
“சத்திரியானாக இருப்பதைவிட சாணக்கியனாக இருப்பது பல நன்மைகளை பயற்கும்” என்ற கருத்தினை மற்றுமுழுதாக என்னால் ஏற்றுக்கொள்ளமுடியாது. ஆனால் “ சத்திரியனாக இருப்பது மட்டும் போதாது, சந்தர்ப்பங்கள் கிடைக்கும்போது சாணக்கியனாகவும் வேண்டும்” என்பதை நான் முமையாகவே எற்றுக்கொள்கின்றேன். தமிழனைப்பொறுத்தவரையிலும் அவன் எந்தச்சந்தர்ப்பத்திலும் சாணக்கியனாக இருந்ததில்லை, அதனாலேயே அவனுக்கு இந்த நிலை ஏற்பட்டுள்ளது என்பதையும் ஓரளவுக்கு எற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.
தமிழன் அதிகம் உணர்ச்சிவசப்படக்கூடியவன், எனவே அவன் உணர்ச்சிகளை முதன்மைப்படுத்தியே வரலாற்றில் பல முடிவுகளையும், செயற்பாடுகளையும் எடுத்துள்ளான். அதன் பின்னர் பல விளைவுகள் அவனுக்குப் பாதகமாகவே நடந்துள்ளது, நடந்தும் வருகின்றது.
தமிழனுக்கே உரிய கெட்ட குணங்களும் அவனது முன்னேற்றததை தடுப்பதற்கும், பிறர் அவனது முதுகில் குத்துவதற்கும் செங்கம்பளம் போட்டு வரவேற்கின்றது. ஒன்றை தெளிவாக யோசித்து பாருங்கள், தமிழன் ஒரு தமிழனுக்கு விஸ்வாசமாக இருப்பானா? இவர் என்னைவிட பெரியஆளா? எப்பொழுது இவரை விழுத்திவிட்டு நான் அதற்கும் மேலாக போவது என்றுதான் நினைப்பான், ஆனால் அதே தமிழன் வேறு இனக்காரர்களுக்கு கீழே இருப்பானென்றால், ஒரு தெய்வத்திற்கு தொண்டன் செய்யும் பணிகளைவிட அதற்கும் மேலே சென்று பணியாற்றுவான், அந்த வேற்றினக்காரன் “இங்கிவனை பெறுவதற்கு நான் என்ன தவம் செய்தேனோ” என்று நினைக்கும் அளவுக்கு தமிழனது பணி அத்தனை சிறப்பாக இருக்கும்.
இந்தக்கால கட்டத்தில் வேற்றினத்தின் தலைவனின்கீழ் சேவை செய்யும் அவன் தன்கண்முன்னே தன்னினம் அவனால் பிடுங்கி எறியப்பட்டாலும், அவனது விஸ்வாச போதை அவனை செயலற்றவன் ஆக்கிவிடும் (இதையும் தாண்டி பலபேர் தலைவர்களின் சமாதிகள் உள்ள கடற்கரையில் வந்து பல நாடாகங்களையும் அரங்கேற்றுவார்கள்)
ஓன்றைக்கவனித்து பாருங்கள், தமிழனின் இனத்திலேயே சிறந்த நடிகன் இருப்பான், அனால் தமிழன், அன்நியன் ஒருவனைத்தான் சிறந்த நடிகன் என்பான், தமிழன் ஒருவன் சிறந்த நிர்வாகியாக இருப்பான், ஆனால் தமிழனோ அவனை எற்றுக்கொள்ளாமல் வேற்றான் ஒருவனையே சிறப்பானவன் என்பான், தமிழை படித்து, தமிழ் நாகரிகத்தை கற்பதற்கு வேற்றுமொழிக்காரன் முயல்வான், அனால் இந்த சனியனைப் படித்து பண்டிதராகவா ஆகப்போகின்றேன் என்பான் தமிழன்.
