
பொப் எனும் இசைவடிவம் போத்துக்கேயர்களினால் 15 ஆம், 16ஆம் நூற்றாண்டிலேயே அறிமுகப்படுத்தப்பட்டு பிரபலப்படுத்தப்பட்டதாக அறியமுடிகின்றது.
இந்தவகையில் இலங்கை 1505 அம் அண்டு போத்துக்கேயர்களால் கைப்பற்றப்பட்டு 1658 வரை ஆளப்பட்டது. அந்தக்காலங்களில் இலங்கை மக்களின் சமயங்களான இந்து, பௌத்த சமயங்களைச்சேர்ந்த மக்களை கட்டாயமாக கிறிஸ்தவ மதத்திற்கு மாறவேண்டும் என ஆணைபிறப்பித்திருந்தனர் போத்துக்கேயர். இதன் காரணமாக கோவில்கள், விகாரைகள் என்பன இடிக்கப்பட்டு, இவர்கள் கிறிஸ்தவ துதிகளைப்பாடவேண்டும் என கேட்கப்பட்டனர். அதன்பொருட்டு இடிக்கப்பட்ட ஆலயங்கள், விகாரைகள் இருந்த இடங்களில் தேவாலயங்கள் எழுப்ப்பட்டது. அப்போதைய இலங்கை மக்களை உடனயடியாக முழு கிறிஸ்தவர்களாக மாற்றுவது சிரமம் என உணர்ந்த போத்துக்கேயர், தேவ ஆரதனைகளுக்கு தமது வழக்கத்தில் இருந்த பொப் இசையினை பயன்படுத்த தொடங்கினர், இங்கு போத்துக்கேயர்களால் 16ஆம் நூற்றாண்டில் விதைக்கப்பட்ட பொப் இசை அத்தியாவரத்தின் சாயலே இன்றும் இலங்கையின் இசையில் பாரிய தாக்கத்ததை ஏற்படுத்திவருகின்றது.
அன்றில் இருந்து ஊர்ப்பாடகர்கள், அண்ணாவியர்கள் வாயிலாக, சில தமிழ் பொப் இசைப்பாடல்கள் செவிமடுக்கப்பட்டுவந்துள்ளன. அந்தக்காலங்களில் பெரும்பாலும், திருமண வீடுகளில் சில பாடகர்கள் இப்படியான பொப் பாடல்களை பாடிவந்திருந்தனர்.
“சின்னத்தம்பி சீமானாம் சிப்பிலி சந்தைக்கு போனானாம்”
அங்கே ஒருத்தியை கண்டானாம் கும்மட்டம் தம்பட்டம் போட்டானாம்”
என்று ஆரம்பிக்கும் பாடலும்,
அன்றைய போத்துக்கேய ஆட்சியாளர்களையே எதிர்ப்பதுபோன்ற
“என்ன பிடிக்கிறாய் அந்தோனி?
எலி பிடிக்கிறன் சினோரே!
போத்திபொத்தி பிடி அந்தோனி!!
கூவிக்கொண்டோடுது சினோரே”போன்ற பாடல்கள் நாம் அறிந்த வகையில் போத்துக்கேயர் காலங்களிலேயே தமிழில் உருவாகிய பிரபலமான பாடல்கள். ஆகவே இது போன்ற பல பாடல்கள் கால மாற்றங்களால் அழிந்துபோய்விட்டன.

குறிப்பாக அந்த காலங்களில் பல கார்னிவேல்கள், விசேட சிறப்பு நிகழ்சிகள், பீஸ்ட் வைபவங்கள் போன்ற நிகழ்வுகளிலும், அப்போது இலங்கையில் பரபல்யம் பெற்ற “ருவிஸ்ட்” என்ற அட்டத்தின்போதும் இந்த பொப் இசை மேற்கத்தேய இசைக் கருவிகளின் பக்கவாத்தியத்துடன் புது உத்வேகத்துடன் அரங்கேறின. அதன் பின்னர் மீண்டும் பல விழாகளிலும். திருமணம் போன்ற வீட்டு விசேசங்களுக்கும் இந்த பாடல்கள் இசைக்கப்பட்டன.
