இனியாவது வெடிக்கட்டும் திருப்தி மத்தாப்பூக்கள்.
வழமையாக சுத்தமான காற்றினை சுவாசிப்பதற்காகவும், சில புதிய விடயங்கள் பற்றி அமைதியாக இருந்து சிந்திப்பதற்காகவும் நான், காலாற கடற்கரைக்கு சென்று இருந்துவிட்டுவருவது வழமை. ஆனால் நேற்றைய தினம் கடற்கரையில் இவை ஒன்றுமே எனக்கு கிடைக்கவில்லை. காரணம் நேற்று டீவாலியாம்.
அப்பப்பா எத்தனை விதம் விதமான வானவெடிகள், எத்தனை அழகாக மேலே சென்றுவெடித்து நொடியில் காணமற்போகின்றன. ஒன்று இரண்டென்றால் பறவாய் இல்லை பார்த்துக்கொண்டிருக்கும்போது கண்முன்னே எத்தனை ஆயிரம்?? இதை பார்த்துகொண்டிருக்கும்போது, வழமையாக வந்து “அண்ணே சுண்டல் வாங்கிக்கிறிங்களா அண்ணே?” என்று கேட்கும் அந்த சின்னஞ்சிறிய பெண்ணைப்பார்த்ததும் ஏனோ கண்கள் கலங்கின நேற்று.
ஒரு உடை கூட போடமுடியாமல் தெருவோரங்களில்; திரியும் குழந்தைகள் எத்தனை? இந்த வானவேடிக்கையில் ஒரு நிமிடம் சிரிக்கும் மத்தாப்பூவைவிட அந்த ஏழைப்பிள்ளை ஒன்றுக்கு உடுத்த உடைவாங்கிக்கொடுத்து அந்தக்குழந்தையின் சிரிப்பை பாருங்கள், கண்டிப்பாக உங்கள் மனங்களில் 1000 திருப்தி மத்தாப்புக்கள் வெடிக்கும்.
நெஞ்சைபதறவைத்த செய்தி.
அவுஸ்ரேலியாவில் மெல்போர்னில் உள்ள பிரதேச ரெயில்வே ஸ்ரேஷன் ஒன்றில் இடம்பெற்ற 6 மாத ஆண் குழந்தை ஒன்று, எதிர்பார்க்காத கவனயீனத்தால் ரெயில் வந்துகொண்டிருந்த தண்டவாளத்தில் விழுந்த காட்சி பல ஊடகங்களிலும் வெளியாகியிருந்தது. விபத்துக்கள் எதிர்பாராததுதான் என்றாலும் குழந்தைகள் விடயங்களில் மிக கவனமாக அதேவேளை அவதானமாக பெற்றவர்கள் நடந்துகொள்ளவேண்டும் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு படிப்பினையாக இருக்கும்.
கலக்கியது கானா
எகிப்தின் கெய்ரோவில் இடம்பெற்ற குஐகுயு இருபது வயதிற்குட்பட்ட உலக காற்பந்தாட்டப்போட்டிகளின் இறுதிப்போட்டிகள் கடந்த 16ஆம் திகதி பிரேஸில் மற்றும் கானா அணிகளுக்கிடையில் இடம்பெற்றது. உண்மையில் மிகவும். விறுவிறுப்பாகவும் சுவாரகசியம் மிக்கதாகவும் இந்தப்போட்டிகள் அமைந்தன. ஆட்டத்தில் இரண்டு அணிகளாலும் கோல் எதனையும் போடமுடியவில்லை. அந்த அளவில் ஆட்டம் மிகவும் இறுக்கமாக அமைந்திருந்தது.
இதன்காரணத்தினால் ஆட்டம் பனால்ட்டி ஷ_ட் அவுட் முறைக்கு சென்றது. பிரேஸில் அணியின் நட்சத்திரவீரர் மெய்க்கான் எல்லாப்போட்டிகளிலும் ஒரு கலக்கு கலக்கியிருந்தாலும்;, இந்தப்போட்டியில் பலனல்டி கோலில் சொதப்பியதால் பிரேஸில் தோல்வியடையவேண்டியதாயிற்று. முக்கிமான விடயம் என்னவென்றால் சழைக்காமல் விளையாடிய கானா அணி, மிக அதீத திறமைகளை வெளிக்காட்டியது.