இப்படி தனக்குத்தானே தன்னம்பிக்கை இல்லாத சமுதாயமாக தமிழ்ச்சமுதாயம் வாழுமே அனால் இன்னும் 50 வருடங்கள் கழித்து என்ன நடக்கும் என்பதை கற்பனைகூடப்பண்ணிப்பார்க்க முடியாதுள்ளது.தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோர் இந்த தமிழ் உணர்வை தட்டி எழுப்பவும், தமிழனை தலை நிமிரச்செய்யவும் படாத பாடுபட்டனர். அதில் குறிப்பட்ட அளவு வெற்றியும் பெற்றிருந்தனர் என்பது உண்மையே. ஆனால் இன்று???
பெரியாரினதும், அண்ணாவினதும் கைபிடித்து நடைபயின்றவர்களினால், அதே தமிழன் பெரியாரும், அண்ணாவும், காட்டிய திசைக்கு நேர் எதிர்த்திசையில், கையைப்பிடித்து இழுத்துச்செல்லப்படுகின்றது.
இந்தச் சூதுக்களும், சூழ்சிகளும் நிறைந்த உலகத்தில் நின்றுகொண்டு, எதையும் நேருக்கு நேர் எதிர்த்து தர்மம் வெல்லும், சத்தியம்தான் ஜெயிக்கும் என்று, வாய்மொழிகள் பேசி திரும்பத்திரும்ப சத்திரியம் பேசுவதில் எந்த நன்மைகளும் வந்துவிடப்போவதில்லை. சாணக்கியமாக காய்களை நகர்த்தவேண்டும். எதிர்தரப்பில் சாணக்கியன் ஒருவன் வந்து சமரசம் என்று பேசி எங்களுக்கே தெரியாமல் எங்கள் பலத்தையே உடைகின்றான் என்பது, அவன் திறமை! எங்கள் பலவீனம்!! அவனுக்கும் மேலாக ஏன் எங்களால் சாணக்கியனாக இருக்கமுடியவில்லை? திரும்பவும், உணர்ச்சிகளின் போக்கில் முடிவெடுத்து, அவனைப்போல சாணக்கியன் வருவதைவிட, எங்களையும்விட உணர்ச்சிகளுக்கு முதலிடம் கொடுக்கும் யதார்த்தவாதிகள் பதவிக்கு வந்தால் நன்றாக இருக்கும் என நினைப்பது சாணக்கியம் அகாது. அதன் விளைவுகளும் நேர் எதிராகவே இருக்கும்.
சோவியத் யூனியனுக்கும், அமெரிக்காவும் நேரடியாகவே பெரும் பகையும், மறுதலிப்பான மாற்றுக்கருத்தக்களும் இருந்தன. ஆனால் அவை ஒன்றோடொன்று நேரடியாக யுத்தம் இட்டுக்கொண்டனவா? அமெரிக்கா சத்திரிய வழியில் சென்று சோவியத் யூனியனுடன் பாரிய யுத்தம் செய்துதானா அந்தப்பெரிய தேசத்தை 16 துண்டுகளாக பிளந்தது? இல்லையே… அந்தப்பெரிய தேசத்தையே தனது சாணக்கியத்தால் அமெரிக்காவால் பிளக்கமுடிகின்றது என்றால், ஈழத்தில் ஒரு கடுகளவு உள்ள நிலத்தை எம்மால் ஏன் பிரிக்கமுடியவில்லை?
