Wednesday, July 8, 2009

உலகின் கிரிக்கட் பேராட்டம் ஆஷஸ் தொடர்.


இங்கிலாந்து - அவுஸ்ரேலியா அணிகள் இடையே கடந்த 122 ஆண்டுகளாக பாரம்பரியமிக்க ஆஷஸ் ரெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடந்து வருகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த தொடர் நடைபெறுகிறது.
இந்தவகையில் இம்முறை இந்த ஆஷஸ் தொடரின் போட்டிகள் இன்று ஜூலை 08, புதன்கிழமை இங்கிலாந்தின் ஷோபியா கார்டின் மைதானத்தில் ஆரம்பமாகின்றது.
இங்கிலாந்தில் ஐந்து ரெஸ்ட் தொடர்களில் ஆடுவதற்காக ரிக்கி பொன்டிங் தலைமையிலான அவுஸ்ரேலிய அணியினர் இங்கிலாந்துக்கு வந்துள்ளனர்.
கடைசியாக நடந்த கடந்த 2006-07-ம் ஆண்டு, ஆஷஸ் கோப்பையை 5-0 என்ற கணக்கில் அவுஸ்ரேலியா முழுமையாக கைப்பற்றியது அறிந்ததே.


ஆனால் இம்முறை அவுஸ்ரேலியாவுக்கு வெற்றி அவ்வளவு இலகுவானதாக இல்லை என பல விமர்சகர்களும் கருத்துக்கூறியுள்ளனர். முக்கியமாக அண்மைய நாட்களில் அவுஸ்ரேலியா அணியின் வெற்றிப்பாதைகள் மூடப்பட்டு. திடீர் வீழ்ச்சிகளை கண்டுவருவது, முந்தைய ஆஷஸ் தொடரில் விளையாடிய அவுஸ்ரேலியாவின் வீரர்களில் கில்கிறிஸ்ட், வார்னே, மெக்ராத், ஹைடன், லாங்கர், மார்ட்டின் ஆகிய நட்சத்திரங்கள் ஓய்வு பெற்று விட்டனர். இதனால் அவுஸ்ரேலிய அணி அனுபவம் குறைந்த அணியாகவே தெரிகிறது. தவிர, இடது விலா எலும்பு பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக வேகப்பந்து வீச்சாளர் பிரெட்லீ முதலாவது டெஸ்டில் ஆடமாட்டார் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. பிரெட்லீ விலகல் அந்த அணிக்கு மேலும் ஒரு பின்னடைவாக கருதப்படுகிறது. என்றாலும் அவுஸ்ரேலிய அணித்தலைவர்; பொண்டிங், துணை தலைவர் மைக்கல் கிளார்க், சைமன் கேடிச், ஜோன்சன், ஸ்டூவர்ட் கிளார்க் உள்ளிட்டோரை அணி நிர்வாகம் அதிகமாக நம்புகிறது.
எனினும் தற்போதும் ஐ.சி.சி. ரெஸ்ட் தரவரிசையில் அவுஸ்ரேலிய அணி 128 புள்ளிகளுடன் முதலிடத்திலும், 119 புள்ளியுடன் தென்ஆப்பிரிக்கா இரண்டாவது இடத்திலும் உள்ளன. இந்த ஆஷஸ் தொடரை வென்றால் மட்டுமே அவுஸ்ரேலிய அணியால் முதலிடத்தை தக்க வைத்துக்கொள்ள முடியும். தொடர் சமனில் முடிந்தால் இரண்டாவது இடத்துக்கு தள்ளப்பட்டு விடும். எனவே நம்பர் வன் இடத்தை தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ள போராடுவார்கள் என்பதில் சந்தேகமில்லை.


இதேவேளை இங்கிலாந்து அணியினை எடுத்துக்கொண்டால், சொந்த மண்ணில் விளையாடுவது இங்கிலாந்துக்கு கூடுதல் நெருக்கடியாகும். அந்த அணி அன்ட்ரூ ஸ்டிரொஸ் தலைமையில் களம் இறங்குகிறது. பீட்டர்சன், பிளின்டோவ் அணியின் நம்பிக்கை தூணாக உள்ளனர். குறிப்பாக பீட்டர்சனை கண்டு தான் அவுஸ்ரேலிய அணி மிரளுகிறது. கடந்த இரு ஆஷஸ் தொடரில் மட்டும் அவர் 963 ரன்கள் குவித்து இருக்கிறார். அதில் 2005-ம் ஆண்டு இங்கிலாந்து அணி ஆஷஸ் தொடரை 2-1 என்ற கணக்கில் வெல்ல பீட்டர்சன் முக்கிய காரணமாக இருந்தார்.
எனவே அவர் தான் அவுஸ்ரேலியாவின்; பிரதான இலக்காக இருக்கிறார். புதுமுக வேகப்பந்து வீச்சாளர் ஒனியன்ஸ், சுழற்பந்து வீச்சாளர் ஸ்வான் ஆகியோர் சமீப காலமாக பிரகாசித்துவருவது அணிக்கு சாதகமான விடயமாகும்.
இம்முறை ஐந்து ரெஸ்ட் தொடர்களை உள்ளடக்கியதான இந்தப்போட்டித்தொடரில்,
முதலாவது ரெஸ்ட் போட்டி இன்று ஜூலை 08 புதன்கிழமை ஷோபியா கார்டின் மைதானத்திலும்
இரண்டாவது ரெஸ்ட் போட்டி ஜூலை 16 ஆம் திகதி வியாழக்கிழமை லோட்ஸ் மைதானத்திலும்,
மூன்றாவது ரெஸ்ட் போட்டி ஜூலை 30 ஆம் திகதி வியாழக்கிழமை எஜ்பஷ்டன் மைதானத்திலும்
நான்காவது ரெஸ்ட் போட்டி ஓகஸ்ட் 07 ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஹெடிங்லே மைதானத்திலும்
ஐந்தாவது ரெஸ்ட் போட்டி ஓகஸ்ட் 20ஆம் திகதி ஓவல் மைதானத்திலும் ஆரம்பமாகவுள்ளன.

