ஓவ்வொரு ஆணின் வெற்றிகளுக்கு பின்னாலும் ஒரு பெண் இருக்கின்றாள், அதாவது அவனின் வாழ்க்கைத்துணைநலமான மனைவி இருக்கின்றாள், அவனது இன்பங்களிலும், துன்பங்களிலும் ஒன்றாக பங்கேற்று, அவன் துவண்டு விழும்போது தன் தோழ்களில் தாங்கி, அவனை தேற்றி, அவனது வெற்றிகளில், உலகமே அவனைப்பாராட்டும்போது ஓதோ ஒரு மூலையில் இருந்து விழிகளில் வழியும் தனது ஆனந்தக்கண்ணீரால், கணவன் அந்த நிலையினை அடைவதற்காக பட்ட கஸ்டங்களை எல்லாம் நினைத்து பார்க்கின்றாள்.
என்றெல்லாம் நாம் படித்திருக்கின்றோம், அனுபவித்திருக்கின்றோம், கேள்விப்பட்டும் இருக்கின்றோம்.
தமிழை பொறுத்தவரையில் “ஈன்றபொழுதில் பெருதுவக்கும்” என்று தாயினையும், தந்தை மகற்காற்றும்” என தந்தை பற்றியுமே அவன் சான்றோன் ஆனால் அவர்களின் உவப்பினை சொல்லப்பட்டிருக்கின்றது. ஆனால் எங்கிருந்தோ தனது இரத்த சொந்தங்கள் அத்தனையினையும் விட்டுவிட்டு, தாய் 10 மாதம் சுமந்த அவனை, தனது நெஞ்சில் ஆயுள் முழுவதும் சுமக்கும் மனைவி பற்றி பெரிதாக யாரும் சொன்னதாக இல்லை.
எமனுடன் வாதிட்டு தனது கணவன் சந்தியவானை மீட்ட சாவித்திரியுடன் அது சரியாகிவிட்டது.
சரி, இன்றைய நிலையில், ஒரு ஆணின் வெற்றிக்கு பின்னால் அவனது மனைவி எப்படி இருக்கின்றாள் என்பது பற்றி சிறிது அலசுவோம்.
பொதுவாக இன்றைய நிலையை எடுத்துக்கொண்டால், கணவன் மனைவி இருவருமே வேலைக்கு செல்பவர்களாகவே இருக்கின்றனர். இந்த நிலையில், இருவருமே சந்தித்துக்கொள்ளும் நேரங்கள் வெகுவாக குறைந்துவிட்டன என்பதே உண்மை. முன்னைய காலங்களில், சிறு குழந்தைகள், தாத்தா, பாட்டி, பெரியம்மா, பெரியப்பா, சித்தப்பா, சித்தி, மாமா, மாமி, அத்தை, மாமா, என ஒரு உறவு வட்டத்தினுள் இருந்து வழர்ந்தன. ஆனால் பாவம், இன்று அந்தப்பிள்ளைகள் தமது தாய் தந்தையரையே சந்திப்பது இரவாகத்தான் இருக்கும். காரணம் இன்றைய உலகமயமாதலின் விளைவு. இதனால்த்தான் பேசாத உறவுகள் பக்கத்தில் இல்லாததனால், குழந்தைகளுக்காக கார்ட்ரூன் சனல்களில், மிருகங்கள் அவர்களுடன் பேசுகின்றனவோ என்னமோ?
சரி, விடயத்திற்கு வருவோம், இன்று முன்னர்போல அல்ல, போட்டிகள் நிறைந்த உலகமாக இது இருக்கின்றது. எனவே பாரிய வேலைச்சுமையுடன் வீடுவரும் கணவனுக்கு மனைவி ஆறுதலாக இருக்கவேண்டும். ஆனால் இன்று மனைவியும் தொழிலுக்கு செல்வதனால் அவளும் பெரும் மன அளுத்தத்துடனே வீட்டுக்குவருபவளாக இருப்பாள். பணிமனையிலும், மனஅழுத்தம், வேலைப்பழு, வீட்டிற்கு வந்தாலும் நின்மதி இல்லை என்றால் அந்த ஆணினால் சாதிக்கமுடியுமா?
