
சிவப்பு நிறத்தில் உண்டு புரட்சி
கண் சிவந்ததனால் மண் சிவப்பானதன்
காரணங்களும் புரட்சிகளே..
புரட்சிகள் இன்றி ஒரு மலர்ச்சியும் இல்லை
புரட்சிகள் தோற்றன என்ற
அயர்ச்சிகளும் இங்கில்லை..

புரட்சிகள்
இவனால், இப்படி, இங்கு வரும் என
இறையோனும் கூறல் இயலாது
ஆர்ஜென்ரீனாவில் பூத்தமலர்
கியூபா, பொலிவியா,கொங்கோ எனத்தாண்டி
மணம்பரப்பும் என்பதுவும்
யாருமே கணித்தில்லை

புயலானவன்,
பாய்வதில் புலியானவன்
மனமோ மலரானவன்
எங்கே அடக்குமுறையோ அங்கே
கொடும் புயலானவன்
மருத்துவம் படித்து, மார்க்ஸியமாக வாழ்ந்தவன்
இவன் புரட்சியின் செங்கதிர் சே..

எனஸ்ரோ குவேரா டி லா செர்னா
என்ற குழந்தை 1928இல்
ஜூன் வந்து 14ஆம் நாள் பிறந்தபோது
ஏந்த தேவதையும் வந்து ஆரூடம்கூறவில்லை
எந்த நட்சத்திரமும் பிராசிக்கவில்லை –ஆனால்
கண்டிப்பாக அன்று பூத்த மலர்கள் எல்லாம்
இவன் பிஞ்சுக்கால்களை மானசீகமாக
முத்தமிட்டிருக்கும்…

உடல் பலவீனப்பட்டாலும்
உள்ளத்தால் பலமாகி அதையும் வென்றான்
இளமையிலேயே புத்தன்கண்ட காட்சிகள் கண்டு
இவனும் மனமொடிந்தான்
ஆனால் வெறுப்புற்று போதியின் கீழ்
ஞானம் பெற்றுவதே ஞாலம் என இவன் இல்லை
இதை மாற்றவேண்டும் என்று ஞானம் கண்டான்
தன்னை அர்ப்பணித்தான், செயலில் இறங்கினான்
புரட்சி என்ற சொல்லின் அர்த்தத்தின் உருத்தை
உலகம் கண்டது இவனின் உருவத்தில்

இவன் தாய்க்குமட்டும் இவன் பிறப்பின்
இரகசியங்கள் தெரிந்ததோ?
எப்படி ஊகித்துபொருத்தமாக சே..என்று
உற்ற பெயர் வைத்தாள்?
ஆர்ஜென்ரீன மொழியில் சே என்றால் தோழனாம்.
இவன் உலகத்தின் தோழனாயிற்றே!
காஸ்ரோ, சே என்ற சிகரங்களின்
சந்திப்பின் பின்னர் உலகம்
உற்சாகத்துடன் சூழல ஆரம்பித்ததோ என்னமோ!!

