கடந்த ஒருமாத காலமாக நள்ளிரவுத்தூக்கத்தை கலைத்த உதைபந்தாட்ட பெருவிழா இன்றுடன் முற்றுப்பெறுகின்றது. ஸ்பெயினுக்கு ஆதரவாகவும், நெதர்லாந்திற்கு ஆதரவாகவும், இம்முறை உதைபந்தாட்ட ஹைலைட் “ஒட்டோபஸ்” உடன் சேர்ந்து நம்ம பதிவர்களும் போட்டி போட்டுக்கொண்டு இருக்கின்றார்கள்.
ஸ்பெயினே இந்தமுறை உலகக்கிண்ணத்தை தூக்கும் என்பது பெரும்பாலானவர்களின் அபிப்பிராயம்.
ஸ்பெயினின் ஆடுகளத்தில் இறுதிமட்டும் வீரர்களின் சுறுசுறுப்பு, சூழலுக்கு ஏற்றதுபோல உடனடியாக மாறும் களவியூகங்கள், பந்து கடத்தும் தன்மைகள், இம்முறை பிரமிக்கவைக்கின்றன. இந்த விதத்தில் ஸ்பெயினே உலகக்கோப்பை சம்பியனாகும் என பலரும் நம்பிக்கை வெளியிட்டுவருகின்றனர்.
எது எப்படியோ இன்று நள்ளிரவு, இறுதிவிருந்து காத்திருக்கினறது. இந்த இறுதிவிருந்து, லேசாக ஒரு அணி வென்றதாக இருக்காமல், இறுதிவரை பரபரப்பான போட்டியாக இருந்தால், பார்க்கும் எங்களுக்கு ஹப்பி…பார்ப்போம்..
இயக்குனர் பாலாவுக்கு இன்று 44
2008ஆம் ஆண்டு நான் கடவுள் படத்தை இயக்கியதற்காக, இயக்குனருக்கான தேசிய விருது பெற்ற இயக்குனர் பாலாவுக்கு இன்று வயது 44 ஆகின்றது.
1966 ஆம் ஆண்டு இதே நாள் மதுரை மாவட்டம் தேனியில் உள்ள போடி என்ற ஊரில் பிறந்தவர் இயக்குனர் பாலா.
சேது, நந்தா, பிதாமகன், நான் கடவுள் என வித்தியாசமான கோணத்தில் சினிமாவை கொண்டு சென்றுகொண்டிருப்பவர் பாலா.
தற்போது “அவன் இவன்” என்ற திரைப்படத்தை இயக்கிவருகின்றார்.
ஒரு சிறந்த இயக்குனர் என்பது மட்டும் இன்றி பாலா ஒரு கவிஞராகவும், ஒரு எழுத்தாளராகவும், பாடசாலைக்காலத்தில் இருந்து ஒளிர்ந்திருக்கின்றார்.
எழுத்துக்களாலும், கவிதையாலும், தமிழேற்றும் பாலாவுக்கு, மேடைப்பேச்சு அறவே வராது என்பது பெரும் ஆச்சரியம்.
அவரது “இவன்தான் பாலா” தொடரில் அவர் தனது கல்லூரி இறுதிநாள் பற்றி எழுதிய எழுத்துக்கள் நான் பிரமித்தப்போய் பல தடவைகள் மீண்டும் மீண்டும் வாசித்த சிறப்பான எழுத்தாக அமைந்தது…
அதில்…
“கல்லூரி இறுதிநாள்!!
எத்தனை சாத்தான்களால் நாம் சபிக்கப்பட்டாலும், இன்று எங்களை அத்தனை தேவதைகளும் ஆசீர்வதிக்கும் நாள்” என எழுதியிருப்பார்.
ஒரு படத்தை எடுப்பதற்காக அதுவே தானாக மாறி, பல பிரச்சினைகளையும் தாண்டி, அந்த துறையிலேயே ஊறிப்போய், திரையில் தனது அற்புதங்களைக் காட்டுவார்..
ம்ம்ம்…உண்மைதான் இவன்தான் பாலா!
Not an every day story (Iranian short film)
நான் ரசித்த நண்பன் திருக்குமரனின் கவிதை ஒன்று
ஏன் இறைவா ?
உணர்ச்சிக் குரியவளை நல்ல
உட்கிடை கொண்ட ஓர் உத்தமியை
புணர்ச்சிக் கென்று கட்டி, விழற்
பொன்னையன் கையிற் கொடுப்பதுவோ?
என்னை ஏன் நீ படைத்தாய்? உள்ளே
ஒரு சிறு சிந்தையை ஏன் அமைத்தாய் ?
திண்ணிய மனபலத்தைப் பல
திக்குகள் சொல்லினும் குனிவறியா
சென்னியை, முதுகடி எலும்பமைப்பை எனைச்
சிக்கலில் மாட்டிட ஏன் கொடுத்தாய்?
எனக்குல கீந்தவன் நீ, எனை
இவ்வளவு தூரமும் கொண்டுவந்து பலர்
கணக்கிலே வைத்தவன் நீ, அது
கல் எழுத்தாவணம் ஆகுமுன்பே
இடக்கிடை தடக்கமிடல், எனை
இழிந்தோர் கைகளால் அளவிடுதல்,
அடுக்குமோ உனக்கிறைவா? ''சுயம்
அமைத்தவா'' தகுதியை அமுக்கிடுதல்
படைப்பிலே பாரிய குற்றமடா - 'திறன்
இருக்கு தென்றால் உடன் தீர்வுகொடு',
இல்லை யெனில் 'எனைத்தீர்த்துவிடு'.
