Wednesday, June 15, 2011

ஹொக்ரெயில் -15.06.2011

அவலம் விழுங்கிய பூமி..

"வன்னியில் கலாச்சாரம் சீரழிந்து விட்டது என்று ஓலமிடும் சில பத்திரிகைளும், இளம் விதவைத்தாய்மார் பாலியல் தொழிலில் ஈடுபடுவதாக கட்டுரை எழுதும் புத்திஜீவிகளும் அந்த மக்களுக்கு என்ன மசிர புடுங்கீற்று இப்ப எழுதிக்கிழிக்கினம்....?"

என என் நண்பர் ஒருவர் தன் நியாயமான கோபத்தை முகநூலில் இட்டிருந்தார் கனலாக. அவர் குறிப்பிடும் கட்டுரையினை படித்தபோது எனக்கும் அதே ரௌத்திரமே மனதில் ஏற்பட்டது.
இன்னும் எத்தனை புத்திஜீவிகளுக்கும், கட்டுரை வடிக்கும் மேலோட்ட மேதாவிகளுக்கும் பாடுபொருளாக அந்த குறிப்பிட்ட ஏதிலிகள் ஆக்கப்பட்டமக்கள் இருக்கப்போகின்றார்களோ தெரியாது.
தனது நியாயமான ரௌத்திரக்கனலில்க்கூட அவர் பாலியல்த்தொழில் என்ற மொழிப்பிரயோகத்தையே கையாண்டிருந்தார், ஆனால் அந்த மேதாவியின் வன்னி மக்கள் நிலை சம்பந்தமான கட்டுரையில் விபச்சாரம், விபச்சாரம் என்ற வார்த்தைப்பிரயோகமே அடிக்கடி உபயோகிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
அடுத்தவேளை உணவுக்கு கையேந்தவைக்கப்பட்ட அந்த மக்களின் ஒருவேளை உணவுப்பசினைப்போக்குவதற்கான மார்க்கத்தையோ, அல்லது உபயோகமான தொழில்த்திட்டத்தையோ, எழுதியிருந்தாலாவது அவர்களில் யாராவது ஒருவருக்கு அது பிரயோசனமாகவாவது இருந்திருக்கும். அதை விடுத்து விபவச்சாரம், விபச்சாரம் என்று கூப்பாடு போடுவதால் ஏதும் பலன் உண்டா என்றால் அது மிகப்பெரிய கேள்விக்குறிதான்.

நீண்டநாட்களின் பின்னர் நேற்று முதன்நாள் அந்த அவலம் விழுங்கிய பூமிக்கு செல்ல நேர்ந்தது. எனது பிரமையோ அல்லது மனதில் மறைந்திருக்கும் அவலமோ தெரியாது, மனதுக்குள் அந்த ஒட்டு மொத்த மக்களின் இறுதிநேர உயிர்ப்பய அவலக்குரல்களே ஒலித்துக்கொண்டிருப்பதாக உணர்ந்தேன்.
வாழ்வாதாரமே சிதைக்கப்பட்ட அந்த நிலத்தில், தொழில் புரியும் மக்களில் நூற்றுக்கு 60 வீதமானவர்கள் அங்கவீனர்களாகவும், 90 வீதமானவர்கள் உறவுகளின் உயிர்கள், உடமைகளை இழந்தவர்களாகவுமே இருக்கின்றனர்.
இத்தனை நிலைமைகளிலும் இருண்டுவிட்ட வாழ்வில் சின்ன ஒரு நெருப்புக்குச்சி ஒளியாக மீள தம்முயற்சியால் அவர்கள் உழைத்துவாமுற்படுவது எந்தவொரு உவமான உபமேயங்களுக்கும் அப்பாற்பட்ட விடயமாகும்.
ஆயிரம் கொடிய அனுபவங்கள் மனதில் இருந்தாலும் உடலுக்குள் இருக்கும் உயிருக்காகவும், தப்பி வாழ்ந்துவரும் தம் குழந்தைகளுக்காகவுமே மீண்டும் அவர்கள் வாழ நினைக்கின்றார்கள்.
அவர்கள் உங்களிடம் வந்து ஒருபோதும் கையேந்தப்போவதில்லை, கொஞ்சம் அவர்களை இனியாவது வாழத்தான் விட்டுவிடுங்களேன்.