ஆஷஸ் (சாம்பர்)

கிரிக்கட் விளையாட்டினை உலகத்திற்கு அறிமுகப்படுத்தி கிரிக்கட்டின் தாய்வீடாக இங்கிலாந்து உள்ளது. ஆரம்ப காலங்களில் இந்த கிரிக்கட் விளையாட்டினை இங்கிலாந்துக்கு அடுத்ததாக அவுஸ்ரேலியாவே அறிமுகப்படுத்தியது, எனவே முதலில் இந்த இரண்டு நாடுகளே உத்தியோகபூர்வாமாகவும், தமது நாடுகளின் கௌரவத்திற்காகம். “கனவான்களின் ஆட்டம் கிரிக்கட்” என்ற மகுடத்துடன் கிரிக்கட் விளையாட்டில் ஈடுபட்டுவந்தனர்.
இந்த நிலையில், அவுஸ்ரேலிய அணி 1882 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது, ஓவலில் நடந்த ரெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றது. இங்கிலாந்து மண்ணில் அவுஸ்ரேலியா பெற்ற முதல் வெற்றி இதுவாகும். சொந்த மண்ணில் அடைந்த தோல்வியால் இங்கிலாந்து மீது கடும் விமர்சனங்கள் எழுந்தன. “தி ஸ்போர்ட்டிங் டைம்ஸ்” எனற பத்திரிகை இங்கிலாந்தின் தோல்வியை கிண்டல் செய்து இரங்கல் செய்தி வெளியிட்டு இருந்தது, அதில் இங்கிலாந்து கிரிக்கெட் செத்து விட்டது

Obituary“ in affectionate remembrance of English cricket which died at the oval, 29th August,1882.deeply lamented by a large circle of sorrowing friends and acquaintances, Rip.NB the body will be cremated and the Ashes taken to Australia..

அதனை தகனம் செய்து அதன் அஸ்தியை (ஆஷஸ்) அவுஸ்ரேலியா தங்களது சொந்த நாட்டுக்கு எடுத்துச் செல்கிறது என்று கூறியிருந்தது.
அடுத்த முறை இங்கிலாந்து அணி (1882-83) அவுஸ்ரேலியா சென்ற போது, கொண்டு செல்லப்பட்ட அஸ்தியை திரும்ப எடுத்து வருமா? என்று இங்கிலாந்து மீடியாக்கள் கேள்வி எழுப்பி இருந்தன.
ஆந்த முறை இங்கிலாந்து அவுஸ்ரேலியாவுக்கு சென்ற போது இங்கிலாந்து கேப்டன் இவா பிளையிடம் மெல்போன் நகரத்து பெண்கள் தாழி போன்ற சிறிய ஜாடியை வழங்கினர். இதில் கொஞ்சம் சாம்பல் இருந்தது. அது கிரிக்கெட் ஸ்டெம்ப் அல்லது வேல்ஸ்; ஆகியவற்றை எரித்த சாம்பலாக இருக்கலாம் என்று கூறப்பட்டது
இந்த சம்பவங்களுக்கு பிறகு தான் அவுஸ்ரேலிய - இங்கிலாந்து இடையிலான ரெஸ்ட் தொடருக்கு “ஆஷஸ்' என்று பெயரிடப்பட்டு இதுவரை அவ்வாறே அழைக்கப்பட்டு வருகிறது. தாழி போன்ற கோப்பையின் மாதிரி ஒவ்வொரு தொடரின் போதும் வழங்கப்படுகிறது.

அஷஸ் தொடரின் குறிப்புகள்.

இதுவரை 316 போட்டிகள் இரண்டு அணிகளுக்கிடையிலும் இடம்பெற்றுள்ளன.இதில் 131 போட்டிகளில் வெற்றி பெற்று முதலிடத்தில் உள்ளது அவுஸ்திரேலிய அணி.இங்கிலாந்து 97 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. 88 போட்டிகள் வெற்றி தோல்வியின்றி முடிவடைந்துள்ளன.
729/6 (டிக்ளேர்) 1930 அவுஸ்திரேலியா
903/7 (டிக்ளேர்) 1938 இங்கிலாந்து

சேர் டொன் பிரட்மன்(அவுஸ்) (1928-1948) 5028 ஓட்டங்கள்
ஜெக் ஹொப்ஸ்(இங்கி) (1908-1930) 3636 ஓட்டங்கள்

சேர் டொன் பிரட்மன் (அவுஸ்) 37 போட்டிகளில் 19 சதங்கள்
ஜெக் ஹொப்ஸ்(இங்கி) 41 போட்டிகளில் 12 சதங்கள்

ஷேன் வோர்ன் (அவுஸ்) 36 போட்டிகளில் 195 விக்கெட்டுகள்
இயன் பொத்தம் (இங்கி) 36 போட்டிகளில் 148 விக்கெட்டுகள்

ஜிம் லேக்கர் (அவுஸ்) 10/53
மெய்லி (இங்கி) 9/121

கிரேக் செப்பல் (அவுஸ்) 35 போட்டிகள் 61 பிடிகள்
இயன் பொத்தம் (இங்கி) 36 போட்டிகள் 57 பிடிகள்

1 comment:

shabi said...

கிரிக்கெட் பற்றி நிறைய எழுதுங்கள்

LinkWithin

Related Posts with Thumbnails