சுதந்திரத்தின் (1948) பின்னரான
காலங்களில், யாழ்ப்பாணம் போன்ற இடங்களில் பல புதிய இசைக்குழுக்கள் ஆரம்பமாகி மேற்படி பொப் இசையினை, வழங்கி மிகப்பிரபலமாகின. இதில் குறிப்பிட்டுக்கூறக்கூடிய ஒருவர் கண்ணன் நேசன் அவர்கள். இவ்வாறு 1950 களின் கடைசி பகுதிகளில் தமிழ் பொப் இசை இசைக்குழுக்களால் இசைக்கப்பட்டுவரத் தொடங்கியது. இருப்பினும் தென்னிந்திய திரை இசைக்கு பலரும் முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்து, தமிழ் திரையிசையின் தாக்கம் ஏற்றபட்ட காரணத்தினால் 1960 களில் பொப் இசையினை மட்டுப்படுத்தப்பட்ட அளவே கேட்ககக்கூடியதாக இருந்தது.
அதன் பின்னர் இலங்கையிலும் நிகழ்ந்த பல அரசியல்க்குழப்பங்கள், 58 கலவரங்கள், சிறிமா ஆட்சியில் பஞ்சம் என்பனவற்றால் மேற்படி தமிழ்ப்பொப் இசைக்கும் பஞ்சம் ஏற்படலாகிற்று.
1977 ஆம் அண்டு ஐக்கிய தேசியக் கட்சி இலங்கையின் ஆட்சியை கைப்பற்றி இலங்கையில் திறந்த பொருளாதாரக்கொள்கையினை கொண்டுவந்து, அனைத்தையும் நவநாகரிகப்படுத்தி, மேலைநாடடு கலாச்சாரங்கள், அப்படியே கொழும்புக்கு வந்துசேர்ந்தபோது, தமிழ் பொப் இசை மட்டும் இன்றி சிங்கள பொப் இசையும் வீறுகொண்டெழுந்து என்றும் இல்லாத சிகரத்தை அடைந்தது.

ஆம் இன்றும் நீங்கள் முணுமுணுக்கும்.
“சின்னமானியே உன் சின்னமகள் எங்கே” என்ற ஏ.ஈ மனோகரனின் பாடல்,
“சுராங்களி சுராங்களி” என்ற ஏ.ஈ.மனோகரனின் பாடல்,
“கள்ளுக்கடை பக்கம் போகாதே” என்ற நித்தி கனகரத்தினத்தின் பாடல்,
“குடத்தனையில குடியிருக்கிறது” என்ற நித்தியின் பாடல் போன்ற பாடல்கள் வெளியாகி மிகப்பெரும் வெற்றி பெற்றன.
அவை இலங்கையில் மட்டும் அன்றி இலங்கை வானொலியில் ஒலிபரப்பட்டு இந்தியாவிலும் பெரும் தாக்கத்தை எற்படுத்தி இந்தியாவிலும் வெற்றிக்கொடி நாட்டின.
அவை இலங்கையில் மட்டும் அன்றி இலங்கை வானொலியில் ஒலிபரப்பட்டு இந்தியாவிலும் பெரும் தாக்கத்தை எற்படுத்தி இந்தியாவிலும் வெற்றிக்கொடி நாட்டின.
நித்தி கனகரத்தினைத் தொடர்ந்து ஏ.ஈ.மனோகரன். அமுதன் அண்ணாமலை, எஸ். இராமச்சந்திரன். வி.முத்தழகு, ஸ்டெனி சிவாநந்தன், அன்சார்.என்.இமானுவேல் போன்றோர் ஈழத்து பொப்பிசைச் துறைக்கு வர பொப்பிசை வளரத்தொடங்கியது பல இசைக் குழுக்களும் இதில் தடம் பதிக்க பல பாடல்கள் வெளிவரத்தொடங்கின. இக் காலம் ஈழத்து பொப்பிசையின் பொற்காலம் என்று கூட சொல்லலாம்.