இன்றைய காட்சி

யாழ்ப்பாணப் பெண்களும் சின்னமருமகளும்.

தொலைக்காட்சி சீரியல்கள் வீடுகளில் உள்ள ஆண்களுக்கு பெரும் தலையிடியான விடயம் இது என்பது ஒருவகையில் உண்மைதான். ஏன் சீரியல்களை தவறவிடாமல் பார்க்கும் ஆண்களும் இப்பொழுது அதிகரித்து வருவதாக அண்மையில் ஒரு தமிழ் சஞ்சிகை நடத்திய கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் யாழ்ப்பாணத்தில் முன்னிரவு 7.30 மணியளவில் சகல தொலைக்காட்சிகளும் நிலைத்து நிற்கும் இடம் ஷீ தமிழ் சனல்தான்.
அதற்கான காரணம் 'சின்ன மருமகள்'.
இந்த விடயத்தில் யாழ்ப்பாண பெண்களிடம் என்னவொரு ஒன்றிப்பு நிலை காணப்படுகின்றது என்று நினைக்கும்போது பெரும் ஆச்சரியமாகவே இருக்கின்றது.
இத்தனைக்கும் ஆயிரம் நேரடித்தமிழ் சீரியல்கள் ஒளிபரப்ப பட்டாலும்கூட மொழிமாற்று சீரியலான 'சின்ன மருமகளில்' வந்திருக்கும் சீரியல்மோகம் அலாதியான ஒரு விடயம்தான்.
அந்த நேரத்தில் இப்போது யாரும் யார் வீடுகளுக்கும் போவதில்லை என்றால்பாருங்களேன்.
இதிலும் என்ன பெரிய ஆச்சரியம் என்றால், பல வீடுகளில் மாமியாரும், பல சின்ன மருமகள்களும் சேர்ந்தே 'சின்னமருமகள்' நாடகம் பார்க்கின்றார்கள்.

இந்தவார வாசிப்பு
ஜென் கதைகள்.

எல்லாத்திரப்பினருக்கும் விரும்பும் கதைகள் ஜென் கதைகள் என்றால் அது மிகைப்பட்ட சொல்லாக இருக்கமுடியாது. வாழ்வியலின் தத்துவங்களை மிக இலகுவானதாகவும், தெளிவாகவும் புரியவைக்கும் தன்மைகள் ஜென் கதைகளில் உண்டு. ஜென் மத குருக்கள், மற்றும் சீடர்களின் வாழ்க்கை, வாழ்க்கையை வாழ்க்கையாகவே வாழ்வதுபோன்றதாக இருக்கும்.
ஜென் வழி எனப்படுவது தெளிவுபடுத்தப்படும் உணர்வு, ஒரு புத்துணர்வு, ஒரு ஊக்கம் மட்டுமே அது எங்கிருந்தும் வருவதில்லை அவை ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் விடையங்கள். அவற்றை ஒருவன் அறிந்து வெளிப்படுத்த உதவுவதே ஜென் என்ற தத்துவமும், நீ வேறு எதுவுமோ அல்ல அதுவே நீ.
நீ... நீயாகவே முழுமையாக இரு, அதுவே ஞானம் என்ற தத்துவமும், எதை செய்தாலும் அதுவாகவே ஒன்றிப்போ என்ற நடைமுறையும் வாழ்வியலின் யதார்த்தங்கள் தானே.
ஜென் என்பது ஒரு நெறி, அல்லது மதப்பிரிவு என்ற எண்ணத்தை இந்தக்கதைகள் தகர்த்துவிடுகின்றன. அதாவது வாழ்க்கையினை வாழ்கையாக வாழ தலைப்படும் ஒருவனுக்கு ஜென் கதைகள் ஒரு வெளிச்சமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.
ஜென் முறைப்படி ஒழுகியதால்தானோ என்னமோ ஜப்பானியர்கள் இன்று உலகே வியர்ந்து பார்க்கும் அழவுக்கு தொழிற்துறையில் உயர்ந்து நிற்கின்றார்கள்.
குழந்தைகளுடன் சேர்ந்து வாசிக்கவேண்டிய வாழ்வியல் புத்தகம் ஜென் கதைகள்.