ஆரம்ப காலத்தில் ஈழத்தில் சிங்களவர்களைவிட வெள்ளை ஆட்சியாளர்களுடன் நெருங்கிய தொடர்புகளும், மதிப்பும் இருந்தும் கூட சுதந்திரத்தின்போது தமது சாணக்கியத்தை தவறவிட்டனர் தமிழர், அதனால் பின்னரும், சிங்களவரை விட தமிழர்கள் உயர் தொழிலிலும், படிப்பிலும் உயர்ந்திருந்தபோதும் கூட தமது சாணக்கியத்தை தவறவிட்டனர் தமிழர், இந்தியாவில் தமிழ் நாட்டில் எம்.ஜி.ராமச்சந்திரனும், மத்தியில் இந்திரா காந்தியும் என இனிக்கிடைக்காத ஒரு சந்தர்ப்பம் இருந்தபோதிலும், சாணக்கியமில்லாத தமது நகர்வுகளால் தமக்குள்ளேயே பிளவுபட்டு சாணக்கியம் இன்றி அந்த சந்தர்ப்பத்தையும் தவறவிட்டனர், ஆக சாணக்கியமாக ஈழத்தமிழன் எடுத்த ஒரே ஒரு செயற்பாடு 1990-91 ஆம் அண்டுகளில் சாணக்கியமாக சிங்கள அரசுடன் இரகசியமாக காய்நகர்த்தி இந்தியாவை நாட்டைவிட்டுத்துரத்தியதுதான்.
தமிழனது போர்க்குணம், உணர்ச்சிவசப்படுத்தல், பழிதீர்க்கும் எண்ணங்கள் தவறு என்பதை நான் ஆதரிக்கவில்லை. சில முள்களை முள்ளாலேயே எடுக்கவேண்டும். சகல வழிகளிலும் தமிழன் அடக்கப்பட்டதனாலேயே அவன் ஆயுதம் ஏந்தினான். தங்கையை கற்பழித்து தம்பியை வெட்டிக்கொன்றவனுடன் போய்க் கைகுலுக்கமுடியாது, அவனைக்கொல்லத்தான் வேண்டும். சொல்லிக்கேட்காதவர்களை அடித்துத்தான் கேட்கச்செய்யவேண்டும், இதற்கு மாற்றுக்கருத்துக்களை தமிழன் என்ற பெயரில் யாராவது கூறினால் அவன் தமிழனே அல்ல. ஆனால் சத்திரியம், வீரத்தை கையாளும் ஒரு இனம் நிறைந்த சாணக்கியத்தையும் கைக்கொள்ளவேண்டியது இன்றியமையாததுவே. அதற்காக சிலபேர் நினைக்கலாம் எதிரியுடன் சேர்வதுதான் சாணக்கியம் என்று உண்மையில் அதற்குப்பெயர் சாணக்கியம் அல்ல விபச்சாரம்.
என் அபிப்பிராயப்படி இனிவம் காலங்களில் தமிழன் போகும்பாதை ஒரு நேரான சத்திரியசாணக்கியப் பாதையாகவே இருக்கவேண்டும்.
2 comments:
வெழுத்ததெல்லாம் பால் என்று நம்பி, அனைவரையும் சகொதரனாகவே பார்த்து, தவறுசெய்தால் அதையும் உடனடியாக மறப்பதே தமிழனின் குணமாகியபடியால் அவன் இலகுவாக ஏமாறிவிட்டான். இனித்தான் அவன் சாணக்கியமாக நடந்துகொள்ளவேண்டும்.
தமிழ்10 இல் இணையுங்கள் பணத்தை அள்ளுங்கள்
. தமிழ்10 இணையத்தளம் ஆரம்பிக்கப்பட்ட குறுகிய காலத்திற்குள்ளேயே இவ்வளவு பெரிய வெற்றியையும் வரவேற்பையும் பெற்று இருப்பது தமிழ் பதிவர்களாகிய உங்களால் தான் .சுருக்கமாகச் சொன்னால் இது எங்கள் வெற்றி என்பதை விட உங்கள் வெற்றி என்று கூறினால் அது மிகையாகாது .எனவே தமிழ்10 தளம் தன் வெற்றியை உங்களுடனும் பகிர்ந்து கொள்ளும் விதமாக எடுத்து வைத்திருக்கும் முதல் முயற்சியே இது .
மேலும் படிக்க
http://tamil10blog.blogspot.com/2009/06/10_02.html
Post a Comment