ஹாய்…என்று சிரித்துக்கொண்டே கன்-கொன்னின் குரல் வந்தது.
சுபாங்கன் அண்ணா, கூல் என்ன இரண்டுபேரும் ஆவி ஏதோ துரத்தபோறீங்கள் என்று கதை அடிபடுது! எனக்கும் கிரிக்கட் போல ஆவிகள் விசியத்திலும் கொஞ்சம் இன்ரஸ்ட்தான் என்றுவிட்டு சிரித்தார்..
கன்-கொன் ஒரு கிலாரிபிகேசன்..
ஒருத்தி சொல்லுகின்றாள்…
1988 ஏசியா கப் இந்தியா 6 விக்கட்களால் சிறி லங்காவை வென்ற தினத்தில் நான் பிறந்தேன்.
கபில்தேவ் வேர்ள்ட் ரெக்கோட் போட்ட அன்றைய நாள் நான் நேசறிக்கு போனேன்..
சச்சினின் நண்பன் பெயர்கொண்ட இவன் அவர்போலவே ஆரம்பத்திலேயே என் மனதில் ரெட்டைச்சதம் அடித்தான்.
1996 இன் அரையிறுதியில் அன்று அவர் வெளியேறியதுபோலவே இவனும் அழுதுகொண்டே என் மனதைவிட்டு போய்விட்டான்.. எனது இனிங்சும் முடிந்துபோய்விட்டது.
ஆம்..2008 இல் எனது இனிங்ஸ் முடிஞ்சுபோச்சு…இதுதான் என்றான் சுபாங்கன்..
அட இதுதானா!!
நவம்பர் மாதம் 04ஆம் திகதி 1988 அவள் பிறந்திருக்கின்றாள்.
1994 ஆம் ஆண்டு ஸ்கூலுக்கு போயிருக்காள்.
அது வினோத் கம்ளி..சோ இவள் காதலித்த ஆளின்பெயர் வினோத்.
2008 இல இறந்திருக்கின்றாள் அதாவது அவளது 20ஆவது வயதிலை..சரியா அண்ணா..
இதுதான் கன்-கொன் என்கிறது சபாஷ்..என்றான் கூல்போய்.
சரி..அண்ணா லோஷன் அண்ணாவும் ஒருக்கா தனக்கு உங்களை கோல் பண்ண சொன்னவர் ஒருக்கா எடுங்கோ என்ன! சரி நான் வைக்கின்றேன்.
பாஸ்..ஒருமாதிரி துளசிகாவின் பயோடேட்டாவை கண்டுபிடித்தாச்சு. சீ…ஒரு இரண்டு வருடத்திற்கு முந்தியே இந்த இடத்திற்கு வந்திருக்க கூடாதா! அந்த வினோத் பயல்மட்டும் என் கையில கிடைத்தான் செத்தான் என்றான் கூல்போய்.
மீண்டும் அந்த டைரி கிடந்த இடத்தில் ஆராய்ந்தான். தூசுகள்மூடி ஒரு புத்தகம் கிடக்கவே தட்டி பார்த்தான். வுந்தியத்தேவன் என்று அதில் பெரிய எழுத்துக்களால் இருந்தது. பாஸ் இங்க பாருங்க..நம்ம வந்தி அண்ணை தன்ரபெயரிலே புத்தகம் ஒன்று அடித்திருக்கின்றார் என்றான் கூல்போய்..
வாங்கிப்பார்த்தான் சுபாங்கன்.
அடேய்..இது நம்ம வந்தி அண்ணா இல்லைடா. ஒரியினல் வந்தியத்தேவன் பற்றியது. ராஜராஜசோழனின் மகள் குந்தவையின் கணவன். சோழப்பேரரசின் படைகளில் மிக முக்கியமான தளபதி. பொன்னியின் செல்வன் கேள்விப்பட்டனியோ?
ஆமாம் பாஸ்..இப்ப நம்மட பிரசாந்த் நடித்துண்டு இருக்காரே! பாவமண்ணை அந்த ஆள்!!
அடேய்..பொன்னியின் செல்வன் என்கிறது கல்கியின் கதையடா! அதின் கதாநாகன் இந்த வந்தியத்தேவன்தான்டா!!
