Monday, October 19, 2009

கவிதையும் இல்லை! ஹைக்கூவும் இல்லை!!

யதார்த்தம்.


மரித்துப்போனவனின்
மனதுக்கு மட்டும் புரியும் எது யதார்தம்
விஞ்ஞானம் முரணாக…

தேவை.


தேவை… . தேவையென்ற கேள்விகள்
ஏது மற்ற நிரம்பல்கள்.

ஆளம்.


அற்புதங்கள், ஆச்சரியங்கள்
ஐ..ஐ..யோ முடிந்துவிட்டதே என் ஆயுள்.

மனைவி.


நிச்சயிக்கப்படாத நிட்சயதார்தம்.
தேவதையின் அருள், சாத்தானின் சாபம்
இரண்டினதும் ஒரே உருவம்.

கடவுள்.


உயிர்களுக்காக அத்தனை அழகும் படைத்தும்
பொறித்துவிட்டு போகவில்லை
உபயம் நான் என்று…

சாத்தான்.


ஸ்ரீ லங்கா -ஈழத்தில் தமிழர்படுகொலை..
சீனா -திபெத்தை ஆக்கிரமித்தது..
பாகிஸ்தான் -ஸ்ரீ லங்காவுக்கு உதவி…
ஆரம்பங்கள் அதன் விம்பங்கள்.

தமிழன்.


உலகமெங்கும் பறந்து
பிறர்கூடுகளில் முட்டையிடும் பறவைக்கு
சொந்தமாக இல்லை ஒரு வளை.

துரோகி.


அடிப்படை மரபுரிமைகள்
என்றும் மறைவதில்லையாம்
சொல்கின்றது விஞ்ஞானம்…
உண்மைதான்..ஆப்பிள் கடித்த நாள்முதல்
தொடர்கின்றதே..

நட்பு.

சார்பியல் பொய்யில்லை,
தனித்து நிற்காத அட்டைகள்
சார்ந்து தலை முட்டி நிலைத்து நிற்கின்றதே..

நன்றி.


பரஸ்பர சந்தோசம்
நான் பண்பானவன்
செய்தவன் மனம்குளிர்கின்றது…

18 comments:

butterfly Surya said...

அருமை ஜனா.

வாழ்த்துகள்..

Kuganathan said...

கலக்கிறிங்க ஜனா...
கவிதையும் இல்லை ஹைக்கூவும் இல்லாட்டி இதற்கு என்ன பெயர் வைக்கலாம்???

டிலான் said...

இந்த பத்தும் எனக்கு பிடித்த பத்துக்களே..நன்றாக உள்ளன ஜனா. பாராட்டுக்கள்.

sangeethan said...

wow very nice.....best wishes

அடலேறு said...

//உலகமெங்கும் பறந்து
பிறர்கூடுகளில் முட்டையிடும் பறவைக்கு
சொந்தமாக இல்லை ஒரு வளை.
//
இந்த வரிகளை படித்த போது ஏதோ ஒரு அழுத்தம் படிகிறது மனதில்.
//விம்பங்கள// பொருள் சொல்லுங்க ஜனா, பிம்பங்கள தான் குறிப்பிட்டீங்களோ.
அனைத்து வரிகளும் அருமை நண்பா

பின்னோக்கி said...

//உலகமெங்கும் பறந்து

மிகவும் ரசித்தேன்.

சில கவிதைகள் புரிதலுக்கு மறு வாசிப்பு தேவையென நினைக்கிறேன்.

Unknown said...

//உயிர்களுக்காக அத்தனை அழகும் படைத்தும்
பொறித்துவிட்டு போகவில்லை
உபயம் நான் என்று… //
பறவாய் இல்லையே ஒரு நாத்திகனின் கருத்திலும் கடவுள் அழகாகவே தெரிகின்றாரே??

Jana said...

பதில்: butterfly Surya
நன்றிகள் வண்ணத்துப்பூச்சியாரே..

Jana said...

பதில்:Kuganathan
நன்றிகள் குகநாதன். நீங்களாப்பார்த்து எதாவுது நல்லபெயரை வச்சுடுங்களேன். தங்கள் முதல்வருகைக்கு என் நன்றிகள் தொடர்ந்து இணைந்திருங்கள்.

Jana said...

பதில்:Dilan
நன்றி டிலான். பிடித்தபத்துக்கள் பற்றி எல்லாம் பேசுகின்றீர்கள்! தமிழ் இலக்கணம் புகுந்துவிளையாடுது. வாழ்த்துக்கு நன்றிகள்.

Jana said...

பதில்:sangeethan
தங்கள் வரவுக்கும் முதல் பின்னூட்டலுக்கும் நன்றிகள் சங்கீதன். தொடர்ந்தும் வாருங்கள். அங்கு நானும் தொடர்ந்து வருகின்றேன். நன்றிகள்

Jana said...

பதில்: அடலேறு
நன்றிகள் நண்பரே..உண்மையில் இவை ஒரு நண்பன் சொல்லச்சொல்ல உடனடியாக கிறுக்கிய எழுத்துக்கள். 2001ஆம் ஆண்டு பதிந்து வைத்திருந்தவை என நினைக்கின்றேன். அடுத்து விம்பங்கள் சரியானதே என்று எனக்குத்தோன்றுகின்றது..

Jana said...

பதில்:பின்னோக்கி
வருகைக்கும் பின்னூட்டலுக்கும் மிக்க நன்றிகள் பின்னோக்கி .
தங்கள் வலைத்தளத்திற்கும் நான் வருவதுண்டு. தொடர்ந்தும் வாருங்கள், எழுத்துக்களால் இணைந்திருப்போம்.

Jana said...

பதில்:Abarna
நாஸ்திகர்கள் என்று எங்களை அழைக்காதீர்கள் வேண்டுமானால் பௌத்தறிவாளர்கள் என்று அழையுங்கள் என்று கமல் ஹாசன் சொல்லி இருக்கின்றார் அல்லா? ஆஹா...இப்படி எல்லாம் நீங்கள் கேட்பீர்கள் எனத்தெரிந்துதான் அன்பே சிவம் (Love is God)என்று படத்தில் போட்டிருக்கின்றேன்.

சுதுமலை ஸ்ரீ புவனேஸ்வரி அம்மன் said...

சூப்பர் நல்லா இருக்கு, வாழ்த்துக்கள்!!தொடர்ந்து எழுதுங்க...

Jana said...

வருகைக்கும், பின்னுட்டலுக்கும், வாழ்த்துக்கும் நன்றி மயூ. தொடர்ந்தும் இணைந்திருங்கள்.

கிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ) said...

பத்தும் விலைமதிப்பில்லா முத்துக்கள்

Jana said...

நன்றிகள் கிறுக்கல் கிறுக்கன்
வருகைக்கும், பின்னுட்டலுக்கும், வாழ்த்துக்கும் நன்றி

LinkWithin

Related Posts with Thumbnails