ஈழப்பிரச்சினை தொடர்பாக இந்தியாவின் பார்வை மீண்டும், மீண்டும் தவறான பார்வையிலேயே சென்று கொண்டிருக்கின்றது. இதற்கு முக்கியமான காரணம், ஈழப்பிரச்சினை தொடர்பாக ஆராய்வதற்கு இந்தியா நியமிக்கும் ஆட்கள் அப்படிப்பட்டவர்களே.
இந்தியா, பார்த்தசாரதிக்குப்பின்னர் நியமித்த அதிகாரிகள் அத்தனைபேருமே இந்தியாவை தவறான பாதைக்கும், தமிழர்களுக்கு துரோகம் இழைக்கும் பாதைக்குமே இட்டுச்சென்றுகொண்டிருக்கின்றனர்.
இதனாலேயே இந்தியா மீண்டும் மீண்டும் ஈழத்தமிழர்களின் முதுகில்க்குத்தி இறுதியாக நெஞ்சிலும் குத்திவிட்டு தற்போது ஒன்றுமே தெரியாது போல கபடநாடகம் போட்டுக்கொண்டிருக்கின்றது.
இதன் தொடர்சியாகத்தான் தற்போது இந்தியப்பிரதமர் ஈழப்பிரச்சினை தொடர்பாக மு.கருணாநிதியின் ஆலோசனையினை கேட்பதும் அமையும்.
இவ்வாறான தவறான வழிகாட்டலின் மூலமாகவே தற்போது ஈழத்தமிழன் ஒவ்வொருவனும் இந்தியாமீது பாகிஸ்தானியர்களைவிட கடும் கோபமும், குரோதமும், கொண்டிருக்கும் நிலை ஏற்பட்டுவிட்டது.
குருக்கள் செய்தா குத்தமில்லை!!
வழி மாசடைகின்றது, உலகம் வெப்பமாகின்றது, காடுகள் அழிகின்றன, கடல் மாசடைகின்றது என்று பல காரணங்களை காட்டி, பெரும் கண்டிப்புடன் மூன்றாம் உலக நாடுகளை நிர்ப்பந்தப்படுத்தி பல ஒப்பந்தங்களில் கையொப்பமிட பிரயத்தனம் எடுக்கும் வல்லரசுகள், தம்மை சூழலின் பாதுகாவலர்களாக காட்டிவருகின்றனர்.
ஏற்கனவே அவர்களால்த்தான் சூழல் இத்தனை ஆபத்துகளையும் சந்தித்தது என்பது வேறுகதை.
இந்த நிலையித்தான் இப்போது மெக்ஸிகோ வளைகுடாவின் கடற்பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள எண்ணெய்க்கசிவு பெரும் சர்ச்சைக்கு உட்பட்டுள்ளது.
இந்த எண்ணெய்க்கசிவினால் நாளாந்தம் பாதிக்கப்படும் கடல் எல்லைகளின் தூரம் அதிகரித்துக்கொண்டு செல்கின்றது. எண்ணெய் கசிவை முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர 90 நாட்களாவது தேவைப்படுமாம்.
ஏற்கனவே எண்ணை கடலிலே தீவுகள் போல படிந்து மெல்ல மெல்ல வேறு இடங்களுக்கு நகர்ந்துகொண்டு செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.
இதற்கான முழுப்பொறுப்பையும், பிரித்தானிய பெற்றோலிய நிறுவனமும், அமெரிக்காவுமே ஏற்கவேண்டும், எனினும் இந்த பாரிய அனர்த்தம் ஒன்றுமே இல்லாதபடி அமுக்கப்பட்டுவிடும்.. குருக்கள் செய்தாத்தான் குத்தமில்லையே!!
Unnoticed Love (காதல்???)
இல்லாதபிரதேசவாதம், மதவாதம் பேசுவோர், பதிவிடுவோர்களே!!
அண்மைக்காலமாக தோற்றுப்போன பிரதேசவாதத்தை மீண்டும் தோண்டியெடுத்து, அறிக்கைவிடுத்து, பதிவிட்டு வரும் செயலைக்காணக்கூடியதாக இருக்கின்றது.
இல்லாத ஒன்றை இருக்கிறது என்று தொடர்ந்தும் பேசாதீர்கள்.
காரணங்களும், மூலமும் உள்ளது எனச்சொல்லி விசங்களை தூவாதீர்கள்.
நாங்கள் அனைவரும் தமிழர்களே..பேசும் மொழிதான் இனம். ஒரு இனத்திற்கு வடக்கோ, கிழக்கோ தெற்கோ, பிரிவுகள் என்றால் அந்த திசைகளையே கொழுத்தி எறிவோம்.
யாழ்ப்பாணம் வந்துதான் பாருங்கள்… பல பாகங்களிலும் எத்தனை முஸ்லிம் கடைகள் முளைத்துள்ளன, கிழக்கு பிரதேசத்தோர் எத்தனைபேர் பல தொழில்களை தொடங்கியுள்ளனர்.
