நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதனாலோ என்னமோ சென்னையில் குறிப்பிட்ட இடத்தை குறித்த நேரத்தில் அடையமுடிந்தது.
சென்னையில் மரினா பீச்சில் உள்ள காந்தி சிலையின் பினபுறம் பதிவர் சந்திப்பு ஒன்று நடப்பதாக அறிந்து, இந்த சந்திப்பு பற்றி கேள்விப்பட்டதும் நண்பர் கேபிள் சங்கரிடம் தொடர்புகொண்டு விடயங்களை ஏற்கனவே கேட்டிருந்தேன். சென்னைப்பதிவர்கள் ஒன்றுகூடல்தானே, ஈழப்பதிவாளனான நான் அங்கு செல்வது சரியா? என பல தயக்கங்கள் எனக்கு இருந்தது. அந்த தயக்கங்கள், இடப்பிரிவினைகள் இனியும் வேண்டாம், தமிழர், அதிலும் பதிவர் என்ற நிலையில் ஒன்றிணையலாம் என்பதை தன் குறுந்தகவலில் ஒரு வரியிலேயே தெளிவு படுத்தியிருந்தார் கேபிள் சங்கர்.
சரி, சென்னையில் பல்கலைக்கழக தேர்வுகள் இடம்பெற்றபொழுது, நான் சென்னை வந்தவேளையில்தான் இலங்கையில் கொழும்பு பதிவர் சந்திப்பு இடம்பெற்றது, எனவே அதில் கலந்துகொள்ளமுடியாத நிலை ஏற்பட்டது. எனவே இந்த சந்திப்பிலாவது கலந்துகொள்ளவேண்டும், எழுத்துக்கள் மூலம் அறியப்பட்ட பல சக பதிவுத்தோழர்களை நேரில் காணவேண்டும் என்ற ஆர்வத்துடன் மெரினாவைநோக்கி சென்றுகொண்டிருந்தேன். (உந்து உருளியில்)
மெரினாவை நான் அடையும் முன்னதாகவே மழை வந்துவிட்டபோதிலும், மிகவேகமாக சென்றேன் நேரம் அப்போ 5.25 மழை சோ.. என்று கொட்டத்தொடங்கியவுடன் காந்தி சிலையடியில் நிறுத்தாமல் விவேகாந்தர் மியூசியத்தடியில் போய் மழைக்கு ஒதுங்கிவிட்டு. பின்னர் 5.35 மணியளவில் மழை சற்று ஓய..திரும்பவும் காந்தி சிலைக்கு அருகில் வந்தேன்.
அதற்கு முதல் இந்த மழையில் சந்திப்பு இடம்பெறுமா? அங்கேதான் நிற்கின்றீர்களா? என்பதை நண்பர் கேபிள் சங்கருடன் தொடர்புகொண்டு அறிந்துகொண்டேன். “ஜனா கெதியாக வாருங்கள், நாங்கள் 20 பேருக்குமேல அங்கேயேதான் நிற்கின்றோம் என்றார் அவர்.
ம்ம்ம்…காந்தி சிலையின் பின்புறம் நிறையப்பேர் நின்றிருந்தார்கள். நான் எதுவுமே பேசாமல் இது இவங்கதானோ??? என்ற சந்தேகத்துடன் கேபிள் சங்கரை தேடினேன், நண்பர் நடுவில நின்று படு சீரியசாக பல சக பதிவர்களுடன் கதைத்துக்கொண்டிருந்தார்.
ஆஹா…இதுதான் நம் நண்பர்கள் என அறிந்துகொண்டு சலனமே இல்லாமல் அந்தக்கூட்டத்தாருடன் கூட்டமாக நின்றிருந்தேன்.
நானும் போய் நிற்க பதிவர் முரளிக்கண்ணன் பேசத்தொடங்கினார், பதிவர்கள் நிலாரசிகன், மற்றும் அடலேறு ஆகியோர் என்னருகில் நின்றுகொண்டிருந்தனர்.
