Friday, June 5, 2009

ஆர்ச்சீஸ் - வெரோனிக்கா திருமணத்துடன் முடிவுக்கு வந்துள்ளது, ஆர்ச்சீயின் கொமிக்ஸ் தொடர்.

அமெரிக்காவில் 1942 ஆம் அண்டு கோல்ட் வட்டர் என்பரால் அறிமுகப்படுத்தப்பட்டது. “ஆர்ச்சீயின் கொமிக்ஸ்” என்னப்படும் கொமிக்ஸ் தொடர். இதற்கான கதையினை விக் புலூம் எழுத, பொப் மொன்ரனா என்பவர் இந்த கொமிக்ஸ் கதாபாத்திரங்களுக்கு உருவங்கொடுத்தார்.
அன்றில் இருந்து விடலைப்பருவ இளைஞர்களின், (ரீன் ஏஜ்), இளைஞர் காலச்சாரங்களையும், அவர்களின் துடுக்குகள். காதல், பெண்பித்து, விடலைக்குணங்கள், குறும்புகள், என்பவற்றை இதன் கதாநாயகனான பிளே போய் “ஆர்ச்சீஸை” மையப்படுத்தி வெளிவந்துகொண்டிருந்தன. இந்த ஆர்ச்சீஸ் கொமிக்சுக்கு என்று அமெரிக்காவில் மட்டும் அன்றி உலகெங்கிலும் பாரிய அளவில் இரசிகர் மன்றங்களும், ஆர்சீஸ் குழுக்களும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 67 வருடங்களாக தொடர்ச்சியாக வெளியாகிவந்த இந்த கொமிக்ஸ் தொடர், தெரிந்தோ தெரியாமலோ, மேற்கத்தேய குழந்தை ஒன்றின் வழர்ச்சியுடன் ஒன்றியே உள்ளது. அமெரிக்காவில் இன்று 67 வயதை அடைந்துள்ளவர்களானாலும் சரி, தற்போது வாசிக்கத் தெரிந்த குழந்தைகள் என்றாலும் சரி இவர்கள் கண்டிப்பாக ஆர்ச்சீஸ் கொமிக்சை பற்றி தெரிந்திருப்பார்கள் எனலாம்.
இருந்த போதிலும் 1942 ஆம் ஆண்டு முதல், இந்த தொடர் முடியும் இந்த அண்டுவரை இதன் கதாநாயகன் “பிளே போய்” ஆர்ச்சீஸ் இளைஞனாகவே இத்தனை அண்டுகளாய் வாசகர்களால் எற்றுக்கொள்ளப்பட்டு, என்றும் இளைஞனாய் நிலைத்து நின்றமை குறிப்பிடத்தக்கது.

67 ஆண்டுகளுக்குள் பல பதிப்பாளர்களையும், பல ஆசிரியர்களையும் இந்த ஆர்ச்சீஸ் கொமிக்ஸ் கண்டுள்ளது. பிரட்- மேரி அன்றூஸ் ஆகியோரின் மகன் ஆர்ச்சீஸ் அன்றூஸ், ஹெல் - அலிஸ் கூப்பரின் மகள் எலிசபெத் ஃபெட்டி கூப்பர், ஹிரம், ஹெர்மியோ லொட்ஜ் அகியோரின் மகள் வரோனிக்கா றொனி லொட்ஜ், ஆகியோரே இந்த கதையின் முக்கிய மூன்று கதாபாத்திரங்களாக சித்தரிக்கப்பட்டுனர்.
ஃபெட்டி, வரோனிக்கா என்ற இரண்டு பெண்களுடனும் ஆர்ச்சீஸ் நட்புறவு கொண்டிருந்தான், இவர்களில் யாரை அவன் உண்மையாக காதலிக்கின்றான் என்பதை கண்டறியவே முடியாத விதத்தில் குழப்பமாகவே, இந்த தொடர் சென்று கொண்டிருந்தது. இருந்தபோதிலும், 2009 ஆம் அண்டு ஆர்ச்சீஸ் - வெரோனிக்கா திருமணத்துடன் இந்த தொடர் தனது 67 அண்டுகால நீண்ட தொடரினை இனிதே நிறைவு செய்துள்ளது. இருந்தபோதிலும் தங்கள் வாழ்கைச் சந்தர்ப்பங்களில் எல்லாம் தங்களுடன் நீண்ட தூரத்துக்கு நடைபோட்டு வந்த ஒரு தொடரை இனி இல்லை என்று சொல்வதை இந்த கொமிக்ஸின் வாசகர்களாலும், இதன் இரசிகர்களாலும் பொறுத்துக்கொள்ளமுடியவில்லை. இந்த தொடர் நிற்கக்கூடாது மீண்டும் அது தொடர்ந்து பயணிக்கவேண்டும் என்றே அதிக அளவிலான வாசகர்கள் விரும்புகின்றார்கள்.
அதேபோல ஆரம்பம் முதலே ஆர்ச்சீஸ் உடன் அன்புடன் இந்துவரும் ஃபெட்டியை ஆர்ச்சிஸ் மணம்புரியவில்லை என்பதை, ஃபெட்டியின் இரசிகர்களால் தாங்கிக்கொள்ளவும் முடியவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.மீண்டும் தொடரை தொடங்குமாறும் அதற்கு வாசகர்களான தாம் பண உதவிகளை செய்வதற்கும் தயாராக உள்ளதாக தொடர்ந்தும் கடிதங்களும், மின் அஞ்சல்களும் குவிவதாக வெளியீட்டாளர்கள் தெரிவித்துவருக்கின்றனர். ஆர்ச்சிஸின் கதை இப்படித்தான் முடியவேண்டும் என அரம்பித்திலிருந்தே கதை நகர்த்தப்பட்டிருந்ததாகவும், அந்தக்கதை ஒரு முடிவுக்குவரவேண்டும் எனவும், அந்தக்கதை முடிந்துவிட்டதாகவும், ஆர்ச்சீஸின் தற்போதைய ஆசிரியர் தெரிவித்துள்ளார்.

எது எப்படியோ சழைக்காமல், 67 அண்டுகளாக தொடர்ந்தும் வெளியாகி கொமிக்ஸ் உலகில் அர்ச்சீஸ் கொமிக்ஸ் பெரிய முத்திரை ஒன்றை குத்திவிட்டது. அதேவேளை ஆர்ச்சீஸின் கொமிக்ஸ்சை அடிப்படையாகக்கொண்டு கார்ட்டுன்களும் வந்துள்ளன, வருகின்றன. ஒரு பிளேபோயான அர்ச்சீஸ் அவனது திருணமத்தின் பின்னர் தேனிலவுடன் வாசகர்களிடம் இருந்து விடைபெறுகின்றான் சந்தோசமாக வழியனுப்பி வைப்போம்.

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails