பதிவுலகில் புதிய முயற்சி.
நான்கு பதிவர்கள் (நிலாரசிகன், எவனோ ஒருவன் அதி பிரதாபன், அடலேறு, ஜனா)
சென்னை, கிழக்கு கடற்கரைச்சாலையில் உள்ள கடற்கரை ஒன்றில் பல மணித்தியாலங்களாக பல்வேறு பட்ட விவாதங்களை முன்னெடுத்துக்கொண்டு சென்றபோது உதித்த கரு ஒன்றினை வைத்து, வேறு வேறு கோணங்களிலும், அந்த கதையில் வரும் நான்கு பாத்திரங்களாக ஒவ்வொருவரும் எழுதுவதாகவும் எடுக்கப்பட்ட முடிவு, தற்போது முழுமைபெற்றுள்ளது.
நாளை திங்கட்கிழமை இந்த புதுமுயற்சியில் இந்த பதிவர்கள் நால்வரும் இணைந்து ஒரே நேரத்தில் பதிவுகளை இட தீர்மானித்துள்ளார்கள் என்பதையும், கண்டிப்பாக வாசிப்பபவர்களுக்கு இது ஒரு புதிய அனுபவமாக இருக்கும் என்பதையும் நம்பிக்கையுடன் கூறிக்கொள்கின்றேன்.
பிரகாஷ்ராஜ்ஜின் உணர்வு.
பிரகாஷ்ராஜின் நடிப்பு மட்டும் இன்றி அவரது எழுத்துக்களும் மிக அற்புதமாக இருக்கும் என்பது பல தமிழ்நாட்டு வார சஞ்சிகைகளில் அவரது தொடர்களை படித்திருக்கும் அனைவருக்கும் தெரிந்திருக்கும்.
இது தவிர அவர் ஈழ மக்களின் மேல் உண்மையான மதிப்பும், உணர்வும் பாசமும் கொண்டவர் என்பதும், சில உண்மைகளை அச்சமில்லாமல் வெளியிட தயங்குபவர் இல்லை என்பதும் சிலருக்கு தெரிந்திருக்கலாம்.
தமிழ் என்று தெரிவித்து, தமிழச்சி பால் குடித்தவன் என்றெல்லாம் திரைப்படப்பாடல்களில் காட்டி பணம் பாhத்து, யாழ்ப்பாண மண்ணின் பாசையிலேயே பேசி நடித்து அதிலும் அதிக இலாபம் அடைந்து, ஈழ மக்கள் பற்றி தனிப்பட்ட ரீதியில் வாயே திறக்காமல் இருக்கும் சுத்த தமிழ் நடிகர்களுக்கு மத்தியில் பிரகாஷ்ராஜ் ஒரு குண்டுமணி.
பிரகாஷ்ராஜ் தெனாலி இணைய இதழில் “தொடுவானம்” என்ற பெயரில் தொடர்ந்தும் எழுதிவருகின்றார்.
இதனைப்படிக்க
இங்கே சொடுக்கவும்
குறும்படம்.(BlastOff!)
நமக்கு பல கதைகளை தயார்செய்து வைத்துக்கொண்டு ஒரு குறும்படம் எடுப்பதற்கே படாதபாடு படவேண்டிய நிலையே இன்றும் உள்ளது. ஆனால் வெள்ளைத்தோல்கள் குறும்படங்களை எடுத்து அடுக்கிவிட்டு. இப்போது பெரும்பாலும் அனிமேசன் குறும்படங்களை பல செய்திகளை சொல்லவைத்து எடுத்து, வியப்பினை ஊட்டுகின்றார்கள்.
நான்போகிறேன் மேலே மேலே
சென்னை 600028 இன் யாரோ..யார் நெஞ்சில் இங்கு யாரோ என்ற பாடலின் பின்னர் கிட்டத்தட்ட இரண்டு வருடங்களின் பின்னர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், சின்னக்குயில் சித்திரா (இவர் எப்பொதும் குரலால் சின்னக்குயில்தான்) ஆகியோர் பாடிய “நான் போகிறேன் மேலே மேலே பூலோகமே கீழே” என்ற பாடல் கேட்கும்போது இசை இனிக்கின்றது. நாணயம் திரைப்படத்தில் ஜேம்ஸ் வசந்தின் இசையில் இந்தப்பாடல் சுகமாக ஒலிக்கின்றது. தற்போது இசை ஆவலர்களின் ரிங்கிங் ரோனாகவும் இந்தப்பாடல் மாறியுள்ளது குறிப்படத்தக்கது.
அதெப்படி ஆயிரம் நிலவே வாவில் இருந்து நான் போகின்றேன் மேலேமேல வரை, எஸ்.பி.பியின் வயது ஏறினாலும் குரல் மெருகேறிக்கொண்டு போகின்றது என்பதுதான் பெரிய ஆச்சரியமாக உள்ளது.