ஓகோ…அந்தப்பாதிப்பிலைதான் நம்ம ஆள் அந்த பெயரை வைத்திருக்காரோ..
பாஸ் உங்க காலைக்காட்டுங்க பாஸ்…
சரி..சரி விடுடா…என்றான் சுபாங்கன்..
காலைக்காட்டச்சொன்னது இவ்வளவு அறிவாய்ப்பேசுறீங்களே! நீங்க சுபாங்கன்தானோ அல்லது ஆவியோ என்ற சந்தேகத்திலைதான் என்றான் கூல்போய்.
மீண்டும் போன் சிணுங்கியது…
ஹலோ நான் லோஷன் பேசுறேன்.
என்ன பல விடயங்கள் பற்றி கேள்விப்பட்டேன். ஆவியை நேரில் பார்த்தீங்களா?
இரண்டு பேரும் விழுந்தடித்துக்கொண்டு போனை ஸ்பீக்கரிலை விட்டு மாறி மாறி முழு விடயத்தையும் விளங்கப்படுத்தினார்கள்.
லோஷன் அண்ணா சிலபல விடயங்கள் புரியவில்லை எல்லாத்தையும் கேட்டீங்கதானே இந்த அமானுசம் உண்மையா? ஆவி இருக்கா நீங்களாவது சொல்லுங்கள் என்றான் சுபாங்கன்.
சரி..சரி.. கொஞ்சம் யோசிக்கத்தான்வேண்டும். நீங்கள்வேறு களத்தில இறங்கி ரிஸ்க் எடுக்கின்றீர்கள். எதுக்கும் நான் நாளைக்கு சொல்லுறன். இரண்டுபேரும் கவனம். உங்களை பாதுகாத்து கொள்ளுங்கள் முதலில். நான் நாளை கூப்பிடுகிறேன் என்றுவிட்டு போனை வைத்துவிட்டார் லோஷன்.
பாஸ்..நித்திரை கொள்ள பயமாக இருக்குது. எதுக்கும் ரேடியோவை சத்தமாக போட்டுவிட்டே படுப்பம் கொஞ்சம் பயம் தீரும் என்றுவிட்டு. ரேடியோவை போட்டுவிட்டே படத்துவிட்டனர் இரண்டுபேரும்.
இரண்டுபேர் கனவிலும் துளசிகா வந்தாள்..ஆவியாக அல்ல.
வணக்கம் நேயர்களே ஆவிகள் ஆமானுசங்கள் உண்மையா? உங்களுக்கு அவ்வாறான சந்தர்ப்பங்கள் ஏற்பட்டுள்ளனவா? இது பற்றி இன்றைய விடியல் நிகழ்ச்சியில் ஆராய்ந்துகொண்டிருக்கின்றோம் என்று தனது சிம்மக்குரலில் கர்ஜனை செய்துகொண்டிருந்தார் லோஷன்.
இதைக்கேட்டு இரண்டுபேரும் திடுக்கிட்டு எழுந்துகொண்டனர்.
என்ன தம்பியவை எழுந்திட்டீங்கபோல! அது சரி..அந்த பெண்ணின் பெயர் துளசிகாவா? 2008 தானா இறந்தாள்? ஓம் தம்பி அப்ப இது அவளேதான். நான் வெளியாலை ஒருக்கா போகவேண்டி இருக்கு போய்ட்டு வாறன் என்றார் பெரியவர்.
இருவரும் பெரும் ஆச்சரியத்துடன் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.
டேய்..கவனித்தாயா நாங்கள் பேசியது எப்படி மேல்மாடியில் இருந்த அவருக்கு கேட்டது!
ஆமாம் பாஸ். இந்த பேய்..ஆவி என்பதெல்லாம் இந்த ஆளின் விளையாட்டுத்தான் போல. நாங்கள் கதைப்பதை கேட்க ஏதோ கருவி கீழே பூட்டப்பட்டிருக்கலாம் வாங்க தேடுவோம் என இரண்டுபேரும் முழு இடத்தையும் சல்லடை போட்டு தேடினார்கள்…ம்ம்கூம்..ஒரு சின்னத்துண்டு வயர்கூட கிடைக்கவில்லை…
பின்ன எப்படிடா? என்றான் சுபாங்கன்..இரண்டுபேரும் படுத்த இடத்தின் மூலையில் பிளாட்டில் பெரிய ஓட்டை ஒன்று இருப்பதை கவனிக்காமலே.
