Thursday, July 8, 2010

“ஸ்பெயின் வொன் த வேர்ள்ட் கப்” - நகைச்சுவை சிறுகதை


நாள் 11.07.2010 ஞாயிற்றுக்கிழமை
நிறைந்த அமாவாசை

இன்று என்னமோ தெரியவில்லை, மனதுக்குள் ஒரு பட்டாம்பூச்சி பறந்துகொண்டே இருக்கின்றது. சாப்பாடுகூட காலையில் இருந்து ஒரு அவசரத்துடன்தான் சாப்பிடத்தோன்றுகின்றது. மனது முழுக்க ஸ்பெயின் கோல்க்கீப்பர் ஹஷில்லாஸ் தவிர மற்ற பத்துபேரும் ரொனால்ட்டோவின் மனதிற்குள் கோல் போட்டுக்கொண்டே இருந்தார்கள்.

ரொனால்ட்டோ!! ஆச்சரியம் வேண்டாம். காற்பந்தாட்டத்தில் இவனுக்கு இருக்கும் ஆர்வக்கோளாறு காரணமாக அவனது ஊரே அவனுக்கு வைத்த பெயர் ரொனால்ட்டோ.. அவனது நியப்பெயர் வெங்கட். ஆக நாம் அவனை ரொனால்ட்டோ வெங்கட் என்று அறிந்துகொள்வதே பொருத்தம்.
எப்போதுமே பிரேஸில்தான் அவனது ஆதர்ஸன அணி. இந்தமுறை பிரேசில் தோற்றுப்போனதை ஒருநாள் முழுதும் சாப்பிடாமல் நோன்பிருந்து ஆற்றிக்கொண்டு, அடுத்து தனது அபிமான அணியாக ஸ்பெயினை தேர்ந்தெடுத்துக்கொண்டான்.
தான் எப்போதும் அணியும், பிரேஸிலின் மஞ்சள்கலர் ஜேசியைக்கூட கழட்டிவிட்டு, ஸ்பெயின் ஜேசியை தேடிப்பிடித்து வாங்கி அணிந்துகொண்டுவிட்டான் ரொனால்ட்டோ வெங்கட்.

இந்த பிஃபா உலக்கோப்பை 2010 தொடங்கியதில் இருந்து ஊரில் உள்ள கேபிள்காரனுக்கும் அவனுக்கும் இடையில் பெரும்போரே வெடித்துவிட்டது. இவனது ஸ்கட் ஏவுகணைகளை தாங்காமல் கேபிள் காரரும் எந்த சனல் தெளிவாக இருக்குதோ இல்லையோ, ஈ.எஸ்.பி.என் மட்டும் கண்ணாடிபோல தெரியவேண்டும் என்று பகீரதப்பிரயத்தனம் செய்துகொண்டிருக்கின்றார்.

சரி..இன்று இறுதிப்போட்டி அல்லவா? காலையில் இருந்து ரொனால்ட்டோ வெங்கட்டிற்கு காலும் ஓடவில்லை கையும் ஓடவில்லை. ஏதோ ஸ்பெயின் அணிக்கே தான்தான் அறிவிக்கப்பட்ட இரசிகன் என்பதுபோல துடித்துக்கொண்டிருந்தான். எப்போதுமே தான் இரசிப்பதை மற்றவர்களும் சேர்ந்து இரசிக்கவேண்டும், என எண்ணுபவன் அவன். அதற்காக தான் பார்த்த படங்களைக்கூட வேண்டும் என்றே நண்பர்களை ஒற்றைக்காலில் நின்று அழைத்துக்கொண்டுபோய் இரண்டாம்முறையும் இரசிப்பான் இந்த ஆர்வக்கோளாறு.

அதன் பிரகாரம் இன்று இறுதியாட்டத்தை 16அடி திரையில் போடுவதாக உத்தேசம். வீட்டில் இருந்து சற்று தள்ளியிருக்கும் சனசமுக நிலைய மைதானத்தில் ஸ்கிரீன், புரொஜக்டர் என்பன வாங்கிவைத்து, ஊரே பார்க்கவைத்து தானும் இரசிக்கவேண்டும் என்ற திட்டத்தில்த்தான் காலையில் இருந்து காலில் சக்கரத்தை மாட்டிக்கொண்டு ஓடித்திரிகின்றான் ரொனால்ட்டோ வெங்கட்.

