Sunday, November 8, 2009

ஞாயிறு ஹொக்ரெயில். 08.11.2009


அடாது பெய்த மழையும் நின்றுபோன பதிவர் சந்திப்பும்.
நேற்று சனிக்கிழமை (07.11.2009) கே.கே. நகரில் ஒரு கேட்போர் கூடத்தில் சென்னை பதிவர்கள் சந்திப்பு இடம்பெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
மிக ஆவலாக ஒருவரை ஒருவர் சந்திப்பதற்கு சென்னை பதிவர்கள் எல்லோரும் ஆவலாக இருந்தனர். பல பிரபலமான பதிவர்கள் அடுத்தடுத்து அழைப்பு எடுத்து கண்டிப்பாக வரவேண்டும் என அழைப்பு விடுத்துக்கொண்டிருந்தனர்.
கண்டிப்பாக கலந்துகொள்வதுதான் என்ற முடிவில் இருக்கும்போது. அடாது மழை தொடங்கிவிட்டது. வீதிகளில் வெள்ளம்வேறு.
மழையின் கோரம்கண்டு காலையிலேயே அடுத்தடுத்து அழைப்புகளும், குறுஞ்செய்திகளும் இன்று சந்திப்பு இல்லை எனத் தகவல் தந்தன. மனதுக்கு சற்று ஏமாற்றமே.
இதுபோன்ற பதிவர் சந்திப்பு ஒன்றிலேயே எனக்கு சிறந்த பல நண்பர்கள் கிடைத்தார்கள். இன்னும் பலருடன் பேச நிறைய விடயங்கள் இருந்தன.
ஆனால் அது தள்ளிப்போயுள்ளது வருத்தமாகவே உள்ளது.
சென்றமுறையும் பதிவர் சந்திப்பு திறந்தவெளியில் நடத்தப்பட்டதால் மழையும் அழையாத விருந்தாளியாக தானும் வந்திருந்தது. இந்தமுறையும் முரண்டுபிடித்துக்கொண்டிருக்கின்றது.

ஞாயிறு தினக்குரலில் என்பதிவுகள் பற்றி.

இலங்கையின் முன்னணி தினசரிப்பத்திரிகையான தினக்குரல் பத்திரிகையின் ஞாயிறு தினக்குரலில் நட்டசத்திரப்பதிவாளர் அறிமுகம் என்ற பக்கத்தில் என்னைப்பற்றிய தகவல்களும், ஒரு குறும்படம் பற்றிய எனது ஆக்கமும் இன்று வெளியாகியிருந்தது.
இலங்கையில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் பல நண்பர்கள் தொடர்பு கொண்டிருந்தார்கள். குறிப்பாக பலருக்கு நான் வலைப்பதிவுகள் எழுதுவது இன்றுதான் தெரியவந்ததாகவும் தெரிவித்திருந்தார்கள்.
இந்தவேளையில் தினக்குரல் பத்திரிகை நிறுவனத்தினருக்கும், முக்கியமாக யாழ்தேவி இணையத்தினருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன்.

ஓடியற்கூழ்.
யாழ்ப்பாணத்தவர்களின் தனிப்பட்ட சிறப்பியல்புகளில் ஒடியல்கூழ் காய்ச்சி விருந்து வைத்தல் என்பது ஒரு பாரம்பரியமாக அந்த நாட்களில் நடந்துவந்துள்ளது.
இதன் பெருமைகளை கூற. “கொண்டாடினாள் ஒரு ஒடியற்கூழ்” என்ற பாடலையே நவாலியூர் சோமசுந்தரப்புலவர் அவர்கள் பாடியுள்ளார்.
இந்த வகையில் கடல்கடந்து பல தேசங்களில் வாழ்ந்துவந்தாலும் இன்றும் அங்கெல்லாம் இதன் மூலப்பொருளான “ஒடியல்மா” சென்றடைந்து அந்தந்த தேசங்களிலும் ஒடியற்கூழ் காய்ச்ச்சி குடித்து மகிழ்வது இன்று மரபாக உள்ளது.
அந்த விதத்தில் சென்னையிலும் இன்று யாழ் நண்பர் ஒருவரின் வீட்டில், ஒடில்க்கூழ் காய்ச்சி விருந்துக்கு அழைக்கப்பட்டோம். நீண்ட நாட்களின் பின்னர், மழைக்கும் ஒரு இதமாக ஒடியற்கூழின் சுவை யாழ்ப்பாணத்தின் பெருமை கூறியது.
(ஒடியற்கூழ் என்பது ஒடியல்மாவை மூலப்பொருளாக கொண்டு, மீன், நண்டு. இரால், கணவாய், மரவெள்ளிக்கிழங்கு, பயற்றங்காய், முருங்கை இலை, என்று பல பொருட்களை இட்டு காய்ச்சப்படும் ஒரு கூழ்வகை)