ஆட்டத்தில் 37ஆவது நிமிடத்திலேயே கானா அணியின் வீரர் டானியல் அடேடோ, ரிவ்ரியால் ரெட்கார்ட் காட்டப்பட்டு அனுப்பட்ட நிலையில் 10 வீரர்களே விளையாட்டு மைதானத்தில் விளையாடினர் என்பது குறிப்பிடத்தக்கது. ஐரோப்பிய, தென் அமெரிக்க நாடுகள் அல்லாத ஒரு ஆபிரிக்க நாடு பிபாவின் 20 வயதிற்குட்பட்ட உலக சம்பியன் ஆகியுள்ளது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது
ரீவைண்ட்
சுவாரகசியமாக டி.வி.டியில் படம் பார்த்துக்கொண்டிருக்கின்றீர்கள். உங்கள் கையில் உள்ள ரிமோட்டினால் உங்களுக்கு பிடித்த கட்டங்கள் கடந்துபோனாலும் டி.வி.டி பிளேயரை கட்டுப்படுத்தி ரீவைண்ட் செய்து மீண்டும் அந்த காட்சியை பார்க்க நீங்கள் கொடுக்கும் அந்த கொமாண்ட், டி.வீ.டி பீளேயரைக்கடந்து உங்கள் சுற்றுச்சூழலையே ரிவைன்ட் பண்ணினால்??? ஒரு சின்ன கற்பனை!! பாருங்கள்….
எத்தனைநாளுக்குத்தான் எங்களை ஏமாற்றப்போறீர்கள்???
கூரையில ஏறி கோழி பிடிக்கத்தெரியாத ஒருவன், எங்கேயோ ஏறி வைகுண்டம் போகமுயன்றானாம் என்ற கதைக்கு தக்கதாகவே தமிழ்நாட்டில் தற்போது ஆழுந்தரப்பு ஈழத்தமிழர் விவகாரத்தில் நடந்துகொள்ளும் விதங்கள் உள்ளன. முதலில் தமிழ்நாட்டு மீனவர்கள் சிறி லங்கா கடற்படையினால் தாக்கப்படும் சம்பவங்களையே தடுத்துநிறுத்த திராணியற்ற இவர்கள் ஈழத்தமிழர்களின் துயரத்தை துடைத்துவிடுவார்களா? ஈழத்தமிழர்கள் ஒன்றும் மடையர்கள் அல்லர் என்பது இன்னும் இந்தியாவுக்கும்.தமிழ்நாட்டிற்கும் சரியாகப்புரியவில்லை.
ஒருவனை சிரித்துக்கொண்டே ஒருதரம் முதுகில் குத்தலாம், ஆனால் ஒவ்வொருநாளும் குத்தும் இந்த வஞ்சகம் அருவருக்கத்தக்கது. மரீனாவில் ஒருவர் உண்ணாவிரதம் இருந்த அன்றுதான் வன்னியில் அதிகமான தமிழர்கள் கொல்லப்பட்டார்கள், அனால் சொல்லப்பட்டது இவரது உண்ணாவிரதத்தால் தாக்குதல் நின்றதாக, இப்போது ஐ.நா செல்லிக்கேட்காத, அமெரிக்கா சொல்லிக்கேட்காத, இங்கிலாந்து, பிரான்ஸ் சொல்லிக்கேட்காத சிறி லங்கா அரசு இங்கிருந்போன ஒன்றுக்கும் ஆகாத தூதுக்குழுசொல்லி மக்களை தங்கள் சொந்த இடத்திற்கு அனுப்ப தொடங்கிவிட்டார்களாம்!!! இதைவிட பெரிய கொடுமை இருக்குமா சரவணா????