ஒருவாறு 12 ஆயிரத்திற்கு அவற்றை வாடகைக்கு எடுத்து, எலக்ரோனிக் விற்பன்னான கோபியிடம் அதை கொண்டு சேர்த்து…இந்தா.. மச்சான்… சரியா ஆறு மணிக்கே வாசிகசாலையில் வைத்து ரெஸ்ட் பண்ணிப்போடனும்..இறுதியாட்டம் சும்மா யமாய்க்கவேண்டும்.. ஸ்கீனில பாக்கேக்க பார்க்கவாறவைக்கு, றிங்ஸ்சும், பிஸ்கட்டும் தருவதாக கடைக்கார அண்ணை ஒத்துக்கொண்டுவிட்டார், ஒருக்கா வாசிகசாலை கிரௌண்டையும் துப்பரவாக்கவேண்டும், பெடியள் வருவாங்கள் என்று விட்டு ஓடியே விட்டான்..

ஒருவாறு மாலை 6 மணிக்கே புரொஜக்டரை, 16அடி ஸ்கீனில விழுத்தி, கேபிள் கொடுத்து எல்லாம் பார்த்தாகிற்று. எதற்கும் முன்னேற்பாடாய், மின்சார சபைக்கும்…!
அண்ணை எல்லாம் சரி..நீங்கள் அந்த நேரத்தில் சொதப்பக்கூடாது என்று வோனிங் கோலும் கொடுத்துவிட்டான் ரொனால்ட்டோ வெங்கட்.

நேரம் 8.30 வீட்டுக்கு ஓடிப்போய் அவசர அவசரமாக அம்மா தட்டில் போட்டுவைத்திருந்த என்னத்தையோ வாய்க்குள் திணித்து தண்ணீர் குடித்துவிட்டு வெளியால் வந்தான்… நேரம் 9 மணி. 11.30ற்கு எல்லாத்தையும் தொடங்கினால் சரி..கால் கையெல்லாம் காலையிருந்து ஓடித்திரிந்ததில் அலுப்பாய் இருக்கிறது..கொஞ்ச நேரம் படுப்பம்! இன்றும் ஒன்னரை மணித்தியாலம் சின்ன நித்திரை கொண்டுவிட்டு ஓடவேண்டும் என்று நினைத்துக்கொண்டு கட்டிலில் விழுந்தான் ரொனால்ட்டோ வெங்கட்.

இதோ ஆட்டம் தொடங்கிவிட்டது ஆட்டம் தொடங்கி முதல் பதினைந்தாவது நிமிடத்திலேயே கோனல் கிக் மூலம் தமது முதலாவது கோலைப்போட்டே விட்டது நெதர்லாந்து…ஐயோ..என கையை அடித்தான் ரொனாட்டோ வெங்கட்..
அப்புறம் இதோ டேவிட் வில்லா லாபகமாக பந்தைக்கொண்டு சென்று கர்லஸிடம் தட்ட, கார்லஸ் பந்தை மேலால் அடிக்க ஆம்..அதோ அழகான ஒரு கோல்..துள்ளிக்குதித்தான் ரொனால்ட்டோ டேவிட். அப்பறம் இரண்டு அணியும் இரண்டாவது கோல்.. யார்போடுவது என்று செமப்போட்டி போட்டார்கள்.
எதிர்பாராத நேரத்தில் இதோ பப்ரிகேஸ் அடித்த கிக் கோலாகின்றது..ஸ்பெயின் இரண்டுகோல்கள்..அனந்தத்தில் அழுதே விட்டான் ரொனால்ட்டோ வெங்கட்.