இந்தவாரப்புகைப்படம்


மியூசிக் கபே
இராக்காலங்களின் நிஷப்தங்களில், இரவோடு ஒன்றிப்போன இனிய கானங்கள் கேட்பதில் ஒருசுகம் உண்டு. அதிலும் எஸ்.பி.பியின் மென்மையான கானங்கள் இராக்காலங்களின் இசை உணர்வுகளை மென்மையாக வருடிவிடுவதுபோல இருக்கும்.
அந்த வகையில் எப்போதும் இராக்காலங்களின் என் தெரிவாக என் ஐபொட்டில் இருக்கும் பாடல் இது.
லக்ஸ்மிகாந்த் ப்யாரிலாலின் இசையில், உயிரே உனக்காக திரைப்படத்தில் வந்த பல்லவி இல்லாத பல்லவி இந்தப்பாடல்.
இப்போது என் குழந்தையினை தூங்கவைக்கும் நான் பாடும் தாலாட்டாகவும் இருப்பதுவும் இந்தப்பாடலே..
ஒருமுறை அமைதியாக கேட்டுப்பாருங்கள்...

ஜோக் பொக்ஸ்
இன்றைக்கு ஜோக் சொல்லவில்லை இதை கேட்டுப்பாருங்கள்

20 comments:

கார்த்தி said...

எனக்குதான் பியர் போல?

கார்த்தி said...

முக்கியமா இப்ப புதுசா தொடங்கப்பட்ட இலங்கை தமிழ் இணைய தளங்களும் இப்பிடியான எம்மவர்களின் அவலங்களை தங்களது தளங்களின் பிரபலத்துக்காக விபச்சாரம் வேறு வேண்டத்தகாத விடயங்கள் போட்டு சும்மா உசுப்பேத்துகிறார்கள். இவர்களின் நோக்கம் தெரிஞ்ச பிறகு அப்படியான தளங்களிற்கு இப்ப செல்வதே இல்லை!! இப்படியான நாதாரிகளை உலக்கை எடுத்து மண்டையை பிளக்கும் கோபம்தான் எனக்கும் வருது.
எனக்கு Zee Tamilல் அந்த ஆக்களை ஏமாற்றும் பகிடி நிகழ்ச்சியும் TopTen செய்திகளும் பிடிக்கும்!

ம.தி.சுதா said...

/////கட்டுரை எழுதும் புத்திஜீவிகளும் அந்த மக்களுக்கு என்ன மசிர புடுங்கீற்று இப்ப எழுதிக்கிழிக்கினம்....?"/////

அண்ணா அதே கேள்வி தான் எனதும்.. பேனை இருக்கிறது என்பதற்காக கிறுக்குவதும் சிங்களவன் ஒரு தரம் சீரழித்த காட்சியை 100 தரம் செய்வதும் எம் தமிழர் தான்... அப்புறம் தமிழ் , தனி தேசம் , மயிர், மண்ணாங்கட்டி.. சாவுங்கையா நீங்களெல்லாம் ஏன் இருக்கிறிங்கள்..

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
அகவை ஒன்று கடக்கும் மதியோடை (நன்றி உறவுகளே)

Unknown said...

உங்கள் கருத்தே எனதும்...
இவங்கள் போடுறதை பார்க்கவே தாங்க முடியல..
ம்ம் விடுமுறையில் ஹெக்ரெயில்..
வெருட்டிப் பார்த்தும் போட்டிட்டீங்க ஹிஹி
நாமெல்லாம் ஏரியா ரவுடி தெரியும்லே!

Author said...

///வன்னியில் கலாச்சாரம் சீரழிந்து விட்டது என்று ஓலமிடும் சில பத்திரிகைளும், இளம் விதவைத்தாய்மார் பாலியல் தொழிலில் ஈடுபடுவதாக கட்டுரை எழுதும் புத்திஜீவிகளும் அந்த மக்களுக்கு என்ன மசிர புடுங்கீற்று இப்ப எழுதிக்கிழிக்கினம்....?"///

hmmmmmm... true

sinmajan said...

