அச்சுவலை பதிவுகளாக இன்று உருப்பெற்றிருக்கும் வலைப்பதிவுகள், அச்சுப்பதிப்புகளாக வெளிவருவது பாராட்டப்படவேண்டியதே. ஏனென்றால் அச்சுவலை ஊடகங்கள் உயர்மட்ட வகுப்பினரையே சென்றடையக்கூடியதாக இருக்கும். அத்தோடு இணையத்தை பயன்படுத்துபவர்கள் பலர் என்றாலும் வலைப்பதிவுகளை ஆறுதலாக பார்ப்பதற்கு சொந்தமாக இணைய இணைப்பு உள்ளவர்களால்த்தான் முடியும்.
எனவே இந்தக்கால கட்டத்தில் அச்சுவலை பதிவர்களின் எழுத்துக்கள் அனைத்து மட்டத்தினரிடமும் சென்றடைய அச்சு ஊடகங்களின் பங்கு மிக முக்கியமானதொன்றாகவே இருக்கின்றது. அந்த வகையில் வலைப்பதிவர்களின் சிறந்த ஆக்கங்களை தெரிந்தெடுத்து அதை சகல தரப்பினருக்கும் அறிமுகம் செய்து வைக்கும் பணியில் இருக்கிறம் சஞ்சிகை, வலைப்பதிவர்களின் பின்னால் நான் இருக்கின்றேன் என்று இயங்குகின்றது. இதற்காக நாங்களும் இருக்கிறமை பாராட்டிறம்.
ராணி ஜோசப்பிற்கு அஞ்சலிகள்.
ஒரு பாடகியாக, ஒரு மேடைக்கலைஞராக, ஒரு தொலைக்காட்சி, நாடக நடிகையாக, ஒரு அறிவிப்பாளராக என பல பாத்திரங்களை ஒரே நேரத்தில், தான் சென்ற அத்தனை துறைகளிலும் தனது மென்மையான அணுகுமுறையால் முத்திரை பதித்தவர் ராணி ஜோசப். 1980 களில் இருந்து கலைத்துறையில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டிருந்தவர் ராணி ஜோசப். இலங்கையின் பகழ்பெற்ற இசைக்குழுவான அப்ஸராசில் இவர் ஒரு பாடகியாக அறிமுகமாகி பலராலும் பாராட்டப்பட்ட பாடகியாக உருவெடுத்தார்.
1999ஆம் ஆண்டில் கொழும்பில் உடகப்பயிற்சி கற்கை நெறி ஒன்றில் இவர் எனக்கு அறிமுகமானார். அத்தனை பிரபல்யமான ஒரு நபராக இருந்தாலும் எப்போதும் குழந்தைகள் போல மிக மென்மையாகவும் பண்பாகவும், அவர் பேசும் சுபாவம். நாங்கள் பேசுபவற்றைக்கூட மிக நிதானமாக ஆளமாக உள்வாங்கிக்கொள்ளும், அவரது பெருந்தன்மைகள் என்பன.. அன்றே என்னை அதிசயிக்கவைத்தன. அந்தவேளைகளில் நண்பர்களின் உசுப்பேற்றலால் நான் முன்னின்று பல விவாதங்கள், பேச்சு மற்றும் பேட்டி நிகழ்ச்சிகளை நடத்தும்போது முதலாவது நபராக ஓடிவந்து பாராட்டும் அந்தப்பண்புகள் என, அவருடன் பழகிய ஒரு வருடத்தினுள் அவர் மறக்கப்படாத நபராகிவிட்டார். எப்போதும் தெய்வபக்தி மிக்கவராகவும், குழந்தைகளிடம் அதீத அன்பு கொண்டவராகவும், ஒரு கவிஞையாகவும் அவர் இருந்தார்.
புற்றுநோயின் காரணமாக கடந்த 22.10.2009 அன்று அவர் இயற்கையுடன் ஒன்றிப்போனதாக அறிந்து மிகவும் மனம் வருந்தினேன். என்பாசத்திற்குரிய, நான் மதிககும் பலரை இந்தப்புற்றுநோய் காவுகொண்டுவிடுகின்றது.
