Tuesday, June 7, 2011

ஹொக்ரெயில் - 07.06.2011

ராஜீவ் கொலை –அத்தனையும் உலகுக்கு வெளிவருவது எப்போது?

'எனது தந்தையின் மரணத்திற்குரியவர்களுக்கான தண்டனை இன்னும் தரப்படவில்லை..'
இந்த வார்த்தைகள் ராகுல் காந்தியால் 2008 ஆம் ஆண்டு பகிரங்கமாக வெளியிடப்பட்டது. அதனைத்தொடர்ந்து பிரியங்கா – நளினி சந்திப்பு, ஈழத்தின் இறுதிப்போர் கட்டங்கள், விடுதலைப்புலிகளின் அழிவு என்று உலகச்சுற்றில் பல விடயங்கள் நடந்துமுடிந்துவிட்டன.
ஆனால் இதில் முக்கிய குற்றவாளிகளாக தமிழீழ விடுதலைப்புலிகளே குற்றம் சாட்டப்பட்டு வந்தாலும்கூட, பின்னணி பற்றிய சர்ச்சைகளும், இதில் விடுதலைப்புலிகள் ஒரு கருவியாகவே பயன்படுத்தப்பட்டுள்ளனர் என்ற கான்ஸ்பிரன்ஸி தியரிகளும், விடுதலைப்புலிகளின் கோபத்தை ஒரு பெரிய சக்தி தனக்கு சாதகமான ஆக்கிக்கொண்டது என்ற மதியூகங்களும் இருந்துகொண்டே வந்தன.
அதுபோலவே காலத்திற்கு காலம் இந்த சந்தேகங்களுக்கான தூபங்களும், சில நியாயமான அதிர்ச்சியூட்டும் கேள்விகளும் அனைவரையும் மீண்டும் மீண்டும் சிந்திக்கத்தூண்டுவனவாகவே இருந்தும் வந்தன.

முதலில் வெளியான கார்த்திகேயனின் புத்தகம். ராஜீவ் படுகொலை சம்பந்தமாக விசாரணைகளை நடத்தும் குழுவிற்கு தலைமை வகித்தவர்களின் பிரதானமான நபர் கார்த்திகேயன். உண்மையை சொல்லப்போனால், எவர்மேல் வைத்;திருந்த விசுவாசத்தினாலோ என்னமோ, விடுதலைப்புலிகள்தான் இதை செய்தார்கள் என்று ஆதாரங்கள் கிடைக்கும் முன்னமே அரைவாசி அறிக்கைகளை தயாரித்துமுடித்துவைத்திருந்த கைதேர்ந்தவர் கார்த்திகேயன்.
உண்மையில் இன்றும் இது பெரும் புதிராக விடுதலைப்புலிகளுக்கு அப்பால் உள்ள சக்திகள் (உள் நாட்டு, வெளிநாட்டு) யார் என்று இனந்தெரியாது மறைக்கப்பட்டதற்கு கார்த்திகேயனின் பங்கே பிரதானமானது. விடுதலைப்புலிகளுக்கு அப்பால் சிலபேர் குறித்த உளவு தகவல்கள் வந்தாலும், அப்பால் விசாரணைகள் சென்றுவிடாது இருட்டடிப்பு செய்து ஒரு குழுவின் தலையிலேயே முழுவதையும் போட்டு விசாரணையினை முடித்த பெருமை அவரையே சாரும்.


