விஜய குமாரணதுங்க!
இலங்கையில் வாழ்ந்துவரும் பெரும்பான்மையான சிங்களவர்களால் மட்டும் அல்ல சிறுபான்மையினரான தமிழர்களாலும் நேசிக்கப்பட்ட ஒரு மனிதர். இலங்கை சிங்கத்திரைப்பட புகழ்பெற்ற ஒரு நடிகர்.
'திரையில் தவிர நிஜத்தில் நடிக்கத்தெரியாத ஒரு நல்லவர்' என்று எப்போதும் மட்டுமல்ல இறக்கும்போதும்கூட அவரது நண்பன் ஒஸி அபயகுணசேகர சொல்லிக்கொண்டதற்கு ஏற்பவே வாழ்ந்தவர் அவர் என்று தமிழ்மக்கள்கூட இன்றும் கூறிக்கொள்ளும் மனிதர்.
தனது மனைவியும், இலங்கையின் இரண்டு பிரதமர்களான எஸ்.டபிள்யூ.அர்.டி. பண்டாரநாயக்க, ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க அகியோரின் புதல்வியுமான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரணதுங்க தன் நாட்டின் உயர்சக்திமிக்க ஜனாதிபதியாக வருவார் என்று அவர் எப்போதும் நினைத்திருக்க வாய்ப்பில்லை.
ஏன் என்றால் தனது மனைவி அரசியலுக்கு வரக்கூடாது என்பதில் அவர் பெரும் அக்கறை கொண்டிருந்தார் விஜய குமாரணதுங்க.
இடதுசாரி, சோசலிச சிந்தனைகளே விஜய் குமாரணதுங்கவை பெரிதும் ஈர்ந்திருந்தது. சோசலிஸ தத்துவத்தில் லெனினுடைய பல கொள்கைகள் பலவற்றில் அவர் பெரும் ஈடுபாடுடைய ஒருவராகவே இருந்துவந்தார்.
விஜய் எப்போதும் தன்னை முன்னிலைப்படுத்தி சிந்திக்கத்தெரியாத மனிதன் என்றும், மற்றவர்களின் கஸ்டங்களை கைகட்டி பார்த்திருக்கும் தன்மை விஜய்க்கு இல்லை எனவும், உதவி என்று கேட்குமுன்னமே ஒடி வந்து உதவும் ஒரு உன்னதமான நண்பன் விஜய குமாரணதுங்க என்று இன்றும் அவரது நண்பர்கள் கூறிக்கொண்டிருக்கின்றார்கள்.
ஏம்.ஜி.ஆரைப்போல சினிமாவில் நடித்துக்கொண்டே அரசியலில் பிரவேசம் செய்துகொண்டவர் விஜய் குமாரணதுங்க, இலங்கையின் முதலவாது பதிவு செய்யப்பட்ட கட்சி என்ற பெருமையினை இன்றும் தன்னகத்தே வைத்துள்ள ஒரே கட்சியான லங்கா சமசமாஜக்கட்சியில் சேர்ந்துகொண்ட விஜய குமாரணதுங்க அந்த கட்சியின் பல செயற்பாடுகளிலும் முன்னிலையில் நின்று உழைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் 1974 ஆம் அண்டிலேயே அவர் ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார். இந்த நிலையில் 1982 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் அப்போதைய இலங்கை ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனவை எதிர்த்துப்போட்டியிட்ட சுதந்திரக்கட்சி வேட்பாளரான ஹெக்டர் கொப்பேஹடுவவை ஆதரித்து தீவிர பிரச்சாரம் செய்தார்.
இதனால் மீண்டும் ஜனாதிபதியான ஜெ.ஆர்.ஜெயவர்த்தனவின் கழுகு கண்களுக்கு விஜய குமாரணதுங்க தப்பிக்க வாய்ப்பிருக்கவில்லை.
நக்ஸலைட் மற்றும் அரசாங்கத்திற்கும் ஜனாதிபதிக்கும் எதிரான அவதுர்று வழக்கில் விஜய் மாரணதுங்க சிறைக்கு தள்ளப்பட்டிருந்தார்.
பின்னர் சிறையில் இருந்து மீண்ட விஜய் குமாரணதுங்க முழுநேர அரசியலில் ஈடுபடும் நோக்கத்தை உறுதியாக எடுத்துக்கொண்டார். இந்தக்காலங்களில் இலங்கையில் இனப்பிரச்சினை விஸ்வரூபம் கொண்டு எழுந்து நின்றது.