பின்னர் பதிவர்கள் அறிமுகம் ஒருவர் பின் ஒருவராக செய்துகொண்டனர், அதன்பின்னர் பல விடங்கள் பற்றி பேச்சைதொடங்க திரும்ப மழை சோ…என்று கொட்டத்தொடங்கியது. ஆரம்பபத்தில் நனைந்தாலும் பரவாய் இல்லை, அப்படியே பேசலாம் என்றபோதும், மழை விடுவதாக இல்லை, எனவே அருகில் இருந்த மரத்தின் கீழ், ஒருவரோடு ஒருவர் ஒட்டிநின்று பேசினோம். அந்த நெருக்கம் பதிவர்களை இன்னும் நெருக்கமாக்கிவிட்டது என்றுதான் சொல்லவேண்டும்.
நிலா ரசிகன், எவனோ ஒருவன், அடலேறு, ஊர்சுற்றி ஆகியோர் என்னுடன் நெருங்கிப்பேசினார்கள். இதில் ஊர்சுற்றி இலங்கைப்பதிவர்களை நன்கு அறிந்திருந்தமை என்னை ஆச்சரியம் கொள்ளச்செய்தது.
எமது பேச்சுக்கள், கலை, இலக்கியம், எழுத்துக்கள், என்று அரசியல் பக்கமும் வந்தது. பதிவர் அடலேறுவின் ஈழத்தமிழர்களின் பால் உள்ள உணர்வு என்னை தழுவிக்கொள்ளச்செய்தது. கொஞ்சப்பேச்சுக்களிலேயே முன்னைய நாட்களில் நான் நடத்திய இணையம் பற்றியும், அதில் என் ஆக்கங்கள்; பற்றியும் அடலேறு பேசினார், எனக்கு மிக மிக ஆச்சரியமாக இருந்தது. அந்த இணையத்தின் கட்டுரைகளை தாம் பிரிண்ட் ஒவுட் எடுத்து முக்கிமானவர்களுக்கு கொடுத்ததாக சொன்னது, எனக்கிருந்த ஒரு விரக்தி மனப்பான்மையினை அந்த நிமிடத்தில் கலைந்தது.
ஏன் என்றால் குறிப்பிட்ட அந்த இணையத்தளத்தினை நாம் நண்பர்கள் நால்வர் இணைந்து நான்கு வருடங்களுக்கு முன்னர் பல்வேறு இடர்பாடுகள், கஸ்டங்கள், எமக்கான வேலைப்பழுக்களுக்கு இடையில், இரண்டரை அண்டுகளாக நடத்தினோம்.
பின்னர் அது கைவிடப்பட்டது. அந்த கஸ்டங்களுக்கு எந்தப்பயனும் இல்லையே என அந்த நான்குபேரும் இப்பொதும் தொலைபேசியில் உரையாடும்போது ஆதங்கப்பட்டுகொள்வோம்.
அது வீண்போகவில்லை என்பது எனக்கு அடலேறுமூலம் தெரிந்தது.
மேலும் என்னுடன் பேசிய சென்னைப்பதிவர்கள் சிலர், லோஷன், வாத்தியத்தேவன், யோவொயிஸ், அசோக்பரன், தங்கமுகந்தன், டயானா, மருதமூரான் அகியோர் பற்றியும் கேட்டனர்.
முக்கியமாக இலங்கைப்பதிவர் சந்திப்பு பற்றி தாம் ஆர்வமாக வாசித்ததாகவும், ஒளி-ஒலியினைக்கூட பார்த்து, கேட்டதாகவும் தெரிவித்திருந்தனர். இவற்றுக்கு உங்கள் சார்பில் என் நன்றிகளை தெரிவித்துக்கொண்டேன் நண்பர்களே.
கேபிள் சங்கரைப்பற்றி சொல்லியே ஆகவேண்டும், எனக்கும் கேபிள் சங்கரின் அறிமுகம் பதிவர்கள் என்ற முறையில் வந்ததல்ல, குறும்பட இயக்குனர்கள்; என்றவிதத்தில் உருவானது. எக்மோரில் நடந்த நிகழ்வு ஒன்றில் சங்கருடைய விபத்து (அக்ஸிடன்ட்) என்ற குறும்படம் அரங்கேற்றப்பட்டபோது அவரை முதன்முதலில் சந்தித்தேன்.
உண்மையில் அவர் சிறந்த குறும்பட இயக்கனரும்கூட.
அடுத்து நம்ம நண்பர் அதிஷா, எழுத்துக்களைப்போலவே மிக மிக கலகலப்பான ஒருவர். ஓல்லியான அவரது தேகத்தினாலோ என்னவோ, எனது உடல்வாகுவை பாராட்டினார். ஜிம் அதிகம் தூக்கிறிங்களோ??? என்று கேட்டுச்சிரித்தார்.
