என்ன வியப்பாக இருக்கின்றதா? ஓர் எதிர்மறையான வாக்கியத்தால், நேரான கருத்துக்களை கொண்டு செல்லும் புதிய யுத்தியை கையாண்டு, “ப்பிளீஸ் இந்தப்புத்தகத்தை வாங்காதீங்க” என்று பெயர்வைத்து இந்தப்பபெயராலும் தான் உள்ளே எழுதியிருக்கும் விடயங்கள் புதியவை அல்ல என்றாலும்கூட, அலட்டல்கள் இல்லாமல் மிக எழிதான பல உதாரங்களை, அன்றாட நடப்புக்கள், சினிமா நகைச்சுவை காதாபாத்திரங்களில் வசனங்களில் இருந்து தொட்டுக்காட்டி வாசிக்கத்தொடங்கியதில் இருந்து இறுதிவரை அந்த புத்தகத்தில் இருந்து கண் எடுபடாமல் முழுவதையும் வாசிக்கச்செய்த கோடிக்கணக்கான மக்களின் பேரபிமானத்தைப்பெற்ற விஜய் ரி.வி.யின் நிகழ்ச்சித் தயாரிப்பாளர், தொகுப்பாளர், நிகழ்ச்சி வழங்குனர் என பன்முகத்திறமைகளும் கொண்ட நீயா நானா, நடந்தது என்ன! புகழ் கோபிநாத் பற்றி எழுதவந்தமையினால்த்தான் இந்தப்பதிவுக்கு இந்த தலைப்பினை இட்டேன்.
கோபிநாத், நான் பார்த்து அதிசயித்த மனிதர்களில் ஒருவர். என்னைப்பொறுத்தவரையில் தன்னகத்தே பன்முகப்படுத்தப்பட்ட திறமைகளை கொண்டிருப்பவர் அவர் என சொல்வது பிழை இல்லை. நேர்த்தியான, மிக இலாவகமான தமிழ் உச்சரிப்பு, கேட்பவர்களின் மனங்களில் கேக்கத்தூண்டும் தொனி என்பது மட்டும் இன்றி ஒரு பேச்சை நினைவில் வைத்திருக்க தூண்டும் மிக நிதானமான தொனி. அலட்டல்கள் இல்லாமல் சொல்லவந்த விடயத்தை பார்வையாளர்களின் பொட்டில் அடித்ததுபோன்ற துல்லியமான வசனநடை, ஆங்கிலப்புலமை, விரசங்கள் இல்லாத நகைச்சுவை என அடுக்கிக்கொண்டே போகலாம்.
இப்போது வேறு பல சனல்களிலும் கோபினாத்தின் நடை, உடை பாவனை அத்தனையும் காப்பி அடித்து அதேபோல நிகழ்ச்சிகளை வழங்கும் போலிக் கோபிநாத்களையும் காணக்கூடியதாக உள்ளது. ரெக்கோடிங் நிகழ்வுகள் மட்டும் அன்றி நேரடி நிகழ்வுகளிலும் தன் தனித்திறமையினை பல முறை நிரூபித்துக்காட்டிவர் கோபிநாத். வாமணன் திரைப்படத்தின் மூலம் திரை உலகத்திற்கும் கோபிநாத்தாகவே இந்த கோபிநாத் அடியெடுத்துவைத்துள்ளதையும் குறிப்பிடடுக்கொள்ளலாம்.
சென்னையில் எக்மோரில் நடந்த ஒரு நிகழ்வு ஒன்றில் நான் கோபிநாத்தை நேரடியாக காணும் வாய்ப்பு கிடைத்து. என்னுடன் வந்த நண்பர் ஒருவர் அவருக்கு பழக்கமானவர் ஆகையால் அவருடன் ஒரு சில நிமிடங்கள் பேசும்வாய்ப்பு கிடைத்து. அந்த சில நிமிடப்பேச்சுக்களில், அவருக்கு இருந்த தமிழின உணர்வும், அப்போதைய ஈழத்து நிகழ்வுகளால் மனதுக்குள் இருந்த வேதனைகளையும் அறிந்துகொள்ளக்கூடியதாக இருந்தது.
சரி அவர் எழுதிய “ப்ளீஸ் இந்தப்புத்தகத்தை வாங்காதீங்க” விடயத்திற்கு வருவோம்… நேர்ச்சிந்தனைகளின் சக்தி, ஆளுமை விருத்தி, மனதின் சக்தி, எமது இலக்குக்களை அடையும் இலட்சியம் என முன்னர் நாம் படித்த கேள்விப்பட்ட விடயங்கள் என்றாலும்கூட அந்த விடயத்தைக்கூட, தனது பாணியில் பக்கத்தில் இருந்து கோபிநாத்தே நமக்கு வாசித்துக்காட்டுவதுபோல நாம் படிக்கும்போது எமக்கு தோன்றுவதே அவரது எழுத்தின் வெற்றி. கோபிநாத்தின் பேச்சுக்களில் மட்டும் இன்றி அவரது எழுத்துக்களிலும், ஆளுமையும், இலாவகமும் இருக்கும். சாருபோன்ற, ஞாநிபோன்ற ஆட்களை எல்லாம் நிகழ்ச்சியில் இருந்தி அவர்களின் கருத்துக்களை எல்லாம் வெட்டியாடி நிகழ்ச்சிகளை சிறப்பாக நடத்துவது என்றால் சும்மாவா என்ன?
