Tuesday, August 10, 2010

ஆகஸ்ட் 13 இல் திரைக்குவருகின்றது “The Expendables”


எதிர்வரும் 13 ஆம் நாள் - ஆகஸ்ட் 13, வெள்ளிக்கிழமை (ஷில்வஸ்ரனுக்கு இதிலெல்லாம் நம்பிக்கை இல்லைப்போல) உலகத்திரைகளில் மிக..மிக மிக பிராமண்டமாக வெளியிடப்படுகின்றது
“The Expendables” ஹொலிவூட் திரைப்படம்.



ஆர்னோல்ட், ஷில்வஸ்ரன் ஸ்ராலோன், ஜெட் லீ, ஆகியோருக்கு உலக சினிமாவில் தனித்தனியே மாஸ் உண்டு. ஆனால் இந்த மூவரும் இணைந்து நடித்து போதாத குறைக்கு
மிக்கி ரொக்கி, ஜோன்ஸன் ஷதாம், டொல்ப் டன்ஹிரன், எரிக் ரொபேட்ஸ், ரெர்றி கிறியூஸ், ஸ்ரீவ் ஒஸ்ரின் ஆகியோரும் ஒன்றிணைந்து ஒரு படத்தில் மிகப்பிரமாண்டாக தயாரிக்கப்பட்ட படத்தில் இணைந்து கலக்கினால் அது பற்றி சொல்லவும் வேண்டுமா? ஷில்வஸ்ரனுக்கு மட்டும் அல்ல எங்களுக்கும் இது ஒரு கனவு அணியாகவே உள்ளது.

முன்னர் 2010 ஏப்பரல் 30 ஆம் தேதி வெளியடப்படுவதாக இருந்து, பின்னர் உச்சக்கட்ட படப்பிடிப்புக்களை இன்னும் பிரமாண்டமாக எடுத்ததனால் நாட்கள் பின்னகர்ந்து ஜூலை 20ஆம் நாள் வெளியடப்படுவதாக இருந்து தற்போது எதிர்வரும் 13ஆம் தேதி திரைக்கு வருகின்றது “The Expendables”.

இந்த திரைப்படம் பற்றி கடந்த ஆண்டே நான் இரண்டு பதிவுகளை இட்டுள்ளபடியால் இந்த திரைப்படம் பற்றி மேலதிக தகவல்கள், ஸ்ரில்களை பார்க்க ஒரு தடவை என் முன்னைய பதிவையும் பார்த்துவிடுங்கள்.
இங்கே கிளிக்குங்கள்...

4 comments:

தர்ஷன் said...

எனக்கேதோ வெறும் வீர சாகசங்களை முன்னிறுத்தும் ஒரு பிரமாண்ட படைப்பாக மட்டுமே இருக்கும் என்று தோன்றுகிறது. ஆமாம் ஜனா Inception பார்த்து விட்டீர்களா?

ம.தி.சுதா said...

அண்ணா நானும் காத்திருக்கிறேன். வரட்டும் சும்மா நம்ம சோத்தி பசங்களின் பறந்தடிக்கும் சண்டையைவிட நல்லாத்தானே இருக்கும்.

Kiruthigan said...

எதிர்பார்க்கிறோம் ஆவலுடன்..

டிலான் said...

அண்ணை..இண்டைக்குத்தான் படம் ரிலீஸ்..பாவம் நீங்கள் யாழ்ப்பாணத்திற்கெல்லாம் இந்தப்படம் வராது. பேசாமல் விஜய்யின்ட படங்களை பார்த்துக்கொண்டு இருங்கோ.
ஹி..ஹி...ஹி..

LinkWithin

Related Posts with Thumbnails