யூதர்களுக்கு எதிரான முஸ்லிம்களின் தீயாக பரவியது. இஸ்லாமியனாக மாறு இல்லை என்றால் இறந்துவிடு இதுவே முஸ்லிம்களால் யூதர்களுக்கு அன்று கொடுக்கப்பட்ட தெரிவுகள். யூதர்களுக்கு எதிராக எங்கும் முஸ்லிம்கள் கிளர்ந்து எழுந்து யூதர்களை தாக்கினார்கள்.


19ஆம் நூற்றாண்டின் மத்தியில் பல ஐரோப்பிய தேசங்களில் ஜனநாயகம் மலரத்தொடங்கியது. எவ்வாறு ஒவ்வொரு தேசத்திலும் தங்கள் இருப்பை யூதர்கள் நிலைநிறுத்த முயற்சித்தார்களோ, அதேபோல ஜனநாயக நாடுகளிலும் தமது உரிமைகளைப்பெறவும். உரிய பதவிகளைப்பெறவும் முயற்சிகளை செய்தனர்.
1848 இல் பிரான்ஸில் இடம்பெற்ற தேர்தலில் யூதர் ஒருவர் வெற்றி பெற்று நாடாளுமன்றப்பிரதிநிதியானார். தொடர்ந்து 1870 இல் பெஞ்சமின் டி இஸ்ரேலி என்ற யூதர் தேர்தலில் நின்று வெற்றிபெற்று பிரித்தானிய பிரதமராகவே ஆகினார்.

தொடரும்….

11 comments:

செந்தழல் ரவி said...

நல்ல பதிவு

Anonymous said...

Good article. Got to know lot of informations.
Please continue these kind of articles.

Thank you.

- Kiri

Pradeep said...

தங்கள் வலைப்பதிவுக்கு தாங்கள் எடுத்துக்கொள்ளும் கருப்பொருட்கள் மிக மிக ஆளமான விடயங்களும், உலகியல் சம்பந்தப்பட்டதாகவும் இருக்கின்றது. எனினும் அவற்றை தெரிவிக்க நீங்கள் எடுத்துக்கொள்ளும் வசனநடை வாசகர்களுக்கு இலகுவாக புரிந்துகொள்ளும்விதம் இருக்கின்றது. இதுவே ஒரு எழுத்தாளனின் வெற்றி. வாழத்துக்கள்...

Anonymous said...

காலத்திற்கு தேவையான மிகச்சிறப்பான பதிவு. இந்த தொடரை தொடர்ந்து எழுதுங்கள்.-Saba

thokuppu said...

ஒரு வலைப்பதிவு என்பது எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு தங்கள் வலைப்பதிவே சிறந்த சாட்சி. உலகியலின் ஓட்டத்திற்கு எற்றதுபோல உங்கள் பதிவுகள் உள்ளன. யூதர்கள் பற்றி அங்கொன்றும் இங்கொன்றுமாய் பல கதைகள் கேள்விப்பட்டிருந்தேன். நீங்கள் எழுதியதுபோல நானும் யூதர்களைப்பற்றி தெரியாமலேயே தமிழர்கள் யூதர்கள்போல ஆகவேண்டும் எனக்கூறியவன்தான். யூதர்களைப்பற்றிய பல விடயங்களையும் தொகுத்து இந்த தொடரில் தாருங்கள். நன்றி.. வாழ்த்துக்கள்.

Julian Framcis said...

Hey maaps.. there are some incorrect information about Jews in ur article... I don't think that u ve stated the exact early history of Jews...B'cos the Jewsih history gose back around 6000 B.C.... I'll send u the comlete history of the Jews ok... Judaism doesn't begins with Christ's death... it gose back to the ancient time of Abarham... in fact Christanity & Islam r mostly infulenced by Judaism...Any Way its great attempt....but u must forget what israel is doing in this morden world... If recall the recent Gaza War...

Jana said...

தங்கள் கருத்துக்கு நன்றி நண்பர் ஜூலியன்
ஜூதர்கள் எவ்வாறெல்லாம் செயற்பட்டு தமக்கான ஒரு நாட்டை எழுப்பினார்கள் என்று அதை இன்றைய நிலையில் தமிழர்கள் எவ்வாறு செல்லலாம் என தெரிவிக்கும் நோக்கத்துடனே இந்த தொடரை நான் எழுத வழைந்தேன்.
யூதர்களின் முழுமையான வரலாற்றினையும் அல்ல. தாங்கள் சொன்னது அனைவருக்கும் தெரிந்தவிடயம்தான். யூதர்களின் வரலாறு நான் தொடங்கிய இடத்தில் இருந்து இன்னும் முன்னுக்கு தொடங்கின்றது.
இந்த தொடர் இன்னும் செல்லவுள்ளதால் இன்றைய உலகில் இஸ்ரேலின் நடவடிக்கைகளையும் பார்க்கலாம். ஆனால் ஒன்று இஸ்லாமியர்களால் (அரேபியர்கள்) கொல்லப்பட்ட யூதர்களைவிட கிறிஸ்தவர்களால்த்தான் யூதர்கள் காலங்காலமாக வகை தொகையாக கொல்லப்பட்டுள்ளனர்.

chockalingam said...

