கோமாளி முகமூடியுடன் ஒரு கிரிமினல்!
'ஐயோ ஈழத்திலே என் இனம் அழிகின்றது, என்னை விடுங்கோ நான், அவாளை காப்பாற்றவேண்டும், இல்லையேல் இந்த சமுத்திரத்திலேயே ஜலசமாதி அடையவேண்டும்' என்று கத்திக்கொண்டே ஈழ மக்களை காப்பாற்ற கடலில் இறங்கியவர்தான் இவர்.
பெரும் பாலும் இவரது செயற்பாடுகள் அனைத்தும் முன்னுக்குப்பின் விரோதமாகவும், குழப்பம் நிறைந்ததாகவும் கோமளித்தனமானதாகவுமே இருக்கும்.
இராமர் பாலம் முதல், சிதம்பரம் கோவில் பிரச்சினை வரை இவர் ஆடாத கூத்துக்கள் கிடையாது. தெரிவிக்காத பைத்தியகாரத்தனமான கருத்துக்களும் கிடையாது.
இத்தனைக்கும் இவர் கல்வி அறிவில், கல்வித்தரத்தில் உயர்ந்தவர், புகழ்மிக்க ஒரு பொருளியலாளர்.
இத்தனை தராதரமும், கல்வி நிலையில் உயர்ந்தவருமான இவர் ஏன் கோமாளித்தனமாக இருக்கின்றார் என பெரும்பாலானவர்கள் ஆச்சரியமாக இவரை நோக்கியதுண்டு.
இந்தக்கேள்விகளுக்கெல்லாம் சிகரம் வைத்தால்ப்போல இருப்பது 'ராஜீவ் கொலை'.
இந்தக்கொலையில் ஒரு சூத்திரதாரி, அல்லது ஒருங்கிணைப்பாளராக இவர் இருக்கின்றார் என்ற சந்தேகம் ஆரம்பத்தில் பலர் மத்தியில் இருந்துவந்தது, அதேவேளை இவர் ஒரு சி.ஐ.ஏ புள்ளி என்ற கருத்தும் நிலவிவந்தது.
இந்த இறுக்கமான நிலையில் சுப்பிரமணியன் சுவாமி ஆகிய இவரால் அவசரமாக எழுதப்பட்டதுதான், The Assassination of Rajiv Gandhi: unanswered questions and unasked queries என்ற புத்தகம். இதில்கூட விடுதலைப்புலிகள் என்ற மட்த்திற்கு அப்பால் இந்தக்கொலை சந்தேகம் வேறு திசையில் போகக்கூடாது என்று சுவாமி, அதீத அக்கறை கொண்டதும், எப்படியாவது அவர்களுடனேயே இந்த வழக்கு பூர்த்தியாகவேண்டும் என்ற அபிலாசையுடன் செயற்பட்டமையும் தெளிவாக புரிகின்றது.
இருந்தபோதிலும், தற்போது கசியும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின், அது குறித்த சில திட்டங்களை அறிந்தவர்களின் காலங்கடந்த வாக்குமூலங்கள் சுப்பிரமணியன் சுமாமியின் பக்கம் வெளிப்படையான குற்றச்சாட்டுக்களாக வெளிவரத்தொடங்கிவிட்டன.
