Tuesday, October 27, 2009

பொறுக்கி எடுத்த பொக்கிசங்கள்..

தலைவன்.

தமிழில் காப்பியங்கள் வாயிலாகவும் புலவர்களின் நாவன்மையினாலும் தலைவர்களுக்கான தமிழ் வரைபிலக்கணம் சிறப்பாக எழுதப்பட்டுள்ளது.
"அன்னியத்தலையெடுப்புக்களை, திணிப்புக்களை அடக்கியாளும் மதிநுட்பம், உடல் வலிமை உடையவனும் அஞ்சாத சக்தி கொண்டவனும், தனது மண்ணையும் மக்களையும் நசுக்க முற்படும் எதிரிகளை புறமுதுகிடச்செய்து விரட்டக்கூடிய போர்க்குணம் கொண்டவனும், தனது மொழி கலாசாரம், கலை ஆகியவற்றை தனது வீரத்திற்கொப்ப போற்றி வளர்ப்பவனும் "எல்லா வகையிலும் தங்களை பாதுகாக்கக் கூடியவன் என்ற நம்பிக்கையினை சகல தரப்பு மக்கள் மீதும் ஊட்டியவனே சிறந்த தலைவன் ஆனான்.
அவன் தவைன் என்றால் எப்படி இருக்கவேண்டும் என்ற கேள்விக்கே தன் இனிய செயல்களினால் இடம்விட்டு வைப்பதில்லை.

தமிழின் அரசு சின்னங்கள்.

தமிழரின் அரசு, அரசாங்கத்திற்குரிய சின்னங்களாக இருபது சின்னங்களை தமிழறிஞர்கள் மன்னர் காலத்திலேயே வரையறை செய்துள்ளனர். அவையாவன
முடி குடை ஆசனம் கவரி தோடி முரசு சக்கரம்
யானை கொடிமதில் தோரணம் பூரணநீர்க்குடம் பூமாலை
சங்கு கடல் மகரம் ஆமை இணைக்கயல் இடபம்
சிங்கம் தீபம் என்பனவாகும்.

மொழிக்கையாட்சி.

நவீனகால தமிழ் இலக்கியத்தில் மொழிக்கையாட்சி கைவரப்பெற்றவர்கள், பாரதி, அதன்பின்னர் பாரதிதாசன் அகியோரே. ஆனால் இவர்களின் பின்னர் தமிழ் மொழிக்கையாட்சி "அரசியல் அரங்குகளில்" எதிரொலிக்கத்தொடங்கின பேரறிஞர் அண்ணாத்துரையின் திருவாயிலிருந்து.

சுதந்திரப்போராட்ட காலங்களிலும் அதன்பின்னர் கொங்கிரஸ் ஆட்சிக்காலத்திலும் மேடைகளில் கோலூன்றித் தடுமாறிய தமிழ், அண்ணாத்துரை என்ற அறிஞர் அண்ணாவின் மேடையேற்றத்தின் பின்னர் தங்கு தடையின்று பிரவாகம் எடுத்து ஓடி மாற்றுக்கருத்துடையோரையும் மறைவாக நின்று கவனித்து கேட்கும்படி செய்தது.
தமிழில் மட்டும் இன்றி ஆங்கிலத்திலும் புலமை படைத்தவர் அறிஞர் அண்ணா. இக்காலத்தில்த்தான் அண்ணாவின் பேச்சுக்களில் அடுக்குச் சொல் அலங்காரம் (Alliteration) ஒப்பேற்றப்பட்டது.

நவீன தமிழில் கவித்துவத்தை விட்டு, மொழிக்கையாட்சி, மற்றும் கவிசார்ந்த பேச்சு ஆகியவை கொண்ட "மொழிக்கையாட்சியில்" பேரறிஞர் அண்ணாவே பிதாமகர் ஆவார்.
அண்ணா ஒலிபெருக்கியைத் தொட்டதன் பின்னர்தான் பிரசங்கம் என்ற பழமைவாதச்சொல் மாறி சொற்பொழிவு என்ற தூயதமிழ்ச்சொல் அரங்கேறியது.

தமிழ் சினிமாவில் மிகப்பழைய செய்திக்குறிப்புகள்.

* தமிழ் திரை உலகில் முதல் பேசும் படமாக " காளிதாஸ்" திரைப்படம் 31.08.1931 அன்று வெளிவந்தது. தியாகராஜபாகவதர் கதாநாயகனாக நடித்த இந்த படத்தை ஏச்.எம்.ரெட்டி அவர்கள் இயக்கியிருந்தார்.

* ஏச்.எம்.ரெட்டி இயக்கத்தில் 1936ஆம் ஆண்டு வெளிவந்து பெருவெற்றிபெற்ற திரைப்படம் " மாத்ரு பூமி" இதில் பி.யு.சின்னப்பா அவர்கள் கதாநாயகனாகவும் ரி.வி.குமுதினி அவர்கள் கதாநாயகியாகவும் நடித்திருந்தனர்.

* தமிழக திரைத்துறை வரலாற்றில் " நடிக மன்னன்" " தவநடிக பூபதி" ஆகிய பட்டங்களால் பி.யு.சின்னப்பா போற்றப்பட்டார்.

