எப்போதுமே ஏ.ஆர்.ரஹ்மானின் பாடல்கள் வெளிவருகின்றன என்றால் அவரது இரசிகர்களுக்கு மிக்க மகிழ்ச்சியையும் ஆர்வத்தையும் தூண்டிவிட்டு, எப்படியாவது அதை கேட்டுவிடவேண்டும் என்ற ஆர்வம் வந்துவிடும்.
பெரும்பாலான அவரது இசைப்பாடல்கள் கேட்கக்கேட்கத்தான் இன்னும் இலகிப்பாக இருப்பது உண்மை. பாடல்கள், பாடல்களுடன் சேர்ந்துபோகும் அற்புதமான இசை, இவற்றையும் கடந்து கேட்கும் “உள் இசை என்று ஒன்றும்” உன்னிப்பாக கேட்டால் நம் ஒவ்வொரு செல்லையும் சிலிர்க்க வைத்துவிடும்.
எந்திரன்…இன்னும் ஒரு படி மேல்த்தான என்று கூறவேண்டும். காரணம் ரஜினி, சங்கர், ரஹ்மான், வைரமுத்து என்ற சிகரங்களின் சந்திப்பு அல்லவா?
பாடல் வெளியீட்டுவிழா நேற்று கோலாலம்பூரில் மிக பிரமாண்டமாக இடம்பெற்றுள்ளது.
விடயத்திற்கு வருவோம்…புதிய மனிதா, காதல் அணுக்கள், அரிமா அரிமா, கிளிமஞ்சாரோ, இரும்பிலே ஒரு உதயம், பூம் பூம் ரோபோடா, சிட்டி டான்ஸ் ஸோகேஸ் என ஏழு பாடல்கள் உள்ளன.
இதில் புதிய மனிதா, காதல் அணுக்கள், அரிமா அரிமா, ஆகிய மூன்று பாடல்களையும் கவிப்பேரரசு வைரமுத்து எழுதியிருக்கின்றார்.
கிளிமஞ்சாரோவை பா.விஜய்யும், பூம் பூம் ரோபாடா என்ற பாடலை கார்க்கியும் எழுதியுள்ளனர்.
எனக்கு இப்போது உடனடியாக அரிமா அரிமா ரொம்ப பிடித்திருக்கின்றது.
"சிற்றின்ப நரம்பு சேமித்த இரும்பில்
சற்றென்று மோகம் பொங்கிற்றே...
ராட்ஷசன் வேண்டாம் ரசிகன் வேண்டும்
பெண் உள்ளம் உன்னை கெஞ்சிற்றே...
நான் மனிதன் அல்ல
அக்கினியின் அரசன் நான்
காமூட்ட கணினி நான்
சின்னம் சிறுசின் இதயம் தின்னும் சிலிக்கான் சிங்கம் நான்..."
வசனங்கள் சூப்பர்..
194 ஆவது அகவையில் மத்திய அன்னை.
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி, யாழ்ப்பாணத்தில் கல்வி வரலாற்றில் பெரும் செல்வாக்கு செலுத்திய, செலுத்திக்கொண்டிருக்கும் யாழ்ப்பாணத்தில் உள்ள ஒரு உயர்தரக்கல்லூரி. யாழ்ப்பாண நகரப்பட்டினத்தில் நடு மத்தியில் உள்ளதனால் அதன் காரணப்பெயர்கூட மிகப்பொருத்தமாகவே உள்ளது.
யாழ்ப்பாணத்தில் வெள்ளையரின் ஆட்சி நினைவை பறைசாற்றும் உயர்ந்த மணிக்கூட்டுக்கோபுரம், ஒல்லாந்தரின் ஆட்சியை நினைவு படுத்தும் யாழ்ப்பாணக் கோட்டை, வரலாற்றில் பல தடங்களையும், கறைகளையும் சந்தித்து சற்று நிமிர்ந்து நிற்கும் யாழ்ப்பாண நூலகம், யாழ்ப்பாணத்திலேயே பெரிய மைதானம், கல்லூரியை சுற்றிவர பல கேந்திர நிலையங்கள் என இன்று பூரிப்புடன் நிற்கின்றாள் மத்திய கல்லூரி என்னும் அந்த தாய்.
கல்வியாளர்களை மட்டும் இன்றி பெரும் விளையாட்டு வீரர்களையும் நாட்டுக்கு வழங்கியது யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி. முதன் முதலாக இலங்கைக்கு ஆசிய விளையாட்டுப்போட்டிகளில் தங்கப்பதக்கம் பெற்று கொடுத்த எதிர்வீரசிங்கம் இந்த கல்லூரியின் மாணவனாக இருக்கும்போதே அதை சாதித்திருந்தார்.