அடுத்து ரதோத்மன். கார்த்தியேனுடன் பணிபுரிந்த இன்னுமொரு அதிகாரி, அவர் வெளியிட்டிருந்த புத்தகத்தில் கார்த்திகேயனின் செயற்பாடுகளை சாடியிருந்ததுடன், வெளிப்படையாகவே இதில் விடுதலைப்புலிகளுக்கு அப்பால் பெரும் சக்தி ஒன்றே பிரதானமாக இருந்தது எனவும், குறிப்பாக சந்திரசுவாமி, சுப்பிரமணியசுவாமி ஆகியோரில் பலத்த தந்தேகம் உள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.
அதே நிலையில் மீண்டும் இந்த விடயத்தில் புதிய சிக்கலாக உருவெடுத்துள்ளது ராஜீவ் சர்மா எழுதிய Beyond the Tigers: Tracking Rajiv Gandhi's Assassination. (விடுதலைப்புலிகளுக்கு அப்பால் ராஜீவ் கொலைப்பின்னணி)
இதில் ராஜீவ் காந்தியின் கொலைக்கான திட்டங்கள் லண்டனின் இடம்பெற்றதாகவும், அன்றைய பாராத பிரதமர், மற்றும் சந்திரசுவாமி போன்றோர் இதில் நேரடியாக ஈடுபட்டனர் என்றும், கொலையினை டில்லியில் நடத்த திட்டமிட்டதாகவும், அதனால் சில கலவரங்கள் இடம்பெறக்கூடும் என்று அது மாற்றப்பட்டதாகவும், சில சம்பவங்களை தாம் நேரில் கண்டு அது பற்றி நேரடியாகவே ராஜீவ் காந்தியை எச்சரித்ததாகவும் இன்ன பல திடுக்கிடும் செய்திகள் அதில் குறிப்பிடப்பட்டுள்ளன.

எது எப்படியோ ராகுல் காந்தி 2008 ஆம் ஆண்டு சொன்ன அந்த வார்த்தைக்கான பதில் 2009ஆம் ஆண்டே கிடைத்துவிட்டதாக பலர் கருத்துக்களை தெரிவித்திருந்தாலும், வேறுபலர் மகிழ்ந்திருந்தாலும்,
அவரது தந்தையின் கொலைக்கு காரணமானவர்கள் இன்னும் தண்டிக்கப்பட மட்டும் அன்றி வெளிப்படையாக இனங்காணப்படவும் இல்லை என்பதே இப்போதும் உண்மையாக உள்ளது.

ரஜினி எனும் மந்திரம் மீண்டும் விரைவில் ரீங்காரம்!

தமிழகத்தில் ஆட்சிமாற்றம் என்ற புதிய செய்தியும், புதிய ஆட்சி பற்றிய பரபரப்பும் எழுந்த நிலையில், அடுத்த பக்கம் ஒரு பெரிய விடயமாக உயர்ந்து நின்றது ரஜினியின் உடல் சுகயீனம் பற்றிய செய்திகளே.
ரஜினிக்கு என்ன ஆச்சு? ரஜினிக்கு என்ன ஆச்சு? என்ற ஆச்சரியங்களும், கவலைகளும், பல தரப்பினரிடையே பாரிய அளவில் தாக்கத்தை செலுத்தியது என்பது உண்மையே.
இந்த நிலையில் சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிற்சை பெற்றுவந்த ரஜினி இப்போ சிங்கப்பூர் சென்று மேலதிக சிகிற்சைகளை பெற்று, உடல் நலம் தேவையான அளவுக்கு தேறிவந்துள்ளதாக ஆறுதலான செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன.

இந்த நிலையில் ராணா படம் பற்றிய செய்திகள் அதிரடியாக வெளிவந்துகொண்டிருக்கின்றன. எந்த காரணத்திற்காகவும், இந்தப்படம் நிறுத்தப்படமாட்டாது என்றும், இதில் விரைவில் ரஜினி உடல் நலம் தேறிவந்து நடித்து தருவார் என்று தனக்கு நூறு வீத நம்பிக்கை உள்ளது என்றும் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் கூறியிருந்தார்.
இந்த நிலையில் அண்மையில் ராணா திரைப்படம் சம்பந்தமான சில தகவல்கள் வெளிவந்திருந்தன.
இதில் ரஜினி நடிக்கும் மூன்று பாத்திரங்களில் ஒன்று இறப்பதுபோன்ற கதையமைப்பு உள்ளதாகவும், இப்போது திடீர் என்று அந்த கதையமைப்பு மாற்றப்பட்டுள்ளதாகவும், அதேநேரம் பெரும் ஆர்ப்பாட்டமான சண்டைக்காட்சிகள் இதிலிருந்து நீக்கப்பட்டிருப்பதாகவும், அந்த செய்திகள் தெரிவிக்கின்றன.
எது எப்படியோ ரஜினி என்னும் பெயர் ஒரு மந்திரமாகவே தமிழ் இரசிகர்களிடம் உள்ளது என்பதை எவரும் மறுந்துவிடமுடியாது அந்த மந்திரம் மீண்டும் கம்பீரமாக ஒலிக்கும் என்ற நம்பிக்கை இப்போது துளிர்விட்டுள்ளது அனைவருக்கும் சந்தோசமே..