'ராஜீவ் காந்தியின் மரணம் என்னை இந்தப்பிறப்பில் அதிரவைத்த, என்னைக்கோபப்படவைத்த செயல், அதற்கு காரணமான விடுதலைப்புலிகளின் தலைவர் அழிக்கப்பட்டதன் பின்னர்தான், நான் ராஜீவ் காந்தியின் சமாதி இருக்கும் இடத்தில் அஞ்சலி செலுத்துவதாக சபதம் இட்டிருந்தேன், அது இப்போது நிறைவேறிவிட்டது, எனவே நான் ராஜீவ் காந்திக்கு அஞ்சலி செலுத்தி என் சபதத்தை முடித்துக்கொண்டேன்' என்று கடந்த 2009 ஆம் ஆண்டு மே மாதம் சுப்பிர மணியன் சுவாமி ஒரு ஸ்டேட்மன்ட் விட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மனிதர்கள் பலவிதம், ஒவ்வொருவரும் ஒவ்வொரு குணாம்சங்களை கொண்டவர்கள், ஆனால் தன்னை ஒரு கோமாளியாக உலகத்தின் கண்ணுக்கு காட்டிக்கொண்டு உள்ளே பக்கா கிரிமினலாக செயற்படுபவர்தான் சுவாமி என்பது இப்போது பலருக்கும் புரியத்தொடங்கியுள்ளது.
நேற்று விஜய் 37.
'நாளைய தீர்ப்பு' திரைப்படம் வெளியான உடன் ஒரு பிரபலமான சஞ்சிகையில் விஜய் பற்றிய வமர்சனம் 'அப்பாக்கள் செல்வாக்கால் இப்போது சினிமா நுளைவு சுலபமாகிவிட்டது, இந்த முகத்தையெல்லாம் இரண்டரை மணித்தியாலங்கள் எப்படித்தான் சகித்துகொள்வதோ தெரியாது' என்றிருந்தது.
எனினும் அதே சஞ்சிகையில் பல தடவைகள் இந்த ஆண்டின் வெற்றி நடிகன் விஜய், மக்கள் தெரிவு விஜய் என்று பின்னர் முகப்படத்துடன் ஆக்கங்கள் வெளியாகியிருந்தன.
ஓவ்வொருவருக்கும் ஒவ்வொரு இரசனைகள் இருக்கும், அதனால் மற்றவர்களின் இரசனைகளை கொச்சைப்படுத்திவிட முடியாது.
ஏன் இதை எழுதிக்கொண்டிருக்கும் எனக்கும் விஜய் தூரப்பட்டவர்தான், இருப்பினும் விஜய் உடைய நடனத்தையும், மெனாரசியத்தையும் நான் இரசிப்பது உண்டு.
வசீகரா, சச்சின் ஆகிய விஜய்யின் படங்கள் எனக்கு பிடித்த படங்கள்.
தான் எதிர்பார்க்காமலேயே தனக்கான ஒரு இமேஜ் ஒன்று மக்கள் மத்தியில் உருவாகப்பட்டவர் எம்.ஜி.ஆர், அதேபோல பேர் சொல்லக்கூடிய சில படங்களில் தன் நடிப்பு திறமைகளையும் காட்டிநின்ற ரஜினி தான் விரும்பாமலேயே அந்த ட்ரக்குக்கு இழுத்து செல்லப்பட்டிருந்தார், ஆனால் எனக்கு இந்த ட்ரக்தான் வேண்டும் என்ற குறிக்கோளுடன் அந்த ட்ரக்கை பிடிக்க ஓடிக்கொண்டிருப்பவர் விஜய்.
நடனம், பாடும் திறமை, ஸ்டன்ட் திறமை என்பவற்றை அதிகம் கொண்டிருக்கும் விஜய்க்கு இனிவரும் காலங்கள் ஏறுமுகமாக இருக்கட்டும்.
இந்தவாரக்காட்சி
அரச பணியாளர்களா? அரசியல்வாதிகளா?
தற்போதைய காலத்தில் எல்லாம், அரசியல் வாதிகள் தவிர அரசாங்க அதிகாரிகளும் அரசியல் நடாத்தவும், அரசியல் பேசவும், அரசியல்வாதிகள்போல நடக்கவும் தொடங்கியுள்ளனர். இலங்கை முழுவதும் இந்த நோய் தற்போது பரவி விஸ்வரூபம் எடுத்து நிற்கின்றது.
அரசாங்கங்கள் மாறலாம், ஆனால் அரசு என்றும் மாறாது. அரசாங்கங்கள், ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கமாகவோ, அல்லது ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி அரசாங்கமாகவோதான் காலம்காலமாக இருந்தது இருக்கவும்போகின்றது இலங்கையில்.
