பொதுவாக எழுத்தாளர் சாரு நிவேதிதா என்றாலே பலபேருக்கும் பல பல நினைவுகள் வந்துவிடுவது என்னமோ மறுக்கமுடியாத உண்மைகள்தான்.
அவரது எழுத்துக்களை விமர்சிப்பவர்கள் கூட அவர் ஏதாவது எழுதினால் வந்து எட்டிப்பார்த்துகொண்டுதான் இருக்கின்றார்கள் என்பது உண்மையே.
இதற்கிடையில் நிர்வாணம், பச்சை, டாய்ஸ்மார்க், விரசம் என்ற அடைமொழிகளையும் சேர்த்து எழுத்தாளர் என பலர் அவரை நேரடியாகவே விமர்சனம் செய்வதையும் பார்த்திருக்கின்றேன். இத்தனையும் ஏன் சாருவின் எந்த நூலைக்கூட படிக்காதவர்களே அவரை விமர்சனம் செய்ததையும் கண்டு எனக்குள் சிரித்திருக்கின்றேன்.
என்னைப்பொறுத்தவரை பல இடங்களில் கொஞ்சம் ரூ மச்தான் என்று சொல்லியும், அவரின் சில கட்டுரைகளை படித்து அடடா நம்மாளு இப்படியும் எழுதியுள்ளாரே என வியந்தவைகளும் உண்டு.
பொதுவாக சாரு எழுதும் அரசியல் கட்டுரைகளை முற்றிலும் உடன்படாது விட்டாலும் வியந்திருக்கின்றேன். அதிகாரம், அமைதி, சுதந்திரம் அதற்கு ஒரு உதாரணம். அவரை இரண்டுதடவை சந்தித்திருக்கின்றேன்.
அவருக்கு மின் அஞ்சல் ஒன்று அனுப்பிவிட்டு, வந்தபோது இரண்டாவது நிமிடத்திலேயே அழைப்பெடுத்து என்னை திகைக்கவைத்து சந்திக்க வரச்சொன்னவர் அவர்.
தற்போது ஆனந்த விகடனின் அவர் தொடராக எழுதிவரும் “மனம் கொத்திப் பறவை” சில விமர்சனங்கள் இருந்தாலும் எனக்கு பிடித்துள்ளது.
பலவிடங்கள் பற்றியும் சிலாகித்துவருகின்றார் மனுசன்.
“மாட்டின் வயிற்றில் இருக்கும் மூன்றோ அல்லது நான்கு மாத கன்று குட்டியை மாட்டின் வயிற்றில் இருந்து அறுத்துஎடுத்து அதில் உப்பும் இன்ன பிறவும் அப்படியே முழுசாக பர்பிக்சியூப் ஸ்ரைலில்…” வேற்று நாட்டுக்காரர்களின் உணவு வகைகளை சொல்லுகின்றார் சாரு. செக்ஸை மட்டுமா? சாப்பாட்டைக்கூட அருவருக்கத்தக்க வகையில எழுதுறாரே நம்ம ஆளு!!
கடந்தவார தொடரிலே ஹிட்டலர் தனது நாஜி பிரசாரத்திற்காக சினிமாவை பயன்படுத்தியதாக குறிப்பிட்டு, “Triumph of the will” என்ற திரைப்படத்தை குறிப்பட்டிருந்தார். மிக அருமையான தகவல் தேடிப்பிடித்து ஒரு பெரியவரிடம் வீடியோ கொப்பியாக இருந்த அதை தூசி தட்டி, இத்துறையில் உள்ள நண்பனிடம் கொடுத்து அதை தெளிவாக்கி அவனது வீடியோ கொப்பி டெக்கிலே பார்த்தேன். உண்மையில் பிரமித்துப்போனேன்.
மனம் கொத்தி பறவை மனதிற்குள் புகுந்துவிட்டது.
ஒரு விசியத்தை கவனித்தீர்களா?
2008, 2009 கால கட்டங்களில் ஆளுக்காள் மாறி மாறி 2011 இல் நாங்கள்தான் ஆட்சி, நான்தான் முதல்வர் என்ற ரேஞ்சுக்கு ஆளாளுக்கு பேசி வந்தார்கள்.
2011 இல் நான்தான் சி.எம். என்று ஆளாளுக்கு காமடி பண்ணிட்டு இருந்தவங்க எல்லாம் அட 2011 கிட்ட நெருங்கிவிட்ட இந்தவேளையில் மூச்சு சத்தமே கேட்காமல் இருக்கிறார்களே!!
