Sunday, October 4, 2009

தென் அமெரிக்கா கண்டத்தில் முதலாவது ஒலிம்பிக்ஸ் - 2016


உலகின் பல விடயங்களில் தென் அமெரிக்க நாடுகள் தொடர்ச்சியாக, மேலாதிக்க சக்திகளால் ஓரங்கட்டப்பட்டு வந்த நிலையில் முதன் முதலாக 2016 ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள ஒலிம்பிக்ஸ் போட்டிகளை நடத்தும் பேற்றினை பிரேஸில் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அதாவது 2012ஆம் வருடம் இங்கிலாந்தின் லண்டன் மாநகரில் இடம்பெறவுள்ள ஒலிம்பிக்ஸ் போட்டிகளுக்கு அடுத்ததாக, 2016 ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள ஒலிம்பிக்ஸ் போட்டிகள் பிரேஸிலின் ரியோடி ஜெனிரோவில் இடம்பெறவுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.


குறிப்பாக இந்த போட்டிகளை நடத்துவதற்காக அமெரிக்கா, ஜப்பான், ஸ்பெயின்; ஆகிய நாடுகளுடன் இந்த போட்டியை நடத்துவதற்காக பிரேசிலும் வாக்கெடுப்பில் மோதிக்கொண்டன. சிக்காக்கோவில் இந்தப்போட்டிகளை நடத்துவதற்காக அமெரிக்காவும், ரோக்கியோவில் இந்தப்போட்டிகளை நடத்துவற்காக ஜப்பானும், மட்றிட்டில் நடத்துவதற்காக ஸ்பெயினும்;, அதேவேளை ரியோடி ஜெனிரோவில் நடாத்துவதற்காக பிரேசிலும் இதில் கலந்துகொண்டன.
1904 ஆம் ஆண்டு ஒலிம்பிக்ஸை சென்லொயிஸிலும், 1932 ஆம் ஆண்டு ஒலிம்பிக்ஸை லொஸ் ஏஞ்சல்ஸிலும், 1984 மீண்டும் லொஸ் ஏஞ்சல்ஸிலும், இறுதியாக 1996ஆம் ஆண்டு அட்லான்டாவிலும் என நான்கு தடவைகள் ஒலிம்பிக்ஸ் போட்டிகளை அமெரிக்கா நடத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அதேவேளை 2016 ஆம் ஆண்டு சிக்காக்கோவில் இந்த போட்டிகளை நடத்த வேண்டும் என அமெரிக்கா ஜனாதிபதி பாரக் ஒபாமா உட்பட அமெரிக்கா அதிகாரிகள் பலரும் பகீரதப்பிரயத்தனம் செய்தனர்.
இந்தப்போட்டிகளை நடத்த அமெரிக்காவே தெரிவுசெய்யப்படும் என்ற கருத்துக்கணிப்புக்களே அதிகம் இருந்தமையினால் மிகுந்த நம்பிக்கையுடன், அமெரிக்கா அதிபர் பாரக் ஒபாமா, சிக்காக்கோ மேஜர் உட்பட அமெரிக்க உயர்மட்ட அதிகாரிகள் குழு நேற்று டென்மார்க் விரைந்திருந்தனர். ஆனால்; 2016 ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள ஒலிம்பிக்ஸ் போட்டிகளை நடத்தும் உரிமையினை பிரேஸில் பெற்றுள்ளதாக ஒலிம்பிக்ஸ் சர்வதேச கொமிட்டி டென்மார்க்கில் அறிவித்துள்னளமை அவர்களை பலத்த ஏமாற்றமடையவே செய்திருக்கும்.