நாட்டில் தமிழ், முஸ்லிம், சிங்களர் என மூவினங்களிலும் உள்ளவர்களும் இங்கு கல்வி கற்றுள்ளனர்.
துடுப்பாட்டம், காற்பந்தாட்டம், கொக்கி, கூடைப்பந்து, சாரணர் இயக்கம், ஆகியவற்றை யாழ்ப்பாணத்தில் அறிமுகம் செய்து வைத்த பெருமையினை இந்த கல்லூரியே கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
யுத்த காலத்தில் பெரும் சேதங்களுக்கு உள்ளான இந்த கல்லூரி, அதே உறுதியுடன் இன்றும் அதே இடத்தில் புதுப்பொலிவு பெற்று நிமிர்ந்து நிற்பதே மத்திய அன்னையின் உறுதிக்கு எடுத்துக்காட்டு.
அவளின் விழுதுகளில் ஆடி சுரம்பாடிய குயில்களின் குரல்களின் என் குரலும் உள்ளமையில் உவகை கொள்கின்றேன்.
மத்திய மைந்தன் என்பதில் இன்றும் நான் பெருமை கொள்கின்றேன்.
(கல்லூரியின் தோற்றத்தை panorama இல் வித்தியாசமான கோணத்தில் எடுத்தவர் மத்தியின் மைந்தன் - பதிவர் கன்-கொன்)
காட்சிப்பிழை
ஜனநாயகம்
வண்ண வண்ணமாய்
நிறைந்துகொண்டிருக்கிறது சுவர்கள்!
எங்கள் வயிறுகள் மட்டும்.........
சுவர்களில் இருந்து
பார்த்துக்கொண்டிருங்கள்
சுடலையாகிறது எங்கள் வாழ்வு!
உங்களை உயர்விக்க
வண்ணங்கள் கொடுத்தனுப்பும் நீங்கள்
எங்களை உயிர்விக்கும்
கிண்ணங்களை மறந்ததேன்?
ஜனங்கள் அல்ல
"நாயகர்களே"
ஆள்வதாக
ஆகியிருக்கிறது - எங்களின்
ஜனநாயகம்!
...............................................
-நண்பர் திருமயூரனின் கவிதை.
ஆண் பற்றிய பெண்ணின் வர்ணனை
ஹீரோயிசம் நிறைந்தது தமிழ் சினிமா என்றாலும், காதலை மையமாக வைத்துத்தான் எந்தவொரு அக்க்ஷன் படமும் எடுக்கப்படும் என்றாலும், காதல் உணர்வுடன், காதலியின் பார்வையின் அவனின் ஆண்மை, அவனின் வர்ணனைகள் என்பவை தமிழ் சினிமாவில் பெரும் பஞ்சமாகவே இருந்தன. பெண் வர்ணனையும், பெண் பற்றிய ஒரு ஆணில் வர்ணனைகளுமே மலிந்து கிடந்தன.
அந்த வகையில் அந்த மரபுகளை உடைத்து பெண்ணின் பார்வையின் அவளது காதலின் பற்றிய வர்ணனைகளை தமிழ் சினிமாக்கு அற்புதமாக அரங்கேற்றியவர் கவிதாகினி தாமரை.
"சந்தியாக் கால மேகங்கள்
பொன் வானில் ஊர்வலம் போகுதே
பார்க்கையில் ஏனோ நெஞ்சிலே
உன் நடையின் சாயலே தோணுதே
நதிகளிலே நீராடும் சூரியனை நான் கண்டேன்
வேர்வைகளின் துளிவழியே நீ வருவாய் என நின்றேன்
உன்னால் என் நெஞ்சில் ஆணின் மணம்
நான் உன் சொந்தம் என்ற எண்ணம் தரும்
மகிழ்ச்சி மீறுதே வானைத் தாண்டுதே
......சாகத்தோன்றுதே"
எத்தனை அற்புதமான வசனங்கள் பாருங்கள்.. ஒரு பெண்ணின் உணர்வுகள் எப்படி வெளிப்படுகின்றது.
அந்த அணைப்பு..அவள் அவனுக்கே சொந்தம் என்ற முடிவு, உச்சக்கட்ட மகிழ்ச்சியில் வேறு என்ன சாவதற்கு தோன்றுதே என்கின்றாள் பெண்..
அற்புதம்.