இப்போ அரசியல் பண்ணுராங்களா? அல்லது இப்போதுதான் அரசியவேலே புரிய ஆரம்பிச்சிருக்கா??
நல்லூர் பெரும் திருவிழா.
யாழ்ப்பாணத்தில் பிரசித்திபெற்ற நல்லூர் கந்தசுhமி கோவில் பெரும் திருவிழா ஆரம்பமாகி இன்று 22 நாட்கள் ஆகிவிட்டன. திருவிழா வழமைபேலவே இடம்பெற்றுவருகின்றது. இம்முறை போக்குவரத்து சிக்கல்கள் இல்லாத காரணத்தினால் கோவிலுக்கு வரும் மக்களின் தொகை முன்னரைவிடக் கூடியுள்ளது என்பது உண்மை.
அதேவேளை ஆலய சூழல்களில் முன்னைய நாட்களில் பிரசங்கங்கள், கர்னாடக சங்கீதக்கச்சேரிகள், கலைவிழாக்கள், வினோத நிகழ்வுகள் என்பன நடக்கும் அங்கெல்லாம் பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடியிருப்பார்கள்.
இப்போதும் பிரசங்கம், கர்னாடக சங்கீத கச்சேரிகள் என்பன நடக்கின்றதுதான் ஆனால் பொறுமையாக இருந்து அவற்றை கேட்கும் மக்கட்கூட்டம் இன்று காணமற்போய்விட்டது. பெரும்பாலான மக்கள் சுவாமி வெளிவீதி வலம்வந்து கோவிலின் உள்ளே சென்றவுடனேயே வீட்டுக்கு திரும்பிவிடுகின்றார்கள்.
ஆக மிஞ்சி மிஞ்சிப்போனால் ஐஸ்கிரீம் கொட்டகைகளில் கூடுகின்றார்கள். முன்னர் நிகழ்வுகளை இரசித்த ஒரு சமுதாயம் இன்று அதில் இரசிப்பு காட்டாத தன்மை என்னெவென்று சரியாக புரியவில்லை.
ஓன்று மன விரக்தி, அல்லது கேபிள் ரி.விகளின் ஈர்ப்பு!!
அம்மா...அன்பு
சொந்த வேரோடு தான்கொண்ட காதலினை
நீண்டநாட்களின் பின்னர் பூ திரைப்படம் சலனமே இல்லாமல் என் இதயத்தில் கல்லெறிந்துவிட்டுப்போன ஒரு அற்புதமான திரைப்படம்.
ஓவ்வொரு மென்மையான மெல்லிய உணர்வுகளையும் கோர்த்து கட்டி சசி இந்தப்பூவை தந்திருந்தார். திரைப்படம் தொடங்கியதுமுதலே கண்களின் ஓரம் ஈரத்துடன், முடியும்வரை பார்த்த அற்புதமான திரைப்படம்.
குறிப்பாக இந்த திரைப்படம் பற்றி கூறியவர்கள் பலர் சொல்லமறந்த கதை எஸ்.எஸ்.குமரனைப்பற்றியது. பின்னணி இசையில் பின்னி எடுத்திருப்பார் குமரன்.
இந்த திரைப்படத்தில் எனக்கு பித்த பாடல் “ஆவாரம்பூ அந்நாளில் இருந்தே என்ற சின்மயின் சிலித்த குரலில் ஒலிக்கும்பாடல்.
ஒருமுறை ஆறுதலாக இருந்து பார்த்து, கேட்டுப்பாருங்கள்.
இந்தப்பாடற் காட்சியில் அவளது குழந்தைக்காலத்து நினைவுகள் வருகின்றன.
அவளது அண்ணன் ஜெட் விமானம் புகையினை கோடாக விட்டுப்போவதை இவளுக்கு காட்டுகின்றான். இவளோ தனது மனம் கவர்ந்தவனிடம் ஓடுகின்றாள். அதை அவனுக்கு காட்டுகின்றாள். அங்கே அந்த விமானத்தின் கோட்டினை தான் இரசிக்காமல் அவன் அதை இரசிப்பதைப்பார்த்து இவள் இரசிக்கின்றாள். எவ்வளவு ஒரு அழகான மனதை நனைக்கும் காட்சி…
அடடா…அற்புதம்.
தமிழ் திரைப்பட இயக்குனர்களே சலீம் கோஷை கவனியுங்கள்.
தமிழ்த்திரைப்படங்களில் இப்போது வில்லன் நடிகர்களுக்கான தெரிவுகள் பெரும்பாலும் பிழையானதாகவே உள்ளன.
