Wednesday, November 4, 2009

Operation Smile

நாளாந்தம் எம் பயணங்களில் எதேட்சையாக ஒரு தடவையாவது, பிறவிக்குறைபாடாக இருக்கும் “உதடு அன்னப்பிளவு” உள்ள குழந்தைகளை கடந்துசென்றிருக்கின்றோம். அடடா.. என்ன அழகான குழந்தை, அதன் உதடுகளுக்கு இப்படி நேர்ந்தவிட்டதே என்று எண்ணிக்கொண்டு பயணத்தை தொடர்ந்திருப்போம்.
ஏன்.. இந்த பிறவிக்குறைபாடான உதடு அன்னப்பிளவினால் பாதிக்கப்பட்டவர்களாக எம்முடன் படித்தவர்களோ, அல்லது எமது உறவினர்களோ, நண்பர்களோ ஏன் எமது குடும்ப உறுப்பினர்கள்கூட இருந்திருக்கலாம்.

உதடு அன்னப்பிளவால் பாதிக்கப்படும் சிறுவர்கள், தங்கள் புன்னகைளை மட்டும் தொலைத்துவிடவில்லை. சரளமாகப்பேசுவதற்கு மிகவும் சிரமப்படவேண்டியவர்களாக உள்ளனர். அதேவேளை மற்றவர்களுடன் தன்னை பார்த்து ஒரு வித தாழ்வு மனப்பாண்மை அவர்களுக்குள் குடிகொண்டுவிடுகின்றது. அது தவிர பல விடயங்களிலும் அவர்கள் புறக்கணிப்புகளுக்கு உள்ளாக வேண்டிய நிலை ஏற்படுகின்றது.

சாதாரணமாக வருடம் ஒன்றிற்கு உலகமட்டத்தில் இரண்டு இலட்சம் குழந்தைகள் இந்த பிறவிக்குறைபாடான உதடு அன்னப்பிளவுடன் பிறப்பதாக கணக்கெடுப்புக்கள் கூறுகின்றன. இவர்களில் பெரும்பாலனவர்கள் வசதிகள் குறைந்த நிலையில் உள்ளதன் காரணமாக தங்கள் குழந்தைகளின் உதடு அன்னப்பிளவு சீர் செய்யப்படக்கூடியதொரு குறைபாடுதான், நவீன மருத்துவமுறையினால் அவற்றை நிவர்த்தி செய்துவிடமுடியும் என்ற அறிவு குறைந்தவர்களாகவும். அப்படி அறிந்தாலும் அதற்கான செலவினை செலுத்தி தமது குழந்தைகளுக்கு சிகிற்சைகளை மேற்கொள்ள முடியாதவர்களாகவுமே உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் வேதனை தரும் சம்பவங்கள் என்னவென்றால், இவ்வாறான பிறவி உதடு அன்னப்பிளவுடன் பிறக்கும் குழந்தைகளை பெற்றவர்களே ஒதுக்கி நடப்பதும், மூன்றாந்தரப்பிரஜைகளாக சமுகம் அவர்களை பார்ப்பதும்தான் என சமுக சேவகர்கள் வருத்தம் கொண்டுள்ளனர். கல்வி கற்கும் இடம், விளையாட்டு என்ற சிறுவர்களுக்கேயான ஈர்ப்புள்ள இடங்களிலும் இவர்கள் புறக்கணிக்கப்படுவதாக கூறப்படுகின்றது.

இந்த வருட முற்பகுதியில் ஏ.ஆர்.ரஹ்மான் ஒஸ்கார் விருதுபெற்ற ஒஸ்கார் விழாவிலே “ smile pinki” என்ற உதடு அன்னப்பிளவினால் பாதிக்கப்பட்ட ஒரு சிறுமிபற்றிய ஆவணப்படத்திற்கும் விருதுவழங்கப்பட்டிருந்ததை அறிந்திருப்பீர்கள்.
மேற்படி உதடு அன்னப்பிளவு பற்றிய வழிப்புணர்வை ஏற்படுத்த எடுக்கப்பட்ட ஆவணப்படமே “smile pinki” ஆகும்.

பிறவிக்குறைபாடான உதடு அன்னப்பிளவானது பரம்பரை நோயோ, அல்லது கடவுளின் சாபமோ அல்ல. உண்மையில் அது ஒரு மற்றுமுழுதான பிறவிக்குறைபாடே ஆகும். என்றாலும் இன்றைய மருத்துவ நவீன சிகிற்சைகள் மூலம் அதை உடனடியாகவே சீர்ப்படுத்திவிட முடியும் என மருத்துவ அறிக்கைகள் கூறுகின்றன.

இவ்வாறான குழந்தைகளின் உதடுகளில் அழகான புன்னகைகளை கொண்டுவருவதற்காக 1982ஆம் ஆண்டுமுதல் கிட்டத்தட்ட ஐம்பதிற்கும் மேலான நாடுகளில் இயங்கிவரும் அமைப்பே “Operation Smile” ஆகும்.
இதுவரை பல இலட்சம் பிறவி உதடு அன்னப்பிளவுள்ள குழந்தைகளுக்கு சிகிற்சைகளை வழங்கி அவர்களின் அழகிய புன்னகையினை கண்டுள்ளது இந்த அரச சார்பற்ற தொண்டு நிறுவனம்.