எங்கிருந்தோ அழைக்கும்…

அரைக்காட்சட்டை பருவங்களில். ஐந்தாம்வகுப்பு புலமைப்பரிசில் பரீட்சைகளுக்கு விழுந்து விழுந்து எங்களை படிக்க அனைவரும் வற்புறுத்திய காலங்களில் என் காதுகளை நனைத்த பாடல் “என் ஜீவன் பாடுது” திரைப்படத்தில் இடம்பெற்ற “எங்கிருந்தோ அழைக்கும் என் கீதம”; பாடல்.
இப்போதும் என் நினைவுகளில் தெளிவாக உள்ளது. யாழ்ப்பாணத்தில் இருந்து பருத்தித்துறைக்கு என் குடும்பத்தாருடன் ஒரு விழாவுக்கு நான் பேருந்தில் சென்றுகொண்டிருக்கும்போது முதன் முதலாக அந்தப்பாடல் என் காதில் விழுந்தது.
அன்றைய பொழுதுகளிலேயே, நான் இளையராஜாவின் இசைக்கு மட்டும் இன்றி அவரது குரலுக்கும் அடிமையாகியிருந்தேன்.
(அடுத்து கார்த்திக். நான் பார்த்து பிரமித்த நடிகர்களில் ஒருவர். அற்புதமான ஒரு நடிகர். இன்றுவரை, மௌனராகம் திரைப்படத்தில் திடீர் என வந்து ஒரு கலக்கு கலக்கிய கார்த்திக்கின் பாத்திரம்போல் இதுவரை நான் பார்த்தது இல்லை.)
“வசந்தமும் இங்கே வந்ததென்றே வாசனை மலர்கள் சொன்னாலும், தென்றலும் இங்கே வந்து நின்று, இன்பத்தின் கீதம் தந்தாலும், நீயின்றி ஏது வசந்தமிங்கே! நீயின்றி ஏது ஜீவனிங்கே! சேர்ந்திடவே உனையே” அற்புதமான வரிகள்.

குறும்படம் “லிட்டில் மான்” (18)

பெண்களின் நடவடிக்கைகளை அவதானித்து இவர் நடத்தும் ஆரட்சிகளும், ஒவ்வொரு செயல்களின் முடிவும், குறும்படத்தின் முடிவும் அற்புதம்.

சர்தாஜி ஜோக்.
ஒரு அமெரிக்க உல்லாசப்பயணி டெல்லி, மற்றும் ஆக்ராவை சுற்றிக்காட்ட நம்ம ஷர்தாஜியை விழிகாட்டியாக எற்பாடு செய்துகொண்டார். செங்கோட்டைக்கு சென்றபோது அதைப்பார்த்து வியந்த அமெரிக்கர் நம்ம ஷர்தாஜியிடம் இதைக்கட்டுவதற்கு எவ்வளவு வருடங்கள் சென்றன என்று கேட்டார். ம்ம்ம்…இருவது வருடங்கள் என்று ஷர்தாஜி பதில் தந்தார்…
ப்பூ….இந்தியர்கள் அவ்வளவு சொம்பேறிகளா? அமெரிக்கர்கள் இதை வெறும் இரண்டுவருடங்களில் கட்டிமுடித்திருப்பார்கள் என்றார் அமெரிக்கர்.
தாஜ் மஹாலைப்பார்த்து லயித்துப்போன அமெரிக்கர் சரி…இதைக்கட்ட உங்களுக்கு எவ்வளவு காலம் எடுத்தது என்று கேட்டார்…சர்தாஜி வேண்டும் என்றே வருடங்களைக்குறைத்து வெறும் 10 ஆண்டுகள்தான் சென்றன என்றார்… அதற்கும் அந்த அமெரிக்கர்…இதை நாங்கள் ஒருவருடத்தில் கட்டிமுடித்திருப்போம் என்றார்.
சென்ற இடமெங்கும் காலங்களைக்கேட்பதும், ஷர்தாஜி பதிலளித்தவுடன்…அமெரிக்கர்கள் இதை குறுகிய காலத்தில் முடித்திருப்பார்கள் என பெருமை பேசுவதுமே அமெரிக்கரின் வழக்கமாயிருந்தது…
ஷர்தாஜிக்கு கடும் எரிச்சல் எற்பட்டது…போகும் வழியில் “சகாரா” தொலைக்காட்சி கோபுரத்தைக்கண்ட அமெரிக்கர் அது என்ன கோபுரம் என்று கேட்டார்…அதற்கு பதிலளித்த நம்ம ஷர்தாஜி அங்கே போய்த்தான் நாங்கள் அதை விசாரிக்கவேண்டும் இன்றுகாலை நான் இந்தப்பக்கமாக வந்தபோது இந்தக்கோபுரம் இங்கு இருக்கவில்லை என்றார்.

