மரித்துப்போனவனின்
மனதுக்கு மட்டும் புரியும் எது யதார்தம்
விஞ்ஞானம் முரணாக…
தேவை.
தேவை… . தேவையென்ற கேள்விகள்
ஏது மற்ற நிரம்பல்கள்.
ஆளம்.
அற்புதங்கள், ஆச்சரியங்கள்
ஐ..ஐ..யோ முடிந்துவிட்டதே என் ஆயுள்.
மனைவி.
நிச்சயிக்கப்படாத நிட்சயதார்தம்.
தேவதையின் அருள், சாத்தானின் சாபம்
இரண்டினதும் ஒரே உருவம்.
கடவுள்.
உயிர்களுக்காக அத்தனை அழகும் படைத்தும்
பொறித்துவிட்டு போகவில்லை
உபயம் நான் என்று…
சாத்தான்.
ஸ்ரீ லங்கா -ஈழத்தில் தமிழர்படுகொலை..
சீனா -திபெத்தை ஆக்கிரமித்தது..
பாகிஸ்தான் -ஸ்ரீ லங்காவுக்கு உதவி…
ஆரம்பங்கள் அதன் விம்பங்கள்.
தமிழன்.
உலகமெங்கும் பறந்து
பிறர்கூடுகளில் முட்டையிடும் பறவைக்கு
சொந்தமாக இல்லை ஒரு வளை.
துரோகி.
அடிப்படை மரபுரிமைகள்
என்றும் மறைவதில்லையாம்
சொல்கின்றது விஞ்ஞானம்…
உண்மைதான்..ஆப்பிள் கடித்த நாள்முதல்
தொடர்கின்றதே..
நட்பு.
சார்பியல் பொய்யில்லை,
தனித்து நிற்காத அட்டைகள்
சார்ந்து தலை முட்டி நிலைத்து நிற்கின்றதே..
நன்றி.
பரஸ்பர சந்தோசம்
நான் பண்பானவன்
செய்தவன் மனம்குளிர்கின்றது…
17 comments:
**மனைவி
நிச்சயிக்கப்படாத நிட்சயதார்தம்.
தேவதையின் அருள், சாத்தானின் சாபம்
இரண்டினதும் ஒரே உருவம்.**
அருமை ஐயா
வாவ்.. கலக்கல்ஸ் அண்ணே..:)
சூப்பர் ஜனா அண்ணா!! தனியாக குறித்து சொல்ல ஒரு கவிதை மட்டும் எனக்கு பிடிக்க வில்லை!! எல்லாமே பிடித்து இருக்கிறது...
ஆனால் மனைவி கவிதை கொஞ்சம் தூக்கலா இருக்கிறது??????
அருமை
மனம்குளிர்கிறது
அருமையான கவிதைகள்...
அதுவும்
// சார்பியல் பொய்யில்லை,
தனித்து நிற்காத அட்டைகள்
சார்ந்து தலை முட்டி நிலைத்து நிற்கின்றதே //
என்பது அசத்தல் இரகம்...
அனைத்தும் மிக நன்றாக இருந்தன!
நல்லாயிருக்கு ஜனா. அனைத்தும் தர்க்க ரீதியில் சிந்திக்கப்பட்டுள்ளது.
//...உலகமெங்கும் பறந்து
பிறர்கூடுகளில் முட்டையிடும் பறவைக்கு
சொந்தமாக இல்லை ஒரு வளை...//
கவிதை அருமை அண்ணா... இதனால் தான் சொந்தக் கூட்டில் இருப்பவருக்க பருந்தை ஏவுகிறானா..?
@Thavaruban
ஆருமை ஐயா என்று சொல்லும் வேகத்திலேயே தெரியுது அனுபவம் என்று
@Bavan
நன்றி பவன்.
@Anuthinan S
//ஆனால் மனைவி கவிதை கொஞ்சம் தூக்கலா இருக்கிறது?????//
ம்ம்ம்... அங்கையும் சிவில் ஸ்ரேட்டஸ் மாறட்டும். இதைவிட தூக்கலாக பல கவிதைகள் வரும்!!!
@றமேஸ்-Ramesh
நன்றி ரமேஸ்...ஏ.சிக்கு பக்கதில இருக்கிறியளோ?
@கன்கொன் || Kangon
நன்றி கன்-கொன்
கார்ட்ஸ் கவிதை நல்லா பிடிக்குது? நல்லா கம்மாஸ் அடிப்பீங்கள் போல!!
@எஸ்.கே
நன்றி எஸ்.கே
@Pradeep
நன்றி அண்ணா
@ம.தி.சுதா
நன்றி மானா.தினா.சுதா
உண்மைதான்.
உயிர்களுக்காக அத்தனை அழகும் படைத்தும்
பொறித்துவிட்டு போகவில்லை
உபயம் நான் என்று…
படித்ததில் பிடித்தவரிகள்..
மிகச் சிறப்பான ஆக்கங்களை தங்கள்
வலைப்பதிவில் தந்துள்ளீர்கள்
அருமை!...வாழ்த்துக்கள்....
Post a Comment