தனியே சிகிற்சைகள் மட்டும் இன்றி, இந்த பிறவி உதடு அன்னப்பிளவு பற்றிய வழிப்புணர்வை உலகலாவிய ரீதியில் முன்கொண்டு செல்வதிலும், இதனால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கான ஒரு காப்பரணாகவும், இது தொடர்பான மருத்துவ முறைகள், கற்கை நெறிகள் என்பவற்றை நடத்தியும் வருகின்றது இந்த அமைப்பு.

முன்னமே சொன்னதுபோல நாம் இவ்வாறான குழந்தைகள் பலரை கண்டு ஏங்கியிருப்போம். எமக்கு அந்த வலி வரும்வரை நாம் அதுபற்றி பார்வையாளராக இருந்துவிடுவதூன் மனித இயல்பாக உள்ள நிலையினை மாற்றி, எம்மால் முடியாவிட்டாலும், இந்தகுழந்தைகளுக்கு உதவும் “Operation Smile “ போன்ற தொண்டர் அமைப்புகளுக்கு எம்மாலான நிதிகளை கொடுத்தாகினும், உலகம் முழுவதிலும், குறைபாடில்லாத குழந்தைகளின் அழகான புன்னகைக்கு வழிவகுக்கலாமல்லவா?

செய்தி.
“Operation Smile” தொண்டு நிறுவனத்தின் 20ஆவது ஆண்டு வழிப்பணர்வை ஏற்படுத்தும் நிகழ்வுகள் இன்று (நவம்பர் 04 முதல் 16ஆம் திகதிவரை) வியட்னாமில் ஆரம்பித்துள்ளது. இந்த நடவடிக்கைகள் மூலம் 3000 வியட்னாமிய பிறவி உதடு அன்னப்பிளவு உள்ள குழந்தைகளுக்கு இலவச சீரமைப்பு சிகிற்சை வழங்கப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்பொருட்டு “Operation Smile” அமைப்பின் கௌரவ தூதுவரான பிரபல நடிகர் ஜாக்கி ஷான் நேடியாகவே இன்று வியட்னாமுக்கு விஜயம் செய்து இந்த 20ஆம் ஆண்டு வழிப்புணர்வு ஊட்டும் விழாவில் கலந்துகொண்டுள்ளார்.

15 comments:

shortfilmindia.com said...

நல்லதோர் பதிவு..

கேபிள் சங்கர்

சயந்தன் said...

சிறந்ததொரு பதிவு என்றால் இப்படித்தான் இருக்கவேண்டும் என்று சொல்லத்தக்க பதிவு அண்ணா.
பதிவுகள் வழிப்புணர்ச்சியை ஊட்டுபனவாக இருப்பதற்கு உங்கள் பதிவுகள் ஒரு சிறந்த உதாரணம்.
பதிவுக்கு நன்றி அண்ணா.

டிலான் said...

தேவையானதொரு சிறந்த பதிவு.

கிறுக்கல் கிறுக்கன் said...

நல்ல பகிர்வு

Pradeep said...

மருத்துவத்துறை சார்ந்த ஒருவன் என்ற ரீதியில் உங்களின் இந்த வழிப்புணர்வுப்பதிவை பாராட்டியே வேண்டும். உண்மையில் மெச்சத்தக்க பதிவு இது ஜனா. பாராட்டுக்கள்.

mayuran said...

Nice Jana
mayuran

எவனோ ஒருவன் (எ) அதி பிரதாபன் said...

முடிந்தால் தொடரவும்...
http://www.yetho.com/2009/11/blog-post_06.html

Jana said...

//நல்லதோர் பதிவு//
நன்றிகள் நண்பர் கேபிள் சங்கர்.

Jana said...

//உங்கள் பதிவுகள் ஒரு சிறந்த உதாரணம்.
பதிவுக்கு நன்றி அண்ணா.//
நன்றிகள் நண்பர் சயந்தன்.

Jana said...

//தேவையானதொரு சிறந்த பதிவு.//
நன்றி நண்பர் டிலான்.

Jana said...

//நல்ல பகிர்வு//
நன்றி நண்பர் கிறுக்கல் கிறுக்கன்

Jana said...

//உண்மையில் மெச்சத்தக்க பதிவு இது ஜனா. பாராட்டுக்கள்.//
நன்றி மருத்துவர் பிரதீப் அவர்களே.

Jana said...

//Nice Jana
நன்றி நண்பர் மயூரன்

Jana said...

//முடிந்தால் தொடரவும்...
ஆஹா…அழைப்பு விட்டுட்டீங்களே! சரி முயற்சி பண்ணுறன்.

ஊர்சுற்றி said...

இதுமாதிரி கஷ்டப்பட்டவர்களை நேரடியாகப் பார்த்திருக்கிறேன்.
நல்ல தகவல்கள்.

LinkWithin

Related Posts with Thumbnails