ஹொலிவூட் சுப்பர் ஹீரோக்களின் படங்களை மிஞ்சும் அளவுக்கு இயந்திரன் உள்ளதை கண்டு இந்திய சினிமா இரசிகர்கள் அனைவருமே மூக்கில் விரலை வைத்துள்ளனர்! என எந்திரன் பற்றிய லேட்டஸ்ட் செய்திகள் குறிப்பிடுகின்றன.
சுப்பர் ஸ்டாரின் திரைப்படங்கள் வருவதற்கு முன்னர் அதுபற்றிய பில்டப்புக்கள் டாப் கியரில் வருவது வழமையானதுதான். என்றாலும் இந்த முறை சண் பிக்கஸர்ஸ் தயாரிப்பாச்சே!! சோல்லவும் வேண்டுமா என்ன?
சாதாரண ஹீரோக்கள் நடித்த படங்களுக்கே வரும் பில்டப்புக்களை பார்த்து சப்பா…கண்ணைக்கட்டுதே!! என்று சலித்திருப்பீர்கள் இப்போ..
வெறும்வாய்க்கு அவல் கிடைத்தால் சும்மா விடுவார்களா என்ன?
பொதுவாகவே சயன்ஸ்பிக்ஷன் என்றால் கற்பனைகளை எப்படிவேண்டும் என்றாலும் சுழலவிடலாம். ஏன் என்றால் ரெக்னோலொஜி மற்றும் சயன்ஸ் என்பன எப்படி எல்லாம் நியமாகவே பிரமிக்க வைக்கப்போகின்றது என்பது இந்த நொடிவரை எவருக்கும் தெரியாமல்த்தான் இருக்கும்.
சுஜாதா சொன்னதுபோல “சயன்ஸ் பிக்கஷன் என்றால் ஒரு சௌகர்யம். எந்த சாகசத்தையும் நிகழ்த்தலாம், பிரமிக்கவைக்கலாம், பார்ப்பவர்கள், வாசிப்பவர்கள் நம்பியே ஆகவேண்டும். இங்கே யதார்த்தம் என்ற கேள்வி இல்லாமல் போயிருக்கும்.
ஆனால் ஒன்று அவற்றுக்கான ஆரம்ப கட்டங்களாவது தற்போது ஆய்வில் உள்ளதாக இருந்தால் புரிதலுக்கு நன்றாக இருக்கும்”
உண்மைதான் எந்திரன் ரெய்லர்கள் இதைத்தான் சொல்கின்றன. திரைப்படம் வரமுன்னரே பலர் போற்றவும், சிலர் தூற்றவும் தொடங்கிவிட்டனர்.
எது எப்படியோ.. என்னைப்பொறுத்தவரையில் எந்திரன் ரோபோக்கு ரஜினி சரியான தெரிவு. சுஜாதாவின் கதைகளை வைத்து எடுக்கப்படும் படங்களில் ரஜினி நடிக்கும் மூன்றாவது படம் இது என நினைக்கின்றேன். (காயத்திரி, ப்ரியா, எந்திரன்)
பெரும்பாலானவர்கள் போல நானும் எதிர்வரும் 24ஆம் நாளை ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றேன்.
ஹப்பி இன்று முதல் ஹப்பி..
அண்மையில் பார்த்தவற்றில் பாட்டைவிட காட்சியாக்கல் பிடித்துப்போன ஒரு பாடல்.
செம்மொழிப்பாட்டை கொஞ்சம் நினைவு படுத்தினாலும் நல்லாத்தான் இருக்கு.
பாடகர்கள் ஒவ்வொருகட்டத்திலும் ஒவ்வொரு மாதிரி வருவது சிறப்பாக இருக்கு.
யாழ்ப்பாண டாப் 10 பாடல்களில் முதலாவது.
யாழ்ப்பாணத்தில் தற்போது மக்களால் அதிகம் விரும்பி கேட்கப்படும் டாப் 10 பாடல்களில் எந்திரனைவிட முதல் இடத்தை ஒரு பக்திப்பாடல் பிடித்துக்கொண்டுவிட்டது.
அதற்கான காரணம் ஒரு காலத்தில் இந்த நில மக்களின் ஆதர்ஸ பாடகராக இருந்த பாடகர் அதனைப்பாடியதாக இருக்கலாம்.
பெரும்பாலும் யாழ்ப்பாணத்தின் எந்த பாகத்திற்கு சென்றாலும், கடைகள், வர்த்தக நிலையங்கள், கோவில்கள் என அந்தப்பாலே ஒலித்துக்கொண்டிருப்பதை கேட்கக்கூடியதாக உள்ளது.