பெரும்பாலும் வேலைப்பழு அதன்மூலமான மன ஆழுத்தத்தினால் ஆத்திரமும், எரிச்சலும் தன்னை அறியாமலே அவர்களுக்குள் குடிகொண்டுவிடும். இந்தச்சூழ்நிலைகளிலேயே கணவன் மனைவியரிடம் ஒரு சிறு பிரச்சினைகூட பூதாகரமாக வெடித்துவிடும். இவ்வாறான சூழ்நிலைகளே இன்று பெரும்பாலாக நடப்பதை நாம் அவதானிக்கலாம்.
“ஓவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னாலும் ஒரு பெண இருக்கின்றாள், இவர் ஒன்றும் பெரிதாக சொல்லும்படியான வெற்றியாளர் அல்ல! என்று சொல்லிக்கொண்டு” என்று ஒரு நகைச்சுவையினை அண்மையில் படிக்கக்கிடைத்தது. அது நகைச்சுவையாக மட்டும் அன்றி சிந்திக்கவைத்தது.
காரணம் ஒரு ஆணின் சகலத்துக்கும் உரிமையானவள், அவனது மனைவியே, கண்டிப்பாக, வெளியில் கணவன் பற்றி தெரியாத பல விடயங்கள் அவனின் மனைவிக்கு தெரியவரும். வெளியில் சண்டியர்களாக இருக்கும் பலர் தமது மனைவிக்கு பயந்தவர்களாகவே இருப்பர்.
ஒருவனிடம் இன்றைய நிலையில் அவனது மனைவி எதிர்பார்ப்பது, தனக்கு கணவனால் வழங்கப்படும் ஒரு கௌரவம், தனக்காக அவன் ஒதுக்கும் நேரம், அன்பான பேச்சு இவை மட்டுமே. ஆனால் இவற்றை கொடுப்பதற்குக்கூட இன்றைய உலக கணவன்மார்களால் இயலாமல் உள்ளது.
ஓவ்வொரு அணின் வெற்றிக்கு பின்னாலும் ஒரு பெண் உள்ளால் என்று அவளை சிறப்பிப்பது. அவனது துறையில் அவளுடைய பங்கும் உள்ளது என்பதல்ல. சிறந்த ஒரு இல்லாளாக இருந்து கணவனை அனுசரித்து, அவனை முழுமையாக புரிந்துகொண்டு, அவனுக்கு வீட்டிலோ குடும்பத்திலோ எந்தப்பிரச்சினைகளும் வராது, வீட்டின் நிர்வாகத்தை தான் கவனித்து வீடும் வரும் கணவனுக்கு ஆறுதலை அளித்தாள் என்றால் அவள் கண்டிப்பாக அவளது கணவனின் வெற்றியில் பெரும் பங்கு எடுத்துக்கொள்கின்றாள் என்றே கூறமுடியும். நிச்சயமாக அவளது கணவன் வெற்றிபெறுவான். மாறாக எதிரும் புதிருமாக இருந்தால் நிலைமைகள் தலைகீழாவே மாறும்.
உதாரமாக இன்றைய வெற்றியாளர்கள் என்று நீங்கள், கருதும் நபர்களையும் அவர்களது மனைவிகளையும் உற்றுப்பாருங்கள், அவர்களிடம் எவ்வளவு, அந்நியோன்னியம், புரிந்துணர்வுகள் இருக்கும் என்பதை புரிந்துகொள்ளமுடியும்.
இவ்வாறான மனைவியரே தனது கணவனின் வெற்றிப்பாதைகளில் இருக்கும் முட்களை அகற்றி, அவனின் முன்னேறத்திற்கு பின்னால் நிற்கின்றனர்.