இன்றைய காட்சி
மனதிற்குள் எத்தனையோ, ஆசைகளை வைத்துக்கொண்டு தயங்கி நிற்கும் நெஞ்சங்கள் எத்தனையோ, சாதிக்கும் வெறி மனதில் இருந்தும், சூழ்நிலைகள் தடுக்கும் சந்தர்ப்பங்கள் எத்தனையோ, சாதிக்கத்துடிக்கும் இதுபோன்ற சாதுவான நெஞ்சங்களை கொஞ்சம் கவனியுங்கள்...
கண்டிப்பாக அந்த நெஞ்சங்களின் எண்ணங்களை நிறைவேற்றி கொடுங்கள்..
கொஞ்ச தூரத்திற்கு விரல் பிடித்து கூட்டிக்கொண்டு வந்து விடுங்கள்..

இந்த வாரவாசிப்பு
அற்புதன் எழுதிய 'அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை' என்ற தொடரை அன்றைய நாட்களின் நான் தவறாது வாசித்து வந்தது உண்டு. அற்புதனின் எழுத்து நடையும், சில சம்பவங்களை நம் கண்முன் நிறுத்தும் லாவகமும் அந்தக்காலங்களில் அனைவரையும் கவர்ந்த ஒன்று.
ஈழப்போராட்ட காலங்களின் இன்னல்கள், வடுக்கள் என்பவற்றை நாகரிகமான நடைமுறையில், விளக்கும் தன்மை சிலவற்றில் எனக்கு உடன்பாடுகள் இல்லை என்றாலும் அந்த அற்புதமான எழுத்துக்காக வாசிக்கவைத்தன.
அலுவலக நண்பன் ஒருவர் தீவிரமான வாசிப்பாளர் என்பதை அண்மையில் கவனித்து வந்தேன், வாசிப்பு தொடர்பாக அவருடன் சொல்லாடல் மேற்கொண்டபோதே இந்த தொடர் முழுவதையும் அவர் ஒரு புத்தகமாக கட்டி வைத்திருப்பதை அறிந்து அவரிடமிருந்து அவற்றை பெற்று மீண்டும், முழுவதுமாக வாசித்துவருகின்றேன். இப்போது அற்புதனின் சில தீர்க்க தரிசனங்களும் அதில் தெரிகின்றது.

இந்தவாரப் புகைப்படம்


மியூசிக் கபே..

இந்தப்பாடலுக்கும் எனக்கும் அதிசயமான அல்லது ஆமானுஷமான தொடர்பு ஒன்று உள்ளது அது பற்றி வெகுவிரைவில் ஒரு பதிவு இடுகின்றேன்.

அதுதவிர நான் எப்போதும் இரசித்து கேட்கும் பாடல்களில் ஒரு எவகிரீன் பேவரிட் சோங் இது..
எஸ்.பி.பி. இந்த பாடலின் சரணங்களிலேயே பாடலை ஸ்னேகிதி...என்ற ஒரு பிடியுடன் பாடத்தொடங்குவார், கேட்கும்போதே அந்தக்குரல் உள்ளங்கால் முதல், உச்சந்தலைவரை ஒரு இசை இலகிப்பு ரீங்காரம் இடும்...

'சுற்றி என்னை துரத்தும் துயரமடி என்ன நெற்றி பொட்டுக்கடியில் வைத்துக்கொள்ளடி
நேற்றிப்பொட்டு உதிர்ந்தால் வெயில் அடிக்கும் உன்னை நெஞ்சுக்குள்ளே மறைப்பாள் இளைய கொடி
மருந்துகள் இல்லா தேசத்தில்க்கூட மை விழிப்பார்வைகள் போதும்...
கவிதைகள் இல்லா மொழிகளில்க்கூட காதலன் புன்னகை போதும்..'
வரேவாவ்.....