அவள் அப்படித்தான்
எத்தனை பாடல்கள் காலப்போக்கில் வந்துசென்றாலும், நெஞ்சில் நிற்கும் இராகங்கள் ஒரு சிலவே அப்படி என் நெஞ்சில் நினைவுதெரிந்த நாள்முதல் நிற்கும்பாடல்களில் இந்தப்பாடலுக்கு என்று என்னிடம் தனி மரியதை உண்டு.
ஜேசுதாஸிடமிருந்து வருவது குரல் இல்லை சுகம். அதை கேட்பது ஒரு தவம்.
“நீ கண்டதோ துன்பம்
இனிவாழ்வெலாம் இன்னம்
சுகராகமே ஆனந்தம்
நதியிலே புதுப்புனல்
கடலிலே கலந்தது
நம் சொந்தமோ இன்று இணைந்தது
இனிமை பிறந்தது” எத்தனை தடைவ வேண்டும் என்றாலும் கண்களைமூடிக் கேட்டுக்கொண்டே இருந்துவிடலாம்…இனி எல்லாம் சுகமே…
ஷர்தாஜி ஜோக்
ஷர்தாஜிக்கு வந்த பார்ஸல் ஒன்றை கொண்டுவந்து ஷர்தாஜியிடம் கொடுத்த தபால்க்காரர்…உங்களுக்காக நான் இந்தப்பார்சலை சுமார் 5 கிலேமீற்றர் தூரம் தூக்கிக்கொண்டு வந்திருக்கின்றேன் என்றார்…பாசலை வாங்கிவிட்டு …ஏன் நீங்கள் இவ்வளவு சிரமப்பட்டு 5 கிலோமீற்றர்கள் வரவேண்டும் பேசாமல் இதை போஸ்ட் பண்ணி இருக்கலாமே என்றார் நம்ம ஷர்தாஜி.
10 comments:
நானும் ஸபெயின்தான் வெல்லும் என எதிர்பார்கிறேன் ஆனால்??? அந்த கவிதை மிக அருமை ...
ரசித்தேன் அண்ணா!!!!
நெதர்லாந்து வெல்ல வேண்டும்
//இந்த இறுதிவிருந்து, லேசாக ஒரு அணி வென்றதாக இருக்காமல், இறுதிவரை பரபரப்பான போட்டியாக இருந்தால், பார்க்கும் எங்களுக்கு ஹப்பி…பார்ப்போம்..//
அதே :)
என் அபிமான இயக்குனர்களில் ஒருவரான பாலாவுக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துகள் :)
கவிதை அருமை.
உண்மையைச் சொல்லவேண்டுமென்றால் ஷர்தாஜி ஜோக்குகளை நான் அவ்வளவாக ரசிப்பதில்லை. குறிப்பிட்ட ஒரு சமூகத்தினரை மட்டும் குத்துவதை நான் விரும்பவில்லை.
குறும்படம் அருமை. அவளின் பார்வை இயலாமையினையும் புரிந்துகொண்டு அவள் புரியும்படி தன் காதலை சொல்லும் அந்த காதலன் உயர்ந்து நிற்கின்றான்.
ஜேசுதாசிடமிருந்து வருவது குரல் அல்ல சுகம். அது ஒரு வரம் மிகச்சரியான உண்மை அண்ணா.
ஸ்பெயின்தான் வெல்லும்.
கவிஞர் திருக்குமரனை உங்கள் மூலம் அறிமுகமானமையும் நினைத்துப்பார்க்கின்றேன்.
வணக்கம் அண்ணா. ஹொக்ரெயில் போதை ஏறுது. இன்று நெதர்லாந்துதான் ஜெயிக்குது பாருங்கள். குறும்படம் நல்லாயிருக்கு. அப்புறம் திருவின் கவிதை ஒரு திரு.
எமது உறவுகளும் தொடர்கதையே.. நன்றி அண்ணா
@Balavasakan
எதிர்பார்ப்புகள் வீண்போகவில்லைத்தானே வாசகன். நன்றிகள்
@Anuthinan S
நன்றிகள் அனுதினன். தங்கள் வரவு நல்வரவாகுக. பறவாய் இல்லை அடுத்துமுறை பார்த்துக்கொள்ளலாம். நெதர்லாந்து இதே போர்மை பாதுகாத்துக்கொண்டால் சரி.
@Subankan
நன்றி சுபாங்கன். தாங்கள் சர்தாஜிகள் பற்றி சொல்லிய கருத்தினை நான் பல முறை யோசித்து உள்ளேன். இது தொடர்பாக " மற்றவர்களை சரிக்கவைக்க முட்டாள் பட்டத்தையும் சந்தோசமாக ஏற்றும் சர்தாஜிகள்" என்ற பதிவு போட்டிருக்கின்றேன். பல விடயங்கள் அதில் விரிவாக உள்ளன. படித்துப்பாருங்கள்..
@ டிலான்
நன்றி டிலான். தவறணையினை சீக்கிரமே திறந்திடுங்க..
@சயந்தன்
நன்றி சயந்தன். கனடிய பதிவர்களையும் ஒன்றிணைத்து. பல சிறுகதைகளையும், ஆணித்தரமான கவிதைகளையும் அரங்கேற்றுங்கள்..காத்திருக்கின்றோம்.
Post a Comment