Thursday, October 29, 2009

ஹோலிவூட்டை கலக்கப்போகும் “The Expendables”


ஹோலிவூட் திரைப்படங்களின் இரசிகரா நீங்கள்? அப்படி என்றால் அடுத்த ஆண்டு (2010) ஆகஸ்ட் மாதம் 20 ஆம் தேதிவரை நீங்கள் பற்களைக்கடித்துக்கொண்டிருந்து காத்திருக்கவே வேண்டும்.
ஏன் என்றால் உலக திரைப்பட பிரியர்களின் கனவுகளில் மட்டுமே நடக்கும் அதிசயம் ஹோலிவூட்டை கலக்கப்போகும் “The Expendables” திரைப்படம்மூலம் நிறைவேறப்போகின்றது.


ஹாலிவூட் அக்ஸன் திரைப்படங்களை இரசித்து பார்ப்பவர்களின் கனவு நாயகர்களாக ஆனோல்ட் சிவாஷினேகர், ஷில்வஸ்ரர் ஸ்ராலோன், ஜெட் லீ, ஆகியோர் மறக்கமுடியாத அக்ஸன் சிகரங்களாக உள்ளனர் என்பது எவரும் மறுக்கமுடியாத உண்மை ஆகும். இந்த நிலையில் இவர்கள் மூவரும் இணைந்து நடித்தால் அது இரசிகர்களுக்கு பெரு விருந்துதானே.
இந்த விருந்து போதாதென்று மேலும் ஹோலிவூட் முன்னணி நட்சத்திரங்களான மிக்கி ரொக்கி, ஜோன்ஸன் ஷதாம், டொல்ப் டன்ஹிரன், எரிக் ரொபேட்ஸ், ரெர்றி கிறியூஸ், ஸ்ரீவ் ஒஸ்ரின் ஆகியோரும் இணைந்து கலக்கினால் இரசிகர்களின் களிப்புக்கும், கொண்டாட்டத்திற்கும் அர்த்தம் இல்லையா என்ன?


அறுபதுகள் கடந்தும் இன்றும் உடல்வாகுவை முப்பதுகள் போலவே கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் ஷில்வஸ்ரர் ஸ்ராலோனே இந்த திரைப்படத்தை இயக்குவதும், தயாரிப்பதும் மேலும் ஒரு சிறப்பான விடயமாகும் என்பதுடன் இந்த திரைப்படத்தின் பிராதான பாத்தித்தில் அவரே நடித்தும் வருகின்றார்.
ஷில்வஸ்ரர் ஸ்ராலோன் தலைமையிலான அசைக்கமுடியாத கில்லாடி குழுவொன்று தென்னமெரிக்காவில் நடத்தும் ஒப்பரேசன் நடவடிக்கையினை மையமாக வைத்தே இந்த திரைப்படம் உருவாகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த திரைப்படத்தின் அந்த நடிகர்கள்குழுவானது ஒரு கனவு அணி எனவும், இதுபோல இந்த நூற்றாண்டில் திரைப்படங்கள் வந்ததில்லை என பல பத்திரிகைகள் இப்போதே “The Expendables” இன் புகழ்பாட ஆரம்பித்துள்ளன.
இந்த திரைப்படத்திற்காக நடிகர்களின் சம்பளங்கள், மிகப்பிரமாண்டமான காட்சிகள் என்பவற்றிற்காக பல மில்லியன் அமெரிக்க டொலர்கள் கொட்டப்படுவதாகவும் அறியமுடிகின்றது. இதேவேளை பல திரையரங்குகள் இந்த திரைப்பட படப்பிடிப்பு ஆரம்பிக்கப்பட்ட உடனேயே தங்கள் திரையரங்கங்களில் இந்த படத்தை வெளியிடுவதற்கு போட்டி போட்டுக்கொண்டதாகவும் பத்திரிகை செய்திகள் குறிப்பிட்டு காட்டுகின்றன.


இருந்தபோதிலும் ஷில்வஸ்ரர் மீண்டும் 80ஆம் ஆண்டுக்கால பாணியில் ஒரு திரைப்படத்தை எடுத்துவருவதாகவும், இதில் பல நடிகர்கள் உள்ளதாக விளம்பரப்படுத்தப்பட்டாலும், இங்கு சில்வஸ்டர் மற்றும் ஜோன்ஸன் ஷதாம் அகியோரின் ஆதிக்கமே அதிகமாக இருக்கும் எனவும், 80ஆம் ஆண்டுகால இரசனைகள் தற்போது முற்றிலுமாக மாறிவிட்டதை ஷில்வஸ்டர் மறந்துவிட்டார் எனவும் இது முற்றுமுழுதான பக்கா வசூலைக்குவிப்பதற்கான ஒரு திட்டமே எனவும் விமர்சித்துள்ள பத்திரிகைகளும் உண்டு.