ஆனால் அரச பணியாளர்கள் அரசு என்ற நிரந்தரமான அந்தஸ்தை பெற்றவர்கள், ஒரு வகையில் அவர்கள் அரசியல் வாதிகளைவிட உயர்ந்தவர்களாகவே நோக்கவும் படுகின்றனர்.
ஆனால் இன்றைய கட்டத்தில் அரசாங்க உத்தியோகத்தர்களும் அரசியலை கையில் எடுத்துக்கொண்டு அரசியல்வாதிகள்போல் செயற்படுவதை காணக்கூடியதாக உள்ளது.
பகிரங்கமாகவே அரசியல்வாதிகள்போல பொதுமேடைகளில் பேசுவதும் இதன் உச்சமான கட்டமாக இடம்பெற்றுவருகின்றது குறிப்பிடத்தக்கது.
ஒரு கட்சியை ஆதரிப்பதோ அல்லது அதற்கு விஸ்வாசமாக இருப்பதோ அவரவர் தனிப்பட்ட விடயமாகும். ஆனால் பொதுவான தன் அதிகாரத்தை கட்சி சார் நலத்திற்காகவும், அரசியல் களமாகவும் அதிகார துஸ்பிரயோகம் செய்வது ஏற்றுக்கொள்ளப்படமுடியாத ஒருவிடயமே ஆகும்.
அரச பணியாளர்கள் என்ற பெயர்தான் என்றாலும், அவர்கள் மக்கள் சேவகர்கள் என்பதுவே உண்மையான தன்மை.
இதை உணராதன்மையும், 'என் இடத்தில் நான்தான் ராஜா' என்ற தன்மையும் பொதுமக்களை சலிப்புக்கும், கோபத்திற்குமே உள்ளாக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
உயர்மட்ட அரசாங்க அதிகாரிகள் இன்று ஜனாதிபதியை விட உயர்ந்தவர்களாக காட்டப்படுவதும், அப்பட்டமாக அரசியல் செய்வதன் தாக்கங்களுமே இது அரசாங்க அதிகாரிகள் மட்டத்திலும் அரசியல் நடத்துபவர்களாக நாடாளாவியரீதியில் கொடிய நோயாக பரவவும் காரணமாக அமைந்துவிட்டதோ என்னமோ!
யாழ்ப்பாணக்குடா நாடும் சீரில்லா மின்சாரமும்.
யாழ்ப்பாணத்தை பொறுத்தவரை மின்சாரம் என்பது எப்போதும் நினைத்தால் தலைக்குள் 'சாக்' அடிக்கும் ஒரு சாமாசாரமாகவே உள்ளது.
ஓவ்வொரு கட்ட யுத்தங்களின்போதும் நிறுத்தப்படும் மின்சாரம், சில வருடங்கள் கழித்து மீண்டும் வரும், பின்னர் மீண்டும் நிற்கும்.
எனினும் 1996 ஆம் ஆண்டுக்கு பின்னர் யாழ்ப்பாணக்குடாநாட்டிற்கு மின்சாரம் 24 மணித்தியலாமும் வழங்கப்படுவதாக முழக்கம் போட்டு அறிவிக்கப்பட்டது.
ஆனால் அன்றிலிருந்து இன்றுவரை யாழ்ப்பாணத்தில் சீரான மின்சாரம் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. (என் வயதை உடைய மாணவர்கள் எமது சாதாரணதர, மற்றும் பல்கலைக்கழகத்திற்கு புகுவதற்கான உயர்தரப்பரீட்சைகளை, மண்ணெண்ணையும் வேண்டுமென்றே நிறுத்தப்பட்ட சூழ்நிலைகளில் குப்பி விளக்குகளை வைத்தே படித்தோம் என்பது குறிப்பிடத்தக்கது)
1996 முதல் இன்றுவரை இங்கே இந்த விடயத்தில் எதைத்தான் பிடுங்கிறார்களோ தெரியாது.