அன்றைய காலங்களில் இலங்கை பொப் இசைகள் நகைச்சுவை, இலங்கை மண்ணியில்ப்பண்பு, இலங்கை மொழிவழக்கு, என்பவற்றை மட்டும் இன்றி சமுதாய சீர்திருத்தங்களையும் முன்னிறுத்துவதாக இருந்தன என்றால் மிகையாகாது. இதற்கு நித்தி கனகரத்தினத்தின் கள்ளுக்கடை பக்கம் பொகாதே என்ற பாடலை சொல்லலாம். அந்தக்காலங்களில் இலங்கையில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் இளைஞர்கள் பெரியவர்கள், படித்தவர்கள், பாமரர்கள் என்ற பேதங்கள் இன்றி அனைவரும் கள்ளு அருந்துபவர்களாக இருந்தனர். குறிப்பாக மாணவர்கள் பாடசாலைகளில் உயர்கல்வி கற்கும்போதும், பல்கலைக்கழகங்களில் இருந்தும் கள்ளுக்கு தவறணைகளுக்கே நேரடியாக போபவர்களாக இருந்தனர். இந்த காலங்களிலேயே நித்தி கனகரத்தினத்தின் “ கள்ளுக்கடை பக்கம் போகாதே, காலைப்பிடித்து கெஞ்சுகின்றேன்” என்ற பாடல் வெளியானது.

இதில் இன்னும் ஒரு சிறப்பு என்னவென்றால் இந்தப்பாடல் இலங்கை வானொலி மூலம் தமிழ் நாட்டிலும் பரவி, அப்போது முதலைமைச்சராக இருந்த எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்களால், தமிழக மதுவிலக்கு பிரச்சாரத்திற்காக தெரிவு செய்யப்பட்டிருந்தமையாகும்.
பின்னர் இந்த இலங்கை பொப் இசைப்பாடல்கள் தென்னிந்திய தமிழ் திரைகளிலும் இடம்பெறலாகிற்று. 1977 அம் அண்டு, “அவர் எனக்கே சொந்தம்”என்ற படத்தில் “சுராங்கனி, சராங்கனி” என்ற பாடலை இளையராஜா உட்புகுத்தினார், இதனோடு நின்றுவிடாது. இந்த இலங்கை பொப் இசையை ஒட்டியதாக, “அண்ணே அண்ணே சிப்பாயண்ணே”, “உப்புமா கிண்டிவையடி”, பட்டண்ணா சொன்னாரண்ணா, போன்ற பாடல்கள் ஒலிக்கத் தொடங்கின. இன்றும் கூட சுராங்கனி போன்ற பொப் பாடல்கள் மீள்கலவை இசை வடிவில் (ரீமிக்ஸ்) சில திரைப்படங்களில் வருவதை பார்த்திருக்க முடியும்.
எனினும், 1983 களின் பின்னதான இலங்கையின் இனப்பிரச்சினைகள், கலைஞர்கள். பாடகர்களின் வெளியேற்றம், தென்னிந்திய சினிமா பாடல் மோகம் என்பன போன்ற பல காரங்களினால் இன்று இந்த இலங்கை பொப் பாடல்கள் குறைந்துகொண்டு சென்று அழிவுப்பாதையில் செல்கின்றது.
இதற்கு உயிர்கொடுத்து அதை ஒலிபரப்பி தமது பாரம்பரியங்களை காத்துவைக்க அங்குள்ள எந்த அரச, தனியார் வானொலிகளுக்கும் வக்கத்துப்போய்விட்டது.எனினும், மேற்படி பொப் இசையில் சிங்களவர்கள் அதி சிகரத்தை அடைநதுள்ளனர். சிங்கள ஊடகங்களும், பத்திரிகைகளும் அதற்குரிய கௌரவங்களை கொடுத்து அதை ஊக்குவிக்கின்றன.
எது எப்படியோ, இன்று புலத்தில் புலம்பெயர்ந்துவாழும் மேற்படி பொப்பிசை திலகங்களை தொடர்புகொண்டு வெளிநாடகளில் வாழும் தமிழர்களாவது தமது இலங்கைத் தமிழர்களின் தனிச்சிறப்பான பொப் இசையினை வழங்க முயற்சி செய்யவேண்டும்.(உண்மையில் தேவைப்படுவோருக்கு இலங்கையின் பொப் இசைப்பிரபலங்களின் தொடர்புகளை தர நான் தயார்.)
7 comments:
மிக அருமையான தொகுப்பு. தேவையானதும் கூட. மீண்டும் தமிழ் பொப் இசையினை கொண்டுவர தமிழ் இறுவெட்டுக்களை வெளியிடும் இளையோர் முயற்சித்துப்பார்க்கலாமே?