ஷர்தாஜி ஜோக்
மும்பையில் உள்ள வங்கி ஒன்றில் தனக்கு சேமிப்பு கணக்கு ஒன்றை அரம்பிப்பதற்காக சென்ற ஷர்தாஜி வங்கியால் வழங்கப்பட்ட விண்ணப்பப்படிவத்தை நிரப்ப ஆயத்தமாகி விட்டு உடனடியாக டில்லிக்குபோய் அங்கிருந்து நிரப்பிக்கொண்டு மீண்டும் வந்தார் ஏன் தெரியுமா? அந்த விண்ணப்பப்படிவத்தில் இருந்தது இப்படி
" FILL UP IN CAPITAL ".
21 comments:
ஹாய் ஜனா. ஞாயிற்றுக்கிழமைகளில் என் அட்டவணைகளில் கொக்ரெயில் பார்ப்பதும் முக்கியமானதே. அடடா..நமது கல்லூரி 194 ஆவது ஆண்டு இன்றுதான். ஓகஸ்ட் 01, ஒவ்வொரு சென்றலைட்சும் மறக்கமுடியாத நாள் அல்லவா.
நானும் ஒரு மத்திய மணி என்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.
கன்-கொன் என்பவர்தான் கிருஸ்ணகுமாரின் சகோதரரா? தங்கள் தமையனார், நான், கிருஸ்ணகுமார் எல்லோரும் உற்ற நண்பர்கள்.
இன்று காலை தேவாலாயத்தில் விசேட ஆராதனையும் பின்னர் ஸிக்கஸர் சைட் சுற்றுப்போட்டியும் கல்லூரி மைதானத்தில் இடம்பெறுவதாக கேள்விப்பட்டேன். கல்லூரிக்காலங்களை நினைவு படுத்திவிட்டீர்கள்.
ஒன்றா ரெண்டா ஆசைகள் பாடல், அற்புதமானது அண்ணா. எனக்கு ரொம்ம ரொம்ப பிடித்த பாடல். எந்திரன் பாடல்கள் நீங்கள் சொன்னதுபோல போக போகத்தான் பிடிபடும். குறும்படம் அந்த பெடியன்போலத்தான் நாங்களும் பிளேனைக்கண்டு ஓடி திரிந்தோம். உங்கள் கல்லூரியின் கல்லூரி நாளுக்கு எனது வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள்..
கொண்டாட தயாராவோம்...
கண்டனங்கள்..
தரமான ரசனை..
:)
மத்திய தாயின் 194 ஆவது அகவையில் அவளின் மைந்தனாக நானும் உவகை கொள்கின்றேன் அண்ணா.
எந்திரன் சுப்பரோ சுப்பர். பாடல் பெண்ணின் உணர்வு, குறும்படம் ஒரு விமானம் கடக்கும் சிறுவர்களின் உணர்வு, மயூரன் கவிதை குட், சர்தாஜி பாவம்.
"மத்தியின் மணிக்கொடி நித்தியம் நிலைக்கும்"
என் பேவரைட் கிளி மாஞ்சாரோ.. சட்டென ஒட்டிகொண்டது... அந்த ஆகா..ஓகோ..(மனசுக்குள் பாடவும்) ரகுமானின் மகள் கஜிதா ரகுமானின் குரலும் நல்லாருக்குது அதை ஏன் குறிப்பிட வில்லை ... மற்றையபடி எல்லாபாடல்களும் முதல் ரகம்...
நீங்க போட்டிருக்கிற அந்த கவிதை கூடத்தான்...
இசைப்புயல் என்னையும் ஏமாற்றிவிடவில்லை. என்னைக் கவர்ந்தவை அரிமா அரிமா மற்றும் கிளி மாஞ்சாரோ. கவிதை - யதார்த்தம்
எந்திரன் - பட்டை
மத்திய கல்லூரி - வாழ்த்துக்கள்
ஜனநாயகம் - சமூகத்தின் மீதான சரியான பார்வை
காட்சிப்பிழை - நிதர்சனம் (ஏற்கனவே பார்த்திருக்கிறேன்)
காக்க காக்க - செம ஹிட்
சர்தார்ஜி - முடியல
மொத்தத்தில் கலக்கல் தல!
எந்திரன் - பாடல்கள் இன்னமும் கேட்கவில்லை!!!
யாழ் மத்திய கல்லூரி - வாழ்த்துக்கள்!!!
கவிதை - ரசித்தேன்
பாடல்- எப்போதும் எனக்கு பிடித்த ஹிட்களில் ஒன்று
நகைச்சுவை - ரொம்ப ரொம்பவே ரசித்தேன்!!!