ஒரு நாயில் குறைந்தது 6 தடவைகளாவது மின்வெட்டு சர்வசாதாரணமாக இடம்பெறும். இதற்குள் திருத்தவேலை, திருத்தவேலை என்று வாரத்தில் ஒருநாள் 8 மணித்தியால மின்வெட்டு அமுலில் இருக்கும், அந்த ஜெனரேட்டர் வருது, இந்த ஜெனரேட்டர் வருது என்று பத்திரிகைகளில் செய்திகள் வரும் ஆனால் இன்றுவரை
எரிச்சலூட்டும் மின்வெட்டு வெட்டப்பட்டுக்கொண்டே இருக்கின்றது.
சாதாரணமாக நான் பணிபுரியும் அலுவலகத்தில் அலுவலக நேரத்தில், இருக்கும் மின்சாரம் நின்றால் தானியக்கமாக இயங்கும் ஜெனரேட்டர் குறைந்தது 3 தரமாவது ஒரு நாளில் இயங்குகின்றது.
பணி முடிந்து மாலை வந்து பதிவெழுதினால், ஒரு பதிவை எழுத தொடங்குவதில் இருந்து இணையேற்றுவதற்கிடையில் 4 தரம் மின்சாரம் நின்று நின்றுவரும்.
இங்கிருக்கும் நிலைமையை பார்த்தால் ஆர்க்காட்டார் எவ்வளவோ தேவலைப்போல!
மியூஸிக் கபே
சிகரங்களின் சந்திப்புக்கள் என்றும் புதுமையானவை என்பதுடன், அற்புதமான அனுபவங்களையும் தந்துவிட்டு சென்றுவிடும். அந்தவகையில் தமிழ் திரை இசையுலகச்சக்கரவர்த்திகள் இருவரும் இணையும் ஸ்வர இன்பம் ஒரு அலாதியான அனுபவமே...
கே.ஜே.ஜேசுதாஸ் ஸ்வரங்கள் சொல்ல, எஸ்.பி.பி. ஆலாபனை செய்யும் இந்த அற்புதமான சந்தர்ப்பம் இனி ஒருதடவை காதுகளுக்கு வாய்க்குமா என்பது சந்தேகமே..
கொஞ்சம் இந்த இசையில் நனைந்துபாருங்கள்....
உதயன் வெளியீடாக 'இனிது இனிது'
யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியாகும் உதயன் பத்திரிகை நிறுவனத்தின் வெளியீடாக 'இனிது இனிது' என்ற மாத சஞ்சிகை வெளிவந்துள்ளது.
பொதுவாக இலங்கையில் பல சஞ்சிகைகள் ஆரம்பிக்கப்பட்டு, பின்னர் நிறுத்தப்பட்ட மனக்கஸ்டமான நிகழ்வுகளே அதிகமாக இருக்கின்றது.
உரியபடி வாசகர்களை சென்றடையாமை, இலக்கு வாசகர்கள் (Target Readers) யார் என்ற தெளிவு இல்லாமை, கடினமான எழுத்தாடல்கள், வாசகர் நட்பு எழுத்து (Reader Friendly writing) என்பன இல்லாமையே இதற்கான பிரதான காரணங்களாக இருக்கலாம் என்பது என் எண்ணம்.
பொதுவாகவே அனைத்து தரப்பினரையும் கவரும் அம்சங்கள் கொண்ட சஞ்சிகைகள் தமக்கான ஒரு இடத்தை நிற்சயம் பிடித்துவிடும் என்பதில் எந்தவித மாற்று கருத்துக்களும் எவருக்கும் இருக்காது என்று நினைக்கின்றேன்.
