வாழ்வே மாயம் இந்த திரைப்படத்தை பார்த்தபின்னர்தான் எனக்கு கேன்சர் என்ற நோய் எத்தனை கொடியது என்று முதன்முதலில் புரிய முடிந்தது. ஆனால் அந்த நோய் அதைவிட மிகக்கொடியது என்று காலம் நமக்கு உணர்த்திக்கொண்டிருக்கின்றது.
மனிதனின் மகிழ்ச்சியான வாழ்வின் ஒரு பெரும் குறுக்கீடாக இந்த கேன்சர் எனும்நோய் நாளாந்தம் ஒவ்வொருவரினம் வாழ்வில் தலைகாட்டிக்கொண்டிருக்கின்றது, மார்பு புற்றுநோய், கற்பப்பை புற்றுநோய், எலும்பு புற்றுநோய், தொண்டைப் புற்றுநோய், தோல் புற்றுநோய், இரத்தப்புற்றுநோய், மூளை புற்றுநோய் என பல்வேறுபட்ட புற்றுநோய்கள் ஒருவருக்கு மட்டுமின்றி அவரை சுற்றமுள்ள சுற்றத்தையும் ஆழாத துயரத்தில் ஆழ்திவிடுகின்றது.
கேன்சருக்கு எதிராக, கேன்சர் நோயாளர்களின் நலன்களை பேணுவதற்காக இன்று உலகம் முழுவதும் பல அமைப்புக்கள் சேவையில் ஈடுபட்டு வருகின்றன. அவ்வாறான சேவைகளில் கமல் நற்பணி மன்றம் மும்மரமாக ஈடுபட்டிருந்ததும் யாவரும் அறிந்த ஒன்றே.
வாழ்வே மாயம் திரைப்படத்தில் ஒரு புற்றுநோய் உள்ளவராக கமல் நடித்திருந்தாலும், இந்த கேன்சர் என்ற நோய் கமலை சுற்றியுள்ள, கமலுக்கு நெருக்கமான பலரை காவுகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்க ஒன்றே.
சாவித்திரியில் இருந்து கௌத்தமி வரை அந்த நோய்க்குள்ளான பலருக்கு அவர்களின் வேதனைகளில் பங்கெடுத்து கமல் ஆறுதலளித்துவருகின்றமை குறிப்பிடத்தக்க ஒன்றே.
குறிப்பாக மகேந்திரனுடைய மரணம், ஸ்ரீ வித்யாவுடைய மரணங்கள் என்பன கேன்சரால் இடம்பெற்றன அந்த மரணங்கள் கமலை வெகுவாக பாதித்தும் இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
என்னதான் யதாத்தவாதியாகவும், உலகியலை தத்துருவமாக கமல் புரிந்துவைத்திருக்கின்றார் என்றாலும், அவருக்கு நெருங்கியவர்களின் இழப்புக்கள் அவரை ஒவ்வொரு கட்டத்திலும் பெரிதும் பாதிக்கும் என்று அவரது நெருங்கிய நண்பர்கள் சொல்கின்றனர். பேச்சுக்களிலும், செயல்பாடுகளிலும் முதிர்ந்த தெளிவான தன்மையினை கமல் ஹாசன் என்ற இந்த மனிதன் கொண்டிருந்தாலும், பாசத்திலும், நட்பிலும் இந்த மனிதன் ஒரு குழந்தை என்று மதன் சுட்டிக்காட்டியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
தனக்கு மிக நெருங்கியவர்களை கேன்சர் நோய்க்கு பறி கொடுத்த கமல், கேன்சர் நோயாளர்கள்மீது விசேட கவனம் மிக்கவர் என்பது குறிப்பிடத்தக்கது.
திரைப்படங்களிலும், வாழ்வே மாயத்தில் தான் ஒரு கேன்சர் நோயாளியாக அவர் நடித்திருந்தாலும், நினைத்தாலும் இனிக்கும் படத்தில் ஜெயப்பிரதாவின் பாத்திரம் உட்பட தனது பல படங்களில் இந்த கேன்சர் நோயின் சோகமுடிவுகளை சொல்லிவருவதையும் அவதானிக்கலாம், சமீபத்திய உதாரணம் வசூல்ராஜா எம்.பி.பி.எஸ், இதில் கேன்சர் வந்த இளைஞனை காப்பாற்றமுடியாமல் கமல் கண்கலங்கி நடிப்பது நடிப்பாக தெரிய வாய்ப்பிருக்கவில்லை.
மலையாளத்தில் கமலின் சிறப்பு தோற்றத்துடன் வெளிவந்த படம் 4 பிரன்ஸ், இதில் ஜெயராம், ஜெய்சூர்யா, குஞ்சாக்கோ போபன், மற்றும் மீரா ஜஸ்மின் என்போர் நடித்திருந்தனர். இந்த நான்குபேரும் புற்றுநோய் தாக்கத்திற்கு உள்ளாகின்றனர். மரணத்தை நோக்கி போகும் இவர்களின் விரத்திப்போக்கில் திருப்புமுனையாக அவர்களை இரட்சிக்கும் பாத்திரத்தில் வருகின்றார் கமல் ஹாசன். இந்த படம் புற்றுநோயாளர்கள் மீதான் சமுகத்தின் பார்வையினை மாற்றும் எனவும், புற்றுநோயாளர்களுக்கும் ஒரு மனவலுவாக அமையும் என்றும் அதன் இயக்குனர் சாஜி சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.