பசி
வாழ்வியல் மறுதலிக்கப்பட்ட நிலத்தில், அகோரமானதொரு சூழலில் தனிமையில் வாழ்ந்து, முரணான வாழ்வியலுடன் மல்லுக்கட்டி நிற்கும் ஒரு சிறுவனின் பசி இது.
நான்கு பதிவர்களின் நான்குமணிநேர சந்திப்பு
கவிதைகளால் சுவாசித்து. கவிதைகளால் வாழ்ந்து. கவிதைகளுடன் ஜீவிக்கும் பதிவர் நிலா இரசிகன், சிந்தனைகளைக்கிளறிவிடும் கவிதைகளாலும், இலக்கிய கண்ணோட்ட பதிவுகளாலும், திக்குமுக்காடச்செய்யும், யுத் விகடன் புகழ் பதிவர் அடலேறு. எவனோ ஒருவன் என்று பெயரை மட்டும் வைத்துவிட்டு எழுத்துக்களால் எல்லோருக்கும் அறிமுகமான பதிவர் எவனோ ஒருவன், மற்றும் இவற்றை வலையேற்றும் சாத்ஜாத் இந்த ஜனாவும் சென்னை கிழக்கு கடற்கரைச்சாலையில் கடற்கரையில் சந்தித்து நான்கு மணிநேரம் உரையாடினோம்.
சுவையான இலக்கிய கண்ணோட்டங்கள், சிறுகதைகளின் போக்குகள், ரஷ்யச்சிறுகதைகளின் பார்வை, எழுத்துக்களின் இன்றைய நிலை என பேச்சுக்கள் சூடுபிடித்தன. ரஷ்யக்கதைகளே தெரியாமல், ஒரு ரஷ்யக்கதையைக்கூடப் படிக்காமல் ரஷ்யக்கதைகளின் சாயலில் மூன்று கதைகளை எழுதிவிட்டு ஒன்றுமே தெரியாது என்று இருந்த எவனோ ஒருவனை பார்க்க வியப்பாக இருந்தது. கரு ஒன்று கோணங்கள் வேறு (விறுமாண்டி படம்போல) என்ற கோணத்தில் ஒரு கருவை வைத்து சிறுகதை புனைவதாக நால்வரும் முடிவெடுத்தோம். விரைவில் அந்தக்கருவில் நான்கு சிறுகதைகள் வரும் என நினைக்கின்றேன். நான் எழுதும்கதை முடிக்கப்பட்டு அது குறும்படம் ஆவதற்கும் ஆயத்தமாகின்றது நண்பர்களே…
இலங்கை திரை இசையின் கதை
தம்பிஐயா தேவதாஸ் அவர்களால் “இலங்கைத் திரை இசையின் கதை” என்ற தொடர் கட்டுரைகள் வீரகேசரி நாளிதழில் பிரதி சனிகிழமை தோறும் வரும் சங்கமத்தில் வெளிவருகின்றது. ஈழத்து இசை பற்றிய முக்கிமான ஆவணப்படுத்தலாக இதைக்கொள்ளமுடியும். நேர்த்தியான தனது எழுத்துக்களாலும், தேடல்கள் மூலம் கிடைத்த அரிய தகவல்கள், செவி வழியாக முறையாக தெரிந்திராத சம்பவங்கள், கலைஞர்கள் ஆகியோரை பற்றி முழுமையாக அறிய இந்த தொடர் உதவுகின்று. கடந்த 10 வாரங்களாக வெளிவரும் இந்தத்தொடர் பலரது கவனத்தையும் பெற்றுள்ளதுடன், பாராட்டப்படவேண்டியதொன்றாகவும் மாறியுள்ளது.