அந்த வகையில் முதலாவது இதழாகவும், ஜூன் மாத இதழாகவும் வெளிவந்துள்ளது உதயன் வெளியீட்டு நிறுவனத்தின் 'இனிது இனிது'
எழுத்தாளர்கள் - இதழாசியர் தனது திறமையை அல்லது தன்னிடமிருக்கும் 'கொள்ளவை' மற்றவர்களுக்கு காண்பிக்கமுயலும்போது வாசகன் சிரமமப்படும்நிலை ஏற்படுகின்றது. 'சீரியஸான' வற்றை மட்டும் வாசிக்கசெய்யும் நோக்கிலான இதழ்கள் பரந்துபட்ட வாகர்களிடமிருந்து அந்நியப்படுவதை அவதானிக்கமுடிகின்றது.
முக்கியமான விடையங்களை அறிந்துகொள்ள விழைபவர்கள்கூட சுவாரஸ்யமான வாசிப்பையே அதிகம் விரும்புகின்றனர். இதனாலேயே அரசியல் பக்தி எழுத்தாளர்கள்கூட தங்களின் நடையை மாற்றிக்கொள்ள முயற்சிக்கின்றனர். அரசியல் விடையங்களைக்கூட ஒரு கதையைப்போல் சொல்ல முற்படுகின்றனர்.
இவ்வாறான வாசகனின் உளவியலுக்கு முக்கியத்துவம் கொடுத்து எழுத்து அதன் வடிவங்களில் மாற்றங்களை ஏற்படுத்தி வருகின்றது.
அந்தவகையில் வாசகர்களின் உளவியலை புரிந்துகொண்டு அவர்களுடன் உறவுகொள்ள 'இனிது இனிது முயலும்'. என தமது முதலாவது ஆசிரியர் தலையங்கத்தில் இதழாசிரியர் தெரிவித்திருக்கின்றார்.
முக்கியமான உள்ளடங்கல்களாக 'வெறுப்பினால் கிடைத்த வெற்றி' என்ற தலையங்கத்தில் தமிழக தேர்தல் குறித்த பார்வை, 'காதலின் மொழி கஸல்' என்னும் கஸல் கவிதை விருந்து, 'ஒசாமா பின்லேடன் தொடக்கமும், முடிவும்' என்ற கட்டுரை, 2040 ஆம் ஆண்டில் இறந்தவர்கள் மீண்டும் உயிர்த்தெழுவார்கள்..?
என்ற ஒரு விஞ்ஞான ஆக்கம், ஜப்பான் பூகம்பமும், சுனாமியும் உலக அழிவுக்கான ஒத்திiயா? என்ற பீதிக்கேள்வியுடனான ஒரு பார்வையும், புதுமைப்பித்தனின் பொன்னகரம், மர்லின் மன்றோவின் மறுபக்கம், பிரசன்ன விதானகே இன் 'ஆகாச குசும்' திரைப்பட விமர்சனம் என பல்வேறு அம்சங்களை இந்த முதலாவது நூல் சுவாரஸ்யம் குன்றாமல் தந்துநிற்கின்றது.
ஆசிரியரின் தலையங்க வரிகள், திட்டமிட்டு, ஸ்திரமான அத்திவாரத்துடனும், நம்பிக்கையுடனுமே இந்த மாத இதழ் வெளியிடப்படுவதை உறுதிபடத்தெரிவிக்கின்றது. அதற்கேற்றவகையிலேயே ஸ்வாரஸ்யம் குன்றாத உள்ளடங்கல்கள் உள்ளன.
எனினும் மாத இதழ் அதுவும் ஒரு பிரபலமான நிறுவன வெளியீடு தெரிந்தோ தெரியாமலோ விட்டுவிட்ட தவறு. முதலாவது இதழிலேயே இதழ் பற்றிய தகவல்கள் (ஆசிரியர், இணையாசிரியர்கள், பக்கவடிவமைப்பாளர்கள், சித்திரங்கள், கணினி வடிவமைப்பு, வெளியீடு, அச்சகம் போன்றன உள்ளடங்கிய அம்சங்கள்)
வெளிவராமையே. மற்றும்படி 'இனிது இனிது' இனிமையாகவே உள்ளது.
