பிறப்பினால் ஒரு றோமன் கத்தோலிக்க பெண்ணாகவும், பின்னர் ஒரு கன்னியாஸ்திரியாகவும் தன்னை உருவாக்கிக்கொண்ட அல்பேனிய நாட்டினை பூர்வீமாகக்கொண்ட ஆக்னஸ் கோன்ஜா போஜாஜியூ என்ற இயற்பெயரைக்கொண்ட “அன்னை தெரேசா” (16.08.1910 - 05.09.1997)என உலக மக்கள் அனைவராலும் அன்பாக அழைக்கப்பட்டு, நாம் வாழும் காலத்தில் நமது தாய்மாரை தவிர்த்து உலகில் உள்ள அனைவரும் முதலில் விரும்பும் ஒரு தாயாக இருந்தவர் அன்னை தெரேசா.
மதத்தினையும், அவர் ஒரு கன்னியாஸ்திரி என்பதையும் விட்டுவிட்டு பார்த்தோமானால் மனிதநேயத்திற்காக உறுதியாக அவர் வாழ்ந்ததும் அவரது அர்ப்பணிப்பும் தெரியவரும்.
மதத்தினை புறந்தள்ளிவிட்டு ஒரு தாய்மை உள்ளம் உடைய தாயாராக அவர் இருந்தமையினையும், மனித நேயத்தின்மேல் உறுதிகொண்டு பல அவமானங்களைச்சந்தித்தும் தைரியமாக மன உறுதியாக தனது மனிநேய கொள்கையில் வாழ்ந்து காட்டியதற்காகவும் அந்த உன்னதமான அன்னையினை ஆராதிப்பதில் தவறில்லை.
அன்னையைப்பற்றி திரும்ப திருப்ப அவரது வரலாற்றினை சொல்வது திராட்சைத்தோட்டத்திற்கு அருகில் நின்று திராட்சைப்பழம் விற்பதுபோன்றதாகும்.
எனினும் மதக்கட்டுக்குள் நின்றுவிடாது மனித நேயத்திற்காகவும், ஆதரவற்ற குழந்தைகளுக்காகவும், நோயாளர்களுக்காகவும் அன்னை ஆற்றிய பணிகளின் போது ஏற்பட்ட சம்பவங்கைளைக்கூறினாலே அவரைப்பற்றி அனைவரும் ஒரு மனக்கணக்கு போட்டுக்கொள்ளலாம்.
ஆதரவற்று கைவிடப்பட்ட குழந்தைகள், சாக்கடையில் இருந்த குழந்தைகள், நோய்வாய்ப்பட்ட, ஊனமான குழந்தைகளை, அன்புள்ளம் கொண்டு அன்னை காப்பகம் அமைத்து பராமரித்து வந்தநேரம் அதிகாலைநேரத்திலேயே கண்விழித்து பணம் படைத்தவர்களிடம் யாசகம் கேட்டு அந்த குழந்தைகளுக்கு நிதி திரட்டிவந்தார். அப்படி ஒரு சமயம் ஒரு செல்வந்தரிடம் அவரது விற்பனை நிலையத்தின் முன்னால் சென்று அவரிடம் அன்னை கையேந்தியபோது. ஆத்திரத்துடன் அவர் அன்னையில் கையில் எச்சிலை துப்பினார். அப்போதும் முகத்தில் தமது சாந்த ரூபம் மாறாத அன்னை, “நன்றி கனவானே! எனக்கான இந்த பரிசை நிறைந்த மனதுடன் நான் எற்றுக்கொள்கின்றேன், என் குழந்தைகளுக்கு ஏதாவது கொடுங்கள்” என்று அன்புடன் கூறினராம். உடனடியாக மனம் தெளிந்த அந்த செல்வந்தர் அன்னையிடம் மன்னிப்பு கேட்டு தன்னிடம் அப்போதிருந்த பணம் முழுவதையும் கொடுத்தாரம்.
போப்பாண்டவர் ஒரு முறை இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது தனது பயணங்களுக்காக அவர் பயன்படுத்திய மிகவும் விலையுயர்ந்த காரை, அன்னை தெரேசாவுக்கு பரிசாக வழங்கினாராம். அன்னை எப்போதும் சொகுசுவாழ்வுக்கும், மக்களிடமிருந்து தான் மேல்நிலையில் உள்ளவர் என்பதுபோன்ற எண்ணமும் இல்லாதவர் என்பதனால் அதை விரும்பவில்லை என்றாலும் கொடுத்தவர் பாப்பரசர் என்பதால் அதை ஏற்றுக்கொண்டு, அடுத்த கணமே அந்த காரை ஏலத்தில் விட்டு அதில் கிடைத்த பணத்தினை மனிதநேயத்தின் உச்சமாக சமுக சேவைகளுக்கு பயன்படுத்தும்படி தெரிவித்தார்.
இந்த சிலிர்க்க வைக்கும் ஒரு சில சம்பவங்களே அன்னையின் குண இயல்புகளை காட்டுகின்றது அல்லவா? மதங்களை தூக்கி எறிந்துவிட்டு அந்த அன்னையின் மனித நேயத்திலும், சமுக அக்கறையிலும் மதிப்பு வைத்துபார்ப்பவர்களில் ஒருவன் நான். அந்த அன்னையின் உன்னதமான அர்ப்பணிப்பான வாழ்க்கையினையும், சமுக சேவையினையும்கூட கேவலமாக விமர்சித்தார்கள் சில கிறிஸ்தவர்கள். இந்த அன்னைக்கு புனிதர் பட்டம் கொடுக்கலாமா? என படு மோசமான விமர்சனங்களைக்கூட சில கிறிஸ்தவர்களும், சில கிறிஸ்தவ சபைகளும் தெரிவித்திருந்தன. நான் மேற்குறிப்பட்ட “கார் கொடுத்த சம்பவத்திலேயே” சில விடயங்கள் புரிந்திருக்கும் அல்லவா உங்களுக்கு!
மதங்களையும், கடவுள்களையும் தூக்கி எறிந்துவிட்டு நான் பார்க்கும் பார்வையில்: ஆதரவற்ற, ஊனமான குழைந்தைகளுக்கு காப்பரனாக, நோயாளர்களின் வலிநிவாரணியாக, சமுக சேவையின் சிகரமாக, தாய்மையின் முதன்மையாக, தூய்மையின் உறைவிடமாக
இறுதிவரை இருந்த அன்னையே உம்மை இவர்கள் கூறிக்கொள்ளும் மதங்களைவிட, கடவுளர்களைவிட உயர்ந்தவராக ஆதாரிக்கின்றேன்.
நண்பர்களே நீங்கள் எப்படி????
3 comments:
“நன்றி கனவானே! எனக்கான இந்த பரிசை நிறைந்த மனதுடன் நான் எற்றுக்கொள்கின்றேன், என் குழந்தைகளுக்கு ஏதாவது கொடுங்கள்” ஆஹா.....வாசிக்கும்போதே கண்கள் பனித்தன மேன்மக்கள் என்றும் மேன்மக்களே...
தங்கள் கருத்துடன் முற்றுமுழுதாக உடன்படுகின்றேன் ஜனா..
மனித நேயம் மிக்கவர்களாக மனித குலத்திற்காக
வாழ்பவர்களை கடவுளைமிட மேலாக கருதலாம்..
அன்னை தெரேசாவின் நினைவு நாளில் அவர் பற்றி நினைவு பதிவு நெஞ்சில் நின்றது.
Post a Comment