Tuesday, June 21, 2011

யாழ்ப்பாணமும் காலச்சக்கரமும் - குறுநாவல் இறுதிப்பாகம்ன்ன சத்தம் இது என்று ஊகிப்பதற்கு முன்னதாகவே பெருமளவிலான குதிரைகளில் பறங்கியர் கண்ணில் எதிர்ப்பட்டவர்கள் அனைவரையும், சுட்டுக்கொன்றும், வெட்டிக்கொண்டும் வந்துகொண்டிருந்தனர், என்ன செய்வது என அறியாமலே பவுணன், தையல்முத்து, வெள்ளையன் ஆகியோர் கதிகலங்கிப்போய் நின்ற பொழுதுகளில் பறங்கியர்படை, அங்காடிக்குள் நுளைந்த அந்த நிமிடமே அங்காடிக்காவலாளியின் தலை வாசலில் உருண்டது. அசையவே முடியாத நினையில் மரணம் எவ்வாறு நெருங்குகின்றது என்பதை உணர்ந்த பவுணன், ஒருதடவை தையல்முத்துவையும், வெள்ளையனையும் பார்த்துக்கொண்டான். வெள்ளையன் அந்தப்பொழுதுகளில் என்ன நினைத்தானோ தெரியவில்லை, மாட்டுவண்டியின் அச்சாணியை இழுத்து நெருங்கும் ஒரு பறங்கிய குதிரைவீரனை நோக்கி ஓடி அவன் மார்பில், ஆழமாக அச்சாணினை திணித்துவிடுகின்றான். இரத்தம் கசிய அந்தப்பறங்கியன் குதிரையில் இருந்து வீழ்கின்றான், அந்த நிமிடமே பின்னால் நின்ற ஒரு பறங்கியனின் துப்பாக்கி வெடித்து வெள்ளையனின் கழுத்தை பதம் பார்க்கின்றது. மற்ற பறங்கியன் சுட்டது அவன் மார்பில் பாய வெள்ளையன் சரிகின்றனான்.


வெள்ளையன் காட்டிய தைரியமோ என்னமோ தையல்முத்தை நெருங்கிய பறங்கியன்மீது ஒரு பண்டமுடிச்சை தூக்கி எறிந்துவிட்டு அவன் சாய ஓடிச்சென்று அவன் கையில் இருந்த வாளைப்பறித்து அவனை வெட்ட பவுணன் முற்படும்போது, தையல்முத்தின் அலறல் கேட்கின்றது. பறங்கியனின் வாளைப்பறித்து அவன் தலையினை உடலில் இருந்து விடுவித்துவிட்டு திரும்புகின்றான் பவுணன், தையல்முத்தின் முகமே தெரியாதபடி முகம்முழுவதும் குங்குமம்போல இரத்தம் கசிந்துகிடக்க, பண்டமுடிச்சு ஒன்றுடன் சரிந்து இறுதி மூச்சினை இழுத்துவிட்டாள் அவள். அவளிடம் ஓடிவரும்போது, பாரிய சத்தத்துடன் தனது பின்தலையில் ஏதோ பாய்ந்ததுபோல உணர்கின்றான் அவன், ஓடமுடியாமல் அவனது கால்கள் சோர்வடைகின்றன, அவனது தோழில் அவனது சொந்த இரத்தம் விழுந்துகொண்டிருந்தது. அப்படியே குப்புறவிழுந்து ஏற்கனவே உயிரை விட்டுவிட்டு கிடந்த வெள்ளையனையும், அப்போதூன் இவன் திசைநோக்கி பாhத்தபடியே உயிரை விட்டுவிட்ட அவன் உயிர்மனையாள் தையல்முத்தையும் பார்த்துக்கொண்டான். இந்த நேரத்தில் மூச்சு எடுப்பது அவனுக்கு சிரமமாகின்றது, மெல்ல மெல்ல காட்சிகள் இருண்டு, முழுவதுமே இருட்டிவிட்டது.