“நாம் ஓடிக்கொண்டிருக்கும் திசையின் இலக்கு என்ன என்று யோசிக்க வைக்க இந்தப் புத்தகம் பயன்படலாம். கணக்குகளின் எண்ணிக்கை அதிகம் ஆகும்போது கால்குலேட்டர் உபயோகிப்பதுபோல் இந்தப் புத்தகம் பயன்படும்” என அவர் தனது புத்தகம் பற்றி முன்னுரையில் தெரிவித்திருப்பதே ஒரு முத்தாய்ப்பாய் அமைந்துள்ளது.
கோபிநாத் ஏன் இன்னும் மணம் செய்துகொள்ளவில்லை என்று பலதரப்பட்டவர்களின் கேள்விகளுக்கும் கடந்த ஏப்ரல்மாதம் நான்காம் நாள் அவர் ஒரு முற்றுப்புள்ளியும் இட்டிருக்கின்றார். ஆம் அந்த நாளில்த்தான் அவர் துர்க்காவுடன் இல்லறவாழ்வில் இணைந்துகொண்டிருக்கின்றார். என்னைப்பொறுத்தவரையில் துர்க்கா மிகப்பெரிய அதிஸ்டசாலி என்றுதான் கூறவேண்டும்.
என் தினிப்பட்ட கருத்து என்னவென்றால் பன்முகப்பட்ட திறமைகள் கொண்ட கோபிநாத் மேலும் ஆக்கபூர்வமான புதுமையான பல நிகழ்ச்சிகளை வழங்கவேண்டும் என்பதுதான். கண்டிப்பாக உங்களால் மேலும் மேலும் பதுமையான பயன்தரும் விடயங்களை கொடுக்கமுடியும் கோபிநாத்.
அப்பேர்ப்பட்ட நிகழ்ச்சிகளை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருப்பவர்களில் பல கோடி பார்வையாளர்களில் நானும் ஒருவனாகத்தான் இருப்பேன்.
சுஜாதாவின் திகில், மர்ம நாவல்களை வைத்து (ஏற்கனவே பல தொடர்கள் வந்துள்ளன) இனிவரும் தொடர்களில் கணேஸ் பாத்திரத்திற்கு என்னுடைய சொய்ஸ் கோபிநாத்தான்.
9 comments:
கோபிநாத்திற்கு பிந்திய திருமண வாழ்த்துக்கள். மிகத்திறமையான ஒரு மனிதர் ஐயா.. பதிவுக்கு நன்றி
ஜனா அண்ணே நிசமாவே வாசிக்கேல்ல கோல் பண்ணி சொல்றீங்களா...:p
ஹீ..ஹீ... எலாரும் ஒரே படிப்பாவே இருக்கீங்க...
கோபிநாத் நிகழச்சியை நடாத்திச்செல்லும் பாங்கையும், நிலைமைகளைச் சமாளிப்பதையும் பலதடவை வியந்திருக்கிறேன். வழமைபோல புத்தகம் இன்னும் வாசிக்கவில்லை
வாழ்த்துக்கள்..பதிவின் நாயகன் கோபிநாத்திற்கும், பதிவை இட்ட ஜனா அண்ணா உங்களுக்கும்.
@ Pradeep
உண்மைதான் மருத்துவர் அண்ணா. நன்றிகள்
@Balavasakan
இந்தப்புத்தகத்தை எப்போதோ வாசித்துவிட்டேன். திடீர் என கண்ணில் பட்டது உடனே இந்தப்பதிவு வந்திச்சு. பரீட்சைகள் எல்லாம் முடிந்துவிட்டனவா பாலவாசன். அப்படி என்றால் ஒன்றென்ன பல புத்தகங்கள் உங்கள் வாசிப்புக்காக திறந்துவிடப்படுகின்றன. பிடித்ததை எடுத்து செல்லுங்கள்.
@Subankan
நன்றி சுபாங்கன்..விரைவில் வாசியுங்கள்..
@சயந்தன்
நன்றி சயந்தன். நதிவழியின் கனடா ஓட்டத்தையும் தரிசிக்க ஆவலாக உள்ளேன்.
மிகப்பிந்திய திருமண வாழ்த்துக்கள். பதிவுகள் நன்றாக இருக்கிறது.
mathisutha.blogspot.com
Post a Comment