புதிதாக மலர்ந்திருக்கும் 'இனிது இனிது' மாத சஞ்சிகைக்கு இலங்கை பதிவர்கள் சார்பாக என் நல்வரவுகளும், வாழ்த்துக்களும்.
ஜோக் பொக்ஸ்
கடுமையான இதயநோயினால் பாதிக்கப்பட்ட நோயாளர் ஒருவர் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்தார், அவர் ஒரு லாட்டரி ரிக்கட் பைத்தியம். நாள் தவறாமல் பல லாட்ரிகளை வாங்கி தன்னுடனேயே வைத்திருப்பதே அவரது பழக்கம். எதை கைவிட்டாலும் லாட்டரி ரிக்கட்களை அவர் கைவிட்டது கிடையாது.
இந்த நிலையில் இறுதியாக அவர் எடுத்திருந்த லாட்ரி ரிக்கட்டுக்கு 10 கோடி ரூபா பெறுமதியாண பணம் விழுந்திருந்தது. இதை சொல்லவேண்டும் என்று அவரது உறவினர்கள் மருத்துவமனையில் குழுமிவிட்டார்கள். இதை அறிந்த மருத்துவர். அவர் இதயநோயாளியாக இருப்பதால், அளவுக்கதியமான சோக செய்தியோ, அல்லது அளவுக்கதிகமான சந்தோச செய்தியோ அவருக்கு தெரிவிக்கப்பட்டால் அவர் மரணம் அடைந்துவிடுவார். எனவே நான் அதை பக்குவமாக சொல்கின்றேன் என்றார்.
அதன் பின்னர் அந்த நோயாளியை அணுகிய வைத்தியர்
என்ன ஐயா! எப்படி இப்ப சுகங்கள்! என்று விசாரித்துவிட்டு, ஒரு பேச்சுக்கு கேட்கின்றேன் உங்களுக்கு ஒரு லாட்டரி ரிக்கட்டில் இனி 10 கோடி விழுந்தால் என்ன செய்வீர்கள் என்றார்.
அதற்கு பதிலளித்த லாட்டரி ரிக்கட் நோயாளி..
என்ன டாக்டர் என்னை மரணத்தில் இருந்து மீட்ட தெய்வம் நீங்கள் அதை அப்படியே உங்கிடம் தந்துவிடுவேன் என்றார்...
உள்ளே 'தொம்' என்று ஒரு சத்தம் கேட்டது..
எல்லோரும் எட்டிப்பார்த்தபோது டாக்டர் அப்படியே நெஞ்சை பிடித்தபடி மரணித்துப்போய் கிடந்தார்.
12 comments:
வணக்கம் பாஸ், படித்து விட்டு வருகிறேன்....
சுப்புரமணியம் -- உள்ள போட்டு உதைக்க வேண்டிய பயல்...
விஜய் -- டாக்குத்தரின் டான்சு மட்டும் எனக்கு பிடிக்கும் , ஒரு காலத்தில் இவரின் மிக பெரிய ரசிகன் ...இப்ப இல்ல ... அமெரிக்காவில் நடக்க இருந்த தமிழர்கள் விழாவுக்கு கூப்பிட்டா வாறன் எண்டு சொல்லிப்போட்டு பிறகு இருபத்தி அஞ்சு லட்சம் கேட்டாராமே...))
///(என் வயதை உடைய மாணவர்கள் எமது சாதாரணதர, மற்றும் பல்கலைக்கழகத்திற்கு புகுவதற்கான உயர்தரப்பரீட்சைகளை, மண்ணெண்ணையும் வேண்டுமென்றே நிறுத்தப்பட்ட சூழ்நிலைகளில் குப்பி விளக்குகளை வைத்தே படித்தோம் என்பது குறிப்பிடத்தக்கது)/// அந்த காலத்தில் மாவட்டங்களிலே யாழ் மாவட்டம் கல்வியிலே முன்னுக்கு நின்றதும் குறிப்பிடத்தக்கது..