அப்படியான கட்டுரைகளையும், தளங்களையும் பார்த்தால் வெறுப்புத் தான் வருகிறது.
நானும் அப்படியான தளங்களைப் பற்றி ஒரு பதிவு முன்பு இட்டிருந்தேன்.
:(

Unknown said...

nach!

உணவு உலகம் said...

///வன்னியில் கலாச்சாரம் சீரழிந்து விட்டது என்று ஓலமிடும் சில பத்திரிகைளும், இளம் விதவைத்தாய்மார் பாலியல் தொழிலில் ஈடுபடுவதாக கட்டுரை எழுதும் புத்திஜீவிகளும் அந்த மக்களுக்கு என்ன மசிர புடுங்கீற்று இப்ப எழுதிக்கிழிக்கினம்....?"///
கண்டிக்கபட வேண்டிய விஷயம்தான்.

Anonymous said...

யுத்தம் பலருக்கு தீனி போட்டது ,அந்த ஒரு வகையில் தான் இப்படி சில ஊடகங்களும் ஊடகவியலாளர்களும்...

Anonymous said...

சீரியல் மோகம் எனக்கும்முன்னர் இருந்தது, இப்ப துப்பரவாய் இல்லை..)))

Anonymous said...

///ம.தி.சுதா♔ said...

சிங்களவன் ஒரு தரம் சீரழித்த காட்சியை 100 தரம் செய்வதும் எம் தமிழர் தான்... அப்புறம் தமிழ் , தனி தேசம் , மயிர், மண்ணாங்கட்டி.. சாவுங்கையா நீங்களெல்லாம் ஏன் இருக்கிறிங்கள்../// இசை பிரியா படத்தை முகநூளில் வெளியிட்ட ஒருவரிடம் இப்படி தான் கேட்டேன் உடனே சொன்னார் நிர்வாணம் என்பது தவறில்லையாம் ... பாதிக்கப்பட்டது தன் உடன் பிறப்பு என்று நினைப்பவர்கள் இப்படியான காணோளிகள் புகைப்படங்களை மீண்டும் மீண்டும் வெளியிடார்கள்... உரிமை கேட்டு மானத்தை அடகு வைக்கிறார்கள்... என்னென்று சொல்வது ..!!!

சக்தி கல்வி மையம் said...

அசத்தலான பக்கங்கள்..

யோ வொய்ஸ் (யோகா) said...

:)

தனிமரம் said...

மார்க்கம் சொல்லாமல் புறனி பேசுவது பலரின் இயல்பு விமர்சனம் என்ற போர்வையில் பலர் நாகரிகம் இல்லாமல் நடக்கின்றனர். 
மோகனின் இனிய பாடல்களில் இதுவும் ஒன்று 
சின்னத்திரை மோகம் சொல்லி மாளாது!

நிரூபன் said...

என் ப்ளாக் டாஷ் போர்ட்டில் உங்கள் பதிவுகள் தெரியவில்லை,
வந்து பார்த்தேன்,
நிறையப் பதிவுகளைத் தவற விட்டதாக ஒரு குற்ற உணர்ச்சி பொஸ்,..

எல்லாவற்றையும் படித்து கருத்திடுகிறேன்.

நிரூபன் said...

வன்னி மக்கள் வாழ்வு பற்றிய குறிப்புக்கள்; தொடர்ந்தும் பலியாடுகள் ஆக்க முடியாதோரின் ஏமாற்றத்தோடு கூடிய வசவு வார்த்தைகள் தான் அவை... போருக்கு அள்ளிக் கொடுத்த அளவுக்கு மக்கள் வாழ்க்கையினை மேம்படுத்த கிள்ளிக் கூட மனமில்லாத எளிய நாய்களின் குரல்.

இன்றைய காட்சி: பல பேர் சுற்றி வளைத்து அடித்தால் என்ன ஆகும் என்பதனையும்,
தனித்து நிற்கும் ஒருவனின் வீரத்தினையும் விளக்குகிறது.

