தற்போது எங்கு பார்த்தாலும் எந்திரன் என்பதே தாரக மந்திரமாக உள்ளது என்னமோ உண்மைதான். ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும் மறுப்பிற்கு இடமில்லை.
படத்தின் ரெய்லர்கள் அந்த ரோபோ ரஜினி அனைவரினதும் மனங்களில் தொடக்கத்தில் இருந்து இறுதிவரை சிக்ஸர்ஸ்களை மழையாக பொழிவார்போலவே உள்ளது.
ஒரு முக்கிமான விடயத்தை கவனித்துப்பாருங்கள் நெகட்டிவ்ரோல்களில் ரஜினி கைவைத்தால் அது சோபிக்காமல்போனதாக சரித்திரம் இல்லை.
எந்திரன் ரெய்லர்களும் இதைத்தான் சொல்கின்றது.
“என்னை சரியாக பயன்படுத்தினால் நான் மனிதர்களின் நண்பன்…
பிழையாக பயன்படுத்தினால்…”என்று விட்டு திரையில் ரஜினி சிரிப்பார் பாருங்கள் ஒரு சிரிப்பு!!! அந்த சிரிப்பே அந்த ரோபோ கிளைமாக்ஸ் வரை எங்களை சீட் நுனியில் வைத்திருக்கப்போவது திண்ணம் என்பது தெரிகின்றது.
கிரிக்கட் சுப்பர்ஸ்ரார் சச்சின் மட்டும் அல்ல, திரையுலக சுப்பர்ஸ்ரார் ரஜினியும் திரைப்படங்கள் என்ற வன் டே கிரிக்கட்டில் டபிள் செஞ்சரி போடவேண்டும் என்பதே எனது ஆவாவும் கூட. அந்த ஒக்டோபர் முதலாம் திகதியை ஒரு திருவிழாவைப்போலவல்லவா ரசிகர்கள் எதிர்பார்த்திருக்கின்றார்கள்.
எந்திரனுக்கு ரஜினியை விட இந்திய சினிமாவில் சரியான தெரிவு இருக்கமுடியாது என்பதும் உண்மைதான். சங்கரின் தெரிவு சரியாகவே உள்ளது.
இந்த திரைப்படத்தின் பிரமிப்பும், பெறப்போகும் வெற்றியும், தமிழுக்கு விஞ்ஞானக்கதைகளை புகுத்தி, ஒரு அறிவியல் எழுத்துப்புரட்சி செய்த எழுத்தாளர் சுஜாதாவுக்கு மாபெரும் அஞ்சலியாகவே இருக்கும் என்பதே மிகப்பெரிய உண்மை.
முதல் முதல் தமிழ் சினிமாவில் லகரங்களை எண்ணிய கே.பி.சுந்தராம்பாள்.
தமிழ் திரையுலக வரலாற்றில் முதல் முதலில் ஒரு நடிப்பு கலைஞரின் சம்பளம் இலட்சத்தை தொட்டதென்றால் அது கொடுமுடி பாலம்பாள் சுந்தராம்பாள் என்ற கே.பி.சுந்தராம்பாளுக்கே.
1908 ஆம் ஆண்டு கோவை கொடுமுடியிலே பிறந்த இவர், இள வயதில் இருந்தே நாடகங்களில் சோபித்து, தனது பாடல்களின் ரம்மியமான குரலால் இரசிகர்களை கட்டிப்போட்டிருந்தார்.
1917ஆம் ஆண்டு கொழும்பு வந்த இவர் இலங்கையின் பல பாகங்களிலும் தமது நாடங்களை நடத்தி நடித்துள்ளார் என்பது சிறப்பான அம்சமாகும். இலங்கையிலேயே இவர் எஸ்.ஜி.கிட்டப்பாவை சந்தித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
இருவரும் இணைந்து நடித்த வள்ளி திருமண நாடகம் அக்காலத்தில் சக்கைபோடு போட்டது. அதன் பின்னர் நாடகத்தில் இணைந்த இவர்கள் இருவரும் இல்லறத்திலும் இணைந்துகொண்டனர்.
வள்ளி திருமணம், நல்லதங்காள், கோவலன், பவலளக்கொடி, ஞானசௌந்தரி, போன்ற இவர் நடித்த நாடகங்கள் அக்காலத்தில் மிகப்புகழ்பெற்றன.
பக்த நந்தனார் என்ற திரைப்படத்தின்மூலம் தமிழ் திரைப்படத்திற்குள் நுளைந்த இவர், ஓளவையார் திரைப்படத்தில் ஒளவையாராகவே வாழ்ந்து தமிழ் நெஞ்சங்களில் நீங்காத இடத்தை பிடித்துக்கொண்டார்.
மணிமேகலை, பூம்புகார், மகாகவி காளிதாஸ், திருவிளையாடல், கந்தன் கருணை, உயிர்மேல் ஆசை, துணைவன், சக்தி லீலை, காரைக்கால் அம்மமையார், திருமலை தெய்வம், உட்பட 12 தமிழ்த்திரைப்படங்களில் நடித்தும் பாடியும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இன்றும் ஒளவையார் என்று சொன்னதும் நம் மனக்கண்முன் வருபவர் வேறு யார்?
