

ஆனால் ஒன்று அமெரிக்காவில் அட்லாண்டா ஜோர்ஜியாவில் 1884 ஆம் அண்டு பதிய ஒரு முயற்சியாக தயாரிக்கப்பட்டபோதிலோ அல்லது, 1892இல் நிறுவனம் தொடங்கப்பட்டு சந்தைப்படுத்தியபோதிலோ கொக்கா –கோலாவை முதல் நுகர்வோர்களான அமெரிக்கர்கள் அப்படியே ஏற்றுக்கொள்ளவில்லை. பல பல காரணங்களுக்காக அமெரிக்க மக்களால் அதை நுகரமுடியவில்லை. இருந்தாலும் கூட விடாமுயற்சி, நீண்டகாலத்திட்டம், தன்னம்பிக்கையுன் பல நடவடிக்கைகளை எடுத்தே, ஆரம்பத்தில் இலாபங்களைக்கூட கருதாமலேயே கொக்கா –கோலாவின் ஆரம்பகால நிர்வாகம் உரமான அத்திவாரத்தை போட்டுக்கொண்டது.
உதாரணமாக பொதுச்சந்தைகள், சுப்பர் மார்க்கட்டுகள், பொதுமக்கள் கூடும் இடங்கள் என சகல இடங்களிலும் அன்றைய நாட்களில் கொக்கா –கோலா அடுக்கப்படும், நுகர்வு செய்யப்படுகின்றதோ இல்லையோ, மீண்டும் மீண்டும் பழைய இருப்புக்களை எடுததுவிட்டு புதிய இருப்புக்கள் அடுக்கப்படும், மனதைக் கவரும்படியும், கவர்ச்சிகரமாகவும், மாற்றத்திற்கான காலம் என்ற தொனியிலும் சந்திக்கு சந்தி விளம்பரங்கள் ஒட்டப்பட்டன.
ஆம் நாளாக நாளாக ஒன்றையே பார்த்துப்பார்த்து பழகிய அமெரிக்க மக்களின் மன ஓட்டங்களில் மாறுதல்கள் ஏற்பட்டு. படிப்படியாக நுகரப்பட்டு 107 வருடங்களைக்கண்டு இன்று உலகின் மிகப்பெரிய நிறுவனங்களில் முதன்மையானது என்ற பெயரை கொக்கா – கோலா பெற்றுள்ளது.

ஒரு வியாபாரம் மாபெரும் வெற்றிப்பாதைக்கு செல்கின்றது என்றால் பலரும் அந்த தொழிலில் தாமும் முதலிட ஆர்வம் காட்டமுனைவார்கள் என்பது இயல்பானது, இந்த வகையில் கீரைக்கடைக்கும் ஒரு எதிர்கடையாக அமெரிக்காவிலேயே ஆரம்பிக்கப்பட்டது தான் பெப்சி (பெச்சி கோ) நிறுவனம்.
ஜூன் மாதம் 16 ஆம் நாள் 1903 அம் அண்டு பெப்சி என்ற பிரான்ட் முத்திரையுடன் அது வெளியானது. இருந்தபோதிலம் ஆரம்பத்தில் இதையும் அமெரிக்க மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. அதவாது அசலுடன் பழக்கப்பட்ட அவர்களை நகல்போன்று தெரிந்த பெப்சியை நிராகிரித்தனர்.
எனினும் பெப்சியும் விடுவதாக இல்லை. தன் தரத்தை உயர்த்த பாடுபட்டது, புதிய பல வித்தியாசமான பானங்களை அறிமுகப்படுத்தியது.1975 ஆம் அண்டு பகிரங்க நுகர்வோர் சவால் ஒன்றை பெப்ஸி நிகழ்த்தியது அதில் கொக்கோ – கோலா மற்றும் பெப்சி ஆகியவற்றின் சுவை பற்றி கருத்துக்கள் அறியப்பட்டு பெப்சியே சுவையானது என்று அதிகப்படியான வீதமானவர்கள் தெரிவித்தனர்.
அந்த ஆண்டில் இருந்து இன்றுவரை ஊயடழ றயசள என வர்ணிக்கப்படும் இருபெரும் வர்த்தக மையங்களின் யுத்தம் தரத்திலும், புதிய சுவைகளிலும், புதிய அறிமுகங்கள் என்பவற்றிலும், விளம்பரங்களிம் நடந்தவருகின்றது.

இவங்க ஏன் மோதிக்கிறானுக? நாங்கள் என்ன ஒன்றை மட்டுமா குடிக்கின்றோம் வஞ்சகம் இல்லாமல் இரண்டையும் மாறி மாறியல்லவா குடிகினக்றோம் என எம்மில் பலர் நினைப்பது புரிகின்றது.சரி…பார்ப்பதற்கு சுவாரகிசியமாக கொக்கா –கொலா, பெப்சி இடையிலான போட்டிகளை பாருங்க….
புது ஜெனரேசனுக்கு பெப்சிதான் தேவையாம்.
கொக் - பெப்சி பிரீஸர்களுக்கிடையிலான மோதல்...
No comments:
Post a Comment