வெற்றிபெற்று பெரியமனிதர்கள் ஆகிவிட்டாலும், உலகின் கண்கள் முழுவதும் அவர்களை உற்றுநோக்கினாலும், எங்கு சென்றபோதிலும், போன அலுவல்களை உடனடியாக முடித்துக்கொண்டு தமது மனைவியை நாடி எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் ஓடிவந்துவிடுவார்கள். உதாரணங்கள் நிறைய பிரபலங்களைச் சொல்லலாம். அதற்காக அவர்களை பொண்டாட்டி தாசர்கள் என்று நினைத்துவிடக்கூடாது, அவர்கள் வாழ்க்கையின் அர்தத்தையும் வாழ்வியலையும், தூய்மையான அன்பையும் புரிந்துகொண்டவர்கள் என்பதே அதன் அர்த்தம்.
குறிப்பு இது ஒரு மீள்பதிவு. இன்னும் இந்தப்பதிவை வாசிக்காத என் மனைவிக்கும். இப்போது புதிதாக காதல் தேசத்திற்குள் நுளைந்து அசேலம் கேட்டுக்கொண்டிருக்கும் பதிவுலக நண்பர்கள் இருவருக்கும் இந்த மீள் பதிவு சமர்ப்பணம்"
20 comments:
இந்த பதிவை ஒரு தடவை பாருங்கோ கௌஷல்யா அக்கா. அப்புறம் காதல் தேசத்தில் அசேலம் கோரியுள்ள பதிவர்கள் இரண்டுபேர் யார்?
“ஓவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னாலும் ஒரு பெண இருக்கின்றாள், இவர் ஒன்றும் பெரிதாக சொல்லும்படியான வெற்றியாளர் அல்ல! என்று சொல்லிக்கொண்டு”
ரசித்தேன் ஜனா.
அருமையாய் எழுதியிருக்கிறீர்கள் ஜனா என்ன எனக்குப் பரிச்சயமற்ற விடயம் அதனால் கருத்து சொல்ல இயலவில்லை
ஓ..அவங்களா... ஆனாலும் too early
ஜனா,
அனுபவத்தை வெற்றிகரமாகச் சொல்லியிருக்கிறீர்கள் பொஸ்.
கணவனும், மனைவியும் அன்னியோன்னியமாக இருக்கின்ற குடும்பங்களில் மகிழ்வும், நேர்த்தியும் இருப்பதையும் கண்டிருக்கிறேன். ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும் ஏதோவொரு விதத்தில் ஒரு பெண் (அது, தாயா, சகோதரியா, தாரமா, தோழியா, காதலியா என்று அவரவர் நிலைமைகளைப் பொறுத்தது) இருப்பதாகவே நானும் நம்புகிறேன்.
அண்மைக்காலத்தில் அன்னியோன்னியமாக இருக்கின்ற பிரபல கணவன் மனைவி என்றால் ஓபாமாவும், மிச்சலுமே நினைவுக்கு வருகிறார்கள். ரஜினி-லாதாவின் படம் அருமை.
உண்மைதான். ஒவ்வொரு ஆணின் வெற்றிகளின் பின்னால் ஒரு பெண் இருக்கின்றாள். ஆவதும் பெண்ணாலே மனிதன் அழிவதும் பெண்ணாலேதானே!!
உண்மை தான் ஜனா அண்ணா.... என் வெற்றிகளுக்குப்பின்னாலும் ஒரு பெண் இருந்தாள்... இருக்கிறாள்... இருப்பாள்... வேறு யாருமில்லை என் அம்மாவாக இருக்கும் என் அக்கா..