ஜோக் பொக்ஸ்
கட்சி தலைவர் ஒருவர் சில நாடுகளுக்கு உத்தியோக பூர்வ பயணம் ஒன்றை ஆரம்பிக்க முன்னர் ஒரு பொதுக்கூட்டம் போடுகின்றார்.
அதில் அவரது பயணம் சிறப்பாக அமைய வாழ்த்தி பேசவந்த பிரதி அல்லது துணைத்தலைவர் பேசுகின்றார் இப்படி..

முதன் முதலாக எமது கட்சியின் தலைவர் உத்தியோகபூர்வமாக முதன் முதன் விமானப்பயணம் மேற்கொள்ளவுள்ளார், இதன்போது, விமானம் மேலெழும்போது எதிலாவது மோதி சுக்குநூறு அகாதிருப்பதற்கும், அப்படி மேலெழுந்தாலும் பறக்கும்போது ஏதும் குழப்பம் வந்து வெடிக்காமல் இருப்பதற்கும்.. அப்படி பறந்தாலும், பயங்கரவாதிகள் அந்த விமானத்தை கடத்தமால் இருப்பதற்கும், அப்படி கடத்தாமல் இருந்தாலும், அந்த விமானத்தின் என்ஜின்கள் பிழையாகி விமானம் கீழே விழாமல் இருக்கவும், அப்படி விழாமல் இருந்தாலும், அது இறங்கும்போது சில்லு சரியாக இறங்கி உருளாமல் விமானம் வெடிக்காமல் இருக்கவும் நான் இறைவனை பிரார்;.... என்று சொல்வதற்கு முன்னமே மைக்கை பிடுங்கிய தலைவர்..
என் வெளிநாட்டு பயணங்களை நிறுத்திவிட்டேன் என்று அறிவிக்கின்றேன் என்றார்.

29 comments:

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

வணக்கம் ஜனா அண்ணை! இருங்கோ படிச்சிட்டு வாறன்!

Ashwin-WIN said...

முதல் வடை எனக்கா???
இருங்க வாசிச்சிட்டு வாறன்.

வந்தியத்தேவன் said...

I read via my mobile so I will comment specially rajiv matter later :-)

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

ஜோக் அருமை! இதுதான் சொல்லாமல் சொல்லுறது என்று சொல்வதா? விமானத்தில் பயணிக்கும் போது துணிச்சல் அவசியம்

மைந்தன் சிவா said...

///அற்புதன் எழுதிய 'அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை' என்ற தொடரை அன்றைய நாட்களின் நான் தவறாது வாசித்து வந்தது உண்டு. அற்புதனின் எழுத்து நடையும், சில சம்பவங்களை நம் கண்முன் நிறுத்தும் லாவகமும் அந்தக்காலங்களில் அனைவரையும் கவர்ந்த ஒன்று.//
நானும் தான்...தினமுரசில் வந்தது என??

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

எனக்கும் அந்தப் பாட்டு மிகவும் பிடிக்கும் !நீங்கள் சொன்ன மாதிரி, எஸ் பி பி ஆரம்பிக்கும் அந்த இடம் மிக அருமையா இருக்கும்ிந்தப்பாடலின் தாளக்கட்டை வேறு பல பாடல்களிலும் பயன்படுத்தி இருக்கிறார்கள்/! ஹரிசும், ரஹ்மானும்

கார்த்தி said...

ராஜீவ் கொலை தொடர்பாக பல இடங்களில் பல மாதிரியாக வாசித்தமையால் எனக்கு பலபல குளப்பங்கள் இருந்து வந்தது!
ஓம் மைந்தன் சொன்னது போல அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை தொடர் தினமுரசில் வந்தபோது நானும் வாசித்துக்கொண்டிருந்தேன்! அது முழுமையாக முடியும்வரை வாசித்தேனோ எனக்கு ஞாபகம் இல்லை!
அந்தகாலத்தில் தினமுரசு பேப்பரிற்கு இருந்த வரவேற்பு சொல்லிவேலையில்லை

shanmugavel said...

அருமை ஜனா! அந்த ஜோக் சரியான காமெடி .வழாக்கம் போல சிறப்பு

THOPPITHOPPI said...

அருமை

புகைப்படத்தை விளக்கி இருக்கலாம்

பார்வையாளன் said...