னைவரும் ஓடிவந்து நுளைந்து சில விநாடிகள் தான் இருக்கும், ஏதோ கனவில் நடப்பதுபோலவும், திடீரென ஒவ்வொரு அசைவுகளும் மெதுவாக நிகழ்வதுபோலவும் அவனுக்கு தோன்றியது. பேரிடிபோல தொடர்ச்சியாக பல முழக்கங்கள், வெளியில் இருந்து அவன் கண்ணுக்கு தெரிந்தது பாரிய தூசி மண்டலம். காதுகளில் அவலக்குரல்கள், ஒருமித்த மணத்திற்கெதிரான குரலாகவும், மரணபய குரலாகவும் அவனுக்கு கேட்கின்றது. என்னப்பா இது என்று துஸ்யந்தி நடுங்கியபடி சொன்னது காதில் கேட்டது. பக்கத்தில் பாணைத்தூக்கியபடியே, உச்சக்கட்ட பீதியில் காண்டீபன் எச்சிலை உமிழ்ந்ததும் அவனுக்கு தெரிந்தது.
இத்தனையும் நடந்து அடுத்த செக்கன், தேவாலயமே மாறிப்போயிருந்து. “வருந்திப்பாரம் சுமப்பவர்களே என்னிடம் வாருங்கள், நான் உங்களுக்கு ஆறுதல் அளிப்பேன்” என்ற வாக்கியமே பொய்யாகிப்போனது.

கர்ணகொடூரம் என்பதன், அவலம் என்றால் என்ன என்பதன், முழு அர்த்தம் இறக்கும் தறுவாயில் காண்டீபனால் உணரப்பட்டது. ஏதா ஒரு உந்துவிசையில் சரியும்போது அவனின் கண்ணுக்கு முதலில் பட்டது, அந்த பாண் பெட்டிதான் பாண்களின்மேல் இரத்தங்களும், மனித தசைப்பிசிறுகளும் கிடந்தன. மல்லாக்காக சரிந்துகொண்டிருக்கின்றான் பிரசாந்தன், காண்டீபனின் நெஞ்சும், தலையும் மேலே தூணில் தொங்கிக்கொண்டிருந்ததை காண்கன்றான். அப்படியே தரையில் அவன் உடல் படுகின்றது. துஸ்யந்தியின் உடையை வைத்து இது துஸ்யந்தி என்பதை உணர்கின்றான். இந்த காட்சியுடன், தையல்முத்தும், வெள்ளையனும் இறந்துகிடக்கும்போது தனக்கு அறிவு இழக்கும் நிலை தோன்றியதும், சமகால நிகழ்வும் அந்தப்பொழுதுகளில் நினைவுக்கு வருகின்றது. ஒரு கணம் மரணம் அடையும், மரணம் அடைந்துகொண்டிருக்கும்போதும் பயம் கொள்கின்றான். காட்சிகள் மறைகின்றது கண்ணில் இருந்து, அவலக்குரல்கள் தொடர்ந்து கேட்கின்றன. மெல்லமெல்லமாக அவையும் தூரத்திலே கேட்பதுபோல தோன்றுகின்றது, அதன்பின் ஒரு போதும் கேட்டிராத நிரந்தமான மொளனத்தின் ஒலி மட்டும் கேட்கின்றது.கென்போமாக இது அந்த கிரகத்தில் இருந்துவரும் சமிக்கைதான் என்றான் சௌரவ். சுற்றும் எதிர்பார்க்காத நேரத்தில் அந்த தூரகோள் செயற்பாட்டு கருவிக்கு அந்த கிரகத்தில் இருந்து அடுக்கடுக்காக செய்திகள் வரத்தொடங்கின.
இருவரும் அந்த செய்திகளை அறியும் பொருட்டு தம்மை மறந்தவர்களாக பல வழிகளிலும் முயன்றுகொண்டிருந்தார்கள்.
விழிகளை மூட முடியாமல் பிரமைபிடித்தவள்போல இது கனவா? நனவா? என்ற மிரட்சியில் இருந்து மீள விருப்பமில்லாமவளாக மிரண்டுபோய் அதை கவனித்துக்கொண்டிருந்தாள் ஷமி...