1980 ஆம் ஆண்டு இதே நாள் இந்த உலகை விட்டுப்பிரிந்த அவர் தமிழ்த்திரையுலக நடிகைகளில் மறக்கப்படமுடியாதவரே.
பூமி வெப்பமாதல்..மனிதனின் அடாவடித்தனம்.
எமக்கு பக்கத்தில் வியாழன்.
இதுவரை காலம் 6ஆம் இடத்தில் ஆட்சி அதிபதியாக இருந்த வியாழன் நாளைமுதல் 7ஆம் இடத்திற்கு இடம்பெயர்வதால், பொதுவாக நல்ல பலன்களையே எதிர்பார்க்கலாம் என்று சொல்வேன் என்றா நினைத்தீர்கள்???
இல்லைங்க… நம்ம பூமிக்கு மிக அருகில் நாளைமுதல் வியாழக்கிரகம் மிகப்பிரகாசமாக தெரியும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர் அதைத்தான் சொல்லவந்தேன்.
50 வருடங்களின் பின்னர் இவ்வாறு பூமிக்கு அருகில் வியாழன் வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த தடவை இதை மிஸ் பண்ணினால் 2022 ஆம் ஆண்டு மறுபடியும் பார்க்கலாம்!!!
சாதாரணமாகவே வியாழக்கிரகம் நம்ம ப+மியில் இருந்து பிரகாசமாகத்தெரியும்தான். ஆனால் நாளையில் இருந்து 4 நாளைக்கு இன்னும் பிரகாசமாக தெரியும் என்று சொல்லப்பட்டிருக்கின்றது.
இதைவச்சுத்தான் முதலே சில பயபுள்ளைகள் செப்ரெம்பர் 22 இல இரண்டு சந்திரன் தோன்றும் என்று கதை விட்டிச்சினமோ தெரியாது!
அண்மையில் இரசித்த பாடல்
தலைகோதி அவள் சாப்பிடும் மேசை மீது காகம் அகிறேன்
சிறாதோ ஒரு சாதமே ஏங்கினேன்…
அருகே நீ அமர்ந்தாயடி..தோழும்தோழும் கதைபேசுதே
உரசாதே உயிர்கோபுரம் சாயுதே…
அழகான ஒரு ஊர்வலம் நீயும் நானும்தான் போவதால்
பேருந்தே குலசாமியாய் ஆனதே…
சிலிர்க்கவைத்துவிட்டார்கள் பாடலாசிரியர் சாரதியும் யுவனும்.
யாழ்ப்பாண ஊர்களின் பெயரில் முருகதுதி!!
முடிவிலாதுறை சுன்னாகத்தான் வழி
முந்தித் தாவடி கொக்குவில் மீது வந்தடைய
ஓர் பெண் கொடிகாமத்தாள் அசைந்து
ஆனைக் கோட்டை வழி
கட்டுடை விட்டாள்
உடுவிலான் வர
பன்னாலையான் மிக உருத்தனன்
கடம்புற்ற மல்லாகத்தில்
இடை விடாது என அணையென
பலாலி கண் சோர வந்தாள்
ஓர் இளவாலையே
என்னடாப்பா..சுன்னாகம், தாவடி, கொக்குவில் என்று யாழ்ப்பாணத்து ஊர்கள் வருது என்று பார்க்கின்றீர்களா? இதன் உண்மையான அர்த்தம்..
இமயமலையில் முடிவிலாது குடி கொண்டிருப்பவனது வழியில் வந்தவனாகிய முருகன், முன்னே தாவி வரும் குதிரையின் மீதேறி வந்து சேர, மிகுந்த ஆசை கொண்ட, கொடிபோன்ற இடை உடைய பெண் கண்ணீரை, தன் பெரிய மார்பகங்களின் வழியாக கட்டுடைந்து சிதற விட்ட வண்ணம் சொல்கிறாள்......
நட்சத்திரம் வரும் நேரத்தில் கரும்பு வில்லையுடைய மன்மதன் மிகுந்த தொல்லை கொடுக்கிறான், கடம்பு பூக்களாலான மாலையணிந்த உனது மார்பகத்தில், இடைவெளி எதுவுமில்லாமல் என்னை அணைத்துக் கொள்” என்று, பல கண்ணீர்த் துளிகளை சொரிந்த வண்ணம் இறைஞ்சி நிற்கிறாள் அந்த இளம் வயதுள்ள குமரிப் பெண்
சர்தாஜி ஜோக்
ஷர்தாஜிக்கு வந்த பார்ஸல் ஒன்றை கொண்டுவந்து ஷர்தாஜியிடம் கொடுத்த தபால்க்காரர்…உங்களுக்காக நான் இந்தப்பார்சலை சுமார் 5 கிலேமீற்றர் தூரம் தூக்கிக்கொண்டு வந்திருக்கின்றேன் என்றார்…பாசலை வாங்கிவிட்டு …ஏன் நீங்கள் இவ்வளவு சிரமப்பட்டு 5 கிலோமீற்றர்கள் வரவேண்டும் பேசாமல் இதை போஸ்ட் பண்ணி இருக்கலாமே என்றார் நம்ம ஷர்தாஜி.