அடுத்து பதிவர் முரளி கண்ணன் எம்மை அழைத்து தேனீர் விருந்துபசாரம் செய்தார். அங்கிருந்தும் பதிவுகள் பற்றியும், எழுத்துக்கள் பற்றியும், பல எழுத்தாளர்கள் பற்றியும் பேசிவிட்டு, பிரிய மனம் இல்லாமல் பிரிந்து சென்றோம்.
உண்மையில் கொட்டும் மழையில் பல பதிர்வர்களுடன் இதயங்களை பரிமாறிக்கொண்ட ஒரு நாளாகவே நான் அதை கருதகின்றேன்.
20 comments:
நல்ல அருமையான பதிவு நண்பரே.. உங்களுடன் மழையினால் நிறைய பேச முடியவில்லை.. மீண்டும் சந்திப்போம்
சார் எப்படி இருக்கீங்க , நீங்கள்தான் எல்லோரிடமும் நன்றாக பேசினீர்கள் நீண்ட நாள் நண்பர் போல ....
www.saidapet2009.blogspot.com
எனக்கு தெரியாமல் போய்விட்டது
http://beermohamedtamilgroup.blogspot.com
supera eluthi irukkinga sagaa
நன்றாக எழுதியிருக்கிறீர்கள், நண்பா.
உங்களுடன் பேச முடியாமல் போய்விட்டது. மறுபடி சந்திக்கலாம்.
நல்ல பகிர்வு.
வாசு சொன்னது போல் உங்களுடன் பேச முடியாமல் போய்விட்டது. விரைவில் மறுபடி சந்திக்கலாம்.
பதிவர் சந்திப்பை ரசித்தேன். மீண்டும் ஒரு பதிவர் சந்திப்பை இலங்கையில் வெகு சீக்கிரம் எதிர்ப்பார்க்கின்றோம்
நன்றி
பதில்: Cable Sankar
நன்றிகள் அன்புக்குரிய அருமை நண்பர் கேபிள் சங்கர் அவர்களே.
உண்மைதான் அன்று அதிகம்பேச முடியவில்லை..பரவாய் இல்லை பக்கத்தில்த்தான் இருக்கின்றோமே..நிறையப்பேசுவோம்.
தங்கள் இனியவரவுக்கும், பின்னூட்டலுக்கும் நன்றிகள் தோழரே..
பதில்:krishna
வணக்கம் கிருஷ்ணா அவர்களே..
தங்களை மறக்கமுடியுமா? அந்த மௌப்புன்னகையின் அர்தம் இன்னும் எனக்கு நினைவில் உள்ளது.
"செம்புலப் பெயனீர் போல,
அன்புடை நெஞ்சம் தாங்கலப்பதற்கு நீண்டநாள் நண்பனாகத்தான் இருக்கவேண்டுமா என்ன?
வருகைக்கும் உங்கள் பின்னூட்டலுக்கும் மனங்கனிந்த நன்றிகள் நண்பரே...
பதில்:beer mohamed
பறவாய் இல்லை அடுத்ததடவை கண்டிப்பாக சந்திப்போம் முஹமட்.
இன்னும் ஒரு நல்ல நண்பனை சந்திப்பது எனக்கு தள்ளிப்போயுள்ளது. கண்டிப்பாக அடுத்த தடவை சந்திப்போம்.
தங்கள் வருகைக்கு எனது நன்றிகளும், வணக்கங்களும் முஹமட்
பதில்: டம்பி மேவீ
நன்றி மேவீ.
உங்கள் தினசரி வாழ்க்கையும், சந்தோசத்திற்கான உங்கள் வழிமுறைகளும், அட்டகாசம்.
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் நண்பனே..தொடர்ந்தும் இணைந்திருப்போம்....
பதில்:அகநாழிகை"பொன்.வாசுதேவன்
\கண்டிப்பாக சந்தித்து பேசவேண்டும் நண்பர் பொன்.வாசுதேவன் அவர்களே..
உங்கள் எழுத்துக்களை அண்மையில்த்தான் நான் இரசித்தேன். அற்புதமான அதேவேளை நிதானமான ஒரு எழுத்துநடை உங்களுடையது. தொடர்ந்தும் இணைந்திருப்போம்.