'உங்கள் கிரகத்திற்கு உங்களால் வைக்கப்பட்ட பெயர் 'ஏர்த்' இதை நாம் உங்கள் ஆண்டு கணக்குப்படி 1500 வருடங்களுக்கு முலாகவே கண்டு பிடித்துவிட்டோம். ஆனால் உங்களுக்கும் எங்களுக்குமான தூரம் உங்கள் கணக்குப்படி பல இலட்சம் ஒளி ஆண்டுகள் என்பதால் எமது செய்திகளை உங்களுக்கு அனுப்ப முடியவில்லை, இப்போது கூட உங்கள் தரத்திற்கு எமது செய்திகளை அனுப்ப மிகவும் சிரப்படுகின்றோம் சுமார் 562 வருடங்களுக்கு முன்னதாக நாங்கள் உபயோகித்த கருவியினால்த்தான் இப்போது நீங்கள் புதிதாக உருவாக்கிய இதுபோன்ற கருவியுடன் தொடர்புகொள்ள முடிகின்றது.
உங்களை மிகத்துல்லியமாக நாங்கள் அவதானிக்கின்றோம்.
நீங்கள் பயப்படத்தேவையில்லை, நாங்கள் நீங்கள் நினைத்தும் பார்க்காத அளவுக்கு மேன்மைப்பட்டவர்கள், எங்கள் கிரகத்தில் ஜனன மரணங்கள் இல்லை, உடைகளை மாற்றுவதுபோல நாமே எமது உடல்களை உங்கள் கணக்குபடி 25 வருடங்களுக்கு ஒருமுறை மாற்றிக்கொள்கின்றோம்.
எமக்கு தேச எல்லைகள் கிடையாது, யுத்தங்கள் கிடையாது. ஒரு வகையில் உங்களைப்பார்த்தால் எங்களுக்கு பயமாகவும் உள்ளது.

இதுவே அந்த கிரகத்தில் இருந்து ஒலித்துக்கொண்டிருக்கும் செய்திகளாக இவர்கள் இருவரும் பதிவு செய்துகொண்டிருந்தனர்.
ஆனால் வெளியில் அவர்களுக்கு தெரியாமலே ஒரு பெரிய ஒப்பரேஷன் நடந்துகொண்டிருந்தது, சீன அதிவிரைவு விமானப்படையினர் இவர்களின் இடத்தை சுற்றி வளைத்துக்கொண்டு, இரகசியமாக உள்ளே நுளையும் படைநடவடிக்கையில் ஈடுபடுகின்றனர்.
பாதுகாப்பு சமிக்கை பிளாஸ் பண்ண ஆரம்பித்து, மாதவ், சௌரவ், ஷமி மூவரும் சுதாகரிப்பதற்கு முன்னதாகவே பாதுகாப்பு கதவை உடைத்துக்கொண்டு சீனப்படையினர் உள்ளே வந்துவிட்டனர்.

உள்ளே வந்த தளபதி, புருவத்தை உயர்த்தி பார்த்தபடி திரையை நோட்டம் விடுகின்றான், இந்த நடவடிக்கை அந்தக்கிரகத்தில் அவதானிக்கப்பட்டு, தகவல்கள் இடை நிறுத்தப்படுகின்றன. ஓடிவந்த தளபதி, மாதவ், சௌரவ் இருவரையும் அடித்து விழுத்திவிட்டு, பதிவு செய்த பெட்டகத்தை பக்குவப்படுத்துகின்றான்.
அவன் மூளைக்குள் செயற்படும் கட்டளைக்கருவி மூலம் அவன் உயர்மட்டத்தினரால் நிர்வாகிக்கப்படுகின்றான் என்பது புரிந்தது.

மாதவ், எப்போதும் காட்டாத முகபாவத்துடன் ஷமியையும், சௌரத்தையும் பார்க்கின்றான், அந்த அங்காடிக்கொலையும், புக்காரக்குண்டும் உங்களுக்கு நினைவுக்கு வருகின்றதா என்று இருவரையும் கேட்கின்றான். அவர்கள் இருவரையும் உன்னிப்பாக பார்க்கின்றான், அவர்கள் முகத்திலேயும் அப்படி ஒரு மாற்றம், மூவருக்குமே ஒரு புன்சிரிப்பு ஒரே நேரத்தில் வருகின்றது.

