குறிப்பு - இந்த கதைக்கு இலங்கை பதிவர்களின் அமோக ஆதரவுக்கு மிக்க நன்றிகளை தெரிவித்துக்கொள்வதுடன், இன்னும் இந்த கதை பற்றி விடயம் தெரியாதவர்களுக்கு ஒரு முக்கிய செய்தி- இந்த நகைச்சுவை கதையில் இலங்கையின் பெரும்பான்மையான பதிவர்கள் அனைவரும் கெஸ்ட் ரோல்ல ஏதோ ஒரு கட்டத்திற்கு வந்து கொண்டிருப்பார்கள் என்பதை அறியத்தருகின்றேன்.
சரி..இனி கதை…முதல் பகுதியை படிக்காதவர்கள் தயவு செய்து கீழே சென்று படித்துவிட்டு வாருங்கள்.
ஆவியின் கதையினை சொல்லத்தொடங்கினார் பெரியவர். சுபாங்கனும், கூல்போயும் மிக ஆர்வத்துடன் கேட்கத்தயாரனார்கள்.
ஒரு கோல்லீபை சேட் பொக்கற்றுக்க இருந்து எடுத்து, லைட்டரால் பத்த வைத்து, ஒரு உல்லாச இழுவை இழுத்துவிட்டு தொடங்கினார் அவர்…
நான் இந்த காணியை வாங்கமுதல் இந்த இடத்தில நல்ல வசதியான ஆக்கள்தான் இருந்தார்கள். அந்த குடும்பத்தில் ஒரே ஒரு பெண் பிள்ளைதான் இருந்ததாம். ரொம்ப செல்லமாக வளர்ந்த பிள்ளை. உயர்தரம் பாஸ் பண்ணி இருக்கின்றாள். ஆனால் ஒரு நாள் திடீர் என்று நஞ்சுகுடித்து செத்துப்போய் இருக்கிறாள். ஏன் செத்தாள் என்பது புதிராகத்தான் இருக்கு!!
அவள் செத்த மாதம் செப்ரம்பர் நடுப்பகுதி என்பதால் ஒவ்வொருவருடமும் இந்த மாதத்தில் அவள் நடமாடுவதாக சொல்லுறாங்க. நானும் 3 செப்ரெம்பர் மாதங்களில அவளை கண்டுகொண்டுதான் வாறான் என்றார்.
டேய்..இன்பொமேஷனை நோட் பண்ணிக்கடா என்றான் சுபாங்கன்.
சரி ஐயா..அந்த அடிவளவு வேப்பமரத்தடியிலதானே ஆவி வாறது. நேரம் 9.30 ஆகிவிட்டது நாங்கள் அந்த மரத்தடியில போய் நிற்கிறம் என்று விட்டு இருவரும் அங்கு சென்றனர்.
10 மணி, 10.30, 11 மணி என நேரம் போய்க்கொண்டிருந்தது.ஆவியை காணவில்லை. என்னடா கனநேரமாய் கூல்போயின் சத்தத்தை காணவில்லை என்று உற்றுப்பார்த்தான் சுபாங்கன்..கூல்போயிடமிருந்து மெல்லிய கொறட்டை சத்தம் இப்போது கேட்டது.
அடப்பாவிப்பயபுள்ளை. என்று அவனை தட்டியெழுப்பிய அதே நேரம் மரத்தின் மேலே ஏதோ உலுப்புவதுபோல சத்தம் கேட்டது. இரண்டுபேரும் ஓடிவந்து..பெரியவரை தேடினர் ஆளைக்காணவில்லை. பெரியவர் வைத்திருந்த வெற்றிலை தட்டம் அப்படியே இருந்தது.
சுபாங்கன் அவசர அவசரமாக தனது புது கூல்பிக்ஸர் எல் ருவன்டி கமராவை எடுத்துக்கொண்டு வாடா கெதியாக என்று கத்திக்கொண்டே அடிவளவை நோக்கி ஓடினான்.
ஏன் பாஸ் கமரா? என்றான் கூல்போய்!
நல்ல சீனெறிகள் எடுத்து பவனிட்ட போட்டோ கொமன்ஸ் போடச்சொல்லப்போறன்..!
அடநீவேற!! ஆவியை போட்டோ எடுத்து ஆதாரபூர்மாக ஆராயத்தானடா!!
ஜெஸ் பாஸ்..எடுத்திட்டு பவனிட்ட காட்டினா உண்மையான கொமன்ஸ் கிடைத்திடும் என்றான் கூல்போய்.