யாழ்ப்பாண மக்கள் என்ன அடித்து விரட்டியா விட்டார்கள்? இல்லையே.. ஆதரவு வழங்குகின்றார்கள்.
ஆக பிரதேச வாதம், மதவாதம் எல்லாம் மக்களிடம் இல்லை. ஒரு சிலபேரின் அரசியல் நலன்களிலும், அவர்களின் நரித்தனமான மனங்களிலும் உள்ளன.
திருமயூரனின் கவிதை ஒன்று..
..................................
..................................
கடல் இல்லாமல்
அலை!
தலை இல்லாமல்
தவம்!
வரங்களுக்காக அல்ல - உங்கள்
சிரங்களுக்காக!!
தறித்துவிட்டு சென்றவனே
இது கேள்..
ஒளித்தொகுக்க -என்னில்
பச்சையம் இல்லை -இருந்தும்
வீச்செறிந்து விரையும் விதைகளுக்கு -நான்
கர்ப்பப்பை!
இங்கே - நீ
பறித்தது
கொப்புகளை அல்ல- உன்
வரும்காலத்தின் வேர்களை!
நான் வளர்விப்பது
செடிகள் அல்லஇ சந்ததிகள்!
உறுப்பில்லை என்ற கவலையில்
உலகு வெறுத்திருக்கும் உறவுகளே - இங்கே
உயிர் இல்லாமல் தொடரும்
பிரசவம் பார்த்திர்களா?
இது..
அழித்தவனை
காக்கும் கடும் தவம்,
எரித்த நெருப்பையே,
குளிர்விக்கும் பிரயத்தனம்!
முடிந்த வரலாற்றுக்கு -மீண்டும்
எழுதும் முன்னுரை!!
.....................................
சிகரம்.
எஸ்.பி.பி. சித்திரா என்றாலே பாடல்களில் ஒரு ரம்மியம் இருக்கும். அதிலும் எஸ்.பி.பியே தன் குரலுக்கு எற்றதுபோல் இசையமைத்துப்பாடினால்?? என்ன சொல்லவும் வேண்டுமா?
"என் வானமெங்கும் பௌளர்ணமி இது என்ன மாயமோ
என் காதலா உன் காதலா நான் காணும் கோலமோ
என் வாழ்க்கை என்னும் கோப்பையில் இது என்ன பானமோ
பருகாமலே ருசியேறுதே இது என்ன ஜாலமோ
பசியென்பதே ருசியல்லவா அது என்று தீருமோ"
என் காதலா உன் காதலா நான் காணும் கோலமோ
என் வாழ்க்கை என்னும் கோப்பையில் இது என்ன பானமோ
பருகாமலே ருசியேறுதே இது என்ன ஜாலமோ
பசியென்பதே ருசியல்லவா அது என்று தீருமோ"
என்ற வைரமுத்துவின் வரிகள் அற்புதம். எப்போதுவேண்டும் என்றாலும் இந்தப்படாலைக்கேட்கலாம். சலிக்காது…
ஷர்தாஜி ஜோக்
ஷர்தாஜி மிகப்பெரிய ஆன்மிக மகான் ஒருவரை சந்திக்க சென்றார். மகானும் சர்தாஜியை ஆசீர்வதித்து “நீ சிரஞ்சீவியாக இரு” என்றார்.
அதற்கு நம்ம ஷர்தாஜி ஐயோ..மகானே எனக்கு தெலுங்கு அறவே தெரியாது என்றார்.
அதற்கு நம்ம ஷர்தாஜி ஐயோ..மகானே எனக்கு தெலுங்கு அறவே தெரியாது என்றார்.
17 comments:
//ஈழத்தமிழன் ஒவ்வொருவனும் இந்தியாமீது பாகிஸ்தானியர்களைவிட கடும் கோபமும், குரோதமும், கொண்டிருக்கும் நிலை ஏற்பட்டுவிட்டது.//
//எனினும் இந்த பாரிய அனர்த்தம் ஒன்றுமே இல்லாதபடி அமுக்கப்பட்டுவிடும்.. குருக்கள் செய்தாத்தான் குத்தமில்லையே!!//
//பிரதேச வாதம், மதவாதம் எல்லாம் மக்களிடம் இல்லை. ஒரு சிலபேரின் அரசியல் நலன்களிலும், அவர்களின் நரித்தனமான மனங்களிலும் உள்ளன.//
//நாங்கள் அனைவரும் தமிழர்களே..பேசும் மொழிதான் இனம்.//
எதுவும் திருந்தப்போதாக தெரியவில்லை அண்ணா. இதே மனக்குமுறல்கள் எனக்கும் உண்டு.
இன்று என்ன ஹொக்ரெயில் செம ஹொட்டாக இருக்குது?
ஜனா….!
ஈழம்- இந்தியா- உலக வல்லரசு- சூழல் மாசடைதல்- பிரதேசவாதம்- மதவாதம்: இவற்றுக்கெல்லாம் என்னத்தைச் சொல்லி என்னத்தை நடந்து… சலிப்புத்தான் வருகிறது. நடப்பவையைப் பார்க்க.