சின்ன மருமகள்: இந்தத் தொடர் நாடகங்களால் தீமையிருந்தாலும் ஊர் வம்பு அளக்கும் நிலமையினை ஓரளவாவது கட்டுக் கோப்பிற்குள் வைத்திருக்க தொலைக்காட்சிகள் உதவுகிறது என்று பெருமைப்பட்டுக் கொள்ளலாம். ஹி...ஹி...

ஜென் கதைகள்: குறித்து வைக்கிறேன் பாஸ்,
நேரம் உள்ள போது வாசிக்க வேண்டிய புத்தகம்.

மியூசிக் கபே: மெல்லிசையால் மனதை வருடுகிறது,
கூடவே மோகனின் அங்க அசைவுகளும் பாடலுக்குப் பலமாக இருக்கிறது.

ஜோக்ஸ் பொக்ஸ்: மு.மு.மூத்ததம்பி..ஏற்கனவே கேட்ட கஸட். ஆனாலும் மீண்டும் கேட்கையில் மண் வாசனையுடன் கலந்த அன்றைய கால சினிமா பார்க்கும் உணர்வினை வெளிப்படுத்தி நிற்கிறது.

இந்த வார ஹாக்டெயி....
செம கிக் பாஸ்.

Admin said...
This comment has been removed by the author.
Admin said...
This comment has been removed by the author.
Admin said...

//"வன்னியில் கலாச்சாரம் சீரழிந்து விட்டது என்று ஓலமிடும் சில பத்திரிகைளும், இளம் விதவைத்தாய்மார் பாலியல் தொழிலில் ஈடுபடுவதாக கட்டுரை எழுதும் புத்திஜீவிகளும் அந்த மக்களுக்கு என்ன மசிர புடுங்கீற்று இப்ப எழுதிக்கிழிக்கினம்....?"//

நானும் பாலியல் தொழில் (விபச்சாரம்) தொடர்பாக ஒரு பதிவு எழுதியிருந்தேன். அதிலே அதிகமாக விபச்சாரம் எனும் சொல்தான் பாவித்திருந்தேன்.

பாலியல் தொழில் செய்யும் பெண்ணைத் தமிழில் விலைமகள், வேசி, பொதுமகள், கணிகை, அல்லது விபச்சாரி என அழைக்கப்படுகின்றனர்.

எனது பதிவில் எங்கள் பிரதேசத்திலே இடம்பெறுகின்ற சில உண்மையான விடயங்களை சுட்டிக்காட்டி இருக்கின்றேன்.

நானும் விபச்சாரம் பற்றி எழுதியவன் என்பதனால் சில விடயங்களை குறிப்பிடுகின்றேன்.

நான் வெறுமனே எழுத்துக்களோடு மட்டும் நின்றுவிடவில்லை. சமூகத்துக்கு பாதிக்கப்பட்வர்களுக்கு என்னால் முடிந்தவரை உதவி செய்கின்றேன்.

யுத்தத்தால் பாதிக்கப்பட் பிரதேச மக்களுக்கும் விதவைகளக்கும் சிறுவர்களுக்கும் நிறையவே உதவிகளைச் செய்திரக்கின்றேன். பல சமூக அமைப்புக்களில் முக்கிய பதவிகளில் இருக்கின்றேன்.

இது ஒரு புறமிருக்க சமூகத்துக்காக எதையும் செய்ய முடியாமல் இருக்கின்ற ஒருவர் அச்சமூகம் சீரழிகின்றபோது அவற்றைப்பற்றி எழுதுவதில் தவறிருப்பதாக தெரியவில்லை.

ஒருவருக்கு சமூகத்தக்கு உதவி செய்ய முடியாவிடினும். அச் சமூகத்தின்மீது அக்கறை இருக்கக்கூடாதா?

நான் விபச்சாரம் பற்றி எழுதிய சுட்டி இதோ

http://shanthru.blogspot.com/2011/06/18.html

dondu(#11168674346665545885) said...

அடேடே காக்டைலையா ஹொக்ரயில் என்கிறீர்கள்?

மண்டை காஞ்சு போச்சு சாமி அதை புரிஞ்சுக்கறதுக்குள்ளே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

LinkWithin

Related Posts with Thumbnails