23 comments:
//அந்த சிரிப்பே அந்த ரோபோ கிளைமாக்ஸ் வரை எங்களை சீட் நுனியில் வைத்திருக்கப்போவது திண்ணம் என்பது தெரிகின்றது//
அண்ணே, கடைசி 40 நிமிஷத்துக்கு சஸ்பென்சா ரஜினியோட ஒரு கேரக்டர்வேற வச்சிருக்காங்களாம்
//எந்திரனுக்கு ரஜினியை விட இந்திய சினிமாவில் சரியான தெரிவு இருக்கமுடியாது//
மாஸ் எந்திரனுக்கு ரஜனியை விட வேறு தெரிவு இல்லை அண்ணா!!
//பூமி வெப்பமாதல்..மனிதனின் அடாவடித்தனம்.//
:)
எந்திரன் ஆவல்.
சுந்தரம்பாள் தகவலுக்கு நன்றி
அப்ப குரு உச்சத்தில என்கிறீங்க
அண்ணா அருமை.
:)
எந்திரன் யாழ்ப்பாணத்தில தான் பார்ப்பன் போல கிடக்கு. முடிஞ்சா சேர்ந்து போவம்
எந்திரன் மாஸ். ஓ சலா..நானும் இப்போது அடிக்கடி முணுமுணுக்கும் பாடல். சுந்தராம்பாள் நல்ல தகவல். வியாழனை இன்று பார்க்கப்போறேன்.
அண்ணே. யாழ்ப்பாண ஊர்களின் பெயரில் வந்த பாடல், ஒரு சிலேடைக்கவிதானே! குளோபல் வோர்மிங் அனிமேசன் படம் அந்தமாதிரி. சிந்திக்க வைத்தது. சர்தாஜி ஜோக் இன்னும் ஸ்ரொக் நிறைய இருக்கா?
// எந்திரனுக்கு ரஜினியை விட இந்திய சினிமாவில் சரியான தெரிவு இருக்கமுடியாது என்பதும் உண்மைதான். //
உண்மை
உங்கள் படைப்புக்களை வரவேற்கிறோம்...
மீண்டும் எங்களுடன் இணைந்தமைக்கு மிக்க நன்றி.
தமிழ்
ஆங்கிலம்
பதிவு அருமை..அதிலும் முகத்துதி..ஹஹா சூப்பர்.!
@Subankan
ஆஹா..அதுவேறையா...திக்குமுக்காகப்பண்ணாமல் விடமாட்டங்க போல இருக்கே சுபாங்ஸ்
@Anuthinan S
சரியானவற்றுக்கு சரியானவர்களின் தெரிவே பாதி வெற்றியை தந்துவிடுமே அனுதினன். பார்ப்போம்...
@றமேஸ்-Ramesh
அதுவேதான் ரமேஸ். சுக்கிரன் உச்சத்தில என்றாலும் பறவாய் இல்லை குருவல்லவா உச்சத்தில!!
@யோ வொய்ஸ் (யோகா)
:)
@KANA VARO
அடடா அப்படியா சங்கதி. சேர்ந்தே பார்ப்போமே
@ஜாவா கணேஷ்
என்ன கணேஸ்! ஜயா கணேஸ் பதிவெழுத தொடங்கிவிட்டு மட்டுமே நிற்கிறானே????
@டிலான்
நம்மகூடவே பல சர்தாஜிகள் உள்ளதால் ஸ்ரொக் வந்துகொண்டே இருக்கும். முடியாது.
@தர்ஷன்
உண்மை என்று ரஜினி ரசிகன் நீங்கள் சொல்வதா? கமல் ரசிகன் நான் சொல்வதா? உண்மை!!!
@ மைந்தன் சிவா
நன்றி மைந்தன் சிவா.
தொடர்ந்து வாராவாரம் ஹொக்ரெயில் சாப்பிட வாருங்கள்.
@ers
நன்றி
///...முடிவிலாதுறை சுன்னாகத்தான் வழி
முந்தித் தாவடி கொக்குவில் மீது வந்தடைய
ஓர் பெண் கொடிகாமத்தாள் அசைந்து......./// ஒவ்வொரு ஞாயிறும் நான் எதிர் பார்க்கும் ஒன்று இம்முறை எனக்காக காத்திருக்க வைத்த விட்டேன் இம்முறை எனக்க மிகவும் கவர்ந்தது... வேற என்ன மேலே பாருங்க..
nice jana anna...........
சுவிசில் இந்திய மதவாதியின் குறான் எரிப்பு
மேலும்... www.thambi.tk
Post a Comment