நல்ல ஆக்கம் ஒன்று தேடிப்படிக்கும் சிரமம் தராமல் நீங்களே தந்திட்டிங்க.. முக்கியம் ஒண்னு... காதல் தோல்வி தான் ஒரு மனிதனின் வளர்ச்சிக்கு முதலாவது தூண்டு கோல்... அதற்குள் மாட்டாதவன் இருக்கவே முடியாது. கோழைகள் ஒதுங்கிக் கொள்ள. வீரர்கள் முன்னேறுகிறார்கள்... வாழ்த்துக்கள்..
எனது தாய் பல விதங்களில் உறுதுணையாக இருந்திருக்கிறார். மனைவி/ காதலிக்கான வெற்றிடங்கள் நிரப்பப்படாமலேயே இருக்கிறது. அதனால் ஆழ ஆராய்ந்து கருத்துச்சொல்ல முடியாது
//இது ஒரு மீள்பதிவு. இன்னும் இந்தப்பதிவை வாசிக்காத என் மனைவிக்கும். இப்போது புதிதாக காதல் தேசத்திற்குள் நுளைந்து அசேலம் கேட்டுக்கொண்டிருக்கும் பதிவுலக நண்பர்கள் இருவருக்கும் இந்த மீள் பதிவு சமர்ப்பணம்"//
;)
@டிலான்
நன்றி டிலான். ஓ அவர்களா? மலியும் அதன்பிறகு சந்தைக்குவரும்.
@ Pradeep
நன்றி அண்ணா.
@தர்ஷன்
பரீட்சையம் இல்லையா??? ம்ம்ம்.. நீங்களுமா? ம்ம்ம் நம்புறம். சீக்கரமே விவாக பிரசித்தம் அஸ்து!!
@Balavasakan
இதற்கு என்ன மறுமொழி கூறுவதென்று எனக்கு தெரியலையே வாசகன்.
@மருதமூரான்.
அண்மைக்காலமாக ஒபாமா - மிச்செல், ரஜினி -லதா, இவர்களை விஞ்சும் அளவுக்கு ஒரு ஜோடி சமூக தளங்களில் பிரபல்யமாகிவருவதாக செய்தி.
உங்களுக்கு தெரியுமா மருதம்ஸ்
@Dileep
நன்றி டிலீப் அது பாரதிராஜாவின் புதுமைப்பெண் திரைப்படத்தில் வந்த பாடல் இல்லையா?
@ம.தி.சுதா
நன்றி சுதா.
அடடா..நீங்க அபாராமாக முன்னேறுகின்றீர்கள் சுதா!!
@Subankan
மனைவி/ காதலிக்கான வெற்றிடங்கள் நிரப்பப்படாமலேயே இருக்கிறது.
ரைட்டு..7
ஜனா அண்ணா ! முதலில் மனைவியுடன் நண்பர்களுடன் இருப்பதை போல மனையுடன் இருக்க கற்றுக்கொண்டால் தான் கணவனை பற்றி முழுமையாக புரிந்து கொள்ளமுடியும்.நண்பர்களுடன் பேசும்,பழகும் விடையங்களை பகிர்ந்து கொள்ள வேண்டும்.அப்பதான் கணவனின் விருப்பு வெறுப்புகளை அறிந்து கொள்ள முடியும்.ஓவ்வொரு ஆணின் வெற்றிகளுக்கு பின்னாலும் ஒரு பெண் இருக்க முடியும்.
நான் சின்னப்பையன்கிறதால... இத வருங்காலத்தில பின்பற்றிக்கிறேன்..
பதிவு அருமை..
:-)
@சயந்தன்
நன்றி சயந்தன். மிக அழகான கருத்து ஒன்றை கூறியுள்ளீர்கள்.
@ Cool Boy கிருத்திகன்
பின்ன...சம்சாரிகளுக்குத்தான் இந்த பதிவு என்று நினைத்தீர்களா? குறிப்பாக உங்களைப்போன்ற சின்ன பையனுகளுக்குத்தான் இந்தப்பதிவே கூல்..
Post a Comment