அந்தச்சீனப்படைத்தளதி, கத்திக்கொண்டே தனக்கு தேவையான பொருட்களை எடுத்துக்கொண்டு தனது படையினர் அனைவரையும் வெளியேற்றிவிட்டு, அந்த கதவருகே சென்று இவர்களைப்பார்த்து, கோபப்பார்வை ஒன்றை வீசிவிட்டு, தான் வெளியேறி போகையில், உள்ளே ஒரு சிறிய பெட்டியை வீசுகின்றான், அதிலிருந்து பச்சைநிற வாயு ஒன்று வெளியாகின்றது. சௌரத் ஏதோ பேச முற்படுகின்றான்..
முவர் இருந்த இடத்திலும், சாம்பல்களே மிச்சமாக இருக்கின்றது.


(சரி…இந்த இறுதிப்பகுதி கொடூரமானதாக இருக்கின்றது என எண்ணுவீர்கள், அனால் சில கொடூரங்களை எழுத்துக்களால் சிறிதளவே கொண்டுவரமுடியும். இதில்; பாத்தரங்களே புனைகதை அதவிர இந்த இரண்டு சம்பவங்களும் உண்மை. ஈழத்தில் 1505ஆம் ஆண்டு பறிக்கப்பட்ட தமிழனது சுதந்திரம் இன்று ஐந்து நூற்றாண்டுகள் கழிந்தும் கிடைக்காமல், அவலத்தின்மேல் அவலங்களை மட்டுமே உலகம் அவனுக்கு பரிசாக கொடுத்துக்கொண்டிருக்கின்றது)

நன்றி

9 comments:

shanmugavel said...

//நாங்கள் நீங்கள் நினைத்தும் பார்க்காத அளவுக்கு மேன்மைப்பட்டவர்கள், எங்கள் கிரகத்தில் ஜனன மரணங்கள் இல்லை, உடைகளை மாற்றுவதுபோல நாமே எமது உடல்களை உங்கள் கணக்குபடி 25 வருடங்களுக்கு ஒருமுறை மாற்றிக்கொள்கின்றோம்.//

அந்த கிரகத்தில் பிறக்க ஆசை.

Anuthinan S said...

ம்ம்ம்ம்ம்ம்!!! என்ன சொல்லுவது அண்ணா???

கதையில் நீங்கள் சொள்ளவன்ததி நான் புரிந்து கொண்டேன் என்று மட்டும் எனக்கு தெரிகிறது:))))

shanmugavel said...

உண்மை சம்பவம் என்னும்போது ஒரு மாதிரியாக இருக்கிறது ஜனா .

Anonymous said...

ம்ம்ம் நல்லாய் போச்சுது ....

Anonymous said...

///நீங்கள் பயப்படத்தேவையில்லை, நாங்கள் நீங்கள் நினைத்தும் பார்க்காத அளவுக்கு மேன்மைப்பட்டவர்கள், எங்கள் கிரகத்தில் ஜனன மரணங்கள் இல்லை, உடைகளை மாற்றுவதுபோல நாமே எமது உடல்களை உங்கள் கணக்குபடி 25 வருடங்களுக்கு ஒருமுறை மாற்றிக்கொள்கின்றோம்.
எமக்கு தேச எல்லைகள் கிடையாது, யுத்தங்கள் கிடையாது. ஒரு வகையில் உங்களைப்பார்த்தால் எங்களுக்கு பயமாகவும் உள்ளது./// அப்ப சொர்க்கம் எண்டு சொல்லுங்கோ...))) இப்படி ஒரு தேசம் எமக்கு கிடைக்காதா )))

தமிழ் உதயம் said...

இனி எவ்வளவு காலம் இந்த அவலம்.

நிரூபன் said...

வித்தியாசமான வடிவில்,
மூன்று வெவ்வேறு தளப் பரிமாணங்களில் இந் நாவலை நகர்த்தியுள்ளீர்கள்.

இறுதிப் பகுதியில் நீங்கள் சொல்லிய விளக்கங்களோடு தான் புரியாத பல விடயங்களும் புரிந்தது.

சி.பி.செந்தில்குமார் said...

பதிவு நல்லாருக்கு. லோகோவுல ஃபோட்டொ மாறி இருக்கு? ம் ம்

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

இறுதிப்பகுதி அசத்தல்..

LinkWithin

Related Posts with Thumbnails