ராஜீவ் படுகொலையை தாங்கள் செய்யவில்லை என விடுதலை புலிகள் , விசாரணையை சந்தித்து நிரூபித்து இருக்க முடியும் . தவறவிட்டு விட்டார்கள்

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

ஜனா எனக்கும் அற்புதனை அவ்வளவு பிடிக்கும்! அவரது எக்ஸ்ரே ரிப்போர்ட் வாசிக்காத வாரமே இல்லை! சிந்தியா பதில்கள், இலக்கிய நயம், அதிரடி ஐயாத்துரை , காதிலை பூ கந்தசாமி என தினமுரசின் ஆல் ரவுண்டர் அவர்! அவரது மறைவு செய்தி கேட்டு சில நாட்கள் பைத்தியம் பிடித்தவன் போல் இருந்தேன்!

இலங்கை ஊடகத்துறையில் அவருக்கு நிகராக எவருமே இல்லை! செய்தித்தணிக்கை கடுமையாக இருந்த அந்தக் கால கட்டத்தில் விளையாட்டு செய்திகள் சொல்வது போல, சண்டைக் கள நிலவரங்கள் சொல்லிவிடுவார்! மிக அற்புதமாக இருக்கும்!

குறிப்பாக புளொட் பா.உ. சண்முகநாதன் கொல்லப்பட்ட போது அனைவருமே அது ஒரு உள்வீடு சதி என்று சொல்லிக்கொண்டிருக்க, அடுத்தவார தினமுரசில், அது புலிகளின் வேலை என்று அற்புதன் அடித்துக் கூறியிருந்தார்!

அதேபோல் மாணிக்கதாசன் கொலையின் போதும் அற்புதனின் பேனா உண்மைகளைப் புட்டுபுட்டு வைத்தது!

ரஜினி திரணகமவை கொன்றது புலிகள் அல்ல, ஈ பி ஆர் எல் எஃப் என்று, அல்ஃப்ரெட் துரையப்பா முதல் காமினி வரை தொடரில் எழுதி சர்ச்சைக்கு உள்ளானவர் அற்புதன்!

உண்மையில் இலங்கை பத்திரிகை உலகில் அற்புதன் ஒப்பாரும் மிக்காரும் இல்லாதவர்! அவரிடம் இருந்ததைப் போல கிரியேட்டிவிட்டி வேறு எவரிடமும் இருந்ததில்லை!

ஆனால் இலங்கையில் கொல்லப்பட்ட பத்திரிகையாளர்களை நினைவு கூர்ந்து கட்டுரை எழுதும் கோமளிகள் ஒருபோதுமே அற்புதனுக்குரிய சரியான இடத்தை வழங்குவதில்லை! இதனை நான் பல முறை அவதானித்திருக்கிறேன்!

மிகவும் திறமை மிக்க ஒருவரை இந்தக் கோமாளிகள் எதற்காக புறக்கணித்தார்கள் என்று நீண்டகாலமாக யோசித்துப் பார்த்தேன்! பின்னர் கண்டு பிடித்தேன்!

** கற்றாரை கற்றார்தானே காமுறுவர் **

இலங்கை பத்திரிகை உலகில் அற்புதனைப் போல் அற்புதமான பத்திரிகையாளரும் இல்லை, அவரது காலத்தில் வெளிவந்த தினமுரசு போல் இனி ஒருபோதுமே வரப்போவதும் இல்லை!

இலங்கையில் வெளியாகும் ஒரு பத்திரிகையை மக்கள் முண்டியடித்து கியூவில் நின்று வாங்கினர் என்றால் அது தினமுரசு மட்டுமே!

அற்புதனின் மறைவுக்குப் பின்னர் தினமுரசை பொறுப்பெடுத்த திரு.ஸ்டாலின் அவர்களால், பழைய தினமுரசின் பத்தில் ஒரு மடங்கை கூட நெருங்க முடியவில்லை என்பது யதார்த்தமாகும்!

உண்மையில், அற்புதனை பாதுகாக்க தவறியமைக்காக இன்றுவரை டக்ளஸ் தேவானந்தாவை நான் திட்டிக்கொண்டு இருக்கிறேன்!வேலியே பயிரை மேய்ந்ததாகவும் ஒரு பேச்சுண்டு!

ஒரு முறை சிந்தியா பதில்களில் அற்புதனிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது ** உங்களை ஆச்சரியப் படுத்துபவர்கள் யார்? ** என்று!