19 comments:

தங்க முகுந்தன் said...

படித்தவுடன் ரொம்ப சந்தோசமாகவும் பெருமையாகவும் இருக்கிறது! வாழ்த்துக்கள்!

உங்கள் தோழி கிருத்திகா said...

ஷர்தாஜி அங்கே போய்த்தான் நாங்கள் அதை விசாரிக்கவேண்டும் இன்றுகாலை நான் இந்தப்பக்கமாக வந்தபோது இந்தக்கோபுரம் இங்கு இருக்கவில்லை என்றார்///////////
நான் கூட ஜோக்கை படித்த உடன் சர்தார்களை எப்பவும் எல்லாரும் படுத்துவதைப்போல கேவலம் பண்ணி இருப்பிங்களோனு நெனச்சேன்..ஆனா பலே பேஷ் பேஷ்...ரொம்ப நன்னாருக்கு

ஸ்ரீ.கிருஷ்ணா said...

கலக்கல் ஜனா சார் .

பார்த்தீபன் said...

குறும்படம் அசத்தல் தலைவா. அட இந்தப்பாடல் நானும் ரசித்த ஒருபாடல்தான்.

சயந்தன் said...

கலக்கிறீங்க அண்ணா வாழ்த்துக்கள். அப்புறம் குடும்படம் அருமை.

டிலான் said...

ஹொக்ரெயில் சூப்பர்..அசத்துறியள் அண்ணை.

ஊர்சுற்றி said...

வாழ்த்துக்கள் ஜனா! :)

எவனோ ஒருவன் (எ) அதி பிரதாபன் said...

அடுதத வாரம் சந்திப்போம் என நினைக்கிறேன், இயற்கை வழிவிட்டால்.

வாழ்த்துக்கள் ஜனா.

ஜோக் சூப்பர்.

அடலேறு said...

ஞாயிறு தினக்குரலில் பதிவுகளுக்காக வாழ்த்துக்கள் ஜனா.ஞாயிறு ஹொக்ரெயில். 08.11.2009 அருமை

Jana said...

//சந்தோசமாகவும் பெருமையாகவும் இருக்கிறது! வாழ்த்துக்கள்!//

நன்றி தங்கமுகுந்தன். இந்த வலைப்பதிவு மூலம்தானே உங்களைப்ணபோல நண்பர்களும் எனக்கு கிடைத்திருக்கின்றார்கள்.

Jana said...

//எல்லாரும் படுத்துவதைப்போல கேவலம் பண்ணி இருப்பிங்களோனு நெனச்சேன்..ஆனா பலே பேஷ் பேஷ்...ரொம்ப நன்னாருக்கு//

பிறர் சந்தோசத்திற்காக தம்மை முட்டாள்கள் ஆக்கிக்கொள்வது என்பது எவ்வளவு பெரிய மனம் கொண்ட இயல்புதானே.
அனால் இங்கே சர்தாஜி ஹீரோ ஆகிட்டார்.
நன்றி தோழி கிருத்திகா

Jana said...

//கலக்கல் ஜனா சார் .//

வாங்க கிருஷ்ணா சேர். தொடர்ந்து இந்தப்பக்கம் வாங்க. தங்கள் முதல் பின்னூட்டலுக்கு எனது நன்றிகள்.

Jana said...

//குறும்படம் அசத்தல் தலைவா. அட இந்தப்பாடல் நானும் ரசித்த ஒருபாடல்தான்.//

நன்றி பார்த்தீபன்.

Jana said...

//கலக்கிறீங்க அண்ணா வாழ்த்துக்கள்//
நன்றி சயந்தன்

Jana said...

//ஹொக்ரெயில் சூப்பர்..அசத்துறியள் அண்ணை.//

நன்றி டிலான்

Jana said...

//வாழ்த்துக்கள் ஜனா! :)//

நன்றி ஊர்சுற்றி

Jana said...

//அடுதத வாரம் சந்திப்போம் என நினைக்கிறேன், இயற்கை வழிவிட்டால்.//


நன்றி எவனோ ஒருவன் (எ) அதி பிரதாபன்
அடுத்தவாரம் சந்திக்கமுடியும் எனத்தான் நானும் நினைக்கின்றேன்

Jana said...

//ஞாயிறு தினக்குரலில் பதிவுகளுக்காக வாழ்த்துக்கள் ஜனா.ஞாயிறு ஹொக்ரெயில். 08.11.2009 அருமை//

நன்றி அடலேறு
பதிவர் சந்திப்பின் முதல் நாங்கள் சந்திப்போம்.

Aalif Ali said...

nice jana. i read abt this page on Thinakkural paper. well.

I all so have a site c it.
www.AliAalif.Blogspot.com

here
Aalif ALi

LinkWithin

Related Posts with Thumbnails