மூன்று பிரிவுகளாக நடத்தப்பட்ட வாக்களிப்பினை நாம் பார்த்தோமானால்,
முலாவது சுற்றில்
மற்ரிட் 28
ரி.ஜெனிரோ 26
ரோக்கியோ 22
சிக்காக்கோ 18

இரண்டாவது சுற்றில்
மற்ரிட் 29
ரி.ஜெனிரோ 46
ரோக்கியோ 20

மூன்றாவது சுற்றில்
மற்ரிட் 32
ரி.ஜெனிரோ 66
என்ற வாக்குகளை பெற்றிருந்தன. இந்த ரீதியில் 2016ஆம் ஆண்டு ஒலிம்பிக்ஸ் போட்டிகளை நடத்தவுள்ளது பிரேஸிலின் ரியோடி ஜெனிரோ என உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தென் அமெரிக்கா கண்டத்தின் விளையாட்டு என்றதும் உதைபந்தாட்டம் மட்டுமே அனைவரது மனத்திரைகளிலும் விழுந்துவிடும் அதை மாற்றி மெய்வன்மை போட்டிகளையும் மிகச்சிறப்பாக நடத்தமுடியும் என பிரேஸில் நிரூபிக்கக்காத்திருப்பதாகவும், அதேவேளை உலகில் அதிசக்தி வலு மற்றும், அதி சக்தி தொழிநுட்பங்களை கொண்டு மிகத்தரமான விளையாட்டரங்கங்களை நிர்மானிக்கவுள்ளதாகவும், ஆரம்பத்திலேயே மிக அசத்தலாக தென் அமெரிக்க கண்டத்தில் முதலாவது ஒலிம்பிக்ஸை ஆரம்பித்துவைப்பதில் பிரேஸிலின் ரியோடி ஜெனிரோ பெருமை கொள்கின்றது என அந்த நாட்டின் தலைவர் அறிவித்துள்ளார்.


இந்தப்போட்டிகளை நடாத்த தாம் 1440 கோடி அமெரிக்க டொலர்களை முதலீடு செய்வோம் என ஒலிம்பிக்ஸை நடத்த விண்ணப்பித்த பிரேஸில் தெரிவித்திருந்தது.
இதற்கமைய முதற்கட்ட பணிகளை ஆரம்பிப்பதற்காக தற்போது 280 கோடி அமெரிக்க டொலர்களை பிரேஸில் முதலீடு செய்துள்ளதாக தெரியவருகின்றது.
இந்தப்போட்டிகளை நடத்துவதன் மூலம் 2016 ஒலிம்பிக்ஸ் போட்டிகள் பிரேஸிலுக்கு
5110 கோடி அமெரிக்க டொலர்களுக்கும் மேலான முதலீடுகளை கொண்டுவரும் என பிரேஸிலின் விளையாட்டுத்துறை அமைச்சு விடுத்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

நம்ம ஆசியாவில் இதுவரை ஜப்பான், தென்கொரியா, மற்றும் சீனா ஆகிய நாடுகள்தான் ஒலிம்பிக்போட்டிகளை நடத்திமுடித்துள்ளன. 2100 இற்குள் இந்தியாவால் ஒலிம்பிக் போட்டியை நடத்துவதற்கு எந்தவித சாத்தியக்கூறுகளும் அறவே இல்லை என பல ஆய்வாளர்களாலும் அடித்து சொல்லப்பட்டுள்ளது.
இலங்கை..???? கேட்பதே பலருக்கு வேடிக்கையாகவே இருக்கும்.
பரவாயில்லை நாம் சார்க் விளையாட்டுப்போட்டிகளில் எமக்குள்ளே போட்டிவைத்து பதக்கங்களையும் அள்ளிக்குவித்தால்ப்போச்சு…

18 comments:

தர்மபுத்திரன் said...

ஒலிம்பிக் தகவலுக்கு நன்றி. கடைசி வாசகங்கள் ரொம்ப டச்சிங்கா இருக்கு

Unknown said...

உண்மைதான். எனக்கு தென்னமெரிக்கா கண்டத்தை அட்லஸ்ஸில் பார்க்கும்பொதே அது புட்போல் கலரிலேதான் மனதில் தெரியும். 2016வரை உயிருடன் இருந்தால் பார்ப்போம் அவர்களின் மெய்வன்மை போட்டிகளையும்.