இதேவேளை “The Expendables” என்ற தலைப்புடன். 1989ஆம் ஆண்டு ஒரு திரைப்படமும், 2000 ஆம் ஆண்டு ஒருதிரைப்படமும் வெளியாகியுள்ளன. எது எப்படி இருந்தாலும் இந்த “The Expendables” (2010) உலக மட்டத்தில் பாரியதொரு எதிர்பார்;பினை உருவாக்கியுள்ளது என்பது மறுக்கமுடியாத உண்மைமே.

பிரமிக்கவைக்கும் “The Expendables” திரைப்படத்தின் ஸ்ரில்கள் சில….
12 comments:

Abshara said...

very good Information Sir,
I think This first in Tamil.

எவனோ ஒருவன் (எ) அதி பிரதாபன் said...

உண்மைதான் ஜனா, பற்களைக் கடித்துக்கொண்டு காத்திருக்கிறோம்.

இதற்கு முன்பு 300 படத்தின் ட்ரெய்லர் பார்த்து இதே போல காத்துக்கிடந்தோம்.

Ragavan said...

நிஜமாகவே பார்க்கவேண்டும் என்ற ஆவலை கிளப்பியுள்ளது இந்த திரைப்படம் பற்றிய தகவல். சிறப்பான ஒரு பதிவு, திரைப்படம் பற்றிய தகவலுக்கு நன்றிகள்.

சயந்தன் said...

இப்படி நம்ம தமிழ்த்திரைப்பட ஹீரோக்கள் இணைந்து நடிப்பார்களா??? ஹி..ஹி...ஹி..

எவனோ ஒருவன் (எ) அதி பிரதாபன் said...

//சயந்தன் said...
இப்படி நம்ம தமிழ்த்திரைப்பட ஹீரோக்கள் இணைந்து நடிப்பார்களா???//

இந்த சந்தேகம் என்னில் கபி குஷி கபி கம் பார்த்த நாளிலிருந்தே இருக்கிறது ஜனா.

ஹாலிவுட், பாலிவுட்டில் அமையும் இந்தக் கூட்டு கோலிவுட்டில் மட்டும் ஏன் அமைவதில்லை?

Jana said...

Abshara said...
very good Information Sir,
I think This first in Tamil.//

Thank you Abshara

Jana said...

எவனோ ஒருவன் (எ) அதி பிரதாபன் said...

நன்றி எவனோ ஒருவன் அதி பிரதாபன் கண்டிப்பாக இணைந்தே இந்தப்படத்தை பார்ப்போம்.

Jana said...

Ragavan said...

நன்றி ராகவன். தொடர்ந்துவாருங்கள்

Jana said...

சயந்தன் said...

ஏன் சயந்தன் உங்களுக்கு இந்த விபரீத ஆசை???

Jana said...

எவனோ ஒருவன் (எ) அதி பிரதாபன் //

கமல் ஹாசன் -ரஜினிகாந்த் என்ற நண்பர்களின் பின்னர் யாராவது நண்பர்கள் உள்ளனரா என்ன?

எவனோ ஒருவன் (எ) அதி பிரதாபன் said...

சிறந்த நண்பர்களாக இருக்கலாம்... ஒரே படத்தில் நடிக்க முடியுமா?

அஜீத், விஜய், சூர்யா, விக்ரம் இவர்களில் யாராவது மூன்று பேர் சேர்ந்து ஒரே படத்தில் நடிக்க முடியுமா?

கிறுக்கல் கிறுக்கன் said...

இங்கே முதல் படம் வெளியாகும் முன்பே அகில இந்திய ரசிகர்மன்றம் ஆரம்பித்து ஆப்படித்துவிடுகிறார்கள்.

அப்படி சேர்ந்து நடித்தாலும் எங்க ஆளு நடித்ததால் தான் படம் ஓடுகிறது என்று அடித்துக்கொள்வார்களே

LinkWithin

Related Posts with Thumbnails