தங்கத்தட்டுப்பாடும், கடலடித்தங்க வேட்டையும்.
முன் எப்போதும் இல்லாத அளவுக்கு தங்கத்தின் பெறுமதி நாளுக்கு நாள் உயர்வு என்ற வேகத்தில் உயர்ந்துகொண்டிருக்கின்றது.
உலக பொருளாதார சரிவு, பங்குவர்த்தக மிதப்பு நிலை என்பவற்றால், பெரும்பாலானவர்கள் தங்கத்தில் தமது முதலீடுகளை செய்ய கவனம் செலுத்தியுள்ளமையே இதன்காரணம் என்று கூறப்படுகின்றது.
இந்த நிலையில் இன்று வல்லரசுகளின் கவனங்கள் தங்கத்தின் பக்கம் திரும்பியுள்ளன.
இந்த நிலையில்தான் கடலடித்தளங்களில், உள்ள பாறைகளுடன் பல்வெறுபட்ட கனிம படிமங்களுக்குள் தங்கமும் இருப்பதாக கண்டறியப்பட்ட நிலையில் சீனா ஏற்கனவே இந்த கடலடித் தங்க வேட்டையில் மும்மரமாக ஈடுபட்டுள்ளது.
தென் சீனக்கடற்கரை, மற்றும் மஞ்சூரிய கடல் ஆளப்பகுதி பசுபிக்கடலின் கிழக்கு ஆள் கடல்களில் இந்த தங்க படிமங்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நவீன தொழிநுட்பங்களை பயன்படுத்தி அமெரிக்காவும் இத்தகய கடல் அடித்தளங்களில் உள்ள தங்கங்களை குறிவைத்து தமது வேட்டைகளையும் ஆராய்வுகளையும் மேற்கொள்ள ஆரம்பித்துள்ளனர்.
பணம் பாதாளம் வரை பாயும் என்பது எவ்வளவு உண்மை பார்தீர்களா?
தேவையான பல புத்தகங்களை தரும் தமிழ்கியூப்.
வாசிப்பதற்கு ஒரு சிறந்த தமிழ் புத்தகத்தை சொந்தமாக வாங்கப்போனால் இந்தியா தவிர்ந்த வேறு நாடுகளில் அது யானை விலை குதிரை விலை.
அதேவேளை தேர்ந்தெடுக்க நினைத்த புத்தகங்கள் பணம் கொத்து பெற முயன்றாலும் எமக்கு கிடைப்பது எட்டாக்கனிதான்.
அதேவேளை நூலகங்களில் இருந்து எடுத்து படிக்கும் புத்தகங்களும் ஆறுதலாக படிக்க அமைவானதாக இருக்காது என்பதாலும், நாம் தேடும் பல புத்தகங்களை தரவிறக்கும் வசதி கொண்ட இணையங்களை நாம் தேடிக்கொண்டுதான் இருக்கின்றோம்.
அந்த வகையில் தமிழ்கியூப் எமக்கு சிறந்த தமிழ் புத்தகங்கள் பலவற்றை பீடிஎவ் ஆக தரவிறக்கி படிக்க ஆவன செய்கின்றது.
கல்கியின் புத்தகங்களில் இருந்து, சித்தர் பாடல்கள், இலக்கிய நூல்கள், நாவல்கள், சிறுகதைகள், செய்யுள் தொகுப்புகள் என பல்வேறுபட்ட தேவையான வகையறாக்களை தரவிறக்கி படிக்கும் வசதியை தருகின்றது.
ஒருமுறை சென்று பார்த்து தேவையான ஒரு புத்தகத்தை தரவிறக்கி முதலில் படித்துப்பாருங்கள்.
இந்தவாரக்காட்சி......
அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு! ஆமா தானே?
இந்தவார இனிப்பு புளிப்பு...
இந்தவார இனிப்பு – ஐந்தாம் அண்டு பலமைபரிசில் பரீட்சையில் யுத்தத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்டத்திலே இருந்து முதன்நிலையில் சித்தியடைந்த மாணவன் பற்றிய தகவலும், அவன் அவனுக்கான விருது வழங்கும் நிகழ்வில் அமைச்சரின் காலில் விழ மறுத்த செய்தியும் யாவரும் அறிந்த ஒன்றே.இங்கே அரசியல், உணர்வுகள் என்ற விடயங்களை அப்பால் வைத்துவிட்டு, மாதா, பிதா, குரு, தெய்வம், உறவினர்களில் மூத்தவர்கள் என்பவர்களை தவிர வேறு எவரினதும் காலில் விழவேண்டிய தேவை இல்லை என்பதை இந்த பத்துவயதிலேயே நெஞ்சில் உரமாக வைத்திருந்த அந்த சிறுவனுக்கு இந்தவார இனிப்பு.இந்தவார புளிப்பு...யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வன்னிப் பகுதி மக்களுக்கு வீடுகளை அமைத்து கொடுக்கும் பணியில் இலங்கையின் சுழல்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் ஈடுபட்டு வருவது நல்லவிடயம் என்பதுடன் பாராட்டப்படவேண்டிய ஒன்றுதான்.ஒரு குடம் பாலுக்கு ஒருதுளி விசம்போல 'யுத்தம் ஒன்று வந்தால் இழப்பு என்பது இடம்பெறுவது சகயம்தான்' என்று அவர் கூறியிருப்பது அமைந்துள்ளது.ஆவர் ஒரு தமிழர் (அப்படித்தான் பலர் சொல்லிக்கொள்கிறார்கள்) என்ற ரீதியில் ஒரு பெரும் அவலத்தை மூடிமறைக்க பிறர் தரும் அழுத்தத்தில் அவர் அப்படி கூறியிருப்பதே வேதனையானது.பாராபட்சமில்லாமல் இந்த வார புளிப்பு முரளிக்கே.(அவராவது பறவாய் இல்லை நம்மட ஒருவர் வன்னியில் ஒரு மக்களும் சாகவில்லை என்று கூறியிருக்கிறாரே!)
