Tuesday, November 17, 2009

அமெரிக்க – சீன உறவும், ஒபாமாவின் சீன பயணமும்.

சீனாவின் வளர்ச்சியையும், அதன் முன்னேற்றத்தினையும், இராணுவ பலம் பெருகுவதையும் கண்டு, இரண்டாவதாக பயப்படும் நாடு எதுவென்றால் அது அமெரிக்காவாகத்தான் இருக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.
அதேவேளை ஒரு நாட்டின் வளர்ச்சி தங்களுக்குச்சவாலாக இருக்குமே என்றால் அந்த நாட்டிற்கெதிராக திரைமறைவாக காய்நகர்த்துவதில் கைதேர்ந்தவர்கள் அமெரிக்கர்களே. உண்மையில் சீனாவை மையமிட்டு 70 வதுகளின் ஆரம்பங்களிலேயே அமெரிக்கா காய்களை நகர்த்த தொடங்கிவிட்டது என்பது பல நிகழ்வுகளையும் உற்று நோக்கும்போது தெளிவாகத்தெரியும்.

இந்த நிலையில் சீன அமெரிக்க உறவு என்பது நீறுபூத்த நெருப்புப்போல சீனாவால் மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாத நிலையிலுமே முன்னெடுத்துச்செல்லப்பட்டுவருகின்றது.
அதாவது உலகில் சந்தைவாய்ப்பு மிக அதிகமான இடம் சீனாவாக இருப்பதால் அமெரிக்காவின் முதலீடுக்கு சீனா மிகவும் அவசியம், அதேவேளை அமெரிக்காவும் உலக அளவில் சீனாவிலேயே அதிகமான முதலீடுகளை கொட்டுகின்றது.
இந்த நடவடிக்கைகளுக்கு அமெரிக்காவுக்கு சீனா தேவைப்படுவது உண்மை. அதேபோல அமெரிக்காவின் தொழிநுட்பமும், அமெரிக்க முதலீடும் சீனாவுக்கு அவசியமாகவே உள்ளது. இங்கு அமெரிக்க தொழிநுட்பங்களை சீனா தனக்கு சாதகமாக பயன்படுத்த பிரயத்தனம் எடுத்துவருகின்றது.
எனவே “கிவ் அன்ட் ரேக்” பொலிசிபோல இரண்டு நாடுகளுக்கும் ஒருவரிலிருந்து ஒருவருக்கு தேவைகள் உண்டு.

இத்தனை இருந்தும் சீனாவை அமெரிக்கா சும்மா விட்டுவிடுமா என்ன? கொஞ்சம் இடம்கொடுத்தாலும், தன் தலையில் ஏறி மாவரைத்துவிடுவார்கள் என்ற எச்சரிக்கை உணர்வில் சகல நாடுகளிடமும் அமெரிக்கா எச்சரிக்கையாகவே உள்ளது. சீனாவுக்கு எதிரான தனது வலுவான நிலையினை அமெரிக்கா பெருக்கிக்கொண்டே வருகின்றது.
தென் கொரியா, ஜப்பான், பிலிப்பெயின்ஸ், தாய்லாந்து, போன்ற நாடுகளில் உள்ள அமெரிக்க தளங்களில் ஒன்றரை இலட்சத்திற்கும் மேற்பட்ட அமெரிக்க துருப்புக்களும், யுத்த கப்பல்கள், விமானங்களும் சீனா மீது தாக்குதல்களை நடத்த தயாராகவே உள்ளன.
இதேவேளை அமெரிக்காவின் பெரும் அழிவை ஏற்படுத்தும் நைட்ரஜன் குண்டுகள் குறிவைக்கும் நாடுகளில் சீனாவே முதலிடத்தில் உள்ளது.