தங்கள் வருகைக்கும், பின்னூட்டலுக்கும் எனது நன்றிகள்.
பதில்:butterfly Surya
வணக்கம் நண்பர் சூரியா...உண்மையில் நான் உங்கள் வண்ணத்துப்பூச்சியாரின் இரசிகன், தவறாது வாசிக்கும் வாசகன். உலகசினிமாவில் நிறைய ஆர்வம் உடைய எனக்கு உங்கள் பதிவுகள் ஒரு வழிகாட்டியாக இருந்துள்ளன. கடந்த ஜூலை மாதம் 05ஆம் தேதி தாங்கள் எனது நியூயோர்க் திரைப்பட்டம் பற்றிய விமர்சனத்தில் பின்னூட்டம் ஒன்று இட்டிருந்தீர்கள். உண்மையில் சந்திப்பில் அதிகம் பேசமுடியாது போய்விட்டது, எதிர்வரும் சந்திப்புக்களில் கண்டிப்பாக நிறையப்பேசுவோம். மீண்டும் ஒருமுறை நன்றிகள்.
பதில்:ஜோ.சம்யுக்தா கீர்த்தி
நன்றி சகோதரி சம்யுத்தா கீர்த்தி.
தங்கள் தமிழ் ஆர்வமும், தமிழ் உணர்வும் தங்கள் தளத்திற்கு வந்து தெரிந்துகொண்டேன்.
கண்டிப்பாக விரைவில் யாழ்ப்பாணத்தில் எழுத்தாளர்கள், வலைப்பதிவாளர்கள், கல்வியிலராளர்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஒரு சந்திப்பு ஒன்றை எடுக்க முயற்சித்துவருகின்றோம். அது அனைவருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் எனவும் நினைக்கின்றேன்.
தங்கள் வருகைக்கும் பின்னூட்டலுக்கும் மிக்க நன்றி சகோதரி.
சம்பவத்தை நேரில் பார்த்துபோல உள்ளது. உங்கள் புதிய எழுத்துலக நண்பர்களுக்கும் என் வணக்கங்கள்.
வாங்க பிரதீப்..தங்கள் வாழ்த்துக்கு நன்றி. அப்புறம் நட்பு வட்டம் பெருத்தாலும் தங்களை மறக்கமுடியுமா? எமது இணையத்தின்மூலம் எமக்கு நண்பனான நீங்கள் தொடர்ந்தும் என் வலைப்பதிவுக்கு வந்தமையும், என் வலைப்பதிவுகளின் ஆரம்பத்தில் இருந்தே தொடர்ந்து வரும் உங்களை நான்தான் பாராட்டவேண்டும். இதேவேளை தொடர்ந்தும் என்னோடு பயணிக்கும், நண்பர்களான வினோத், கவிஞர்.எதுகைமோனையான், (அவரையும் அண்மையில் நேரில் சந்தித்தேன்), தோழிகளான உமா மற்றும் அபர்ணா, ஷமிலா ஆகியோருக்கும் என் நன்றிகளை சொல்ல கடமைப்பட்டிருக்கின்றேன்.
ஆமாம் ஜனா,
என் கல்லூரி நாட்களில் " அந்த" வலைப்பதிவின் ஆக்கங்களை என் நண்பன்
நகல் எடுத்து வருவான், நீண்ட நேர பின்னிரவில் உங்களுடைய ஆக்கங்களே
எங்களுக்கு ஒரே திறவுகோலாக நம் ஈழ மண்ணிலிருந்து வரும்.
என்னுடைய கல்லூரி அறை நண்பர்களுக்கு தாங்களை சந்தித்ததாக சொன்னேன் இன்னும் யாரும் நம்ப வில்லை என்ன செய்யட்டும்.
""அந்த இனிப்பு பலகாரதுக்காக"" உங்களுக்கு ஒரு பாராட்டு விழாவே நடத்தலாம்
நன்றிகள் அன்பு நண்பர் அடலேறி. ஒரு செயல்வீரரான உங்கள் நட்பு கிடைத்தமை சந்தோசமே..விரைவிலே உங்களையும் உங்கள் நண்பரையும் சந்திக்கின்றேன்.
ஓ! சிங்காரச் சென்னையிலும் எம்மை விசாரித்தார்களோ! நன்றி ஜனா!
தங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி ஜனா. அடுத்த சந்திப்பில் பார்க்கலாம்.
Post a Comment