பேராசிரியர் கா.சிவத்தம்பியின் புறக்கணிப்பு
தமிழக அரசினால் நடத்தப்படவுள்ள உலகத் தமிழ் செம்மொழி ஆய்வு மாநாட்டில் தாம் கலந்துகொள்ளப்போவதில்லை என ஈழத்தமிழ் அறிவியலாளரும், ஆய்வாளருமான பேராசிரியர் காத்திகேசு சிவத்தம்பி அவர்கள் தெரிவித்துள்ளார். உலகத்தமிழ் தலைவராக தன்னைக்கொள்ளவேண்டும் என ஆசைப்படும் ஒருவர் ஈழத்தமிழர்கள் விடயத்தில் திட்டவட்டமான ஒரு நிலைப்பாட்டினை எடுக்க மறந்ததையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அட..பேராசியர் சிவத்தம்பி அவர்கள் கல்வியால் உயர்ந்தவர், உண்மையில் ஒரு எழுத்தாளர். அவருக்கும் வயது போய்விட்டது அனால் இன்றுவரை அவர் தனக்குத்தானே விருது கொடுக்க விரும்பியதில்லை, உண்மையாக தேடிவரும் விருதுகளைக்கூட வாங்க மறுப்பவர், அவர் இன்றுவரை தனக்கேற்றதுபோல தன் கொள்கைகளை புரட்டிபோட்டவரும் இல்லை…
ஒரு சர்தாஜி ஜோக்
பன்டாசிங் திருமணத்திற்கு முதல் நடந்த சம்பவம் இது அவரது மனைவியை அப்போது (அவரது காதலி) அவர் காதலித்துக்கொண்டிருந்தகாலம். ஒருநாள் மாலை ஆத்திரத்துடன் போன்போட்டு அவரது காதலியை ஷர்தாஜி பேசிய வார்த்தைகள் இவை “நீ ஒரு ஏமாற்றுக்காரி….மோசக்காரி…என்னை நீ முட்டாளாக்கிவிட்டாய்… இன்று பதிவுத்திருமணம் செய்துகொள்வோம் என்று நீதானே சொன்னாய்…இன்று அதிகாலையில் இருந்து மாலை வரை தபால்நிலையத்தில் நீவருவாய் என எவ்வளவு நேரம் காத்திருந்தேன்..
18 comments:
அருமை ஜனா...
இருக்கிறம் முகவரியும் வெளியிட்டு இருக்கலாம்... ??
ராணி ஜோசப்பின் மறைவு அதிர்ச்சி அளிக்கின்றது ஜனா. இலங்கையில்
குறிப்பட்டுச்சொல்லக்கூடிய ஒரு கலைஞர். அன்னாரது மறைவுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களையும் அவரது ஆன்ம ஈடேற்றத்திற்கான பிரார்த்தனையினையும் இந்த பின்னூட்டல்மூலம் விடுகின்றேன்.
கொக்ரைல் சூப்பர் நண்பா..தகவல் தெரியவைத்து, அஞ்சலி செலுத்தவைத்து, பரிதாபம் கொள்ளவைத்து, அதிசயிக்கவைத்து, பிரமிக்கவைத்து, புளகாகிதம் கொள்ளவைத்து, இறுதியில் சிரிக்கவைத்து அனுப்பியுள்ளீர்கள். இந்த ஏழு கலவை ஹொக்ரெயிலுக்
கு நன்றிகள் தோழரே..
நன்றாக இருந்தது.. ஹொக்ரேயில்.
எவனோ ஒருவனை கவிதை, இலக்கியம் என்று பேசியே மட்டையான கதையை ஏன் சொல்ல வில்லை..
பேராசிரியரின் புறக்கணிப்பு நியாயமானதே. மாற்றுக்கருத்துக்கள்தான் மதிக்கப்படும் என்ற எண்ண ஓட்டத்தில் கொழும்பில் இருக்கும் பல கல்வியாளர்கள் மிதக்கும்போதே எப்போதும் உண்மையின் பக்கம் நிற்கும் உண்மையான கல்வியாளர் அவர். தங்கள் தொகுப்பு அருமை வாழ்த்துக்கள்.