இருவரும் ஈரக்குலைகளே ஆட அப்படியே நின்றுவிட்டனர். காரணம்..இரண்டு பெரிய கண்கள் மட்டும் பளிச்என்று இவர்களை உற்றுப்பார்த்துகொண்டிருந்தன. அந்த வேப்பமரத்துக்கு முன்னால் உள்ள ஜம்புநாவலில் இருந்து.
என்ன நினைத்தானோ தெரியவில்லை கூல்போய்..பெரியவரின் வெற்றிலை தட்டம் இருந்த இடத்திற்கு ஓடிவந்து அங்கிருந்த பாக்குவெட்டியை எடுத்துக்கொண்டு ஓடிவந்து அந்த கண்ணை நோக்கி பாக்குவெட்டியை தூக்கி காட்டினான் கூல்போய்..
மறு நிமிடம்..ஐயோ என்றொரு சத்தம் சுமார் 9 அடிக்கு தூக்கி எறியப்பட்டான் கூல்போய். சுபாங்கனுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. அந்த கண்கள் அவனை நெருங்குவதுபோலவே இருந்தது. கமராவை தூக்கி சட சட என்று போட்டோக்களை அடித்தான் சுபாங்கன். அதற்குள் கூல்போயின் சத்தம் கேட்டு வளவுக்கு ஒரு பவரான டோச் லைட்டுடன் ஓடிவந்துகொண்டிருந்தார் பெரியவர்.
என்ன தம்பியவை..ஏன் இந்த தம்பி விழுந்து கிடக்கிறார் என்று ஓடிவந்தார்.
டேய் உனக்கு என்னடா நடந்தது! இப்படி பறந்துபோய் விழுந்தாய் என்று கேட்டுக்கொண்டே வந்தான் சுபாங்கன். மெல்லமாக கண் வழித்துப்பார்த்தான் கூல்போய். கூல்போய் பாக்குவெட்டியை தூக்கி காட்டிய இடத்தில் டோச்சை அடித்துப்பார்த்தார் பெரியவர்.. அந்த இடத்தில் ஒரு கரண்ட் கம்பி இருந்தது!!
ஏன்டா பாக்குவெட்டியை கொண்டுவந்து தூக்கி பிடித்தாய் என்றான் சுபாங்கன். பாஸ் அந்த கண்ணை பார்த்தால் எனக்கு ஆந்தையிண்ட கண்கள்போல இருந்தன. ஆந்தைக்கு பாக்குவெட்டியை தூக்கி காட்டினால் ஓடிவிடும்…சீ..பறந்துவிடும் என்று சொல்லுங்கள் பெரிசுகள் அதுதான். பாழாய்ப்போன கரண்ட் கம்பி இதாலை போகுமெண்டு எனக்கு தெரியவில்லை என்றான் கூல்போய்.
சரி..வா உள்ளபோவோம் என்றான் சுபாங்கன். சரி தம்பியவை நீங்கள் கீழபடுங்கோ நான் மேல்மாடியில படுக்கிறன் கதவு ஜன்னல் எல்லாத்தையும் சாத்திவிட்டு படங்கோ..ஏதும் அவசரம் என்றால் என்னை கூப்பிடுங்கோ என்றுவிட்டு இந்தாங்கோ சுடுதண்ணி வைக்கிற கொயில் சீனி, தேயிலை எல்லாம் இருக்கு களைத்துப்போட்டியள் ரீபோட்டு குடியுங்கோ என்றுவிட்டு மேலே போனார் அவர்.
அவரை அனுப்பிவிட்டு இரண்டுபேரும் உள்ளே போனார்கள். பாஸ்..போட்டோ எடுத்தீங்கள் தானே. அதுபோதும் அதை உங்கள் லப்ரொப்பில போட்டு பார்த்தால் சரி என்றான் கூல்போய்.
ஓமடா..நீ கரண்ட் அடித்து விழுந்தபோதும் உன்னைக்கூட தூக்காமால் என்ன நடந்தாலும் பறவாய் இல்லை என்று றிஸ்க் எடுத்து பட பட என்று போட்டோ அடித்தேன் என்று சொல்லிக்கொண்டே உள்ளே சென்றனர்.
புளொக்கில் கமராவின் பற்றி இரண்டும் போட்டபடி அப்படியே இன்னும் சார்ச் ஏறிக்கொண்டிருந்தது!!
சொதப்பிட்டீங்களே பாஸ்..வயித்தை கிள்ளுது பாஸ்..நைட் சாப்பிட மறந்துபோய்ட்டோம் என்றான் கூல்போய்.