உலகின் பிரபலமான 100 பேரில் மாயா அருட்பிரகாசம்.
மாதங்கி அருட்பிரகாசம் (மாயா) என்ற இயற்பெயரை கொண்ட, ஈழத்தைச்சேர்ந்த
பிரித்தானியாவில் பிறந்து வளர்ந்தவரான ஒரு தமிழ்ப்பெண் இவர்.
ஈழ மக்களின் உணர்வுகளையும் வேதனைகளையும், ஈழத்தவர்களின் மறப்போர் விபரத்தையும் இவர் தனது பாடல்கள்மூலம் வெளிக்காட்டியிருந்தார்.
2008ஆம் ஆண்டுக்கான கிராமி விருதுக்கு இவரது பெயரும் பரிந்தரைக்கப்பட்டிருந்தது.
Piracy Funds Terrorism (2004)
அருளர் (Arular, 2005)
பில்போர்ட் 200
போன்ற பல இசைத்தொகுப்புக்களையும் இவர் வெளியிட்டுள்ளார்.
சிறந்த 100 பேர் பட்டியிலில் 42 ஆவது இடத்தினை இவர் பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஒஸ்கார் விருது கிடைத்த சிலம்டாக் பில்லியனர் படத்திலும் இவர் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த 100பேர் பட்டியலில் ஏ.ஆர்.ரஹ்மானும் இடம்பெற்றுள்ளார். அவர் 59அவது இடத்தில் உள்ளார்.
100 பேர் பட்டியலையும் மேலோட்டமாகப்பார்க்க..
சர்தாஜி ஜோக்
ஷர்தாஜியும் அவரது மனைவியும் கோப்பி சொப் ஒன்றுக்கு சென்று இரண்டு சுடு கோப்பிகள் வாங்கி குடித்தனர். விலை மனுவைப்பார்த்த ஷர்தாஜி….
கெதியாக கோப்பியை குடி என்றார்….ஏன் என்று கேட்ட மனைவிக்கு அங்கு தொங்கிக்கொண்டிருந்த விலை மனுவைக்காண்பித்தார் நம்ம ஷர்தாஜி
ஹெட் கோப்பி -05 ரூபா
கூல் கோப்பி -10 ரூபா.
14 comments:
கதை படிக்க ஆவலாய் உள்ளேன்.ஜனா
நால்வரின் கதைக்கும் ஆர்வமாக உள்ளோம். அப்புறம் பிரகாஷ்ராஜ்ஜின் தொடர் சுப்பராய்த்தான் இருக்கு.
இன்று ஹொக்ரெயிலிலும் கிக் அதிகம்தான் அண்ணா.
பிரகாஷ்ராஜின் எழுத்துக்களைப் படிக்க தொடுப்பு கொடுத்ததற்கும், குறும்படத்திற்கும் நன்றி.
ஹொக்ரெயில் கலக்கல் ஜனா அண்ணா. மாயா அருட்பிரகாசம் பெருமைப்படவேண்டிய ஒரு பெண். அவரின் தமிழின உணர்வுகளைக்கூட கிண்டல் செய்த துரோகக்கூட்டங்களும் பல உண்டு. இவர்களின் முகங்களில் அந்தப்பெண் தற்போது தனது சாதனைகளால் கரிபூசியுள்ளார்.
ஹொக்ரெயில் சுப்பர். பிரகாஷ்ராயின் எழுத்துக்களை படிக்க தொடுப்பு தந்தமைக்கு நன்றி, உண்மையில் அவர் பேசும்போதே அவரது கோபங்கள் (நியாயமான) புரிகின்றது. குறும்படம் கலர்புல்லாக உள்ளது. தாங்கள் சொன்னதுபோல வயது ஏறினாலும் SPBஇன் குரல் வளம்பெறுவது ஆச்சரியமே.
அருமை. அனைத்து பகிர்விற்கும் நன்றி ஜனா.
திடீர் திடீரென்று பதிவுர் சந்திப்பை சத்தமில்லாமல் நடத்தி விடுகிறீர்கள்..??
ஹொக்ரெயிலுக்கு நல்லாயிருக்கு
நன்றி கேபிள் ஜி.
நன்றி சயந்தன்
நன்றி
Dr.எம்.கே.முருகானந்தன்
நன்றி டிலான். சரியாகச் சொன்னீர்கள்
நன்றிகள் உஷா அக்கா
அனைவருக்கும் நேரம் கிடைக்கும் அரிதான பொழுதுகளில் இடைக்கிடை சந்தித்துக்கொள்வோம். இனிவரும் காலங்களில் உங்களையும் இணைத்துக்கொள்ளலாமா, வண்ணத்துப்பூச்சியாரே?
நன்றி அடலேறு.
Post a Comment