அதற்கு அற்புதன் சொன்ன பதில் ** தமிழக ஜோக் எழுத்தாளர்கள்! - எப்படித்தான் தினம் தினம் புதுசு புதுசா கண்டு பிடிக்கிறார்களோ? **

என்று ஆச்சரியத்துடன் பதிலளித்திருந்தார்! அதனை வாசித்த அடுத்த நொடியில் இருந்து எனக்கும் தமிழக ஜோக் எழுத்தாளர்கள் மீது அப்படி ஒரு பிரியம் ஏற்பட்டது! அவர்களை நேசிக்க ஆரம்பித்தேன்!

தேடித்தேடி அவர்களது பெயர்களை தெரிந்துகொண்டேன்!

இன்று? எல்லோருமே நண்பர்களாகிவிட்டோம்!! போதாக்குறைக்கு அவர்களையே காலாய்த்து பதிவு போடுமளவுக்கு நெருக்கம்! - எல்லாம் அற்புதனால் வந்தது!

ஜனா அண்ணை, இலங்கை ஊடக வரலாற்றை, அற்புதனை நீக்கி அல்லது பிந்தள்ளி யாராவது எழுதுவார்களாக இருந்தால், அந்தக் கோமாளிகளுக்கு எதிராக கடுமையான வார்த்தை பிரயோகங்களுடன், பதிவுகள் போடுவேன்!

அற்புதன் நாமம் வாழ்க!! அற்புதனின் கிரியேட்டிவிட்டியும் வாழ்க!!!


குறிப்பு - இப்படி நான் எழுதியிருப்பதால் நான் ஏதோ ஈ பி டி பி வால் என்று யாராவது கேனைத்தனமாக நினைக்க வேண்டாம்! எனக்கு அற்புதனைப் பிடிக்கும் என்பதற்காக ஈ பி டி பி யை பிடிக்கும் என்று அர்த்தம் இல்லை! இன்னும் சொல்லப்போனால், அற்புதனைப் பாதுக்காக்க தவறிய அந்த அமைப்பின் மீதும், அதன் தலைவர் மீதும் எனக்கு கோபம் தான் வருகிறது!!!

பழைய நினைவுகளைக் கிழற வழி செய்த ஜனா அண்ணாவுக்கு மனமார்ந்த நன்றிகள்!!!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

ஜனா அண்ணை எனக்கொரு உதவி செய்யுங்கோ, உங்கள் ப்ளாக்கில் கமெண்டு போடுபவர்களது ப்ரோஃபைல் படங்கள் தெரியும் படி செட்டிங் செய்யவும்! அப்பத்தான் எழுச்சியாக இருக்கும்! இப்ப இருக்கிறது மொட்டையா இருக்கு!!!

Anonymous said...

வணக்கம் பாஸ்...

Anonymous said...

ராஜீவ் கொலை ஒரு தொடர் சங்கிலி போன்றது இதில் பல்வேறு தரப்புக்களுக்கு சம்மந்தம் உண்டு என்பது "அன்னை" சோனியாவுக்கே தெரிந்திருக்க வாய்ப்பு உள்ளது.... இது தொடர்பாக பெ தி க துரைசாமி பல கருத்துக்களை ஆதாரத்துடன் முன்வைத்து வருகிறார்....


அப்புறம் கார்த்திகேயன் இந்த விசாரணையின் பெயரில் அதிகளவான பணங்களை ஏப்பம் விடுவதாக கேள்வி...

முடிஞ்சு இருபது வருசமாச்சு இதில் சம்மந்தப்பட்டவர்கள் எல்லாம் வாழ்ந்து முடிச்சிருப்பார்கள் இனி கண்டுபுடிச்சு தண்டனை வழங்கி ...???

Anonymous said...

அற்புதன் - கேள்விப்பட்டிருக்கன், ஆனா பெரிசா வாசிச்சாதா நினைவில்ல. ( விபரம் புரியாத வயசு;-) ) லிங்க் இருந்தா கொடுங்கோ... ஆனால் இவர் கொலை தொடர்பான மர்ம முடிச்சு அவிழ்க்கப்படவில்லை ( யார் கொலை செய்யப்பட்டாலும் புலிகள் மீது தானே பழி போட்டு தப்பிக்கிறது வழக்கம் )..