இந்தப்பாடல் வெளியாகி பல நாட்கள் கடந்த நிலையிலும் தற்போதுதான் அது பல மட்டங்களுக்கும் சென்று ரீச்சாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.
“பிட்டுக்கு மண்சுமந்த பெருமானார்” என ஆரம்பிக்கும் எஸ்.ரி.சாந்தன் பாடிய பாடலே அந்த ஜவ்னா டாப் 1.
வசந்த்! வசந்த்!
எழுத்தாளர் சுஜாதாவின் வசந்த்! வசந்த்! நேற்று படித்தேன். படித்துமுடித்ததும் வசந்த் மனது முழுக்க நின்றார். அந்த அளவுக்கு சிறப்பாக இருந்தது.
அண்மையில் படித்த சுஜாதாவின் கணேஷ் - வசந்த் இணைந்த கதைகளைவிட இது பல திருப்பங்களையும் ஊகிக்கமுடியாத நிகழ்வுகளையும் கொண்டிருந்தமை சிறப்பாக இருந்தது.
விஷம், மற்றும் இறுதியில் துப்பாக்கி குண்டுக்கு ஆளாகியமை என வசந்த் இதில் படு றிஸ்க் எடுத்துள்ளார். ராஜராஜன் கிணறு என்ற ஒரு பழங்காலக்கிணற்றின் மர்மங்களை கண்டறிய செல்லுகின்றார்கள் கணேஷ் - வசந்த் பின்னர் கணேஷைவிட வசந்தே இந்த கதையில் பெரும் பகுதிக்கு வருவதுடன், மனதில் நிற்கின்றார்.
கல்கியில் இந்தக்கதை வந்தபோது வசந்திற்கு இரசிகர்கள் கூடியதாகவும் அறியமுடிகின்றது. கண்டிப்பாக ஒரு தடவை படித்துப்பாருங்கள்.
Prarambha – குறும்படம்
நாட்டார் பாடல்களில் காதலர் சல்லாபம்.
ஊரார் உறங்கையிலே உற்றாரும் தூங்கையிலே,
நல்லபாம்பு வேடங்கொண்டு நான் வருவேன் சாமத்திலே
நல்லபாம்பு வேடங்கொண்டு நடுச்சாமம் வந்தாயானால்
ஊர்குருவி வேடம்கொண்டு உயரப்பறந்துடுவேன்
ஊர் குருவி வேடங்கொண்டு உயரப்பறந்தாயானால்
செம்பருந்து வேடங்கொண்டு செந்தூக்காய் தூக்கிடுவேன்
செம்பருந்து வேடங்கொண்டு செந்தூக்காய் தூக்கவந்தால்
பூமியைக் கீறியெல்லோ புல்லாய் முளைத்துடுவேன்
பூமியை கீறியெல்லோ புல்லாய் முளைத்தாயானால்
காராம்பசு வேடங்கொண்டு கடித்திடுவேன் அந்தப்புல்லை
காராம்பசு நீயானால் கழுத்துமணி நானாவேன்
ஆலமரத்தடியில் அரளிச்செடி தானாவேன்
ஆலமரமுறங்க அடிமரத்தில் வண்டுறங்க
உன்மடியில் நானுறங்க என்னவரம் பெற்றேனடி.
அத்திமரம் நானாவேன் அத்தனையும் பிஞ்சாவேன்
நந்திவரும் மச்சானுக்கு முத்துச்சரம் நானாவேன்.
சர்தாஜி ஜோக்
நம்ம ஷர்தாஜி ஒரு சமயம் லண்டன் போயிருந்தார். அங்கே உள்ள கடற்கரை ஒன்றில் காலை நேரம் சண்பார்த் எடுத்துக்கொண்டிருந்தார் நம்ம ஆள். அப்போது அந்தப்பக்கம் வந்த ஒரு அழகான வெள்ளைக்காரப் பெண் ஒருவர் " Are you relaxing"? எனக்கேட்டார்? அதற்கு பதிலளித்த நம்ம ஆள்…NO..No… I am Banta singhஎன்று பதில் சொன்னார்.
சிறிது நேரத்தில் இன்னும் ஒருவர் வந்து அதே கேள்வியைக் கேட்டார் அவருக்கும் நம்ம அள் அதே பதிலையே சொன்னார்…இப்படியே தொடர்ந்து 6 நபர்கள் அவரை கேட்க அவர்களுக்கும் நம்ம ஷர்தாஜி இதனையே சொல்லிக்கொண்டிருந்தார்.