அடக்குமுறைகளை அரசு தமது ஆயுதமாக தொடர்ந்தும் பயன்படுத்திவந்தது.
இந்த நடவடிக்கைகளை அடியோடு வெறுத்தார் விஜய் குமாரணதுங்க.
1984 ஆம் ஆண்டு ஸ்ர்P லங்கா மகஜன பக்ஸய (இலங்கை மக்கள் கட்சி) என்ற கட்சியை ஆரம்பித்தார். ஜாதி, மத, குலங்களுக்கு அப்பாற்பட்ட இலங்கை மக்கள் அனைவரும் சமம் எனவும் அனைவருக்கும் சமமான வாழ்வாதாரமும், சம பாதுகாப்பு உரிமைகளும் வழங்கப்படவேண்டும் என்ற கொள்கையுடன் நாட்டு மக்கள் அனைவரையும் சமத்துவம் என்ற ஒரே குடையின்கீழ் கொணடுவரவதற்கு தாம் பாடுபட இருப்பதாகவும் அறை கூவினார் விஜய குமாரணதங்க.
இலங்கை சிங்கள தமிழர்களிடம் நிலவி வந்த இனப்பிரச்சினைக்கு சமஸ்டிமுறையிலான தீர்வே இறுதித்தீர்வு என்று அந்தக்காலகட்டத்திலேயே பெரும் சிங்கள பேரினவாத சக்திகளின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும், வெளிப்படையாகவும், உறுதியாகவம் கூறியிருந்தார் விஜய் குமாரணதுங்க.
இந்த பதங்களை அவர் வெறும் பேச்சுக்கானதாக சொல்லவில்லை என்பதையும் செயல்வீரத்துடன் துணிவுடனே சொல்லியதாகவும் தமிழ் மக்கள் உணர்ந்துகொள்ளும் வண்ணம் எந்தவொரு சிங்களத்தலைவர்களும் செய்யமுடியாத செயலை செய்துகாட்டினார் விஜய குமாரணதுங்க.
1986 அம் அண்டு அப்போது விதலைப்புலிகளின் கட்டுப்பாட்டிற்குள் இருந்த யாழ்ப்பாணத்திற்கு வருகைதந்து, விடுதலைப்புலிகளின் உயர் மட்டத்துடன் பேச்சுக்களை நடத்தியிருந்தார் குமாரணதுங்க.
அவர்மேல் உள்ள மரியாதை நிமித்தம். அவரது நேர்மைச்செயற்பாட்டிற்காகவும் தமிழீழ விடுதலைப்புலிகள் தாங்கள் கைது செய்து வைத்திருந்த 12 பேர் அடங்கிய ஸ்ரீ லங்கா பொலிஸ் குழுவொன்றையும் விடுதலை செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையின் சாபக்கேடு இனவாதங்களில் ஊறிப்போன இரு கட்சிகளுமே மாறி மாறி அரசுக்கட்டிலில் வீற்றிருப்பதே. எபபோ சிந்தித்து புரட்சி ஒன்றை செய்ய முனையும் சிங்களத்தலைவன் ஒவ்வொருவனும் அதே இனவாதத்தினால் அழிக்கப்பட்டிருக்கின்றார்கள்.
அந்த குறிக்கு முன்னேற்றமான ஒரு பாதைக்கு இலங்கையை கொண்டு செல்ல எத்தனித்த விஜய் குமாரணதுங்கவும் தப்பிக்கமுடியவில்லை.
1988 அம் ஆணடு பெப்ரவரி மாதம் 16 ஆம் நாள் அவரது வீட்டில் இருக்கும்போதே மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு ஆயுததாரிகளால் அவர் சுட்டு சரியக்கப்பட்டார்.
ஒரு பிரபல நடிகனாக விஜய் குமாரணதுங்க
காலங்களை மீறிய உடை அலங்காரம், நேர்த்தியான நடை உடை பாவனை, மீண்டும் மீண்டும் பார்க்கத்தோன்றும் முகம் என்பன சிங்ளகத்திரையிலே தோன்ற ஆரம்பித்தபோது, ஹிந்தி திரையில் சிக்கியிருந்த சிங்கள பார்வைகள், தமது சினிமாப்பக்கம் வர ஆரம்பித்தன.