Unknown said...

பிரயோசனமான தகவல். முழுமையாக இந்த தகவலை தந்தமைக்கு நன்றிகள்.

Unknown said...

ம்ம்ம்...உண்மைதான், சினா, ஜப்பான், தென் தென்கொரியாவை விட இனி அதை நடத்தலாம் என எதிர்பார்க்கும் அசியநாடுகள் பாங்கொக் மற்றும் மலேசியா மட்டுமே.

Unknown said...

தங்களுக்கு தேவதை போல அருமை மகள் பிறந்துள்ளமைக்கு எனது வாழ்த்துக்கள்.

Jana said...

பதில் :தர்மபுத்திரன்
நன்றி தர்மபுத்திரன். அதுசரி கவிதைகள் எழுதும் தர்மபுத்திரனா நீங்கள்?

Jana said...

பதில் :நன்றி சிவகரன். என்ன இப்படி சொல்லிட்டீங்க..நம்பிக்கை என்ற அச்சானியில்த்தானே உலகமே சுத்துதாமே...

Jana said...

பதில் :ராகவன்
நன்றி ராகவன். ஆரம்ப பதிவுகளில் வந்த உங்களை சில நாட்களாக காண முடியவில்லையே?

Jana said...

நன்றி ஐயா..நன்றி..தங்கள் வாழ்த்துக்களை என் தேவதைக்கு சொல்கின்றேன். எனது நன்றிகள்.

அடலேறு said...

//இலங்கை..???? கேட்பதே பலருக்கு வேடிக்கையாகவே இருக்கும்//
சிரிப்பா வருது.
வேடிக்கையாக தானே தன் நாட்டு மக்கள் மீதே குண்டு சந்தோஷப்பட்டவர்கள்.

அடலேறு said...

//இலங்கை..???? கேட்பதே பலருக்கு வேடிக்கையாகவே இருக்கும்//
சிரிப்பா வருது.
வேடிக்கையாக தானே தன் நாட்டு மக்கள் மீதே குண்டு சந்தோஷப்பட்டவர்கள்.

அடலேறு said...

//இலங்கை..???? கேட்பதே பலருக்கு வேடிக்கையாகவே இருக்கும்//
சிரிப்பா வருது.
வேடிக்கையாக தானே தன் நாட்டு மக்கள் மீதே குண்டு சந்தோஷப்பட்டவர்கள்.

அடலேறு said...

//இலங்கை..???? கேட்பதே பலருக்கு வேடிக்கையாகவே இருக்கும்//
சிரிப்பா வருது.
வேடிக்கையாக தானே தன் நாட்டு மக்கள் மீதே குண்டு சந்தோஷப்பட்டவர்கள்.

அடலேறு said...

சரியாக பின்னுட்டம் பதியவில்லை என நினைத்து 3 முறை பொத்தானை அழுத்தி விட்டேன். அது தான் என் பின்னுட்டம் 3 முறை தெரிகிறது

Jana said...

நன்றி அடலேறு. பறவாய் இல்லை யாக்கோபு மூன்றுமுறை ஜேசுவை மறுதலித்ததுபோல நீங்களும் 3 முறை இலங்கையை மறுதிலித்துள்ளீர்கள்.

ஊர்சுற்றி said...

அருமையான தகவல் தொகுப்பு. :)

முதலாவது பின்னூட்டம் இட்டு ஆரம்பித்துள்ளேன். :)

Jana said...

அடடா..வாங்க எனதருமை நண்பர் ஊர்சுற்றி.
தொடர்ந்தும் வாங்க..உங்கள் பின்னூட்டத்தை தாங்க..

butterfly Surya said...

தகவலுக்கு நன்றி.

LinkWithin

Related Posts with Thumbnails