Anonymous said...

நல்ல ஜோக் ,எனக்கு முதல் தடவை விமான பயணத்தின் போது பயம் என்றதே இருக்க வில்லை (யாழ் - கொழும்பு), ஆனால் இப்ப நடக்கிற விபத்துக்களை அறிஞ்ச பிறகு விமானம் என்றாலே இதயம் படபடக்குது :-)

தமிழ் உதயம் said...

ராஜீவ் கொலை மட்டுமல்ல, பல விஷயங்கள் அவர்களுக்கு எதிராக அமைந்துவிட்டது.

யோ வொய்ஸ் (யோகா) said...

i never missed a single paragraph in thinakural those days...

Ashwin-WIN said...

இன்றைய காட்சி மனதில் பதிந்தது. அன்றைய காட்சி இன்னமும் புரியாத புதிர். ராஜீவ் மாட்டர சொன்னேன்.
இன்றைய ரயில் பயணம் வழமைபோல் சூப்பர்.

Cool Boy கிருத்திகன். said...

//ராஜீவ் கொலை// உலகத்தமிழ் வரலாற்றில் பல சர்ச்சைகளை கிளப்பும் புயல் ஜனாண்ணா வாழ்க!

நிரூபன் said...

ராஜீவ் கொலை//

குழப்பங்களும், மர்மங்களும் நிறைந்ததாக இருக்கு சகோ. அதிகார வர்க்கம் தன் கரங்களை மறைத்திருப்பதால்,
இனியொரு காலத்தில் எதுவுமே வெளியில் வரப் போவதில்லை சகோ.

//ரஜினி பற்றிய செய்தி,
ரணா படச் செய்தியினைப் போன்று இனிப்பான செய்தியாக எம் காதுகளை எட்ட வேண்டும் சகோ. காத்திருப்போம். தலைவர் குணமாகுவார் எனும் நம்பிக்கைகளோடு.

குறும்படம்- வழிகாட்டலில்லாது தத்தளிக்கும் ஒரு இளைஞனின் மன நிலையினைப் படம் பிடித்துக் காட்டுகிறது.

இந்த வாரவாசிப்பு//

அற்புதனின் எழுத்தாற்றல் பற்றி ஓட்டவடை அவர்கள் நிறையவே கூறி விட்டார். நானும் ஒரு காலத்தில் இவரது அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரையான தொடருக்கு அடிமையாக இருந்தேன்.

//கோட்பாதர் படப் பாடல் எனக்கும் பிடிக்கும் சகோ.

//என் வெளிநாட்டு பயணங்களை நிறுத்திவிட்டேன் என்று அறிவிக்கின்றேன் என்றார்.//

ஹையோ...ஹையோ...
இந்த வார ஹொக்ரெயில்....சூப்பர், மப்பு கொஞ்சம் அதிகம், காரண்ம் இடையில் அற்புதன் வந்து எங்கள் நினைவுகளைக் கிளறி விட்டார்.

வதீஸ்-Vathees said...

ஆஹா அருமை!

வந்தியத்தேவன் said...

ராஜிவ் கொலையின் பின்னணியில் பல பெரிய கைகள் இருப்பது அண்மைக்காலமாக அறியப்படுகின்றது. ராஜிவ்காந்தி கொலையில் முன்னாள் இலங்கை ஜனாதிபதி ஒருவருக்கும் தொடர்பு என ஒரு முறை எங்கேயோ வாசித்த ஞாபகம்.

சந்திரசாமி, சுப்பிரமணியசுவாமி என பல பெரிய தலைகளை இன்னும் ஒழுங்காக விசாரணை செய்தால் பல உண்மைகள் வெளிவரும். ஜூலியன்வாலா பாக் கொலை செய்த மேஜர் டையரை கொலை செய்த உத்தம்சிங் தியாகியாக இந்தியாவில் சித்தரிக்கப்படுகின்றார் ஆனால் இலங்கையில் பல மக்களை கொலை செய்த ராஜீவை கொலை செய்த தாணு மட்டும் தீவிரவாதி. என்ன உலகமடா....