'ஹந்தான கத்தாவ' என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகிய விஜய குமாரணதுங்க தொடர்ந்தும் 141 திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இதில் சுவாரகசியமான விடயம் என்னவென்றால் 1979 ஆம் ஆண்டு இந்திய இலங்கை கூட்டுத்தயாரிப்பில் உருவாகிய நங்கூரம் என்ற திரைப்படம் வந்திருந்தது. முத்துராமன். லக்ஸ்மி ஆகியோர் இதில் நாயக நாயகியாக நடித்திருந்தனர், இந்த திரைப்படத்தில் விஜய் குமாரணதுங்க நடித்திருந்தார், அவருடன் இணைந்து இலங்கையரான ஏ.ஈ.மனோகரனும் இந்த திரைப்படத்தில் நடித்திருந்தார் என்பதுடன், இந்த திரைப்படத்தில் எம்.எஸ். விஸ்வநாதனுடன் இணைந்து இலங்கை இசையமைப்பாளரான ஹேமதாஸவும் இசையமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
1945 ஆம் ஆண்டு இதேநாள் பிறந்திருந்த விஜய குமாரணதுங்க இன்றிருந்திருந்தால் அவருக்கு வயது 66.
13 comments:
இனிய இரவு வணக்கம் பாஸ்,
நலமா?
காலங்கள் சென்றாலும் ஒரு கலைஞானகவும்,
அரசியலில் மக்கள் மத்தியில் நெருங்கிய பரிச்சயமுடைய சிங்கள மக்களின் தோழனாகவும் நேசிக்கப்பட்ட விஜயகுமாரணதுங்காவைப் பற்றிய வரலாற்றினை மீட்டிப் பார்க்க வைக்கும் அருமையான பதிவு.
நன்றி பாஸ்.
வணக்கம் ஜனா அண்ணை! விஜய குமாரண துங்க பற்றிய அருமையான தகவல்கள் சொல்லியிருக்கீங்க! அன்னாரின் சாவுக்கு காரணம் மேடம்தான் என்று, நான் சிறியவனாக இருக்கும் போது பல பெரியவர்கள் சொல்லிக் கேட்டிருக்கிறேன்!
ம்..... எப்படியோ? அந்தக் கலைஞன் காலத்தால் சாக மாட்டான்!
உண்மையில் விஜய் எப்படி பெரும்பாண்மை மக்கள் கொண்டாடிய கலைஞ்ஞர் என்பதை பல மூத்த சகோதர மொழி பெரியவர்களுடன் உரையாடும் போது அறிந்து கொண்டேன் அவரின் கட்சி வாழ்க்கை வித்தியாசமானது சேவை செய்ய வெளிக்கிட்ட நல்ல உள்ளத்தை இனவாதிகள்காலம் பலிவாங்கியது கொடுமையே!
காத்திரமான பதிவு பலருக்குத் தெரியாத விடயங்களை சொல்லியிருக்கிறீங்க நான் கூட விஜய் மகஜன கட்சியை மட்டும்தான் உருவாக்கினவர் என்று இருந்தேன் சில கட்சிகளில் சேர்ந்து பின் தான் தனிக்கட்சி தொடங்கினார் என்பது உங்கள் ஊடாக தெளிவு பெற்றேன்!
நன்றி ஜனா அண்ணா!
நல்லா அழகா சொல்லிருக்கீங்க பாஸ்
விடுதலைப் புலிகளின் ஆளுகைக்குள் யாழ்ப்பாணத்தின் பெரும் பகுதி இருந்த போது தென்னிலங்கையில் இருந்து வருகைதந்த முக்கிய அரசியல்வாதி என்பதற்கு அப்பால் தமிழ் மக்களும் சிங்கள மக்களுக்கு இணையாக அதிகாரங்களை அனுபவிக்கும் உரிமையுடையவர்கள் என்பதை உறுதியாக நம்பியவர் வெளிப்படையாக பேசியவர் .. அவரின் மரணத்திற்கு அத கூட காரணமாக இருக்கலாம்
விஜயகுமாரணதுங்க பற்றி இரண்டு உறுத்தல்கள்
1. ஒரு தீவிர இடதுசாரி ‘தனது மனைவி அரசியலுக்கு வருவதை விரும்பாமை’ என்பது மிகப்பெரிய முரண்
2. இலங்கைத் தேசிய இனங்களின் பிரச்சினையில் தீவிர வலதுசாரிப் போக்குடைய தலைமைகளைவிட மோசமான முடிவுகளை, அதுவும் 90 களுக்குப் பிற்பட்ட காலங்களில் எடுத்தவர்கள் இடதுசாரிகள். குமாரணதுங்காவின் காலம் 88ல் முடிந்த காரணத்தால் அவர்பற்றிய முழுமையான மதிப்பீடு கடினம்
வெகு இயல்பான ஒரு நடிகர், 80களில் சிங்கள சினிமா ஒரு லாபம் தரும் தொழிற்றுறையாக இருந்த போது கோலோச்சியவர்களில் ஒருவர். மசாலா படங்கள் மட்டுமல்லாமல் நல்ல படங்கள் ஒன்றிரண்டிலும் நடித்திருக்கிறார் என நினைக்கிறேன்.