விரிவாக பல தகவல்களை ஆராய்ந்துள்ளீர்கள்..
\இன்னுமா மின் வெட்டு யாழில்??கடவுளே...
அப்புறம் தமிழ்மணத்தை இணையுங்கள் பாஸ்
ஜோக் -- முடிவு சூப்பர்
சுப்பிர மணிய சுவாமி: அரசியலில் ஒரு நாகேஷ்....
ஹி.....
விஜய் பற்றி....சொல்லிக் கொள்ள பெரிதாக எதுவும் இல்லை பாஸ். சினிமா மீதான, விஜய் மீதான என் ஆர்வம் குறைவு...
இந்த வார காட்சி....இன்றைய இளைஞர்கள் சமூக வலைத் தளம் ஊடாக எவ்வாறு வழி தவறிச் செல்கிறார்கள் என்பதனை தத்ரூபமாக முதல் பாதியிலும்
முகம் தெரியா காதல் மூலம் மனிதாபிமானம் கலந்த நேசத்தினையும் இறுதிப் பகுதியில்
வெளிப்படுத்தியிருக்கிறது, கூடவே எச்சரிக்கையோடு கூடிய விழிப்புணர்வினையும் தந்திருக்கிறது.
கொரியன் மொபைல்... யார் பேசினாலும் பொண்ணு பேசுற மாதிரியே கேட்கும்.....ஹா...ஹா....
அரச பணியாளர்களா? அரசியல்வாதிகளா?//
யாரைக் குத்துறீங்க என்று புரியுது....
இமெ...........மார்....ஹி....ஹி
கேட்க யாரும் இல்லையே...அதான் அதிகாரத்தைத் தங்கள் கைகளில் எடுத்து விட்டார் போலும்...
மின்சாரம், வெகு விரைவில் லக்ஸபான மின்சாரம் வரும் என்று சொல்லிச் சொல்லியே நோகடிக்கிறாங்க பாஸ்....போதாக் குறைக்கு மின் வெட்டு..
ஹி...தமிழர்களுக்கு அனுசரித்துப் போகும் பண்பு இருக்கென்பது மின்சார சபைக்குத் தெரியாத விடயமா என்ன?
அருவி கூட ஜதி இல்லாமல்...மென்மையான இசையால் மனதினை மயக்குகிறது...
உதயன் வெளியீடாக இனிது இனிது..
மகிச்சியான விடயம் பாஸ்...
//புதிதாக மலர்ந்திருக்கும் 'இனிது இனிது' மாத சஞ்சிகைக்கு இலங்கை பதிவர்கள் சார்பாக என் நல்வரவுகளும், வாழ்த்துக்களும்.//
பாஸ், உங்களோடு சேர்ந்து நானும் வாழ்த்துகிறேன் பாஸ்.
எல்லோரும் எட்டிப்பார்த்தபோது டாக்டர் அப்படியே நெஞ்சை பிடித்தபடி மரணித்துப்போய் கிடந்தார்.//
ஹா,,ஹா....
இந்த வார ஹொக்டெயில் சூப்பர்....
:)
மாப்ள விஷயங்கள் அனைத்தும் கலக்கலா இருக்குய்யா நன்றி!
கலக்கல்! :-)
oru padhivil iththanai vidayangalaa?
மிகச் சரி; இவர் கோமாளியல்ல. கோமாளிபோல் நடிக்கும் ஒரு கிரிமினல்.
சுவாமி பற்றி உலகத்துக்கே தெரியுமே! சுவாரஸ்யமான விஷயங்களும் நல்ல ஜோக்கும் .அருமை.
சுவாரசியமான பதிவு.. எல்லாம் அருமை
Post a Comment