இந்த நடு சாமத்தில சாப்பாட்டுக்கு எங்கபோறது. அந்த ஆள் சீனி, தேயிலை எல்லாம் தந்திருக்கு ரீ போட்டு குடிப்பம் என்றான் சுபாங்கன்.
அதென்ன பாஸ். உங்கள் பைக்குள்ள ஒரு பார்சல்? ஓமடா…எங்கட யோ..வொய்ஸ் யோகா!! ஏதோ ஒரு பார்சல் அனுப்பி இருந்தார். இந்த அமளிதுமளியில அதை மறந்துபோயாச்சு எடுத்து ஒருக்கா என்ன வென்று பிரித்துப்பார் என்றான் சுபாங்கன்.
பாஸ்..பார்சல் முழுக்க நூடில்ஸ் பக்கட் என்றான் கூல்போய்.
அடடா…எடுத்து சுடுதண்ணிக்க போடுடா நைட் சாப்பாடு ரெடி. மனுசன் கணக்காத்தான் பார்சல்போட்டிருக்கு என்றான் சுபாங்கன்.
நூடில்ஸை சுவைத்துக்கொண்டே..பாஸ் அங்கபாருங்க அழகான ஒருபுத்தகம் என்று தூசிகளுக்கு மத்தியில் இருந்து ஒரு புத்தகத்தை தூக்கினான் கூல்போய்.
டேய்..அது புத்தகம் இல்லைடா டயரி இங்கே தா..என்று பறித்து திறந்துபார்த்தான் அவன்.
என் பெயர் துளசிகா..என்று ஒரு அழகான பெண்ணின் படத்துடன் தொடங்கியது அந்த டயரி..உள்ளே!!
1988 ஏசியா கப் இந்தியா 6 விக்கட்களால் சிறி லங்காவை வென்ற தினத்தில் நான் பிறந்தேன்.
கபில்தேவ் வேர்ள்ட் ரெக்கோட் போட்ட அன்றைய நாள் நேசறிக்குப் போனேன்.
என்று முழுவதும் கிரிக்கட் சம்பந்தமாக சூசகமாவே அந்த டயரி முழுவதும் எழுதப்பட்டிருந்தது.
சச்சினின் நண்பன் பெயர்கொண்ட இவன் அவர்போலவே ஆரம்பத்திலேயே என் மனதில் ரெட்டைச்சதம் அடித்தான்.
1996 இன் அரையிறுதியில் அவர் வெளியேறியதுபோலவே இவனும் இன்று அழுதுகொண்டே என் மனதைவிட்டு போய்விட்டான்.. எனது இனிங்சும் முடிந்துபோய்விட்டது. என எழுதப்பட்டிருந்தது…
புடித்துக்கொண்டே சுபாங்கன் சொன்னான் டேய்..அடிடா தொலைபேசியை கன்-கொன்னுக்கு..
-தொடரும்…
13 comments:
me The First.
படிச்சிட்டு வார்றேன்....
கூகூகூல் போய் பாக்க வெட்டி அப்பாடி சிரிப்பு ஆரம்பிச்சிடுச்சு..... அண்ணா அருமை.... அருமை...அருமை... இதை வாசிக்காதவன் எருமை.. எருமை... எருமை...
அண்ணா கிரிக்கேட் தரவில் எங்கோ தவறு இருக்கிற மாதிரி தெரியுது.. ஒரு முறை கவனியுங்க...
சிறுவர் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் தங்களின் மற்றொரு பதிவான இக்கதை மிகவும் அற்புதமாகவும் விறுவிறுப்பாவுமிருக்கு..
1988ல பிறந்து 96ல இனிங்சும் முடிந்துபோய்விட்டது! ஐயகோ!!! என்ன கொடும சார்...
அந்த துளசிகா ஸ்கொலசிப் எடுக்கும் வயசு 10(1998)
(ஆவியா வந்து புலமைப்பரிசில் எழுதியிருக்கும்.)
அஞ்சு வயசிலயே ரெட்டை சதம் அடிச்சிருக்கும் போலிருக்கே..!!!
8 வயசு பிஞ்சு குஞ்சு நெஞ்சு பிஞ்சு எழுதின டயரி கண்கலங்க வைக்குது...
ஆக அடுத்த பல்பு கன்கொன்க்கு...
நான் பட்ட இன்பம்(!!?) படுக இப்பதிவுலகம்...
ம், நீங்க நடத்துங்க பாஸ். அனலிஸ்ட் கன்கோனின் தரவுகளுக்காக வெயிட்டிங் ;)
அண்ணா உண்மையை சொன்னால் வரவர ஆர்வம ரொம்பவே அதிகரிக்கிறது!!!