இவர் யாழில் வி.புலிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தைகளின் க்ளிப்பிங்குகளை டிவியில் பார்த்திருக்கிறேன். அதிலெல்லாம் அப்பாவியாய் இவர் கூடவே இருந்த இவர் மனைவியே பின்னாளில் தன் கணவரின் கொலையாளிகளுடன் அரசியல் கூட்டு வைத்தார் என்பதும், தமிழர்களை பெரும் துன்பத்துக்கும் இடம்பெயர்வுகளுக்கும் ஆளாக்கினார் என்பதும் பெரிய முரண். ஆனால் இப்போ ஏதோ ஞானம் வந்தது போல செனல் 4 கொலைக்கள காட்சியை பார்த்து கண்ணீர் விட்டதாகவும் சிங்களவனாய் பிறந்ததற்காய் வெட்கப்படுவதாய் தன் மகன் சொன்னதாக எல்லாம் பேட்டியளிக்கிறார்.
94 தேர்தல் ஞாபகமிருக்கா? இவருக்கு பொட்டு எல்லாம் வைத்து சமாதனப் புறாவாக கொண்டாடி 63% க்கும் மேல வோட் எடுத்தார் என நினைக்கிறேன்.
சிறந்த நடிகன் என்பதற்கு அப்பால் மானிடமேன்மைபற்றியும் அனைவருக்குமான உரிமைகள்பற்றியும் சிந்தித்த மனைதாபிமானம்மிக்க மனிதன். நினைவலைகளைப் பகிர்ந்த்தற்கு நன்றி.
இனிய தீப ஒளி திருநாள் வாழ்த்துக்கள்..
தகவல்கள் நிறைய அறிந்துகொண்டேன் பாஸ்... ஆச்சரியமாய் இருக்கு...
This is new to me... thanks to share.. www.rishvan.com
என் பெயர் ஃபெடரிகோ கில்லர்மோ Varas
நான் மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன் என ஒரு தொழிலதிபர், நான் பெற முடிந்தது என் கடன் இருந்து இந்த அமைப்பு மூலம் சர்வதேச வளர்ச்சி வங்கி
மீட்சி வங்கி கடன் திட்டத்தை வழங்குகிறது கடன் வர்த்தகர்கள் மற்றும் பெண்கள் தயாராக யார் ஒரு கடன் விண்ணப்பிக்க.
$ 100,000 ஆயிரம் டாலர்கள் $ 500,000 ஆயிரம் டாலர்கள், தனிநபர் கடன்கள்,
$400 மில்லியன் $ 800 மில்லியன் கடன் கடன் வணிக கடன்கள்
வாகன காப்பீடு கடன் மற்றும் மிகவும்
தொடர்பு: zechkovivan@mail.ru
அல்லது greskychanosky@post.cz
வந்து ஒரு வரும் அனைத்து
என் பெயர் ஃபெடரிகோ கில்லர்மோ Varas
நான் மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன் என ஒரு தொழிலதிபர், நான் பெற முடிந்தது என் கடன் இருந்து இந்த அமைப்பு மூலம் சர்வதேச வளர்ச்சி வங்கி
மீட்சி வங்கி கடன் திட்டத்தை வழங்குகிறது கடன் வர்த்தகர்கள் மற்றும் பெண்கள் தயாராக யார் ஒரு கடன் விண்ணப்பிக்க.
$ 100,000 ஆயிரம் டாலர்கள் $ 500,000 ஆயிரம் டாலர்கள், தனிநபர் கடன்கள்,
$400 மில்லியன் $ 800 மில்லியன் கடன் கடன் வணிக கடன்கள்
வாகன காப்பீடு கடன் மற்றும் மிகவும்
தொடர்பு: zechkovivan@mail.ru
அல்லது greskychanosky@post.cz
வந்து ஒரு வரும் அனைத்து
Post a Comment