நண்பர் ஜனாவுக்கு..

தாங்கள் எழுத விளைந்துள்ள சரித்திர முயற்சி பாராட்டுக்குரியது. இந்த நேரத்தில் இந்த விஷயம் எழுதப்பட வேண்டிய அவசியமும் இருக்கிறது. ஆனால் அதே நேரத்தில் தாங்கள் எங்கே இருந்து இந்தத் தகவல்களை எடுக்கின்றீர்களோ அந்தப் புத்தகம் குறித்தும் நான் நன்கு அறிவேன். அது தமிழ் வாசகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற புத்தகம். பலரும் அந்த நூலை அறிவார்கள். புத்தகத்தின் பெயர் - யூதர்கள் - வரலாறும் வாழ்க்கையும் - முகில் (www.writermugil.com) என்ற என் நண்பர் எழுதியது. கடந்த மூன்றாண்டுகளாக விற்பனையாகிக் கொண்டு வருகிறது. சில வார்த்தைகளை மாற்றி எழுதுவதன் வாயிலாக ஆதார நூலை மறைத்தல் முறையல்ல. தாங்கள் உரிய பதிலை அளிப்பீர்கள் என்று நம்புகிறேன்.

- சொக்கலிங்கம்

Jana said...

தாங்கள் சொன்வது உண்மையே நண்பர் சொக்கலிங்கம் அவர்களே...
தாங்கள் கூறியதுபோல் முகில் அவர்கள் எழுதிய யூதர்கள் வரலாறும் வாழ்க்கையும், சீலன் அவர்கள் எழுதிய ஜெருசலேம், மற்றும் அமரன் அவர்கள் எழுதிய யூதவரலாறு, மற்றும் யூதர்கள் பற்றிய இணைத்தேடல்களில் இருந்து கிடைக்கும் தகவல்களின் அடிப்படையிலேயே (வரலாறு என்பது ஒன்றுதானே அதை நாம் இயற்றி எழுதமுடியாது அல்லவா?)இந்த கட்டுரையினை, தமிழர்களின் இன்றைய நிலையுடன் ஒப்பிட்டு எழுதுகின்றேன்.
தாங்கள் சொன்னது உண்மையே...இந்த தொடரின் முடிவில் எனது எடுகோல்களார்கள், உதவி புரிந்தவர்கள், மற்றும் பலர் தகவல்களை வழங்கியுள்ளனர் அவர்கள் பற்றி எல்லாம் கண்டிப்பாக தகவல்களை தர எண்ணியுள்ளேன். கண்டிப்பாக தருவேன் சந்தேகம் வேண்டாம் நண்பரே.

colvin said...

அன்பு நண்பரே
தங்கள் தகவல்கள் அருமை. இருப்பினும் சில பைபிள் உண்மைகளை கருத்திற் கொள்லாமல் சில கருத்து்ககளை தெரிவித்திருக்கிறீர்கள்.

//ஆனால் ஜேசு உயிர்த்தெழுந்தார் என்று நம்பிய யூதர்களின் ஒரு பகுதியினர் கிறிஸ்தவர்களாக மாறினார்கள். யூதர்களிடம் பிளவு ஏற்பட்டு, கிறிஸ்தவம் என்றொரு மதம் தோன்றியதன் அடிப்படையே இதுதான். அப்படி ஒரு பிளவு உருவாக காரணமாக இருந்தவன் யூதாஸ்.//

யூதர்களிடம் பிளவு ஏற்பட்டு கிறிஸ்தவம் உண்டாகவில்லை. உண்மையில் யூதாசினாலும் பிளவு உருவாகவில்லை. அவன் இயேசுவை காட்டிக் கொடுத்ததோடு சரி. இவ்வாறு நிகழ வேண்டும் என்பது தேவனின் சித்தம். அதற்கு அவனின் சுயநலம் ஒரு கருவியாக உபயோகிக்கப்ட்டுள்ளது.

இயேசுவை பின்பற்றியவர்களே கிறிஸ்தவர்கள் என அழைக்கப்படலாயினர். முதன முதலில் அந்தியோக்கியாவிலேயே கிறிஸ்தவர்கள் என பெயர் வழங்கப்பட்லாயிற்று. ஏராளமான புற இனத்தவர்களும் கிறிஸ்தவர்களாகினர்.

தமிழர்களுக்கும் யூதர்களுக்கும் இடையயே உள்ள பிரதான ஒற்றுமை உழைப்பு.

பிரதான வேற்றுமை காட்டிக்கொடுத்தல், சுயநலம் இவை அகலும்வரை தமிழருக்கு விடிவில்லை.

நேரம் இருப்பின் உங்கள் கட்டுரைகளை முழுமையாக படித்த பின் அபிப்பிராய பேதமிருப்பின் பின்னூட்டம் இடுகிறேன்

நன்றி
அன்புடன்
கொல்வின்

Cool Boy கிருத்திகன். said...

இப்ப மறுபடியும் வாசிக்க தொடங்கியிருக்கேன்..

நன்றி இணையம்

LinkWithin

Related Posts with Thumbnails