இது இப்படி இருக்க பல அமெரிக்க நிறுவனங்கள் தொடர்ந்து சீனாவில் பல கோடி டொலர்களை கொண்டி முதலீடுகளை செய்துகொண்டே இருருக்கின்றன.
இதேவேளை சீனாவும் பலகோடி டொலர்களை அமெரிக்க வங்கியில் முதலீடு செய்துள்ளது. இதுவும் ஒருவகையில் அமெரிக்காவுக்கு சாதகமாகவே உள்ளது.
இந்த சீனாவின் முதலீடு இல்லாவிட்டால் அமெரிக்காவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி மேலும் மோசமான சூழலுக்கு சென்றிருக்கலாம்.
தனக்கு எதிராக தன்னை சுற்றி அமெரிக்கா தந்திரமாக காய்களை நகர்த்திவருவதை சீனாவும் கவினிக்காமல் இருந்துவிடவில்லை. சகல விடயங்களையும் சீனாவும் அவதானித்துகொண்டே உள்ளது. இருந்தபோதிலும், அமெரிக்காவின் முதலீடு சீனா வளர்ச்சியடைய இன்னும் அவசியமாக உள்ளதால்
இது குறித்து வெளிப்படையாக எந்த செயற்பாடுகளையும் காட்டாமல், தனக்கெதரிரான காய்நகர்வுகளை முறியடிக்க திரைமறைவான வேலைகளில் ஈடுபட்டுள்ளது சீனா.

அமெரிக்கா முதலீடு செய்யும் நாடுகள் அனைத்தும். அமெரிக்கா தங்கள் நாடுகளில் முதலீடு செய்வதே தங்கள் முன்னேற்றத்தின் சரியான பாதை என்று எண்ணி நிற்கும்போதே, உலகின் மிகவும் அதிகமான சந்தை வாய்ப்பு உள்ள தன் பலத்தை அறிந்து முதலீடு செய்யவரும் அமெரிக்க நிறுவனங்களுக்கு நிபந்தனைகளை வித்திக்கின்றது சீனா. மிகப்பெரிய சந்தையினை இழக்க மனமில்லாத அமெரிக்க நிறுவனங்களும் இந்த நிலையில் சீனாவின் நிபந்தனைகளை எற்றுக்கொள்கின்றன.
எது எப்படியோ சீனாவும் தற்போது இராணுவ பலத்தில் முன்னேறிவிட்டதாக சொல்லப்படுகின்றது. 2006ஆம் ஆண்டு தரையில் இருந்து செலுத்தும் ஏவுகணைமூலம், செயற்கைக்கோள் ஒன்றை தகர்த்ததின்மூலம் சீனாவின் பலத்தை கண்டு பல நாடுகள் திகைத்தன என்பது மறுக்கமுடியாத உண்மை.

இதேவேளை சீனாவும், இந்தியாவைப்போல அயல்நாடுகளுடன் நல்லுறவு கொண்ட நாடாக இல்லை. அருகில் இருக்கும் நாடுகளைக்கூட தன்னகப்படுத்தவேண்டும் என்ற அடிப்படை ஆக்கிரமிப்பு ஆசை சீனாவுக்கு எப்போதும் உண்டு.
இதேவேளை தனக்கு எதிரான சச்தியாக இந்தியா வளர்வதை சீனாவால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை என்பதும் உண்மை.
பாகிஸ்தானுடன் மல்லுக்கட்டி, வீரம் பேசும் இந்தியா, சீனா அத்துமீறி தன்னிடம் வந்தால்க்கூட, பல்லை கடைவாய்வரை போக இழித்து, இந்த பிரச்சினைகளை பேசித்தீர்த்துக்கொள்ளலாமே என்பதில் இருந்து இந்தியாவின் பயமும், கையாலாகத்தனமும் தெரிகின்றது.
இலங்கை விவகாரத்தில்க்கூட இந்தியா குறுகிய நோக்கத்துடன் படு முட்டாள்த்தனமான அணுகுமுறையினை கையாண்டு தன் தலையில் தானே மண்ணை தூவிக்கொண்டிருப்பதையும், தூரநோக்கு, தந்திரமான காய்நகர்தலின் மூலம் சீனா இந்தியாவை குட்டி ஒரு மூலையில் உக்கார வைத்துள்ளதையும் யாரும் மறுக்கமுடியாது. இதன் பாதிப்புக்கள் இன்னும் இரண்டு ஆண்டுகளுக்குள் இந்தியாவுக்கு தெரிய ஆரம்பிக்கும்.