இறுதியில் இங்கிருந்தால் இவர்கள் இதையே கேட்பார்கள் என நினைத்த நம்ம ஷர்தாஜி கடற்கரையோரம் 1 கிலோ மீற்றர் தள்ளிப்போய் அங்கே சண்பார்த் எடுக்க திட்டமிட்டார். சென்ற வழியில் இன்னும் ஒரு ஷர்தாஜி சண்பார்த் எடுத்துகொண்டிருப்பது தெரியவே
அவரிடம் " Are you relaxing”? எனக்கேட்டார் நம்ம ஆள்…அந்த ஷர்தாஜி நல்ல அறிவுள்ளவர் எனவே அவரும் உடனடியாக Yes I am relaxing எனத் தெரிவித்தார் உடனே வந்ததே நம்ம ஷர்தாஜிக்கு கோபம்.. யோவ்வ்….இங்க இருந்து என்னையா செய்யிறாய்…அங்க உன்னை காலையில இருந்து எட்டு வெள்ளைக்காரனுக தேடித்திரியிறாங்க உடன அங்கபோ…என்றார்
9 comments:
அடடா..ஹொக்ரெயில் இன்று ஒரு வித்தியாசமான கலக்கல்.
Nice :)
எந்திரன் - எக்பெக்டிங்..:)
//வசந்த்! வசந்த்!//
படிக்கவேண்டும்..:) PDF links?
சர்தாஜி ஜோக் - ஹாஹாஹா
:)
நானும் எந்திரனுக்காக காத்திருக்கிறேன்.
அந்தப்பாடலை சென்ற வருடம் தேடினேன். சமயத்தில் கிடைக்கவில்லை ஆனாலும் பின்னர் அந்த இசைத்தொகுப்பு ஒரு தம்பியிடமிருந்து இறுவட்டில் பெற்றுக்கொண்டேன். அந்தக்குரல்களைத் தேடுகிறேன் இன்னும்.
சுஜாதா இப்பதான் ஆரம்பித்திருக்கிறார் என்னுள்ளே.
///பூமியை கீறியெல்லோ புல்லாய் முளைத்தாயானால்
காராம்பசு வேடங்கொண்டு கடித்திடுவேன் அந்தப்புல்லை///
ம்ம்
அற்புதம் ரசனை
அண்ணே..பலே பாண்டியா பாட்டை பார்த்திட்டு இதைபற்றி குறிப்பிடணும் என்று நினைத்தேன். கொக்ரைல போட்டுவிட்டீங்க. குறும்படம் அருமை. டைரட்டிங்கூட பிரபுதேவா தானா? கொக்கட்டிச்சோலை பாடல் எங்கயோ கேட்டகுரல்.
நாட்டார் பாடல் நன்னா இருக்கு. கம்மாக்கரையில சும்மாநான் பிடித்தா என்ன பண்ணுவாய். என்ற பாடல் சட்டென நினைவுக்கு வருது. சர்தாஜி ஹாஹாஹா..
நாட்டார் பாடல் நன்றாக இருக்கு ஜனா. குறும்படம் அருமை. ஹொக்ரைல் நைஸ்.
நானும் எந்திரனுக்கு காத்திருப்பு!!!
வசந்த்-வசந்த் படிக்க வேண்டும் !!!
////வசந்த்! வசந்த்!//
படிக்கவேண்டும்..:) PDF links?//
REPEAT
கலக்கல்
///...சுஜாதா சொன்னதுபோல “சயன்ஸ் பிக்கஷன் என்றால் ஒரு சௌகர்யம். எந்த சாகசத்தையும் நிகழ்த்தலாம், பிரமிக்கவைக்கலாம், பார்ப்பவர்கள், வாசிப்பவர்கள் நம்பியே ஆகவேண்டும். இங்கே யதார்த்தம் என்ற கேள்வி இல்லாமல் போயிருக்கும்.
ஆனால் ஒன்று அவற்றுக்கான ஆரம்ப கட்டங்களாவது தற்போது ஆய்வில் உள்ளதாக இருந்தால் புரிதலுக்கு நன்றாக இருக்கும்”...///
உண்மை தான் அண்ணா.....
இன்றும் ஹெக்ரெயில் அருமை... எந்திரனுக்கு நான் எப்போதோ எழுதியது இங்கே
எந்திரனை பப்படமாக்கும் சண் ரிவி விளம்பரம்....
Post a Comment