இதையெல்லாம் யோசித்துக்கொண்டே அந்த இடத்தில்ப்போய் படுத்துக்கொண்டான் சுபாங்கன். என்னடா இது பிரம்மசூத்திரமாக இருக்கு…கொஞ்சநேரம் மனதை ரிலாக்ஸ் பண்ணினால்த்தான் யோசனைகள் வரும் என்றுவிட்டு கண்களை மூடினான்..நித்திரையாகிப்போய்விட்டான்.
திடீர் என பின்பக்கம் மரங்கள் உலுப்பப்படுவதுபோல சத்தம். திடுக்கிட்டு எழுந்தான் சுபாங்கன். கூல்போயை காணவில்லை. பாவிப்பயல் மீண்டும்போய் கரண்டில அடிபட்டுபோட்டானோ என்று நினைத்துக்கொண்டே வளவை நோக்கி ஓடினான்.
பின் வளவில் மரங்கள் அனைத்திலிருந்தும் இலைகள் உருவப்பட்டதுபோல இருந்தது. ஒரே அமைதியாகவேறு இருந்தது.
எல்லா இடமும் தேடிப்பார்த்தான் யாரும் இல்லை. ஒரு இடத்தில் சென்று சற்று தயங்கி நின்றான். திடீர் என பின்பக்கம் இருந்து சுபாங்கனின் தோழில் ஒரு கை தொட்டது. திரும்பி பார்த்தான்..பயங்கர உருவம் ஒன்று நெருக்கமாக நின்றது.
மாஸ்கை கழட்டிக்கொண்டு பாஸ்..பயப்படாதீங்க அது நான்தான் என்று கூல்போய் சொல்வதற்குள் மயங்கி விழுந்துவிட்டான் சுபாங்கன்.
தொடரும்…
16 comments:
ஸப்பா...முடியல.....
ஆவலோடு எதிர்பார்க்கிறோம் டைம் மிஷினை...
அனலிஸ்ட் தன்னை இங்கும் நிரூபித்துவிட்டார்...
ஸ்மால் ரிக்வஸ்ட்: அடுத்த பல்பை அனுதினனுக்கும் வரோக்கும் வாரி வழங்கவும்...
சத்தியமா முதல்ல படத்தை பார்த்தும் நானும் பயந்து தான் போய்ட்டன்
நல்ல இருக்கு..வாழ்த்துக்கள்!தொடருங்கள்..
சுபாங்கன் அண்ணாவும், கூல்போயும் அதிகமாகவே சிரிக்க வைக்கிறார்கள் அண்ணா. தொடருங்க் தொடர்ந்து சிரிக்க நாங்க ரெடி.
அப்பாவி சுபாங்கனை ஆளாளுக்கு மயங்கிவிழவைக்கிறாங்கப்பா
//சத்தியமா முதல்ல படத்தை பார்த்தும் நானும் பயந்து தான் போய்ட்டன்
//
ரெண்டாவது படத்தைப் பார்த்துத்தான் நான் பயந்துட்டேன் :p
:D
கதை விறுவிறுப்பாக போகிறது.
கதை முழுதும் நகைச்சுவை கோலோச்சுகிறது.
ஏழுதும் பாணி அருமை.
// இரண்டுபேரும் படுத்த இடத்தின் மூலையில் பிளாட்டில் பெரிய ஓட்டை ஒன்று இருப்பதை கவனிக்காமலே. //
:D :D :D
தொடருங்கள்....
அடிச்சு தூள் கிளப்புறீங்க பாஸ்
.////காலைக்காட்டச்சொன்னது இவ்வளவு அறிவாய்ப்பேசுறீங்களே! நீங்க சுபாங்கன்தானோ அல்லது ஆவியோ என்ற சந்தேகத்திலைதான்////
செம கலக்கல்..
இன்னும் எத்தனை பதிவர்களது டவுசர்களை கழட்ட போறியள்?