நான் ரசித்த இடங்கள்
//நல்ல சீனெறிகள் எடுத்து பவனிட்ட போட்டோ கொமன்ஸ் போடச்சொல்லப்போறன்..!//
பவனுக்கு இந்த டவுசர் கிழிப்பு போதாது என்பதை உரிமையுடன் வன்மையாக கண்டித்து கடுமையாக சொல்லி கொள்ளுகிறேன்
//கூல்போய். கூல்போய் பாக்குவெட்டியை தூக்கி காட்டிய இடத்தில் டோச்சை அடித்துப்பார்த்தார் பெரியவர்.. அந்த இடத்தில் ஒரு கரண்ட் கம்பி இருந்தது!!//
//எனக்கு ஆந்தையிண்ட கண்கள்போல இருந்தன. ஆந்தைக்கு பாக்குவெட்டியை தூக்கி காட்டினால் ஓடிவிடும்…சீ..பறந்துவிடும் என்று சொல்லுங்கள் பெரிசுகள் அதுதான். //
//அடடா…எடுத்து சுடுதண்ணிக்க போடுடா நைட் சாப்பாடு ரெடி. மனுசன் கணக்காத்தான் பார்சல்போட்டிருக்கு என்றான் சுபாங்கன்.//
கலக்கல் அண்ணா!!! தொடர எனது ஆதரவுகள்
கதை அந்தமாதிரித்தான் போகுது கண்டியளோ! மற்ற பதிவர்களையும் கதைக்குள் இழுத்துப்போடுவது சிறப்பு.
//கூல்போய் பாக்குவெட்டியை தூக்கி காட்டிய இடத்தில் டோச்சை அடித்துப்பார்த்தார் பெரியவர்.. அந்த இடத்தில் ஒரு கரண்ட் கம்பி இருந்தது!!//
விழுந்து விழுந்து சிரிக்கிறேன்..:D
//றிஸ்க் எடுத்து பட பட என்று போட்டோ அடித்தேன்//
//புளொக்கில் கமராவின் பற்றி இரண்டும் போட்டபடி அப்படியே இன்னும் சார்ச் ஏறிக்கொண்டிருந்தது!!//
அவ்வ்வ்வ்.... முடியல..ROFL..:D
//புடித்துக்கொண்டே சுபாங்கன் சொன்னான் டேய்..அடிடா தொலைபேசியை கன்-கொன்னுக்கு..//
ஆஹா.. ஆஹா.. அட அட அட.. கன்கொனுட் என்டி ஆகியாச்சா..
அண்ணே கண்ணில் நீர் வர சிரிக்கிறேன்.. கிட்டத்தட்ட தமிழ்ப்படம் ரேஞ்சுக்கு போகுது..:P எல்லாரின் டவுசர்களும் தாறுமாறாக உருவுறீங்க..:P
அண்ணன் மன்னிக்கவேண்டும் இன்றுதான் இரண்டு கதைகளையும் படித்து உண்மையாகவே விழுந்துபோய்த்தான் சிரித்தேன். கன்-கோன் பினிஸிங் சுப்பராய் இருக்கு. கலக்குங்க.
இன்னும் பல பதிவர்களுக்கு டவுசர் கிழிய போவதென்னமோ நிச்சயம்தான்.
ம்
சு - சுபாங்கன்
ஜா - ஜனா
தா - ??????
கடைசியி்ல் எனது நூடுல்சையும் இழுத்து விட்டாச்சா? இனி அனலிஸ்ட் கன்கொன் வந்து கிளியர் பண்ணினால்தான் அடுத்த அங்கமா?
ஹாஹா கலக்கல் ஆனாலும் துளசிகாவின் குழந்தைக் காதல் ஏற்றுக்கொள்ளமுடியாது. சச்சினின் நண்பனின் பெயர் வினோத் அந்தப் பெயரில் பதிவர்கள் எவரும் இல்லை.
மிக அருமை
பதிவர்களையே கதாபாத்திரம் ஆக்கி இருப்பது
கூடுதல் சிறப்பு :)
இக்கி இக்கி....
// கூல்போய் பாக்குவெட்டியை தூக்கி காட்டிய இடத்தில் டோச்சை அடித்துப்பார்த்தார் பெரியவர்.. அந்த இடத்தில் ஒரு கரண்ட் கம்பி இருந்தது!! //
ஹா ஹா...
இதை எதிர்பார்க்கவே இல்லை...
கதையில் விறுவிறுப்பு அதிகரிக்கிறது...
Post a Comment