சிகரம்: எஸ்பிபி இசையமைத்த அற்புதமான திரைப்படம். அந்தப் படத்தில் இடம்பெற்ற அனைத்துப் பாடல்களும் எனக்கு பிடிக்கும். அதுவும், நீங்கள் குறிப்பிட்டுள்ள பாடலில் ராதாவுக்கும், எஸ்பிபிக்கும் இடையில் இருக்கிற காதல் அற்புதம்.
// மருதமூரான். said...
ஜனா….!
ஈழம்- இந்தியா- உலக வல்லரசு- சூழல் மாசடைதல்- பிரதேசவாதம்- மதவாதம்: இவற்றுக்கெல்லாம் என்னத்தைச் சொல்லி என்னத்தை நடந்து… சலிப்புத்தான் வருகிறது. நடப்பவையைப் பார்க்க. //
அப்படியே வழிமொழிகிறேன்...
சலித்துவிட்டது... :(
டிலான், மருதமூரான், கன்கொன்
மூவரும் சொன்னதுபோல என்னத்தை சொல்லி என்ன பயன். நானும் இவற்றைப்பற்றி எழுதி எழுதி குமுறி மாரடித்ததுதான் மிச்சம். இந்தக்கால தமிழ் அரசியல், தமிழர்களின் உணர்வுகளையும், குமுறல்களையும் அடக்குபவையாகவே உள்ளன
என்றாலும் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளீர்கள். இந்த எழுத்துக்கள் சென்றடையவேண்டியவர்களை சென்றடைந்து அவர்களின் மனசாட்சியை (இருந்தால்) உலுக்கினால் சரி.
மற்றவைகளை மற்றவர்கள் சொல்லிவிட்டதால், மற்றவைகளுக்கு வரகின்றேன்.
குறும்படம் யதார்த்தம்தான் கொழும்பில் இந்தக்காதல்தான் நடக்கின்றது.
மயூரனின் கவிதை அற்புதம், பல விடயங்களை சொல்ல வருகின்றது..எதிர்பார்ப்பு
சர்தாஜி...பஞ்சாப்பிலிருந்து, ஆந்திராவுக்கு போகவேண்டும் என நினைத்துவிட்டார்போல..
அற்புதமான கவிதை ஜனா அண்ணா அது ..மற்றையபடி நாம என்னத்தை பண்ணுறது நான் இந்த எண்ணெய் படங்களை பார்த்து ரொம்பவே ஷாக் ஆகியிருந்தேன் .. கடல் மரூன் கலரில இருந்தது...
சலித்துவிட்டது, எனக்கும்தான். புன்னகையுடன் கடந்துபோகக் கற்றுகொண்டிருக்கிறேன், எல்லாவற்றையுமே :)
பதிவில் முதலாவது விடயம் தவிர மீதி அனைத்துமே நல்லா இருக்குது!! சிகரம் பாடல் சூப்பர்!
முதலாவத நான் பார்க்க இல்ல!!
@டிலான்
//இன்று என்ன ஹொக்ரெயில் செம ஹொட்டாக இருக்குது?//
நிலைகெட்ட மாதர்களை கண்டு சிலவேளைகளில் நெஞ்சம் பொறுக்குதில்லையே டிலான். அதுதான்...ம்ம்ம்...இன்று கொஞ்சம் மிக்ஸ்ஸிங் பிழைச்சுத்தான் போச்சு ராவா அடிச்ச பலீங்கு!!
@மருதமூரான்.
ரிப்பீட்டு........
அப்புறம் இந்தப்பாடல் உங்களுக்கு இந்த காலத்தில் நல்லாப்பிடிக்கும் என்று தெரியும் மருதமூராரே...
@கன்கொன் || Kangon
ரிப்பீட்டு
நன்றி அன்புத்தம்பி கன்கொன்
@சமுத்திரன்.
சமுத்திரமே சலித்துக்கொள்ளலாமா? பேயனுக்குப்பெயர் தமிழன் என்ற எண்ணத்திற்கான சாட்டை தாங்கள் அல்லவா?
@Pradeep
மருத்துவர் தன் கடுமையான பணிகளுக்கு மத்தியிலும் கொழும்பில் நடக்கும் விடயங்களையும் கவனித்துக்கொண்டுதான் இருக்கின்றார் போல!
@Balavasakan
அடடா..பெரிய மருத்துவரும், சின்ன மருத்துவரும் அடுத்தடுத்து வந்திருக்கின்றீர்களே..இதைப்பார்த்து நான் "சாக்"காகிட்டேன்..
@Subankan
பேசாமல்ப்போவதே நல்லவனுக்கு அழகு என்றா?? அதுவும் சரிதான் சுபாங்கன்.
@Anuthinan S
எஸ்கேப்....!! புரியுது புரியுது...முதலாவது விடயமா அப்படி ஒன்றும் எழுதவில்லையே அனுதினன்
Post a Comment