பாடிஸ்டா, சன்ரோ கிளேரோ, ஹவானா
என எத்தனை களமுனைகள் இவன் வீரத்தை
கண்டு சிலித்து இவன் பாதங்களை முத்தமிட்டன?
கரந்தடிப்போர்முறை பற்றிய இவனது புத்தகம்
பின்னாளில் வந்த புரட்சி இயக்கங்களுக்கு ஒரு
ஊன்றுகோலகத்தானே இருந்தது..
இவனே ஒரு எழுத்து, இவனே ஒரு பிரபஞ்சம்
இவனே ஒரு சிரித்திரம், இவனே அதுவேயாகி வழ்ந்தவன்
இவனைப்பற்றி வேறு எழுத என்விரல்களுக்கு
சக்தியில்லை.
ஆனால் நம்பினால் நம்புங்கள்
நான் இவனை பார்த்திருக்கின்றேன்.
ஆம்…ஆர்ஜென்ரீன ரொஸாரியோ என்ற இடத்திற்கும்
ஈழத்தில் ஊரெழுவிற்கும் தொடர்பு உள்ளதாகவே
நான் கருதுகின்றேன்…
(1967 ஒக்ரோபர் 8ஆம் நாள் பொலிவியப்படைகளால் சே உட்பட 17 முக்கிய வீரர்கள் சுற்றிவளைப்பு, பொறிக்குள் அகப்பட்டனர். இதில் சே காயமடைகின்றார்.
இதேநாள் (09.10.1967) சே கொலை செய்யப்பட்டார்)
13 comments:
//புயலானவன்,
பாய்வதில் புலியானவன்
மனமோ மலரானவன்//
இதற்கு மேல் சே-வை பற்றி சொல்லவும் வேண்டுமோ.
அநீதி கண்டு வெகுண்டு எழுந்தால் நாம் நண்பர்கள் என்ற சொன்ன தன்னிகரில்லா தலைவன்.மிக அவசியமான பதிவு நண்பரே. வாழ்த்துக்கள்.
//ஆர்ஜென்ரீன ரொஸாரியோ என்ற இடத்திற்கும்
ஈழத்தில் ஊரெழுவிற்கும் தொடர்பு உள்ளதாகவே
நான் கருதுகின்றேன்…//
கருத்த கொஞ்சம் விளக்கி சொல்லுங்க நண்பா.
ரொஸாரியோ சே சேகுவாரா பிறந்த இடம். அதேபோல ஊரெழு நான் நினைக்கும்படி தியாகதீபம் திலீபன் அவர்கள் பிறந்த ஊர். இரண்டுபேருமே மருத்துவம் படித்தவர்கள், சமவுடமை பொருளாதாரம், சோசலிசம் என்பவற்றின்மீது காதல் கொண்டவர்கள், பேச்சுடன் மட்டுப்படாத செயல்வீரர்கள், பிறருக்காக தம்மை அர்ப்பணிக்க தயங்காதவர்கள், எனவே தாங்களும் நீங்கள் கண்ணால் கண்ட சே குவாராவாக திலீபனைத்தான் சொல்லவருகின்றீர்கள் அல்லவா ஜனா! அது முற்றிலும் சரியானதே.
பதில்: அடலேறு
நன்றி நண்பர் அடலேறு. தங்கள் கேள்விக்கான பதிலை நமது நண்பர் மருத்துவர் பிரதீப் அவர்கள் தந்துள்ளார். ஆம் பிரதீப் சொன்னதுதான் அதன் அர்த்தம்.
பதில்:Pradeep
நன்றி பிரதீப்.
இன்றுதான் தாங்கள் ஒரு மருத்துவர் என்பதை நான் அறிந்துகொண்டேன். தங்கள் பின்னூட்டங்களே பல தரவுகளுடன் வரும். அவற்றை வாசித்து நான் பரவசமாகியவை பல பொழுதுகள். தங்களுக்கு வேலைப்பழு அதிகமாக இருக்கும் என்பதை நான் அறிவேன். எனினும் ஓய்வுநேரங்களில் தாங்களும் ஒரு வலைப்பதிவை எழுதலாமே? தங்கள் எழுத்துக்கள் மிகவும் ஆழமானவை இவை வெறும் புகழ்ச்சிஇல்லை.
காலில் சின்ன அடி பட்டாலே ஓய்வெடுக்கும் எனக்கு, கொடிய ஆஸ்துமாவிலும், செல்லும் பாதையில் தொடர்ந்து சென்ற சே நல்ல பாடம். அவருடைய வாழ்க்கையைப் படித்ததும் ஆடிப்போய்விட்டேன். எவ்வளவு மனதிடம்!
ஞாபகப்படுத்திவிட்டீர்கள்.
பதில்:எவனோ ஒருவன்
உண்மைதான் எவனோ ஒருவன்.
மனத்திடமும், கொண்ட கொள்கை மாறாத உறுதியும் உடையவர்களால்த்தான் இதை சாதிக்கமுடியும்.
அருமை,அருமை, அருமை, என்னைப்பொறுத்தவரை முன்னவனை பின்னவன் முந்திவிட்டான். பாராட்டுக்கள் ஜனா.
டாக்டர்.சே ! உண்மையான புரட்சி நாயகன்!!
பதில்:Sivakaran
நன்றி சிவகரன். தொடர்ந்தும் இணைந்திருங்கள்.
பதில்:தேவன் மாயம்
நன்றி தேவன் மாயம். தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.
அந்த மாபெரும் புரட்சி நாயகனுக்கு வீர வணக்கங்கள்.
ஜனா, சே வின் வாழ்க்கை பின்னணியை கொண்ட Motor Cycle Diaries திரைப்படம் பார்த்தீர்களா..??
அவசியம் பார்க்கவும்.
தங்கள் வருகைக்கு நன்றி என் மனம்கனிந்த வல்வரவுகள் உரித்தாக...
Motor Cycle Diaries திரைப்படம் கேள்விபட்டிருக்கின்றேன் ஆனால் பார்க்க கிடைக்கவில்லை.
நிச்சயம் கண்டிப்பாக பார்ப்பேன்.
Post a Comment