பாராட்டப்படவேண்டிய இடுகை. இலங்கை பொப் இசைப்பாடல்களை புலத்தில் ஒலிபரப்பாகும், வானொலிகளும், இலங்கையில் ஒலிக்கும் வானொலிகளும் ஒலிபரப்ப ஆவண செய்யவேண்டும்.
intha songs ellam enka download panalam ? plsss yarachum solunkalen....
அருமை! புதிய தகவல்கள்!!
பாடல்கள் எங்கு கி்டைக்கும் என செய்தி தந்திருக்கலாமே!
புதிய இடுகை இட்டுள்ளேன், வந்து உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்...
http://kalakalkalai.blogspot.com/2009/06/blog-post_14.html
கள்ளுக்கடை பக்கம் போவாதே
காலைப்பிடித்து கெஞ்சுகிறேன்
கள்ளுக்கடை பக்கம் போவாதே
காலைப்பிடித்து கெஞ்சுகிறேன்
கண்ணும் புகைந்திடும்
நெஞ்சும் வறண்டிடும்
கைகால் உழன்றிடும் இந்த கள்ளாலே
கண்ணும் புகைந்திடும்
நெஞ்சும் வறண்டிடும்
கைகால் உழன்றிடும் இந்த கள்ளாலே
கள்ளுக்கடை பக்கம் போவாதே... (போகாதே போகாதே..)
காலைப்பிடித்து கெஞ்சுகிறேன்
கள்ளுக்கடை பக்கம் போவாதே.....(போகாதே போகாதே..)
காலைப்பிடித்து கெஞ்சுகிறேன்
ஆச்சி எந்தன் அப்புவும் இந்த கடையில் தான்
அடுத்த வீட்டு அடுத்த வீட்டு வாத்தியாரும் கடையில் தான்
வைட்டமின் B என்று வைத்தியரும் சொன்னதாலே
விட்டேனோ கள்ளு குடியை நான்
பாவி பயலே கொஞ்சம் கேளுடா
பாலூட்டி வளர்த்த நானும் தாயடா
பற்றியெரியுதெந்தன் வயிறடா
பனங்கள்ளை மறந்து நீயும் வாழடா
கள்ளுக்கடை பக்கம் போவாதே... (போகாதே போகாதே..)
காலைப்பிடித்து கெஞ்சுகிறேன்
கள்ளுக்கடை பக்கம் போவாதே.....(போகாதே போகாதே..)
காலைப்பிடித்து கெஞ்சுகிறேன்
கள்ளென்றாலே... போகாதப்பா...
கடவுள் தந்த பனை மரங்கள் தானடா
கடவுள் கள்ளை தொட்டதுண்டோ கேளடா
வாய்க்கொழுப்பும் மனத்திமிறும் வளர்ந்து வரும் உனக்கு நானும்
வாலறுக்கும் நாளும் வருமோ
கள்ளுக்குடி உன் குடியை கெடுத்திடும்
கடன்காரனாக உன்னை மாத்திடும்
கண்ட கண்ட பழக்கமெல்லாம் வளர்த்திடும்
கடைசியில் கட்டையில கொண்டு போய் சேர்த்திடும்
ஏலேலோ மா...ஏலேலோ மா...
கடவுளே என் மகனும் இதை உணரானோ
கள்ளுக்குடியை விட்டொழிந்து திருந்தானோ
அன்னை சொல்லு கேட்பானெனென்றால் ஆறறிவு படைத்த எவனும்
பேரரிஞன் ஆகிடுவானே
கள்ளுக்கடை பக்கம் போவாதே
காலைப்பிடித்து கெஞ்சுகிறேன்
கள்ளுக்கடை பக்கம் போவாதே
காலைப்பிடித்து கெஞ்சுகிறேன்
கண்ணும் புகைந்திடும்
நெஞ்சும் வறண்டிடும்
கைகால் உழன்றிடும் இந்த கள்ளாலே....(கள்ளாலே..)
கண்ணும் புகைந்திடும்
நெஞ்சும் வறண்டிடும்
கைகால் உழன்றிடும் இந்த கள்ளாலே
கள்ளுக்கடை பக்கம் போவாதே... (போகாதே போகாதே..)
காலைப்பிடித்து கெஞ்சுகிறேன்...(கெஞ்சுகிறேன்...கெஞ்சுகிறேன்..)
கள்ளுக்கடை பக்கம் போவாதே.....(போகாதே போகாதே..)
காலைப்பிடித்து கெஞ்சுகிறேன்...