ஆட்டம் முடிகின்றது. மக்கள் ஸ்பெயின் கொடிகளுடன் ஆரவாரம் செய்கின்றர்.
இதோ ஸ்பெயின் அணி வரிசையாக வருகின்றது…அணித்தலைவர் ஹஷில்லாஸ்
ஆரவாரத்திற்கு மத்தியில் மேலே ஏறி உலகக்கோப்பையை பெற்று கத்திக்கொண்டே கோப்பையை மேலே தூக்குகின்றார்..பேப்பர்கள் பறக்கின்றன. ஆரவார ஒலியின் மைதானமே அலறுகின்றது…


ஷாமினாமினா..ஏ..ஏ...
வக்கா வக்கா..ஏ..ஏ..
ஷாமினாமினா...
ஷாமினாமினா..க்லைவா..
திஸ்ரைம் போர் அப்ரிகா


என ஷஹிரா பாடிக்கொண்டே ஆடுகின்றார்…திரும்பத்திரும்ப அதேபாடல்!!!!
நினைவுக்கு வருகின்றது அது தற்போதைய அவனது செல்போனின் ரிங்டோன்..
திடுக்கிட்டு எழும்புகின்றான் ரொனால்ட்டோ டேவிட்.. அழைப்பு கோபியிடம் இருந்து
நேரம் அதிகாலை 2 மணி.

“மச்சான் எங்டா திடீர் என்று உன்னைக்காணவில்லை. மச் முடிந்து பார்க்கவந்த ஆட்கள் எல்லாம் போய்ட்டார்கள். புரொஜக்டரையும், ஸ்கிரீனையும் வந்து எடுத்திட்டுப்போடா!!

என்ன????? திடுகிட்டான்…ரொனால்ட்டோ டேவிட்…
இந்த இரவிலேயே அவனுக்கு மேலும் இருட்டிக்கொண்டுவந்தது..மென்று விழுங்கிக்கொண்டு

மச்சான் ஸ்பெயின்தானே வென்றது??? என்று கேட்டான்

இல்லை மச்சான் நெதர்லாந்து 2-1 என்றான்..கோபி
கட்டிலில் தொப் என்றொதொரு சத்தம் கேட்டது…

16 அடி திரை ஒரே இருட்டாக இருந்தது.

18 comments:

Unknown said...

waaw..good Writing.
Ronaldo venkat...so sad.

Pradeep said...

கதை நன்றாக இருக்கின்றது. நகைச்சுவை கதை என்றாலும் ஒரு LOGIC இருக்கின்றது. காலத்திற்கேற்ற கதை

டிலான் said...

எல்லாம் அனுபவங்கல்தான்.நல்லாயிருக்கு.

Jana said...

நண்பர் பிரவீனிடம் இருந்து வந்த மின் அஞ்சல்..
"நகைச்சுவை கதை என்றாலும் பல நுண்மையான விடயங்களை புகுத்தியுள்ளீர்கள். கதை ஆஹா...மேலும் சொல்லல் ஆகா.
மேலும் "ழ"கர "ள"கர மயக்கம்???? கொஞ்சம் கவனியுங்கள் பாஸ்!!

பதில். கருணாநிதிக்கு வாலியின் வசனங்கள்!!!
பிடிக்காவிட்டாலும் சொன்னவிதம் பிடித்துவிட்டது.

பதில்:அப்புறம் தாங்கள் உட்பட பலர் என்னை மன்னிக்கவேண்டும், தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும் என்பதுபோல இன்னும் எனக்கு இந்த "ழ" கர "ள" கர மயக்கம் இருந்துகொண்டே வருகின்றது.

Unknown said...

Very Nice and Funny story.

balavasakan said...

அபசகுனம் அபசகுனம் ஒரு வேளை எனக்கும் இப்படி நடக்கலாம் !!

maruthamooran said...

ஜனா….!


கால்ப்பந்து காய்ச்சல் எனக்கு இம்முறை அவ்வளவாக இல்லாவிட்டாலும், ஜேர்மனியை பிரேசிலுக்கு அடுத்து பிடிக்கும். பிரேசில் சாதிக்கத்தவறியதை ஜேர்மனி சாதிக்கும் என நினைத்திருந்தேன். அதிலும், மண் விழுந்துவிட்டது.

இம்முறை என்னுடைய எதிர்பார்ப்பு ஸ்பெயினுக்கே கிண்ணம் என்று. 2008 ஐரோப்பியக் கிண்ணக் கால்ப்பந்தாட்ட இறுதியாட்டத்தில் வென்று கிண்ணம் பெற்றதிலிருந்து அவர்களின் வளர்ச்சி சொல்லிக்கொள்ளும் படியாகவே இருக்கிறது.

