என்ன சத்தம் இது என்று ஊகிப்பதற்கு முன்னதாகவே பெருமளவிலான குதிரைகளில் பறங்கியர் கண்ணில் எதிர்ப்பட்டவர்கள் அனைவரையும், சுட்டுக்கொன்றும், வெட்டிக்கொண்டும் வந்துகொண்டிருந்தனர், என்ன செய்வது என அறியாமலே பவுணன், தையல்முத்து, வெள்ளையன் ஆகியோர் கதிகலங்கிப்போய் நின்ற பொழுதுகளில் பறங்கியர்படை, அங்காடிக்குள் நுளைந்த அந்த நிமிடமே அங்காடிக்காவலாளியின் தலை வாசலில் உருண்டது. அசையவே முடியாத நினையில் மரணம் எவ்வாறு நெருங்குகின்றது என்பதை உணர்ந்த பவுணன், ஒருதடவை தையல்முத்துவையும், வெள்ளையனையும் பார்த்துக்கொண்டான். வெள்ளையன் அந்தப்பொழுதுகளில் என்ன நினைத்தானோ தெரியவில்லை, மாட்டுவண்டியின் அச்சாணியை இழுத்து நெருங்கும் ஒரு பறங்கிய குதிரைவீரனை நோக்கி ஓடி அவன் மார்பில், ஆழமாக அச்சாணினை திணித்துவிடுகின்றான். இரத்தம் கசிய அந்தப்பறங்கியன் குதிரையில் இருந்து வீழ்கின்றான், அந்த நிமிடமே பின்னால் நின்ற ஒரு பறங்கியனின் துப்பாக்கி வெடித்து வெள்ளையனின் கழுத்தை பதம் பார்க்கின்றது. மற்ற பறங்கியன் சுட்டது அவன் மார்பில் பாய வெள்ளையன் சரிகின்றனான்.
வெள்ளையன் காட்டிய தைரியமோ என்னமோ தையல்முத்தை நெருங்கிய பறங்கியன்மீது ஒரு பண்டமுடிச்சை தூக்கி எறிந்துவிட்டு அவன் சாய ஓடிச்சென்று அவன் கையில் இருந்த வாளைப்பறித்து அவனை வெட்ட பவுணன் முற்படும்போது, தையல்முத்தின் அலறல் கேட்கின்றது. பறங்கியனின் வாளைப்பறித்து அவன் தலையினை உடலில் இருந்து விடுவித்துவிட்டு திரும்புகின்றான் பவுணன், தையல்முத்தின் முகமே தெரியாதபடி முகம்முழுவதும் குங்குமம்போல இரத்தம் கசிந்துகிடக்க, பண்டமுடிச்சு ஒன்றுடன் சரிந்து இறுதி மூச்சினை இழுத்துவிட்டாள் அவள். அவளிடம் ஓடிவரும்போது, பாரிய சத்தத்துடன் தனது பின்தலையில் ஏதோ பாய்ந்ததுபோல உணர்கின்றான் அவன், ஓடமுடியாமல் அவனது கால்கள் சோர்வடைகின்றன, அவனது தோழில் அவனது சொந்த இரத்தம் விழுந்துகொண்டிருந்தது. அப்படியே குப்புறவிழுந்து ஏற்கனவே உயிரை விட்டுவிட்டு கிடந்த வெள்ளையனையும், அப்போதூன் இவன் திசைநோக்கி பாhத்தபடியே உயிரை விட்டுவிட்ட அவன் உயிர்மனையாள் தையல்முத்தையும் பார்த்துக்கொண்டான். இந்த நேரத்தில் மூச்சு எடுப்பது அவனுக்கு சிரமமாகின்றது, மெல்ல மெல்ல காட்சிகள் இருண்டு, முழுவதுமே இருட்டிவிட்டது.
அனைவரும் ஓடிவந்து நுளைந்து சில விநாடிகள் தான் இருக்கும், ஏதோ கனவில் நடப்பதுபோலவும், திடீரென ஒவ்வொரு அசைவுகளும் மெதுவாக நிகழ்வதுபோலவும் அவனுக்கு தோன்றியது. பேரிடிபோல தொடர்ச்சியாக பல முழக்கங்கள், வெளியில் இருந்து அவன் கண்ணுக்கு தெரிந்தது பாரிய தூசி மண்டலம். காதுகளில் அவலக்குரல்கள், ஒருமித்த மணத்திற்கெதிரான குரலாகவும், மரணபய குரலாகவும் அவனுக்கு கேட்கின்றது. என்னப்பா இது என்று துஸ்யந்தி நடுங்கியபடி சொன்னது காதில் கேட்டது. பக்கத்தில் பாணைத்தூக்கியபடியே, உச்சக்கட்ட பீதியில் காண்டீபன் எச்சிலை உமிழ்ந்ததும் அவனுக்கு தெரிந்தது.