I think mst of us might nt heard ts sng. so i uploaded da track.
http://www.MegaShare.com/192565
சின்ன மாமியே உன் சின்ன மகளெங்கே
பள்ளிக்கு சென்றாளோ படிக்க சென்றாளோ
அட வாட மருமகா… என் அழகு மன்மதா
பள்ளிக்கு தான் சென்றாள் படிக்க தான் சென்றாள்
அய்யோ மாமி அவளை அங்கே விடாதே
அவளை என்னும் படிக்க வென்று கெடாதே
அய்யோ மாமி அவளை அங்கே விடாதே
அவளை என்னும் படிக்க வென்று கெடாதே
ஊர் சுழறும் பொடிகள் எல்லாம் கன்னியரை கண்டவுடன்
கண்ணடிக்கும் காலமல்லவோ
சின்ன மாமியே உன் சின்ன மகளெங்கே
பள்ளிக்கு சென்றாளோ படிக்க சென்றாளோ
அட வாட மருமகா… என் அழகு மன்மதா
பள்ளிக்கு தான் சென்றாள் படிக்க தான் சென்றாள்
அய்யோ தம்பி அவளை ஒன்றும் சொல்லாதே
அவள் வந்தால் உதைத்திடுவாள் நில்லாதே
அய்யோ தம்பி அவளை ஒன்றும் சொல்லாதே
அவள் வந்தால் உதைத்திடுவாள் நில்லாதே
அடக்கமில்லா பெண் என்றுதான் நினைத்துவிட்டாய் என்மகளை
இடுப்பொடிய தந்திடுவேனே..
சின்ன மாமியே உன் சின்ன மகளெங்கே
பள்ளிக்கு சென்றாளோ படிக்க சென்றாளோ
அட வாட மருமகா… என் அழகு மன்மதா
பள்ளிக்கு தான் சென்றாள் படிக்க தான் சென்றாள்
ஏனுன்னா மாமி மேலே மேலே துள்ளுறீயே
காரணம் மாமி படு குழியில் தள்ளுறீயே
ஏனுன்னா மாமி மேலே மேலே துள்ளுறீயே
காரணம் மாமி படு குழியில் தள்ளுறீயே
கேளுங்க மாமி அவளெனக்கு தெவிட்ட தவளெனக்கு
பாருங்க மாமி கட்டுறேன் தாலியை
சின்ன மாமியே உன் சின்ன மகளெங்கே
பள்ளிக்கு சென்றாளோ படிக்க சென்றாளோ
அட வாட மருமகா… என் அழகு மன்மதா
பள்ளிக்கு தான் சென்றாள் படிக்க தான் சென்றாள்
http://www.raaga.com/channels/tamil………
http://www.oosai.com/tamil_devotion………
http://www.indiaglitz.com/channels/………
http://www.shyju.com/index.php?s=1f………
http://tamilgrounds.com/index.php…………
http://www.tamilmovies.com/…………
http://www.tmsnetworks.com/…………
http://www.freetamilmovies.com/…………
http://www.desitorrents.com/forums/…………
http://www.thenisai.com/tamil/tamil…………
http://www.chennaionline.com/festiv………
http://www.musicindiaonline.com/mus………
http://www.kaumaram.com/ram/ramesh0………
http://www.tamilpictures.com…………
http://psusheela.org/tam/devotional………
http://www.thenisai.com/devotional…….…
http://www.thedesicentral.com/forum…………
http://www.mohankumars.com/…………
http://www.bhaktisangeet.com/……
உங்கள் பதிவு தமிழ்10 தளத்தில் முதல் பக்கத்தில் பிரசுரமாகியுள்ளது
உங்கள் வலைத்தளத்தை மெருகூட்டுவதற்காக இப்போது தமிழ்10 தளம் தமிழ்10 -டூல்ஸ் என்னும் பெயரில் பல வசதிகளை இணைத்துள்ளது
இதில் குறிப்பாக
1-இணையதளத்தில் முதன் முறையாக தமிழில் hits counter
2-ஓட்டளிப்புப் பட்டை
3-இவ்வார கிரீடம்
4-சிறப்புப் பரிசு
5-புத்தம்புதிய அழகிய templates
6-கண்ணை கவரும் gadgets
ஒரு முறை வந்து பாருங்கள்
முகவரி http://tamil10.com/tools.html
Post a Comment