ரகுவரன், பிரகாஷ்ராஜ், நாசர், ஆகியோரின் தரத்தில் தற்போது எந்த வில்லநடிகரும் தரமானவராக அறிமுகமாகவில்லை என்பது பெரிய குறையாகவே உள்ளது.
ரகுவரன் தனது வித்தியாசமான நடிப்பின்மூலம், அதிலும் பலரையும் கவர்ந்து இரசிக்கும் தனமான நடிப்பின்மூலம் கொடி நாட்டிப்போனவர்.
அதே போல பிரகாஷ்ராஜ், நாசர் என்பவர்களும் பல திறமைகளையும், நடிப்பாற்றலையும் தம்மகத்தே கொண்டுள்ளனர்.
இவர்களைப்போலவே தமிழ் இயக்குனர்கள் பெரிதும் கண்டுகொள்ளாமல் விட்ட திறமையான ஒரு நடிகர் சலீம் கோஷ்.
வித்தியாசமான ஒரு நடிப்பு, அழகான குரல், பயமுறுத்தும் நடிப்பு, பாவங்களை மாற்றும் கண்கள் என புகுந்துவிளையாடுபவர் சலீம் கோஷ்.
வேற்றிவிழாவில் அந்த ஜிந்தாவை யாரும் அவ்வளவு சிக்கிரமாக மறந்துவிடுவார்களா என்ன? தர்மசீலன், சின்னகவுண்டர், திருடா திருடா, சீமான், ரெட், சாணக்கியா, இறுதியாக வேட்டைக்காரன் ஆகிய தமிழ்த்திரைப்படங்களில் நடித்துள்ளார். சென்னைக்காரராக இருந்தாலும் தற்போது மும்பைவாசியாக இந்தி படங்களில் நடித்துவருகின்றார் இவர்.
தான் நடிக்கும் ஒவ்வொரு திரைப்படங்களிலுமே ஒரு முத்திரையினை இட்டுச்செல்லும் சலீம் கோஷை தமிழ் இயக்குனர்கள் அடிக்கடி மறந்துவிடுவதுதான் ஏன் என்று தெரியவில்லை!!!
“வேதநாயகம் என்றால் பயம்” என்று பயப்படுகின்றார்களோ???
சின்ன அலைகளும் சுனாமியும்.
முகில்களுக்கு பின்னால்
மழை..
கரைகளுக்கு பின்னால்
அலை..
வலைகளுக்கு பின்னால் -இவன்
வாழ்க்கை!
மென்மைகளே
வன்மைகளை ஆளும்
விநோதம்!
சூரியனாக விரும்பும்
கண்களை -வெறும்
சிலந்தி வலைகளால் கட்டாதீர்!
அறியாமை;
"அமைதியை"
அடங்குதல் என
அர்த்தம் கொள்ளும்- விளைவு
இந்த சின்ன அலைகளே..
பின்னர்
சுனாமிகள் ஆகி விடுகின்றன!!
(நண்பர் மயூரனின் கவிதை ஒன்று)
சர்தாஜி ஜோக்.
நம்ம ஷர்தாஜி பன்டாசிங்கும் அவரது “ஹசின்” ஷன்டாசிங்கும் ஓய்வுநேரங்களில் ஏரியில் மீன்பிடித்து பொழுதைக்கழிப்பது வழக்கம். அப்படி ஒரு மாலையில் இருவரும் ஒரு படகை வாடகைக்கு எடுத்துப்போய் மீன்பிடித்தனர். அன்று என்ன மாயமோ தெரியவில்லை வகை தொகையான மீன்கள் அவர்களிடம் பிடிபட்டன. உடனே நம்ம ஷர்தாஜி ஷன்டாசிங்கிடம்இ
நான் நினைக்கின்றேன் மீன்களின் பஜார் இந்த இடம்தான் போல அதுதான் இங்க எக்கச்சக்கமான மீன்கள் பிடிபடுகின்றன…எனவே இந்த இடத்தை குறித்து அடையாளம் ஏதாவது வைத்துவிட்டுவா என்றார்.
அடுத்தநாளும் அவாவுடன் இருவரும் படகில் ஏறி ஏரியின் நடுப்பகுதிக்கு வந்தனர்…நம்ம ஷர்தாஜி கேட்டார்…எலே…நேற்று நான் மீன்களின் பஜார் உள்ள இடத்தை அடையாளப்படுத்த சொன்னேனே? எங்கே அடையாளத்தை காணவில்லை எனக்கேட்டார்…அதற்கு ஷன்டாசிங்….படகின் அடியில் “+” என அடையாளம் வைத்திருந்தேன் பார் என்றார்….அதற்கு நம்ம ஷர்தாஜி…
அடே முட்டாளே…நாம் இன்று வேறு படகில் அல்லவா வந்திருக்கின்றோம் என்றார்.