இத்தனையும் நடந்து அடுத்த செக்கன், தேவாலயமே மாறிப்போயிருந்து. “வருந்திப்பாரம் சுமப்பவர்களே என்னிடம் வாருங்கள், நான் உங்களுக்கு ஆறுதல் அளிப்பேன்” என்ற வாக்கியமே பொய்யாகிப்போனது.
கர்ணகொடூரம் என்பதன், அவலம் என்றால் என்ன என்பதன், முழு அர்த்தம் இறக்கும் தறுவாயில் காண்டீபனால் உணரப்பட்டது. ஏதா ஒரு உந்துவிசையில் சரியும்போது அவனின் கண்ணுக்கு முதலில் பட்டது, அந்த பாண் பெட்டிதான் பாண்களின்மேல் இரத்தங்களும், மனித தசைப்பிசிறுகளும் கிடந்தன. மல்லாக்காக சரிந்துகொண்டிருக்கின்றான் பிரசாந்தன், காண்டீபனின் நெஞ்சும், தலையும் மேலே தூணில் தொங்கிக்கொண்டிருந்ததை காண்கன்றான். அப்படியே தரையில் அவன் உடல் படுகின்றது. துஸ்யந்தியின் உடையை வைத்து இது துஸ்யந்தி என்பதை உணர்கின்றான். இந்த காட்சியுடன், தையல்முத்தும், வெள்ளையனும் இறந்துகிடக்கும்போது தனக்கு அறிவு இழக்கும் நிலை தோன்றியதும், சமகால நிகழ்வும் அந்தப்பொழுதுகளில் நினைவுக்கு வருகின்றது. ஒரு கணம் மரணம் அடையும், மரணம் அடைந்துகொண்டிருக்கும்போதும் பயம் கொள்கின்றான். காட்சிகள் மறைகின்றது கண்ணில் இருந்து, அவலக்குரல்கள் தொடர்ந்து கேட்கின்றன. மெல்லமெல்லமாக அவையும் தூரத்திலே கேட்பதுபோல தோன்றுகின்றது, அதன்பின் ஒரு போதும் கேட்டிராத நிரந்தமான மொளனத்தின் ஒலி மட்டும் கேட்கின்றது.
(சரி…இந்த இறுதிப்பகுதி கொடூரமானதாக இருக்கின்றது என எண்ணுவீர்கள், அனால் சில கொடூரங்களை எழுத்துக்களால் சிறிதளவே கொண்டுவரமுடியும். இதில்; பாத்தரங்களே புனைகதை அதவிர இந்த இரண்டு சம்பவங்களும் உண்மை. ஈழத்தில் 1505ஆம் ஆண்டு பறிக்கப்பட்ட தமிழனது சுதந்திரம் இன்று ஐந்து நூற்றாண்டுகள் கழிந்தும் கிடைக்காமல், அவலத்தின்மேல் அவலங்களை மட்டுமே உலகம் அவனுக்கு பரிசாக கொடுத்துக்கொண்டிருக்கின்றது.
இந்த கதையின் தொடர்ச்சியாக மூன்றாவது சம்பவத்தை அதாவது 2505ஆம் ஆண்டு நடக்கும் இறுதி சம்பவத்தை நான் எழுதப்போவதில்லை. அதை எழுதி முடிக்கப்போவர்கள், என் நண்பர்கள், வாசக நண்பர்கள், பதிவுலக நண்பர்களான நிங்களே…) பின்னூட்டல் மூலமாகவே அந்த பகுதியினையும் முற்றுப்பெற வையுங்கள்….
நன்றி
2 comments:
இந்த இறுதிப்பாகத்தை படித்த பின்னர் மனதுக்குள் ஏதோ செய்கின்றது. முன்னர் மரணமடைந்தவர்போலவே மரணமடையும் பொழுகளை எப்படி துல்லியமாக சுவாரகசியமாக உங்களால் எழுதமுடிகின்றது? இறுதிப்பகுதியிலாவது கோரமான முடிவு வேண்டாமே!
அந்த தேவாலயச்சம்பவம், உண்மையிலேயே எவ்வளவு கொடியதொரு அவலமாக இருக்கின்றது. இடைப்பட்ட காலங்களில் ஈழத்தமிழன் அனுபவித்த கொடுமைகள் எமக்கு மறைக்கப்பட்டுவிட்டது. உங்களைப்போன்ற பொறுப்பான எழுத்தாளர்களே அதை வெளிக்கொண்டுவரவேண்டும். வெளிப்படையாக சொல்லமுடியாத சில விடயங்களையும் ஒரு கதையாக இலகுவில் அந்தவலியை அனுபவிக்கத்தக்க வகையில் சொன்ன உங்களுக்கு உரு சாபாஷ்.
Post a Comment