ஆனால் அமெரிக்க – சீன உறவு என்பது ஒரு விசித்திரமானது. அமெரிக்காவின் பொருளாதாரம் சரிவை நோக்கிச்சென்றபோது. தனக்கு திரைமறைவு எதிரியாக அமெரிக்கா இருந்தாலும்கூட அமெரிக்க பொருளதாரத்தை மீட்கவேண்டும், அமெரிக்க பொருளாதாரம் உயரவேண்டும் என பீஜிங் விரும்பியது. அதற்கு ஏதுவான செயற்பாடுகளில் அமெரிக்காவுக்கு முழு ஒத்துளைப்பும் வழங்கியிருந்தது. இதில் ஆச்சரியப்படவதற்கு எதுவுமே இல்லை. அமெரிக்க பொருளாதாரம் விழுந்தால் சீனாவில் அமெரிக்கா முதலீடுகளை செய்யாதே, அதை தொடர்ந்தும் சீன பொருளாதாரமும் சரிந்துவிடுமே.
இது தான் சீனாவின் துடிப்புக்கு காரணம்.
அமெரிக்க – சீனா உறவு என்பது கொள்கைரீதியில் எதிரான துருவங்களாக இருந்தாலும் கூட, பண ரீதியில் ஒன்று ஒன்றுக்கு தேவையான உறவு என்றே கொள்ளமுடியும்.

இந்த நிலையில் அண்மைய முக்கியமான விடமாக கடந்த ஜூலை மாதம் இடம்பெற்ற அமெரிக்க –சீன மூலோபாய, பொருளதார ஒன்று கூடலை சொல்லலாம்.
இந்த ஒன்றுகூடலை தொடக்கிவைத்த அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமா, அங்கு பேசும்போது, அமெரிக்க சீன உறவு 21ஆம் நூற்ணாண்டை உருவாக்கும் என்றார்.
சீனாவில் சிலர் அமெரிக்கா சீனாவை கட்டுப்படுத்த முயல்கின்றது என நினைக்கின்றார்கள், அதேவேளை அமெரிக்கர்கள் சிலர் எழுச்சி கொள்ளும் சீனாவைக்கண்டு அச்சப்படும்வகையில் ஏதோ உள்ளது என எச்சரிக்கின்றனர்.
நானோ வேறு பார்வையினை கொண்டிருக்கினறேன். நம் இரண்டு நாடுகளும் தத்தமது தேவையை ஒட்டிய பங்காளிகள் என்று இல்லாது, வாய்ப்பினையும் ஏற்று நிற்கும் பங்காளிகள் எனக்கூறும் வருங்காலத்தை விரும்புகின்றேன் எனத் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் மேலும் சீன – அமெரிக்க உறவுகளின் அடிப்படையில் தனது ஆசிய பயணங்களில் முதற்கட்டமாக சீனா வந்துள்ள அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமா, இன்று சீன ஜனாதிபதி ஹ_ ஜிந்தாவோவை சந்தித்து பலதரப்பட்ட விடயங்கள் பற்றி கலந்தரையாடியுள்ளார்.
இந்த பேச்சுவார்த்தைகளில் முக்கியமாக வடகொரிய விவகாரமும், உலக காலநிலை மாற்றம், அமெரிக்க –சீன பொருளாதார புரிந்தணர்வு என்பன குறித்து கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கிப்படுகின்றது.
இந்த சந்திப்பின் பின்னர் இரண்டு நாட்டு தலைவர்களும் கூட்டாக பத்திரிகைகளுக்கு
பேட்டி வழங்கியபோது, தனது முதலாவது சீன பயணம், தனக்கு புது உற்சாகத்தை தருவதாகவும், சீனாவும், அமெரிக்காவும் உலக பொருளாதாரத்தை உயர்த்துவதற்கு தொடர்ந்து பாடுபட்டுவரும் எனவும் அதேவேளை. காலநிலை மாற்றம் பற்றியும் கலந்துரையாடப்பட்டதாக தெரிவித்ததோடு,
பேசும்போதே சீன ஜனாதிபதி பக்கம் திரும்பி, இந்த பேச்சுவார்தைகள் மூலம் பல விடயங்களை அடையக்கூடியதாக இருக்கும். இதுபோன்ற பேசசுக்களால் பல நன்மைகள் கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது. இது அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் உரிய மார்க்கம் அல்ல உலகத்திற்கும் உரிய மார்க்கம் என்று தெரிவித்தார்.