16 comments:
//ஓன்று மன விரக்தி, அல்லது கேபிள் ரி.விகளின் ஈர்ப்பு!!
//
இதற்குள் மனவிரக்தி எப்படி வருகிறது? சுவாமி வெளிவீதி உலா முடிந்தபின்னர் பின் வீதியில் முன்னரைவிட கூட்டம் அதிகமென்பேன் நான் :)
ஹெக்ரெயில் அருமை. மனம் கவ்வி விட்டது.
சாருவை சந்தித்த அனுபவங்களை பதிவாய் இடலாமே.
பூ பாடல் மனதை ஆழமாய் கிளறிவிட்டது. சசிக்குள் அப்படி ஒரு பட்டிக்காட்டான் இருப்பான் என பூ படம் பார்க்கும் வரை நினைத்ததேயில்லை.
சலீம் கௌஸ் ஜிந்தா தவிர வேறு எந்தப் பாத்திரமும் என்னை அவ்வளாவாய் கவரவில்லை.
மொத்தத்தில் அருமை
GOOD..
அண்ணை. மனம் கொத்துபவரை நானும் தாங்களும் ஒருமுறை சென்னை புத்தக கண்காட்சியில் கண்டு நீண்டநேரம் கதைத்தது நினைவில் உள்ளது.
பூ அப்படி ஒரு படம் இனிவராது அண்ணை. பாடல் மனதை வருடுது.
2011 முதல்வர் கனவுகள் தகர்ந்ததனால்த்தான் பலர் இப்போதும் மௌனம்
கனபேரின் நினைப்பு கோபாலபுரத்தில் அதற்குள் இழவு நடந்துவிடும் என்பதாகவே இருந்தது. ஆனால் ஐயன் படு ஸ்ராங். அதுதான் இந்த மௌனம்.
நல்லூர் எங்கிருந்தாலும் நினைவுகள் அங்கே.
அன்னை தெரேசா. தாங்கள் எழுதியுள்ளதுபோல அம்மா..அன்பு இரண்டு சொற்களே பலவற்றை சொல்லிவிட்டது.
நம்மட வேதநாயகம் நானும் கவனித்திருக்கின்றேன். இன்றுதான் அவரின் பெயரே தெரிந்தது. சிறந்த நடிகன்.
மயூரனின் கவிதை அருமை. சர்தாஜி சிரித்தேன்.
ஞாயிறு வாரப்பத்திரிகையை எதிர் பார்ப்பதை விட ஹெக்ரெயிலை எதிர் பார்ப்பது தான் அதிகம் ஆனால் என்ன ஒன்று கட்டாயம் வருகிறது... மற்றது.... பரவாயில்லை அண்ணா சோரவிட்டு அடித்தாலும் சுள்ளிட அடிக்கிறிங்கள்...
ஹொக்ரைல் இந்தமுறை கிக் கூடத்தான். கலவைகள் அபாரம். கலக்கல் ஜனா.
Supper!
: )
@Subankan
நான் அந்தக்கூட்டத்தை குறிப்பிடவில்லை சுபா..அன்றைய பொழுதுகளில் கலைகளை இரசித்த கூட்டத்தை சொல்கின்றேன்.)
@Cable Sankar
நன்றி வாத்தியாரே.. அது சரி தங்கள் ஸ்ரீ லங்கா பயணம் தள்ளிப்போவது மனவருத்தமே.
@தர்ஷன்
நன்றி தர்ஷன். அப்ப உங்களுக்கு வேதநாயகத்தை பிடிக்கலையா? பயம் வரலையா?
யோ வொய்ஸ் (யோகா)
Ya.. Thanks
@டிலான்
நன்றி டிலான். ஆம். அந்த நினைவுகள் தற்போதும் உள்ளது. என்னதான் சொன்னாலும் சென்னைக்காலங்கள் காலங்கள்தான் டிலான்.
@ம.தி.சுதா
நன்றி சுதா. உங்களைப்பார்க்க எனக்கு பொறாமையாக இருக்கு.
@Pradeep
நன்றீணா..
@Cool Boy
நெசமாங்களா? நன்றீங்களண்ணா
Post a Comment