இந்தவார புகைப்படம்.
ஸ்ரன்லி போர்மன் (அமெரிக்கா) எடுத்த புகைப்படம். தீவிபத்து ஒன்றில் தப்பிப்பதற்காக கீழே இருவர் குதிக்கும்போது எடுத்த புகைப்படம்.
கவலைவேண்டாம் பயலுக பத்திரமாக மீட்கப்பட்டாங்களாம், இது நடந்தது 1975 பொஸ்ரன் நகரிலே.
மியூஸிக் கபே...
எஸ்.பி.பியின் ரம்யமான இராக ஆலாபனைகளில் முக்கிமான ஒரு பாடல் இது.
ஜோக் பொக்ஸ்.
இந்திய மாகாணங்களுக்கிடையிலான தடகள விளையாட்டுப்போட்டி ஒன்றை பார்ப்பதற்காக ஷர்தாஜி சென்றிருந்தார். அங்கே அன்றைய நிகழ்வுக்கு சிறப்பு விருந்தினராக சிறுவயதில் அவருடன் படித்து இப்போது கலக்ரராக இருக்கும் குர்வீர்சிங் வந்திருந்தார். நம்மாளைப்பார்த்தவுடன் நட்புடன் அழைத்து தன் அருகில் இருத்தினார்.
அப்போது ஓட்டப்போட்டி ஆரம்பமானது..வீரர்கள் எல்லோரும் ஓடினார்கள்...நம்ம ஷர்தாஜிஇ கலக்ரர் நண்பரிடம் கேட்டார் ஏன் எல்லோம் ஓடுறாங்க? என...அதற்குஇ ஓடி முதலிடம் வருபவருக்கு தங்கக்கோப்பை பரிசாக கொடுக்கப்போகின்றேன் என்றார் கலக்ரர். உடனே நம்ம ஷர்தாஜி கேட்டார் சரி தங்கக்கோப்பை வாங்குபவர் ஓடுவது சரி ஏன் மற்றவர்களும் ஓடுகின்றார்கள் என்று...கலக்ரர் எழுந்துபோய் வேறு ஒரு இடத்தில் உட்கார்ந்துகொண்டார்.
14 comments:
எல்லாமே அசத்தல்..
இணையத்தள அறிமுகத்திற்கு நன்றி..
அந்த வீடியோ ஏற்கனவே பார்த்தது அருமையானது,,
புகைப்படம் அசத்தல்
அழகோவியம் அழகு
அந்த தள லிங்குக்கு நன்றி
வீடியோ சூப்பர் , குழந்தைகள் என்றாலே கள்ளம் கபடம் அற்றவர்கள், அவர்களிடம் இருந்து கற்க வேண்டியது நிறையவே இருக்கு)) ஆனால் அவர்களும் ஒரு காலத்தில் "வளர்ந்துவிடுகிறார்கள்" ))
இனிப்பு -என்னை பொறுத்தவரை மாதா பிதாவோடு சரி ..வேறு யார் காலிலும் விழ வேண்டிய அவசியம் இல்லை..))
புளிப்பு -ஒருவேளை ஜெயலலிதாவிடம் இருந்து கற்று இருப்பாரோ..பல நேரங்களில் அரசியல்வாதியாகவே கதைக்கிறார்! இலங்கை அணியை அவர் ஒருவருக்காக மட்டும் தான் பிடிக்கும் ஆனால் இப்ப அதுவும் இல்லை..அதே போல "2007 உலகக்கிண்ணம் இறுதி போட்டி மகேல பேட்டி" மறக்கவில்லை..
பாடல் சூப்பர்
ஜோக் -சர்தாஜிகள் எல்லாமே இப்படி தானோ ))
சிறீ லங்கா தமிழ் குழுமத்தில் இணைத்து அனுப்பும் போது லிங் கொடுக்க மறக்கிறீர்கள் பாஸ் ....
அசத்தல் ஹொக்ரெயில்...குறிப்பா இனிப்பும் புளிப்பும்..
தமிழ்கியூப் அறிமுகம் நன்று.படங்களும் ஜோக்ஸும் அசத்தல்.
SPB யின் பாடல் எனக்கும் பிடித்திருக்கிறது
நேற்று ஒரு நண்பன் கேட்டான்..மச்சான் கொஞ்ச காசு இருக்கு எதில முதலிட்டா கூட லாபம் என்று..என் முதல் பதில் உங்க முதல் விடயம் தான்!
அனைத்து ஆக்கங்களும் அருமை!
அண்ணே வழமை போல கலக்கல். அந்த தமிழ் கியூப்பை நோட் பண்ணிக்கிட்டன்
வணக்கம் பாஸ்,
ஹாக்டெயில் வழமை போல அசத்தல்..
இம் முறை மக்களின் உணர்வுகளையும்,
மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளாதோரைச் சாடியிருப்பதும் செம ஹிக்!
வழக்கம் போல கலக்கல்ஸ்! தமிழ்கியூப் - நோட்டட்!
வழக்கம் போல சூப்பர்....
நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com
http://marancollects-tamilebooks.blogspot.com/
for more books
பணம் பாதாளம் வரை பாயும் என்பது எவ்வளவு உண்மை
சூப்பர்....பகிர்வுகள்.
Post a Comment