முன்னதாக சங்காயில் உள்ள உயர்கல்வி கற்கும் மாணவர்களை அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமா அவர்கள் சந்தித்து அவர்களுடன் ஆர்வமாக கலந்துரையாடிள்ளார். சீன மாணவர்களும், எந்த உலகத்தலைவருக்கும் இல்லாத வரவேற்றிபினையும், தங்கள் மகிழ்ச்சியையும் ஒபாமாவுக்கு செலுத்தியது குறிப்பிடவேண்டிய ஒருவிடயமே.
இங்கு மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய ஒபாமா, சீனாவுடைய எதிர்காலத்தினை நான் உங்களிடம் பார்க்கின்றேன். உங்கள் நாடு உலக அளவில் துடிப்புடன் படுவேகமாக முன்னேறிவரும் நாடு. அந்த நாட்டின் எதிர்காலத்தூண்களாக நீங்கள் உள்ளீர்கள். அமெரிக்கா சீனாவுடன் வெளிப்படையான நண்பனாக இருக்க பெரிதும் விரும்புகின்றது. திரைமறைவில் எந்தவொரு நடைமுறையினையும் அமெரிக்கா எடுக்கவில்லை எனத்தெரிவித்துள்ளார்.

எது எப்படியோ, சீனா எப்போதும் அமெரிக்காவின் கழுகுப்பார்வையில் உள்ளது என்பது பச்சைக்குழந்தைக்குக்கூட தெளிவாக புரிந்த விடயம். அதுமட்டும் இன்றி
பாரக் ஒபாமா உண்மையில் நல்லவராக இருந்தாலும்கூட அமெரிக்க கொள்கை வகுப்பாளர்களின் தந்திர காய்நகர்வகளுக்கு எதிராக ஒரு இஞ்ச்கூட அவரால் நகரமுடியாது என்பதும் உண்மை. இது இப்படி இருக்க பல அமெரிக்க ஜனாதிபதிகள் வெருட்டியும் அடிபணியாத நாடுகளைக்கூட ஓபாமா தனது கனவான்தன்மை நாடகத்தினால் அமெரிக்காவின் வழிக்கு கொண்டு சென்றுகொண்டிருப்பதாக சில ஊடகங்கள் விமர்சித்துவருகின்றன.
ஒன்றுமட்டும் உண்மை, ஆழமான ஒரு கண்ணோட்டத்துடன் பார்த்தால், அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் “மாற்றம், எங்களால்முடியும், வித்தியாசமான பார்வை” போன்ற வாசகங்களின் பாதை வழியே ஒபாமா வேகமாக பயணித்துக்கொண்டிருப்பது புரியவருகின்றது.

10 comments:

Jeyaparagash said...

Good Article. Well done.

டிலான் said...

தரம். மிகத்தரமான ஒரு பதிவு. பதிவுக்கு நன்றி. இதுபோன்ற சர்வதேசப்பார்வைப்பதிவுகளே தற்போது பதிவுலகத்தின் தேவையாக உள்ளது.

கவிஞர்.எதுகைமோனையான் said...

//பாகிஸ்தானுடன் மல்லுக்கட்டி, வீரம் பேசும் இந்தியா, சீனா அத்துமீறி தன்னிடம் வந்தால்க்கூட, பல்லை கடைவாய்வரை போக இழித்து, இந்த பிரச்சினைகளை பேசித்தீர்த்துக்கொள்ளலாமே என்பதில் இருந்து இந்தியாவின் பயமும், கையாலாகத்தனமும் தெரிகின்றது.//


சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் நிதர்சனமான வசனம் இது ஜனா.

Thevesh said...

Good article and balanced report.

Mohan Kumar said...

நல்ல அலசல்.. வேறு சிலவும் உங்கள் blog-ல் படிதேன். பல்வேறு விஷயங்கள் நன்றாக எழுதுகிறீர்கள். சென்னையிலா உள்ளீர்கள்? அதி பிரதாபன் தொலை பேசி மூலம் நண்பர் ஆனார். அவர் வலை மனையிலிருந்து உங்கள் பெயர் பார்த்து இங்கு வந்தேன். இயலும் போது நம் வலை பக்கம் வாருங்கள்

மோகன் குமார்
http://veeduthirumbal.blogspot.com

Jana said...

Thank you For you Vist and Comment Jeyaparagash

Jana said...

டிலான்
உண்மைதான் டிலான். சர்வதேசப்பார்வை பதிவர்களிடம்
மிகக்குறைவு.

Jana said...

நன்றி கவிஞரே

Jana said...

Thank you Thevesh,
You always welcome.

Jana said...

கண்டிப்பாக மோகன்குமார்.
தங்களையும் விரைவில்
நேரில் சந்திக்கின்றேன்.

LinkWithin

Related Posts with Thumbnails