ஆகா ஆகா ஆற்புதமாக இருக்கு. இப்பதானே வாசிச்சேன்.தொடருங்கள். வாழ்த்துக்கள்
ஆகா ஆகா ஆற்புதமாக இருக்கு. இப்பதானே வாசிச்சேன்.தொடருங்கள். வாழ்த்துக்கள்
அண்ணா கதையின் விறுவிறுப்பு சும்மா ஏறி கொண்டே போகிறது!!!
//அட இதுதானா!!
நவம்பர் மாதம் 04ஆம் திகதி 1988 அவள் பிறந்திருக்கின்றாள்.
1994 ஆம் ஆண்டு ஸ்கூலுக்கு போயிருக்காள்.
அது வினோத் கம்ளி..சோ இவள் காதலித்த ஆளின்பெயர் வினோத்.
2008 இல இறந்திருக்கின்றாள் அதாவது அவளது 20ஆவது வயதிலை..சரியா அண்ணா..//
இந்த இடத்தில் கோபி அண்ணாவுக்கு பின்ணனியில் ஒரு பாடல் போட்டு அறிமுகத்தை வழங்கி இருந்தால் சூப்பரோ சூப்பர்!!!:P
//அந்த வினோத் பயல்மட்டும் என் கையில கிடைத்தான் செத்தான் என்றான் கூல்போய்.//
இது எந்த அர்த்தத்தில் சொல்லபட்டது என்று கிருத்திகன் அண்ணா வந்து சொல்லவும்!!!
//வந்தியத்தேவன் என்று அதில் பெரிய எழுத்துக்களால் இருந்தது.//
இத பார்த்துதான் பாஸ் நான் ரொம்பவே பயந்து போய்ட்டேன்!!! இங்கயும் வந்துட்டாரோ நான் பபா எண்டு சொல்லி கொண்டு எண்டு!!
//மாஸ்கை கழட்டிக்கொண்டு பாஸ்..பயப்படாதீங்க அது நான்தான் என்று கூல்போய் சொல்வதற்குள் மயங்கி விழுந்துவிட்டான் சுபாங்கன்.//
:))
தொடர்ந்து வரும் அங்கங்களுக்காக காத்திருப்பு
//Cool Boy கிருத்திகன். said...
ஸ்மால் ரிக்வஸ்ட்: அடுத்த பல்பை அனுதினனுக்கும் வரோக்கும் வாரி வழங்கவும்..//
என்ன ஒரு நன்றியுணர்வு!!! எப்படி எல்லாம் தங்கள் நன்றிகளை பதிவர்கள் காட்டுகிறார்கள்! ஏன்யா??? இப்படி
ஆஹா வர வர சோறு சுடுகிறத... ஊதிச் சாப்பிட்டு நேரம் போதவில்லை... அப்படியெ சாப்பிட்டு விட்டேன்... அடுத்த முறை கொஞ்சம் நெய்யும் விடுங்க நல்லாயிருக்கும்...
அது சரி நம்ம ஹீரோகிட்ட சொல்லுங்க.. பிரஷாந் பொன்னர் சங்கர் தான் நடிக்கிறாரென்று...
ஓ நம்ம பொன்னியின் செல்வனின் நண்பன் வந்தியத்தேவன் பற்றிய கதையும் இடையில் வருகின்றது. கொமெடி கலந்த ஆவிக் கதை நல்லாத் தான் இருக்கின்றது ஆனாலும் சுபாங்கனை இன்னும் கைப்புள்ளை போல் நடிக்க வைக்கலாம். ஹிஹிஹி.
//Anuthinan S said...
இத பார்த்துதான் பாஸ் நான் ரொம்பவே பயந்து போய்ட்டேன்!!! இங்கயும் வந்துட்டாரோ நான் பபா எண்டு சொல்லி கொண்டு எண்டு!!//
அண்ணே யார் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் நான் பபா தான்.
//ம.தி.சுதா said...
அது சரி நம்ம ஹீரோகிட்ட சொல்லுங்க.. பிரஷாந் பொன்னர் சங்கர் தான் நடிக்கிறாரென்று...//
ஹீரோ ஒரு கொமடியன் அவரிடம் இப்படி சீரியசான விடயங்கள் சொல்லலாமா?
பாரபட்சமில்லாம எல்லாருடைய ரவுசறையும் கிழிக்கிற உங்கட நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு..
Post a Comment