வார்தைகளுடன் மட்டும் வாழ்பவர் இல்லை கமல் என்று அவர் சிலாகிப்பது உண்மைதான், புற்றுநோய் சம்பந்தமான கருவூட்டல் மையக்கருத்து இந்த திரைப்படம் என்பதால் இந்த திரைப்படத்தில் நடிப்பதற்காக ஒரு சல்லிக்காசினை பெறவில்லை கமல் ஹாசன்.
இதே திரைப்படம் தமிழிலும் 'அன்புள்ள கமல்' என்ற பெயரில் மொழிமாற்றப்படவுள்ளதாக தெரியவருகின்றது.
ஆம்.... கமலுக்கு அந்த அடைமொழி மிகப்பொருத்தமானதுதான்.
11 comments:
ம்ம்ம்!
கமலும் கன்சரும்! புற்றுநோய்க்கு எதிரான விளிப்புணர்வு நடவடிக்கைகளில் கமல் ஆர்வம் காட்டி ஈடுபடுவது உண்மைதான்.
நான் நினைக்கிறேன் “மகேந்திரன்“ என்று நீங்கள் குறிப்பிட்ட இடத்தில் “இசையமைப்பாளர் மகேஸ் மகாதேவன்“ என்று வந்திருக்க வேண்டும்.
ஆம் இப்போது கான்சர் ஓர் பெரும் ஆட்கொல்லி நோயாக தலை எடுத்து வருகிறது,
கூடிய சீக்கிரத்தில் சர்க்கரை நோயை தாண்டினாலும் தாண்டும் போல ,எவற கேட்டாலும்
கான்செர்னு சொல்ல ஆரமிச்ருகாங்க.
கண்ணும் கண்ணும் கொள்ளை அடித்தால்
அப்போல்லோவில் கௌதமி உடல்நலமில்லாது இருந்த போது பார்த்ததாய் அம்மா சொன்னது நினைவு வருகிறது...
அவர்/ரஜினி மற்ற கோடம்பாக்க கூட்டங்கள் நினைத்தால் நிறைய செய்யலாம் என்பதே என் கருத்து...
கமலைப் பெருமைப்படுத்தும் பதிவு.ரசிகர் மன்றத்தை நற்பணி இயக்கமாக மாற்றியவர்.அன்புள்ள என்பது சரி.
// ஓபின் ஸ்டேட்மன்ட் : தமிழ் சினிமா ஒரு கோவில் என்றால் அங்கே தெய்வம் கமல்ஹாசன் :)
உங்கள் முகப்புத்தகத்தில் இந்த கருத்து. பதிவு கமலைப்பற்றி .... ஹிஹிஹி
இனிய மாலை வணக்கம் பாஸ்,
கான்ஸர் நோயினால் பாதிக்கப்பட்டோருக்கான கமலின் சமூகப் பணியினையும், அவரின் இன்னோர் வாழ்வியற் பக்கத்தினையும் அழகுறச் சொல்லியிருக்கிறீங்க.
கமலின் புதிய படம் பற்றிய தகவலுக்கும் நன்றி பாஸ்.
பகிர்வுக்கு நன்றி....TM 7
என் பெயர் ஃபெடரிகோ கில்லர்மோ Varas
நான் மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன் என ஒரு தொழிலதிபர், நான் பெற முடிந்தது என் கடன் இருந்து இந்த அமைப்பு மூலம் சர்வதேச வளர்ச்சி வங்கி
மீட்சி வங்கி கடன் திட்டத்தை வழங்குகிறது கடன் வர்த்தகர்கள் மற்றும் பெண்கள் தயாராக யார் ஒரு கடன் விண்ணப்பிக்க.
$ 100,000 ஆயிரம் டாலர்கள் $ 500,000 ஆயிரம் டாலர்கள், தனிநபர் கடன்கள்,
$400 மில்லியன் $ 800 மில்லியன் கடன் கடன் வணிக கடன்கள்
வாகன காப்பீடு கடன் மற்றும் மிகவும்
தொடர்பு: zechkovivan@mail.ru
அல்லது greskychanosky@post.cz
வந்து ஒரு வரும் அனைத்து
என் பெயர் ஃபெடரிகோ கில்லர்மோ Varas
நான் மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன் என ஒரு தொழிலதிபர், நான் பெற முடிந்தது என் கடன் இருந்து இந்த அமைப்பு மூலம் சர்வதேச வளர்ச்சி வங்கி
மீட்சி வங்கி கடன் திட்டத்தை வழங்குகிறது கடன் வர்த்தகர்கள் மற்றும் பெண்கள் தயாராக யார் ஒரு கடன் விண்ணப்பிக்க.
$ 100,000 ஆயிரம் டாலர்கள் $ 500,000 ஆயிரம் டாலர்கள், தனிநபர் கடன்கள்,
$400 மில்லியன் $ 800 மில்லியன் கடன் கடன் வணிக கடன்கள்
வாகன காப்பீடு கடன் மற்றும் மிகவும்
தொடர்பு: zechkovivan@mail.ru
அல்லது greskychanosky@post.cz
வந்து ஒரு வரும் அனைத்து
Post a Comment