சொற்களை பிரித்து சேர்த்து எழுதல்
தமிழில் சொற்களை சேர்த்து பிரித்து சரியான வரியில் சரியாக எழுதவேண்டும் இல்லை என்றால் சொல்லவந்த கருத்தினையே அப்படியே புரட்டிபோட்டுவிடும். இங்கே சில… சொல்லவந்த செய்திகளையும் சொல்லப்பட்ட விதங்களையும் பாருங்கள்.
பாவித்த பெண்கள் ஸ்கூட்டி, உடன்விற்பனைக்கு உண்டு
பாவித்த பெண்கள், ஸ்கூட்டியுடன் விற்பனைக்குண்டு
பிரமணர்கள் சாப்பிடுமிடம்
பிரமணர் கள் சாப்பிடுமிடம்
கணபதிபிள்ளை தாச்சிப்போட்டியில் வெற்றிபெற்றார்
கணபதி பிள்ளைதாச்சிப்போட்டியில் வெற்றிபெற்றார்.
12 comments:
தங்கள் ஞாயிறு ஹொக்ரெயில் பார்ட்டியில் கலந்துகொள்ள ஆவலுடன் ஓடிவந்தேன். ஏமாற்றவில்லை நீங்கள் தேவையானதைவிட அதிகம் ஊற்றிக்கொடுத்துள்ளீர்கள்....
//ஒருவனை சிரித்துக்கொண்டே ஒருதரம் முதுகில் குத்தலாம், ஆனால் ஒவ்வொருநாளும் குத்தும் இந்த வஞ்சகம் அருவருக்கத்தக்கது.//
நிதர்சனமான வசனங்கள்..
குழந்தை ரயிலின் முன் விழும்காட்சி, மனதை பதறவைக்கும் நிகழ்வே. கண்டிப்பாக எதிர்பார்க்காத நிகழ்வு என்றாலும்கூட குழந்தைகள் விடயத்தில் மிகுந்த அவதானம் தேவை என்று நீங்கள் தெரிவித்த கருத்து உண்மையானதே.
மற்றும் கானா - பிரேஸில் அணிகளின் மோதல் ஈ.எஸ்.பி.என்னில் ஒளிபரப்பாகியும் பார்க்கமுடியவில்லை.மீள் ஒளிபரப்பு போட்டால்த்தான் பார்க்கமுடியும். ஹொக்ரெயில் கலக்கல் சகா..
ஹொக்ரெய்ல் அருமை. கலந்து கட்டி அடித்து இருக்கிறீர்கள்.
எப்ப எங்களுக்கு ஹெக்டேயில் கொடுக்க போறியள்..?
செய்திகளும் கருத்தும் அருமை..
பதில்:Vinoth
நன்றி வினோத் ஒவ்வொரு ஞாயிறும் மறந்துபோகாமல் வாருங்கள். மேலும் மேலும் போதைகூட அவன செய்கின்றேன்.
பதில்:திறனாளன்
நன்றி திறனாளன். கண்டிப்பாக தொடர்ந்துவந்து திறனாயுங்கள்...
பதில்:Nivetha
நன்றி நிவேதா. பிஞ்சுமலர் ஒன்று எந்தவிதத்திலும் உதிர்ந்தாலும் பார்ப்பது கொடுமையானதே. அந்த தாயின் மனம் மட்டும் அல்ல, இந்தக்காட்சியால் உலகின் கோடி உள்ளங்கள் பதறியிருக்கும்.
பதில்:எவனோ ஒருவன்
நன்றி நண்பரே..மறந்தபோகாமல் ஒவ்வொரு ஞாயிம் வந்து சியேஸ் சொல்லிவிடுங்கள்...
பதில்:Cable Sankar
இது தான் நண்பரே ஹொக்ரெயில்...ஆஹா..உண்மையான ஹொக்ரெயில் கேட்கின்றீர்களா???அதனால என்ன கொடுத்தால்போச்சு! விரைவாக..
பதில்:butterfly Surya
நன்றி நண்பர் வண்ணத்துப்பூச்சியாரே...விரைவில் நேரில் சந்திப்போம் பலவிடங்கள் பேசவேண்டி உள்ளது.
Post a Comment