அற்புதன் காலத்தில் மட்டும் தினமுரசு வாசித்த ரசிகனில் நானும் ஒருவன். எதிரியையும் மதித்து கட்டுரைகளை அழகாக எழுதிய சிறந்த எழுத்தாளர் அவர். ஆனால் அதன்பின்னர் தினமுரசின் பல விடயங்கள் மாறிவிட்டது.

விக்கி உலகம் said...

மாப்ள தங்கள் பதிவு பல விஷயங்களை தாங்கி நிற்கிறது நன்றி!

ஜீ... said...

அருமை பாஸ்!

குறிப்பாக அற்புதன் பற்றி...ஒரு காலத்தில் வியாழக்கிழமைக்காக காத்திருப்போம் தினமுரசுக்காக..!

'அல்பிரட் துரையப்பா முதல்' தொடரை நானும் சேர்த்து வைத்திருந்தேன். பின்பு நாடோடி வாழ்கையில் தொலைந்துபோனவைகளில் ஒன்றாக..

அருமையான எழுத்துக்கள் அவருடையவை..

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

ஒரு பதிவில் இத்தனை விஷயங்களா? அனைத்தும் அருமை.. நன்றி

♔ம.தி.சுதா♔ said...

அண்ணா இப்பத் தான் தளம் வர முடிஞ்சுது மன்னிக்கவும்...

அற்புதன் 1998 களில் எனைக் கவர்ந்த ஒரு ஊடகவியலாளன் முக்கிய காரணம் அந்த நெருக்கடியான காலத்தில் கூட வன்னியில் தினமுரசு ஆனுமதிக்கப்பட்டிருந்தது (வியாபார நோக்காகவும் இருக்கலாம்)...

ரஜீவ் விடயத்தில் ஒரு முக்கிய திருப்பம் பற்றி யாரும் சொல்லலியே திரு அன்ரன் பாலசிங்கம் அவர்கள் இந்திய அரசிடம் தவறை ஏற்று மன்னிப்பக் கேட்பது போல ஒரு முறை கூறியது நினைவில்லையா ?

டிலான் said...

வணக்கம் ஜனா அண்ணா . ராஜிவ் காந்தி உயிரோடுதானெ இருக்கிரார்

Ramanan said...

சிறப்பான தொகுப்பு உண்மையில் கொக்ரெய்ல் அடித்த திருப்தியைத் தந்தது.

அற்புதன் அற்புதமான பத்திரிகையாளன் மீண்டும் ஒரு முறை அந்த வசீகர எழுத்துக்களை படித்துப்பார்க்கும் ஆர்வத்தை இந்த பதிவு ஏற்படுத்தி விட்டுள்ளது.

ராஜீவ் காந்தியின் படுகொலைக்கான அதிக விலையை ??? தமிழினம் கொடுத்துள்ளது.

அந்த துன்பியல் சம்பவத்தை காரணம் காட்டியே எங்கள் மீது துன்பச் சிலுவைகள் அறையப் பட்ட போது அவர்கள் அதற்கு அனுமதியும் ஆதரவும் தந்து ஊக்கப்படுத்தியிருந்தனர்.

ஆனால் உண்மையில் இந்திய புலனாய்வாளர்களுக்கு ராஜீவ் கொலையின் பின்னணி குறித்த அனைத்து்ம் தெரிந்திருக்கும்

ஆனால் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு மற்றும் ஒருமைப்பாட்டிற்கு ஈழத்தமிழர்களின் போராட்டம் அச்சுறுத்தலானது என்பதால் இலங்கையின் மனிதாபிமான படை நடவடிக்கையினை அவர்கள் தமக்கு சாதமாக பயன்படுத்தி புலிகளின் கதையை முடிப்பதற்கு முனைந்துள்ளார்கள்.

நியூட்டனின் மூன்றாம் விதி வலியது அது மீண்டும் மீண்டும் தாக்கங்களை தரக் கூடியது

இந்தியாவில் ஊழல்களுக்கு எதிரான அன்னாவின் போரட்டாம் மாபெரும் வெகுஐன இயக்கமாக மாறும்

துனிசியாவிலும் எகிப்திலும் .... லிபியாவிலும் எழுதப்படுகின்ற வரலாறு பாரத தேசத்பதிற்கும் பரவும் அது வரை போம்

LinkWithin

Related Posts with Thumbnails