Saturday, October 31, 2009

2012 இன் பயங்கரம்?


2012 இல் உலகம் அழிந்துவிடும், ஒரு ஈ கூட மிஞ்சாது, எல்லாப்பயலுகளும் செத்துப்போகப்போறீங்களடா, அதுவரை ஆடுங்கள் என்று ஆளாளுக்கு அள்ளி விட்டுக்கொண்டிருக்கின்றார்கள். இதல் உண்மை எது, பொய் எது என்று அந்த வருடம்தான் பதிலளிக்கவேண்டும்.
இது தொடர்பாக பல உலக சஞ்சிகைகளும், இணையதளங்களும் தங்கள் பாட்டிற்கு பீதியை கிளப்பிக்கொண்டிக்கின்றார்கள். இதில் உலகில் அனேகமானோர் விஜயம் செய்யும் இணையம் ஒன்று “2012 இல் உலகத்தின் முடிவு” என்ற பெயரில் குறிப்பிட்ட தினம் வரும் தினத்தில் இருந்து ஒவ்வொரு செக்கனாக கவுண்டவுண்வேறு போட்டுக்கொண்டிருக்கின்றது.


இந்த நிலையில் உலகமே உன்னிப்பாக பார்க்கும் ஒருவிடயத்தை ஹாலிவூட் உலகம் சும்மா பார்த்துக்கொண்டிருக்குமா? அனைவரும் எதிர்பார்த்ததுபோலவே 2012 என்ற பெயரில் மிகப்பிரமாண்டமாக உலக முடிவினை காட்ட எடுக்கப்பட்ட படம் எதிர்வரும் நவம்பர் 13ஆம் நாள் வெளியாகவுள்ளது.
இந்த திரைப்படம் பற்றியும் பல இணையங்கள், பல சஞ்சிகைகள், பல வலைப்பதிவுகளில் தகவல்கள் வந்துவிட்டதால், மீண்டும் அதை சொல்லவேண்டிய தேவை இல்லை. இருந்தபோதிலும் நவம்பர் 13ஆம் நாள் உங்களுக்கும் ஆர்வத்தை உருவாக்கவேண்டாமா? அதற்காகத்தான் இந்தப்பதிவு.


அந்த திரைப்படத்தின் ஸ்டில்களை அடுக்கிவிடுகின்றேன். திரையில் அந்தக்காட்சிகளை கண்டிப்பாக பாருங்கள், பார்ப்போம்..
“டே ஆவ்ரர் ருமாறோ” என்ற திரைப்படம் வெளிவந்து அதை பார்த்துவிட்டு, இப்படி எல்லாம் தண்ணீர் வந்து ஊர்மனைகளை அழிக்குமா என்ன? என்று ஏழனம் செய்தவர்கள் எல்லாம் 2004ஆம் ஆண்டு வாயை முடிக்கொண்டோம்; அல்லவா?
எதற்கும் 2012 திரைப்படத்தையும் பார்த்துவைப்போமே..11 comments:

ஊர்சுற்றி said...

இந்த படத்தின் டிரெயிலர்கள் மற்றும் சிறப்பு ஐந்து நிமிட வீடியோ பார்த்தாயிற்று. நன்றாக வந்திருக்கிறது. திரைக்கதை எப்படி இருக்குமோ! பார்க்கலாம். சில காட்சிகளின் நம்பகத்தன்மை நீங்கள் சொன்னது போலவே இருக்கிறது.

//இப்படி எல்லாம் தண்ணீர் வந்து ஊர்மனைகளை அழிக்குமா என்ன? என்று ஏழனம் செய்தவர்கள் எல்லாம் 2004ஆம் ஆண்டு வாயை முடிக்கொண்டோம்; அல்லவா?//

கவிஞர். எதுகைமோனையான் said...

அப்படி எல்லாம் ஒன்றும் நடக்காது என்றசாரமாக எழுதிப்புட்டு, கடைசியில் பீதியை கிழப்பி விட்டுவிட்டீங்களே சகா..

Vinoth said...

கண்டிப்பாக பார்க்கவேண்டிய படம். தகவலுக்கு நன்றி

எவனோ ஒருவன் (எ) அதி பிரதாபன் said...

இதே நேரத்தில் பாருங்கள், 2022 என்ற படம் ஒன்று வந்து குழப்பத்தை உண்டு பண்ணுகிறது.

Jeevana said...

Intha Neeram intha padam Varuvathu Anaivarin aarvathaium kooddiullathu.
kandippa Paarkkaveendiaya padamthaan.

Jana said...

ஊர்சுற்றி

வருகைக்கும் பின்னூட்டலுக்கும் நன்றிகள் ஊர்சுற்றி. தாங்களும் 2012 பற்றி எழுதியுள்ளிர்கள் அல்லவா? ம்ம்ம்...இந்த திரைப்படத்தையும் பார்ப்போம்...

Jana said...

கவிஞர். எதுகைமோனையான் said...

இயற்கையில் நடக்காது என்று எதையும் திட்டவட்டமாக சொல்லமுடியாதுதானே கவிஞரே...

Jana said...

Vinoth said...

நன்றி விநோத். கண்டிப்பாக பாருங்கள்

Jana said...

எவனோ ஒருவன் (எ) அதி பிரதாபன்

அது அடுத்தவருடம்தானே வரவுள்ளது. அதற்குள் இதை பார்த்துமுடித்துவிடலாம்.

Jana said...

Jeevana said...

நன்றி ஜீவனா

எவனோ ஒருவன் (எ) அதி பிரதாபன் said...

2022 இப்போது ஓடிக்கொண்டிருக்கிறது என நினைக்கிறேன், செய்தித்தாள்களில் விளம்பரம் வருகிறது.

http://www.enjoythaimovies.com/index.php/2009/2022-tsunami

LinkWithin

Related Posts with Thumbnails