இனி, முக்கிய விடயத்துக்கு வருகிறேன். தங்ளுடைய கதை சொல்லும் திறன் எளிமையாக இயல்பாக இருக்கிறது. தொடர்ந்தும் இவ்வாறான கதைகளை எழுதுவதுடன், மொழிமாற்றுக் கதைகளையும் பதிவேற்றுங்கள்.

குறிப்பு: பான் கீ மூன் எனக்கு அனுப்பியுள்ள பிரத்தியேக மின்னஞ்சலில் மிக விரைவில் இலங்கையில், ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் செயற்பாடுகளை மீண்டும் தொடர இருப்பதாக அறிவித்துள்ளார்.

Subankan said...

ரொனால்ட்டோ வெங்கட் - ஆகா பாடசாலைக்காலத்தை ஞாபகப்படுத்துகிறது. யதார்த்தமான கதை :)

இம்முறை பலரும் ஸ்பெயினே வெற்றிபெறும் என எதிர்பார்ப்பதால் நெதர்லாந்து வெற்றிபெற்றுவிடும் போலிருக்கிறது. எதிர்பார்ப்புகள் எல்லாம் பொய்யாவதுதானே இந்த உலக்ககிண்ணத்தின் தனித்துவம்

Kiruthigan said...

நீதி: அளவுக்கதிகமா ஆசப்பர்ற ஆம்பளயும்......

ஆஹா..!
கதை அருமை அண்ணா...
எதுக்கும் இப்ப இருக்கிற நகைச்சுவை எழுத்தாளர்கள் தங்கட தங்கட கதிரையை இறுக்கிபிடிச்சிருக்கிறது உசிதம்.

Jana said...

@Nivetha
Thank you Nivetha

Jana said...

@Pradeep
அடடா..நகைச்சுவையில்க்கூட லொஜிக் பார்க்கின்றீர்களே அண்ணா..

Jana said...

@டிலான்

ஒரு விதத்தில் இதுவும் ஒரு அனுபவம்தான்.

Jana said...

@ Abarna

Thank You Abarna

Jana said...

@Balavasakan

யார் தூங்கினாலும் மருத்துவராக வரப்போகும் நீங்கள் தூங்கிப் பழகக்கூடாது பாலவாசகன்.

மேலே லொஜிக் பற்றி கதைத்த பிரதீப் அண்ணா ஒரு மருத்துவரே. 90களில் யாழ்ப்பாண மருத்துவ பீடத்தை கலக்கிய சகலதுறை விற்பன்னர்களில் அவரும் ஒருவர்.

Jana said...

@மருதமூரான்.

ஓஹோ..நீங்களும் ஸ்பெயின் பக்கம்தானா! பறவாய் இல்லை பார்ப்போம்.
அப்புறம் பாங் கீ மூன் எல்லாம் பிரத்தியேகமாக மின் அஞ்சல் செய்கின்றார்களா????
உஸ்ஸ்ஸ்ஸ்ஸ...............

எனக்குத்தானே சொல்லியிருக்கின்றீர்கள்...வெளியில் யாருக்கும் சொல்லிவிடாதீர்கள்.
(காலம் ரொம்ப கெட்டுப்போய் கிடக்கு)

Jana said...

@Subankan

//எதிர்பார்ப்புகள் எல்லாம் பொய்யாவதுதானே இந்த உலக்ககிண்ணத்தின் தனித்துவம்//

அன்னகரி...நீங்கள் என் கட்சிதான்.. நம்ம ஆர்ஜென்ரீனா வெளியாலபோச்சு. இனி யார் வென்றால் என்ன! வெல்லுற பயபுள்ளகளுக்கு எங்கட சப்போர்ட்..ஓகே தானே?

Jana said...

@Cool Boy கிருத்திகன்

ஏன் நிலநடுக்கம் ஏதாவது வரப்போகுது என்று ஒக்டோபஸ் போல சொல்லுகின்றீர்களா குளிர்ப்பையா????

Subankan said...

//அன்னகரி...நீங்கள் என் கட்சிதான்.. நம்ம ஆர்ஜென்ரீனா வெளியாலபோச்சு. இனி யார் வென்றால் என்ன! வெல்லுற பயபுள்ளகளுக்கு எங்கட சப்போர்ட்..ஓகே தானே?
//

டபுல் ஓகே :)

LinkWithin

Related Posts with Thumbnails