சர்தாஜி போஸ்ட் ஆபிஸில் நின்றுகொண்டு, ரிஜிஸ்டர் மாரேஜ் செய்துகொள்ள நினைத்தது நல்ல நகைச்சுவை. அது சரி அந்த நாலு கதையும் எப்ப வெளிவரும் ஜனா?
அந்தப்பசி என்னும் குறும்படம் அருமையாக இருக்கு ஜனா.
பசி வந்தால் பத்தும் பறந்துவிடும் என்பதில் பயமும் தான் என்பது தெரிகின்றது. காலையில் மோட்டார் சைக்களினின் சத்தத்திற்கே பதுங்குகுழிக்கள் ஓடிச்சென்று பதுங்கும் அந்த சிறுவன், உண்மையில் குண்டுவீச்சு விமானம் வந்தாலும் தனது வயிற்றுக்காக பயங்கள் கூட இல்லாமல் சாப்பிடுவது??? சொல்ல வார்த்தைகள் வரவில்லை.
//யுத் விகடன் புகழ் பதிவர் அடலேறு//யாருங்க ஜனா அது..
ஞாயிறு ஹொக்ரெயில் (25.10.2009) கலக்கல். நீங்க சொன்ன கரு குறும்படமா எடுக்க போறீங்களா, வாழ்த்துக்கள் ஜனா
பதில்:butterfly Surya
நன்றி அன்பு நண்பர் வண்ணத்துப்பூச்சியாரே..
ஏன் கண்டிப்பாக
web -http://irukkiram.tk/
E-Mail -iruikram@gmail.com
Phone -0094113150836
பதில்:தீபசுதன்
உண்மைதான் தீபசுதன்.
இலங்கை ஒரு கலைஞரை இழந்து நிற்கின்றது, என்பது வேதனையான விடயமே.
பதில்:கவிஞர்.எதுகைமோனையான்
நன்றி கவிஞரே, ஹொக்ரெயில் ஒரு கலவைதான் என்பதை பக்காவாகத் தெரிந்துவைத்திருக்கின்றீர்ளே??
பதில்:Cable Sankar
நன்றி நண்பரே..
எவனோ ஒருவனுக்கு தெரியாத விடயங்கள் இல்லை, அனால் அவர் மடமை என்னும் இயல்பை (தெரிந்தும் தெரியாதவன்போல நடிக்கும் இயல்பு) கைக்கொள்ளுகின்றாரோ என்னமோ??
பதில்:சமுத்திரன்.
நன்றிகள் சமுத்திரன். சரியாகச்சொன்னீர்கள். வருகைக்கு நன்றி
பதில்:குணா
நன்றி குணா. அந்த நான்குகதைகளும் வெகுவிரைவில் வெளிவரும்
பதில்:Sivakaran
நன்றி சிவகரன்.
உண்மைதான் அந்த பசியின் கொரூரத்தை இந்த குறும்படம் தெளிவாக உணர்த்தியுள்ளது.
நன்றிகள்
பதில்:வாங்க நண்பர் அடலேறு..இதிலென்ன சந்தேகம் அது நீங்கதானே??
ஆம் நண்பரே உங்கள் உதவிகளுடன் விரைவில் அந்தக்கதை குறும்படமாகின்றது.
ஜனா,
எல்லாம் கற்பனைதான். அது ரஷ்யக்கதை போல இருக்கிறது என்று நீங்கள் சொல்வது ஆச்சர்யம்தான்.
//Cable Sankar said...
எவனோ ஒருவனை கவிதை, இலக்கியம் என்று பேசியே மட்டையான கதையை ஏன் சொல்ல வில்லை..//
ஹலோ, இதுக்கெல்லாம் அசருகிற ஆளா... சீக்கிரம் உங்களையும் மட்டையாக்கவேண்டிய சூழ்நிலை வரலாம்...
ஹொக்ரெயில் நன்று.
Post a Comment