* 1939ஆம் ஆண்டு வெளியாகி சுயமரியாதை, சுதந்திர உணர்வு என்ற கொள்கைகளை சினிமா மூலம் பரப்பும் நடவடிக்கைக்கு வித்திட்ட திரைப்படம் கே.சுப்பிரமணியம் இயக்கி தயாரித்த "தியாக பூமி" ஆகும்.

* 1945 முதல் 1952 வரையான காலப்பகுதிக்குள் அறிஞர் அண்ணாத்துரையின் " வேலைக்காரி", " சொர்க்கவாசல்", "ஓர் இரவு" ஆகிய படங்களும் மு.கருணாநிதியின் "ராஜகுமாரி ", "அபிமன்யு ",
"மந்திரிகுமாரி ", "பராசக்தி" ஆகியபடங்களும் வெளியாகி பெரு வெற்றி பெற்றன.
அண்ணா, கருணாநிதி ஆகிய இருவரினதும் பேனாக்களின் முனைகளிலிருந்து இந்த ஏழு படங்களும் முதன்முதலாக தமிழ்திரைப்பட வயல்களில் அரசியல் விதைகளை தூவிவிட்டன.

அண்ணாவின் பதில்கள்.

இந்திய சுதந்திரத்தின் பின்னர் தமிழ்நாட்டை ஆண்டுவந்த கொங்கிரஸ் கட்சியினரிடமிருந்து ஆட்சியைக் கைப்பற்றி சுதேச கட்சியான அண்ணாத்துரை தலைமையிலான "திராவிட முன்னேற்றக் கழகம் " ஆட்சி அமைத்தது.
சுமார் 1,1/2 வருடங்ளே அண்ணா முதலமைச்சராக ஆட்சி செய்தாலும் இன்றும் போற்றப்படும் வகையில் அவர் ஆட்சியும், அவரது பேச்சுக்களும் இருந்தன.

தனது பேச்சுக்களால் தன்னவர்களை மட்டும் அல்ல, எதிர்க்கட்சிக்காரர்களையும் கட்டிப்போடும் வல்லமை உள்ளவர் அண்ணா. அவரது பதில்கள் மிகச்சுவையானதாகவும், ஆனால் கேட்பவரை காயப்படுத்தாதவையாகவும் நகைச்சுவையானதாகவுமே இருக்கும். உதாரணமாக ஒரு சம்பவம்.

தமிழகச் சட்டமன்றத்தில் அன்றைய பேச்சாளரும், முதுகலை பட்டதாhரியும், வழக்கறிஞருமாகிய தீவிர கொங்கிரஸ்காரர் கே.விநாயகம் ஒருநாள் சட்டமன்றத்தில் வாக்குவதத்தில் மிகக்கோபமாக ஒருநாள் அண்ணாவைப்பார்த்து,
Mr.Anna Your Days are counted! எனத்தெரிவித்தார்.
ஆதற்கு உடனடியாக பேரறிஞர் அண்ணா மிக நிதானமாக
Mr.Vinayagam… My Steps are measured! எனப்பதிலளித்தார்.
அதைக்கேட்டதும் கே.விநாயகம் வியப்பு கலந்த புன்னகையுடன் கோபம் பறந்துபோனது தெரியாமல் தனது இருக்கையில் அமர்ந்துகொண்டாராம்.

10 comments:

Beski said...

அருமை ஜனா.
அனைத்தும் பொக்கிசங்களே.
பல தகவல்களை அறிந்துகொண்டேன்.

தலைவன் - அது இலக்கியமாகிப் போனது.

மொழிக்கையாட்சி பற்றி பின்பு பேசுவோம்.

அடலேறு said...

நிறைய விடயங்களை தெரிந்துகொண்டேன் ஜனா. நல்ல பதிவு

சஞ்சீவன் said...

தமிழ் சினிமாவின் பழைய செய்திகள் அபாரம் ஜனா. தேவையான தகவல்கள் நன்றி. நானும் இதிலிருந்து பொறுக்கிக்கொண்டேன்.

Unknown said...

சிறப்பான தகவல்கள், அனைவருக்கும் தேவையான பல விடயங்களை பதிவிட்டுள்ளீர்கள் நன்றிகள்.

Unknown said...

பல விடயங்களையும் சுவையாக தொகுத்து தந்துள்ளீர்கள். தேவையானவையும்கூட. நன்றிகள்.

Jana said...

பதில்:எவனோ ஒருவன்
நன்றி எவனோ ஒருவன். கண்டிப்பாக மொழிக்கையாட்சி பற்றி நிறையப்பேசுவோம். சுவாரகசியமான தகவல்களும், சுவையான செய்யுள்களும் பல உண்டு.

Jana said...

பதில்:அடலேறு
நன்றி அடலேறு. தங்கக்கு தெரியாத விடயங்கள் இருப்பது கடினம். அப்படி நீங்கள் தெரிந்துகொண்டால் இந்த பதிவு வெற்றிபெற்றது.

Jana said...

பதில்:சஞ்சீவன்
நன்றி சஞ்சீவன். தொடர்ந்தும் இணைந்திருங்கள்.

Jana said...

பதில்:Sivakaran
நன்றி சிவகரன்.

Jana said...

பதில்:Vinoth
நன்றிகள் வினோத்

LinkWithin

Related Posts with Thumbnails