எந்திரன் பாடல்களை தொடர்ந்து கேட்டு வருகிறேன், ரஹ்மான் பாடல்கள் கேட்க கேட்கவே இனிக்கும்
/////ஷர்தாஜி ஜோக்
மும்பையில் உள்ள வங்கி ஒன்றில் தனக்கு சேமிப்பு கணக்கு ஒன்றை அரம்பிப்பதற்காக சென்ற ஷர்தாஜி வங்கியால் வழங்கப்பட்ட விண்ணப்பப்படிவத்தை நிரப்ப ஆயத்தமாகி விட்டு உடனடியாக டில்லிக்குபோய் அங்கிருந்து நிரப்பிக்கொண்டு மீண்டும் வந்தார் ஏன் தெரியுமா? அந்த விண்ணப்பப்படிவத்தில் இருந்தது இப்படி
" FILL UP IN CAPITAL "./////
சர்தாஜிக்களை வைத்து கிண்டல் பண்ணுவதில் எவ்வளவு சந்தோசம் உங்களுக்கு! சர்தாஜிக்களில் அநேகர் 1987களின் இறுதியிருந்து 1990களின் நடுப்பகுதி வரை ஆடிய ஆட்டம் தெரியும் தானே!!
@Pradeep
நன்றி மருத்துவர் அண்ணா.
ஆம். காலையில் ஆராதனையும், மாலையில் சென்றலைட்ஸ், ஜொலிஸ்ரார்ஸ் (யாழ் இந்து பழையமாணவர் அணி) இறுதிப்போட்டி நடைபெற்றது. இதில் ஜொலிஸ்ரார்ஸ் அணி வெற்றி பெற்றது என்பது மேலதிக தகவல்.
ஆம் அவரது சகோதரர்தான் அந்த பதிவர். தாங்களும், கிருஸ்ணகுமார் அண்ணாவும் கல்லூரி மாணவர் முதல்வர்களாக இருந்தது நினைவில் உள்ளது. நீங்கள் சொன்ன மூன்றாவது நபர் யாழ்ப்பாணம் இந்து கல்லூரி அல்லவா?
@டிலான்
நன்றி டிலான்.
அன்பான ஒரு வேண்டுகோள். பல இலங்கைப்பதிவர்கள் உங்களின் இரசிகர்கள் என்று தெரிந்துகொண்டேன். அவர்களின் தளங்களுக்கும் சென்று கருத்துக்களை பகிர்ந்து கொண்டு அவர்களுடனும் நண்பர்கள் ஆகிக்கொள்ளுங்கள்.
@Cool Boy
நன்றி குளிர் பையா..அது சரி என்னத்திற்கு கண்டனங்கள் என்று சொல்லுங்களேன்.
@சயந்தன்
நன்றி சயந்தன். அதே..
@Balavasakan
நன்றி வாசகன். உன்னிப்பா கேட்கத்தொடங்கிவிட்டீங்க போல...
@Subankan
நன்றி சுபாங்கன்...
ம்ம்ம்...கிளிமஞ்சாரோவும் நல்லாத்தான் இருக்கு... கிளிமஞ்சாரோ ஒரு மலை! ஆபிரிக்காவில் இருக்கு என்று நினைக்கிறேன் சரியா?
@KANA VARO
வாங்க வரோ..
கிட்டத்தட்ட ஒரு மாத இடைவெளியின் பின்னர் பதிவுலகத்திற்கு பாயசத்துடன் வந்திருக்கின்றீங்க. மிக இனிப்பான செய்தி.
தொடர்ந்தும் பல ஆக்கபூர்வமான பதிவுகளை உங்களிடமிருந்து எதிர் பார்க்கின்றேன்.
நன்றி
@Anuthinan
நன்றி அனுதினன்
உங்களுக்கு அந்தப்பாடல் கண்டிப்பாக பிடிக்கும் என்று எனக்கு தெரியும்.
:)
@யோ வொய்ஸ் (யோகா)
அதே தான் யோகா.
@மருதமூரான்.
ஆஹா... நீங்கள் அங்க போய்டீங்களா மருதமூரான்.
ம்ம்ம்...அதுவும் சரிதான். அந்த கூத்துக்கள் பற்றித்தான் நான் "இலைதுளிர் காலத்து உதிர்வுகள்" என்ற தலைப்பில் தொடராக எழுதத்தொடங்கினேன் பின்னர் விட்டுவிட்டேன். ஆனால் கண்டிப்பாக எழுதவேண்டும்.
Post a Comment